அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, May 24, 2012

கிரஸ்டல்மணிகளின் டிசைன்கள்

 ஒற்றைக்கோர்வை மணிகள்.
 பலகலர்களில்
பல்வேறு மாடல்களிலும்

 இரட்டை கோர்வை மணிகள்



 மூன்று கோர்வை மணிமாலை

பிரேசிலெட் பல டிசைன்களில்.


 டிசைன்கள் எப்படியிருக்கு! மேலும் எப்படியெல்லாம் கிரஸ்டல்மணியில் மாடல்கள் செய்யலாமென ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்புன்னு சொல்வது கேட்குது..
ஐடியாவுக்கே பீஸ் கேப்பியளோ..

Tuesday, May 22, 2012

மலிக்கா கலெக்‌ஷன்

இதெல்லாம் மலிக்காவின் கலெக்‌ஷன். அதாவது  கிரஸ்டல்மணிகள் மற்றும் கோல்ட் கவரிங்மணியில் கோர்த்து செய்து கொடுக்கிறேன் ஆடரின்பேரில். சிறிய சையின் முதல் பெரிய மாலை. மற்றும் நெக்லஸ். பிரேசிலெட். கம்மல்கள். என எதுபோல் வேண்டுமோ அதுபோல் செய்து தரப்படும் இது எனது புதிய முயற்ச்சி. எப்புடியிருக்கு சொல்லுங்கப்பு..



















இதுபோல் வேண்டுமெனில் தொடர்புகொள்ளலாம். fmalikka@yahoo.in
அன்புடன் மலிக்கா

Thursday, May 17, 2012

பெண்களுக்கான விழிப்புணர்வுகள்.



முத்துப்பேட்டை ரஹ்மத் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ”பெண்கள் சமூக விழிப்புணர்வு” மாநாடு பள்ளி மாணவிகள் ஆயிஷா மற்றும் ஷபானா ஃபாத்திமா கிராஅத் ஓத காலை 11 மணியளவில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாம் வல்ல ஏகனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

  இறைவனின் பேருதவியால் இன்று நடைபெறவிருக்கும் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு வருகை தந்திருக்கும் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும் நல்லருளும் என்றும் நிலவட்டுமாக!
   
இறைவனின் துணையோடு இனிய காலைப்பொழுதில் இனிதே துவங்கும் விழிப்புணர்வு மாநாடு அதுவும்  பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு. வேர்கள்கூட மூச்சுவிடும் சதுப்புநிலம் சூழ்ந்த அலையாத்திக்காடு அது அழகாய் காட்சிதருவதோடு தான் சூழ்ந்திருக்கும் இடத்தையே பாதுகாகுமாம் அதுபோல் பெண்ணின் ஒவ்வொரு அசைவும் விழிப்புணர்வோடு செயல்பட்டால் தன்னை காப்பதோடு தன் வம்சத்தையே பாதுகாக்கும் அப்படியான ஒரு விழிப்புணர்வுக்குதான் இங்கே நாம் அனைவரும் சேர்ந்து அடித்தளம் இடப்போகிறோம்.
மீண்டும் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டிற்க்கு வருகை தந்திருக்கும் அனைவர்களை வருக வருக என்று வரவேற்பதோடு

இதோ அந்த அடித்தளத்தின் முதல் அத்தியாயமாக இறையோன் தந்த அருள்மறையிலிருந்து திரு வசனத்தை ஓதி அதன் விளக்கம் தரவருகிறார்கள்  மாணவிகள் ஆயிஷா மற்றும் சஃப்ரின் அவர்களை அன்போடு அழைக்கிறேன் 

”நன்றி ஆயிஷா அன்  சஃப்ரின்

இறைமறை தந்தை இனிமையோடு, இன்று வந்திருக்கும் அனைவரையும் வரவேற்க்க வரவேற்ப்புரை வழக்க மாணவி பாத்திமா சஃபானாவை இன்முகத்தோடு அழைக்கிறேன்.


” நன்றி சஃபானா பாத்திமா”
பெண் அதில்தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள் எத்தனை எத்தனை பரிபூரணங்கள். வான்கண்டு வானில் உலவும் பலவகைகள்கண்டு  மண்கண்டு மண்ணில் உலவும் பல  உயிரினங்கள் கண்டு, மலைகண்டு மரம்கண்டு புல் கண்டு பூக்கள் கண்டு சுற்றும் பூமிகண்டு சுழற்றும்காற்றுகண்டு இறைவன் படைத்த அத்தனையும் கண்டு வியப்புற்றதுபோலவே பெண் கண்டு. பெண்மையின் மென்மை கண்டு. இளகும் தன்மைகண்டு. பெண்ணும் பூப்பதுகண்டு அவள்  தாய்மையும் அடைவதுகண்டு, இன்னும் அவளுக்குள் அடங்கியிருக்கும் அதியங்கள்கண்டு, பெண்ணுக்குள் இவ்வளவுண்டா!எண்ணி வியந்து, வியப்புற்று இன்னும் வியப்புற்றுக்கொண்டே இருக்கும்படியல்லவா!  பெண்ணை இறைவன் படைத்துள்ளான்.

[இடையில் கொஞ்சம் தடுமாற்றம் உளறுவதுபோலிருந்தது இருக்காதா பின்ன! 3 நாள் ஆஸ்பத்திரியில் குல்கோஸ் ஏறிக்கொண்டு இருந்த மலிக்கா மைக்கைப்பிடித்து பேசினால் எப்படியிருக்கும் அதேன்  கொஞ்சநேரம் ஆட்டம் ஆரம்பம் அப்படிதானிருக்கும்மாம் அனுபவசாலிகள் சொன்னார்கள் ஹாஹா

பெண்ணை பூ வென்றும், புயலென்றும், பூமியென்றும், போற்றுகிறார்கள் போற்றிப்புகழ்வது ஒருபுறமிருக்க  தூற்றி துச்சமெனமிதிப்பது மறுபுறமென பெண்மைகள் ஆங்காங்காகே துன்புறுத்தபடுகிறார்கள் இன்னும் சொல்லபோனால் பெண்ணென்று அறிந்துவிட்டால் கருவிலேயே அழிக்கவும் செய்கிறர்கள் [ஆசியாவில் மட்டும் 60 மில்லியன் பெண்சிசுகள் கருவிலேயே அழிக்கப்படுகிறாம்]அதையும்தாண்டி வெளிவரும் பெண்ணிணம் உலகில் படும்பாடுகளை சொல்வதற்க்கு நாளொன்று போதாது,

இப்படியான சூழலில்  பெண்கள் தற்காலத்தில் திசையறிந்து! வழிதவறாது! நடப்பதும் எப்படி? வாழ்வியல் வழிமுறைகளை கற்றுக்கொள்வது எப்படி? எதிலும் விழிப்புணர்வோடு இருப்பது எப்படி? இல்லத்திலும் இல்லறத்திலும் இன்முகத்தோடு நடப்பது எப்படி? இதோ அதற்கான சிறு விதைகள் இங்கே தூவப்பட இருக்கிறது. இவ்விதைகள்  வேர்விட்டு விருட்சமாய் வீற்றிருக்கும் என்ற நம்பிக்கையோடு!
  இதோ உங்கள் முன் முதல் உரையினைதொடங்க!
அகத்தில் ஒருவர் சரியாக இருந்தால்தான் புறத்திலும் சரியாக இருக்கமுடியும். அகமும் புறமும் ஒழுக்கமாக இருந்தால் அதுவே ஒரு மனிதனை தூய்மையாக்கும். மனிதருக்கு இறைவன் எதை கற்றுதரவில்லை, எதற்க்குதான் வழிவகுதுத்தரவில்லை, இறைமறையிலும் நபிவழியிலும் நமக்கும் நமது சமூகத்திற்க்கும் அவன் காட்டிதராதா வழிகள் ஏதும் உண்டா? ஒழுக்கத்தோடு வாழும் மனிதன் இறந்தபின்பும் பிறமனங்களில் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறான். ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.உயிரைவிட ஒழுக்கம் மேலானது அது இல்லங்களிலிருந்து தொடங்குமானால் அது ஈமானோடு கலந்திருக்கும் இறுதிவரை நிலைதிருக்கும் என்பதை தனது பேச்சாற்றல்மூலம் நமது சிந்தனைக்குள் செலுத்த  வருகிறார்கள் ஜும்மா சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மிஃராஜ் ஃபாத்திமா. ஆலிமா சித்திதீக்கியாஅவர்கள்.

அவரின் உரையின் சில  :
உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் மலக்குகள் வரமாட்டார்கள். மற்றும் நாய்கள் உள்ள வீட்டிலும் மலக்குகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிற வீட்டிற்கு நுழையும் போது மூன்று தடவை ஸலாம் கூறி செல்ல வேண்டும். அந்த வீட்டின் அனுமதி கிடைத்தப்பின் நாம் உள்ளே நுழையவேண்டும். மூன்நு தடவை நாம் ஸலாம் சொல்வதால் நமக்கு 30 நன்மைகள் கிடைக்கின்றன. நோன்பு காலங்களில் மட்டும் தான் நம் இஸ்லாமிய பெண்கள் குர்ஆனை ஓதிகிறார்கள். எல்லா காலங்களிலும், எல்லா நேரங்களிலும் திருக்குர்ஆனை ஓத வேண்டும் என்றார்.
மாசாஅல்லாஹ் இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கத்தோடு எப்படி வாழ்வேண்டும் என்பதை மிக சிறப்பாக எடுத்துக்கூறிய மிஃராஜ் ஃபாத்திமா. ஆலிமா சித்திதீக்கியாஅவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
 
அடுத்து மலிக்கா ஃபாரூக் எழுதிய ”இஸ்லாமிய பெண்ணே”! என்ற கவிதையை வசிக்க வருகிறார் மாணவி இன்ஷியா அவர்கள் 

”நன்றி இன்ஷியா
 அடுத்து!
நாடறிந்த பெண் சொற்பொழிவாளர். பல வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றி தன்னுடைய பேச்சாற்றலால் சிறப்புப்பெற்றவர் தமிழ் இலக்கணப்பேச்சால் ஈர்த்தெடுக்கும் பேராசிரியர் டாக்டர் பர்வின் சுல்தானா தன் கனீர் குரலால்  குடும்ப பொருளாதர நிர்வாகதில் முஸ்லீம் பெண்கள் என்ற தலைப்பில் நம்மையும் ஈர்த்தெடுக்க வருகிறார்கள்.

அவரின் உரையின் சில:
நம்முடைய சமுதாயம் சிறுபான்மை சமுதாயமக உள்ளது. படிப்பதற்கும், மேற்கல்வி கற்பதற்கு வசதியில்லாத சமுதாயமாகவும் நாம் உள்ளோம்.
கணவனின் வருமானம் நிகற்காலம், மனைவி அதனை நல்வழியில் செலவு செய்கிறார்கள் என்பது எதிர்காலம். கணவன் சம்பாதிக்கு பணத்தினை வீணாக செலவு செய்யாமல் அதனை திறமையாக குடும்பத்திற்கு செலவு செய்யவேண்டும்.
நான் 11 ஆண்டுகாலம் சென்ஸார் போர்டில் வேலை செய்தேன். ஆகையால் தொலைக்காட்சியில் வரும் சீரியலும், திரைப்படங்களும் எவ்வளவு அசிங்கத்தினை அள்ளி தருகிறது என்பது எனக்கு தெரியும். ஆகையால் பெற்றோர்களே..விஷமத்தனமாக உள்ள தொலைக்காட்சியினையும் திரைப்படங்களை விட்டு தாங்கள் தான் உங்களின் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும்..
மிக அருமையாக தன்னுடைய சிறப்பு பேச்சாற்றலால் நம் செவிக்கும் உணர்வுக்கும் உரைக்கும்படி உரையாற்றிய முனைவர் பர்வின் சுல்தானா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்..


இத்துடன் முதல் அமர்வு நிறைவு பெறுகிறது இன்ஷா அல்லாஹ் தொழுமை மற்றும் சாப்பாட்டுக்குபின் இரண்டாம் அமர்வு பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்..

மச்சானும் மகனும் கூட இல்லதாதால் [மகனை பள்ளியில் சேர்ப்பதற்க்கு குற்றாலம் சென்றுவிட்டார்கள் அன்று அட்மிஷன்]   ஆட்டம் கண்ட மலிக்காவுக்கு இடைவேளையின்போது சாப்பாடுகூட செல்லவில்லை. மதியத்திற்கு பின்பே அம்மாவும் தங்கையும் வந்திருந்தார்கள் அவர்களை கண்டதும் சற்று தெம்புவந்திருந்தது. இதற்கிடையில்  ஜும்மா சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மிஃராஜ் ஃபாத்திமா  அவர்களையும் அவங்க அம்மாவையும் சந்தித்து பேசிக்கொண்டோம். மிஃராஜ் என்னிடம் அக்கா அக்காவென மிக அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் குட்டிபையன் சித்திக் மிக அழகாக இருந்தான்.. மாசாஅல்லாஹ்.

மாலை 3 மணி:
இந்த அடித்தளத்தின் தொடர்ச்சியாக இஸ்லாமிய கீதம் பாட வருகிறார்கள். மாணவிகள் ஆயிஷா. இன்ஷியா. சஃப்ரின் பாத்திமா.  
”நன்றி ஆயிஷா. இன்ஷியா.சஃப்ரின் பாத்திமா.”

அடுத்து
மேற்கத்திய பண்பாட்டின் தாக்கத்தால் பெண்கள் காட்சிபொருளாக்கப்படுவதும். கலாச்சார சீர்கேடுகளை அரங்கேற்றி  ஆட்டம்போடுவதுமென்ற மாயையில் சிக்கி சீரழிந்துக்கொண்டிருக்கும் தற்கால சூழலில். முஸ்லீம் பெண்களை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? அதற்கான தீர்வுகளை காண்பது எப்படி? இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும். கடமைகளையும்.அவைகளை செயல்படுத்தும் முறைகளையும். பிரச்சனைக்குண்டான தீர்வுகளின் வழிகளையும் தெளிவாக எடுத்துரைக்க வருகிறார்கள் காரைக்கால்: இக்ரா நர்சரி அன் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர்  சயிதா பானு B.sc..Bed அவர்கள்.
  
அவரின் உரையின் சில :
 மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டு விட்டது. வளர்ச்சி என்கிற பெயரில் பல பிரச்சனைகளை நாம் உணர்கிறோம். இதனால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது.
2,3,6 வயதிலிருந்து பெண் பிள்ளைகள் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். அந்த வயதில் கேட்காததை 16 அல்லது 18 வயதில் கேட்க மாட்டார்கள். அதனால் தான் பல குடும்பங்களில் பல சிக்கல்கள் பல பிரச்சனைகள் உருவாகிறது.

 தற்கால குழந்தைகளும் பெற்றோர்களும் எப்படியெல்லாம் நடக்கவேண்டுமென்றும்பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை மிக மிக ஆணித்தரமாக அழுத்தமாக! எடுத்துரைத்து விழிப்புணவை ஏற்படுத்திச்சென்ற சயிதா பானு B.sc..Bed அவர்களுக்கு எங்களின் உளப்பூர்வமான  நன்றிகள்.

அடுத்து
மலிக்கா ஃபாரூக் எழுதி வேண்டாமிந்த சுதந்திரம் கவிதையை வாசிக்க வருகிறார். மாணவி ஆர் ஆயிஷா
”நன்றி ஆர் ஆயிஷா” 

அடுத்து:
டாக்டர்: சுமையா தாவூத். அவர்கள் அவர்கள் வருகைதர தாமதமானதால். அடுத்தடுத்து பள்ளிமாணவிகள் கவிதை வாசிக்க[எல்லாம் நம்ம கவிதைதான் வேறு வழி] இஸ்லாமிய கீதம் பாட .பார்வையாளராக வந்திருந்த ராஜிக்காபர்வின் என்ற முபல்லிஹா ஆலிமா. ”மஜ்லீசின் ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் 10 நிமிடம் உரையாற்றினார். அடுத்து பள்ளி இமாம் . தனது உரையை தொடங்கியபோது.  [35 நிமிடங்கள் அங்கும் இங்கும் ஓடி என்ன செய்வதென புரியாது களைத்து நின்றபோது],”அப்பாடா” டாக்டர்: சுமையா தாவூத். அவர்கள் வந்துவிட்டார்கள்

அனைவரும் எதிர்பாத்திருந்த சொற்பொழிவாளர் வருகைதந்துவிட்டார்கள் இதோ அவர்கள் உங்கள் முன் உரையாற்ற வருகிறார்கள்  .
பெண் மதிக்கப்படவேண்டியவள் மடமையாக்கப்படவேண்டியளல்ல! பெண்ணுக்கு மதியை தீட்டினால் வைரத்தவிட ஜொலிப்பாள் அறிவுச்சுடர்கொண்டு. அவளுக்குள் இருக்கும் அறிவுச்சுடரை தூண்டிவிடவேண்டியது கட்டாயக்கடமை. கல்வியின் உளிகொண்டு அவளை செதுக்கினால் ஆற்றிவையும் கடந்து ஏழாவது அறிவை எட்டி, எட்டாவது அறிவுக்கு அடித்தளமிடுவாள். அடுத்தடுத்த தலைமுறைக்கும் தன் வாரிசுகளுக்கும் வழிவகுத்துக்கொடுப்பாள் என்பதனை செவிகளுக்கு உரக்கும்படியும் செல்களுக்கு உரைக்கும்படியும் எடுத்துச்சொல்ல பெண் கல்வி எதற்காக? என்ற தலைப்பில். பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க உங்கள் முன் உரையாற்ற வருகிறார்கள். நாடறிந்த பெண் கீழக்கரை:தாசீம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர்: சுமையா தாவூத். அவர்கள்..
அவரின் உரையின் சில  
 
இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த பல பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லுரிகள் மிகவும் அவசியம். தற்போது கடலோரப்பகுதிகள் மிக வேகமாக இத்தகைய பள்ளி, கல்லூரி அதிகம் வந்து விட்டது. சிறுபான்மையினர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி நிறுவனங்கள் அமைக்கபட்டு வருகின்றன. கல்வி செல்வம் அழியாக செல்வம், கேரளா மற்றும் தமிழ் நாட்டில் கல்வி விழிப்புணர்வு உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் அத்தகைய விழிப்புணர்வு இல்லை. சிறுபான்மை சமுதாயம் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல திட்டங்களை அரசாங்கம் தீட்டி வருகிறது.
பெண் கல்வி வேண்டும் .. சிந்திக்க.
பெண் கல்வி வேண்டும் .. குடும்பங்களை நல்லதொரு பல்கலைக்கழகமாக மாற்ற.
பெண் கல்வி வேண்டும் .. குடும்பத்தை பராமரிக்க.
பெண் கல்வி வேண்டும் .. பிள்ளைகளை நல்வழிப்படுத்த. 

மாசாஅல்லாஹ் கல்வி கண்போன்றது அதுவும் பெண்ணுக்கு ஒளிபோன்றது என்பதனை மிகவும் அழகாய் ஆணித்தரமாய் கல்வியின் அவசியத்தை உணர்த்தி தனது உணர்வுப்பூர்வமான பேச்சில் நெகிழ்ந்து அனைவரையும் நெகிழவைத்து விழிப்புணவுக்கான வழியையும் காட்டி, பெண்கல்வி விழிப்புணர்வின் விதையை மிக ஆழமாக விதைத்துசென்ற. முதல்வர் டாக்டர்: சுமையா தாவூத். அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே. அவன் நாட்டத்தால் இன்று மிக அருமையாக பெண்களுக்கு இஸ்லாமிய பெண்கள் அறியவேண்டிய  அவசியமான தேவையான விழிப்புணர்வுகள் மற்றும் அவர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து  விசயங்களும் விளாவரியாக விவரிக்கப்பட்டது நான்கு நாடறிந்த பெண்மணிகளால். மாசாஅல்லாஹ். நமது ரஹ்மத் பள்ளியில் இஸ்லாமிய பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் மாதா மாதம்  நடைபெறும் மாத பயன்  மற்றும் இஹ்திகாஃப் பெண்களுக்கு வெள்ளிகிழமை ஜும்மா என பல நல்ல விசயங்கள் நடந்தி சிறப்புற்று  வரும் ரஹ்மத் அறக்கட்டளை தற்ப்போது இப்படியொரு அருமையான விழிப்புணர்வு மாநாட்டையும் கொடுத்து மேலும் சிறப்படைந்துவிட்டது இங்கு நடக்கும் மாதாந்திர பயானுக்கும் வாராந்திர ஜும்மாவுக்கும் கலந்துக்கொண்டு இப்படியான வாய்பினை தவறாது நமது பெண்மணிகள் பயன்படுத்தி ஈமானின் உறுதியை பலப்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் மேலும் பெண்மணிகள் நல்வாழ்விற்காக இதுபோன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து நடத்தவும் எல்லாம் வல்ல இறைவனிடன் உதவி செய்யும்படியும் வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன் 


அடுத்து:
நன்றியுரையினை, வழங்க மாணவி இக்லாஸ் அவர்கள் அழைக்கிறேன்
”நன்றி இக்லாஸ்”
இந்நிகழ்ச்சியை நபியவர்கள் கற்றுதந்த துஆவோடு நிறைவுசெய்தேன். மகிழ்ச்சியாக! படபடப்பாக! பெருமிதமாக! [பின்னே ஒற்றை பெண்ணாக இருந்துக்கொண்டு இம்மாம்பெரிய மாநாட்டை தொகுத்து வழங்கிருக்கேனே ஆத்தாஆஆஆஆஆடி. எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! எனக்கு ஒத்துழைப்பு தந்து என்னோடு இயங்கிய இமாம்கள். யூசூஃப் சித்திக் மிஸ்பாஹி .மற்றும் பஜ்ஜுல் ரஹ்மான் ரப்பானி. ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

2000 த்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்ட பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு  சிறப்பாக நிறைபெற்றது.   விழாவினை சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

மாநாடு முடிந்து டாக்டர்: சுமையா தாவூத். அவர்களை சந்தித்து எனது கவிதை நூலை கொடுத்தபோது. வாங்கி ஆசிரியர் பெயரை பார்த்ததும். நீ துபையிலிருந்து எப்ப வந்தே உன்னை எனக்கு முன்பே தெரியும் அதாவது உன்னைப்பற்றி திருச்சி சையத்மூலம் அறிந்தேன். அவர் எழுதிய புத்தகத்தில் நீ எழுதிய கட்டுரையை படித்ததிலிருந்து உன்னை பார்க்கனும் என்றிருந்தேன் என்று எனது கைப்பிடித்து பக்கதிலிருந்துவர்கலிடம் இவள் நல்ல எழுத்தாளர் என இங்கிலீசில் பேசினார்கள். அதன்பின் வா எனது கணவரிடம் உன்னை அறிமுகம் செய்யனும் அவருக்கும் உன்னைத்தெரியும் என அழைத்துச்சென்று . பெரியவர்கள் முன்னிநிலையில் என்னங்க இது யார் தெரியுதா நம்ம மலிக்காங்க என அவர்கள்
சொன்னபோது மனம் நெகிழ்ந்தது. நான் இதுவரை நேரில் கண்டோ பேசியோ இராத ஒருவர் அதுவும் உலகறிந்த மெத்தப்படித்த மேதை  என்னைப்பற்றி என்னிடம் பெருமையாக பேசியபோது உள்ளத்துக்குள் இறைவா நீ எனக்கு கற்றுத்தந்த எழுத்தாற்றலால் என்னை கவுரப்படுத்தும் உனக்கு எந்நாளும் எந்நிமிடமும் என் சிரத்தை உனக்காமட்டுமே சாய்ப்பேன். எனக்கூறி உள்ளுக்குள் ஆனந்தகண்ணீர்விட்டேன் அது என் முகத்தில் எடுத்துக்காட்டியது. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் பக்கத்தில் அமர் என்றார்கள். ஆனால் என்னால் அங்கு நிற்க்கக்கூட முடியவில்லை உடல்நிலை சரியில்லாமல் உடல் முழுவதும் உதறிக்கொண்டேயிருந்தது ஜுரம்வேறு வந்துவிட்டது அதனால். மன்னிக்கவும் என்னால் நிற்கமுடியவில்லைமா. நான் ஹாஸ்பிட்டல்போகனும் இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் மீண்டும் சந்திப்போம். என்றும் தன்னுடைய விசிட்டிங்கார்டை தந்து எந்நேரம் தொடர்பு கொள் என்றார்கள். என்னுடைய அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்க்கிகொண்டார்கள். அத்துடன் அவர்களிடமிருந்து விடைப்பெற்றுதும் நேராக போய்விட்டேன் 
 எங்கே வேறெங்கே ஹாஸ்ட்பிட்டல்போயாச்சி. ஹா ஹா.. 

என் எழுத்துகள் மூலம் எனக்கு கிடைக்கும் அன்புகளால் பாசங்ககளால் நல்ல நட்புககளால். என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச்செல்லும்  எல்லாம் வல்ல இறைவனுக்கே கண்ணீர் கலந்த நன்றி!நன்றி!நன்றி!

 என்றும்
 அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.