அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, June 1, 2010

கப்ஸா.. [அரபி சாப்பாடு]

தேவையானவைகள்

பாஸ்மதி அரிசி 4 கப்
ஃபிரஸ் கோழி 2
குங்குமப்பூ தேவையான அளவு
பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை. கிராம்பு.
முந்திரி திராட்சை
காயவைத்த எழும்பிச்சை[இங்கு ரெடிமேடாக கிடைக்கும்]
உப்பு
நெய் கொஞ்சம்
முதலில் ஒருகோழியை நான்கு பீஸாக்கி நன்றாக சுத்தம் செய்து,அதை ஒரு பத்திரத்தில் [சிறிது வேண்டுமெனில்ஆயில்விட்டு]. பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை.காய்ந்த எழும்பிச்சை போட்டு  அதில் தேவையான தண்ணீர் விட்டு அதில் கோழியும் உப்பும்போட்டு வேகவைக்கவும்.
வேகும்போது அசடுபோல் மேல்வரும் அதை ஒரு கரண்டியால் எடுத்துவிடவும். [அது வேஸ்ட் கொழுப்பு]
கோழி வெந்தததும் அதைஎடுத்து குங்குமப்பூ போட்டு இதேபோல் வைத்துக்கொள்ளவும்
ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறுநெய்விட்டு சூடானதும் அதில் கோழிவேகவைத்த தண்ணீர் இருக்குமல்லவா அதை அரிசி கணக்கின்படி அளந்து ஊற்றவும்
அந்த தண்ணீரில் கழுவிய அரிசியை போடவும். அதில் சிறு குங்குமப்பூவோ அல்லது கலரோ சேர்க்கலாம்.
                                       
அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
சிறுதுநேரம் கழித்து திறந்து சோறு உடைந்துவிடாதவாறு கிளறிவிட்டு.
அதன்மேல் கோழிகளை அலங்கரிக்கவும்.
அதன்மேல் முந்திரி திராட்சை வறுத்துக்கொட்டவும்.

இப்போது கமகமக்கும் கப்ஸா ரெடி. இது எவ்வித மசாலாக்களும் இல்லாத மிகுந்த சுவைதரக்கூடிய ஒரு அரபிசாப்பாட்டு. சாப்பிட சாப்பிட வாசமும் மணமும் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.[இந்த சாப்பாட்டின் ருசியே கோழிவேகவைத்த தண்ணீரில் செய்வதுதான்]

இதற்கு சைடிஸ். தக்காளி. பச்சைமிளகாய். பொதினா. உப்புசேர்த்து கொரகொரப்பாக அரைத்து சட்னி செய்துக்கொள்ளவும்
கூடவே எழும்பிச்சை வெள்ளரி கேரட். முள்ளங்கி இலை.
வெள்ளை வெங்காயம்   இவைகளை பச்சை சாலட் செய்து
கடித்துக்கொள்ளவும் [அச்சோ நாக்கையல்ல பச்சை சாலடை]

இதை நாங்க சவுதி சென்றிருந்தபோது [உம்ரா செய்ய] அங்கே சாப்பிட்டோம். ஏனோ தெரியவில்லை ப்ரியமென்றால் ப்ரியம் அப்படியொரு ப்ரியம் இச்சாப்பாட்டின்மேல். அதேபோல் மச்சானும் அடிக்கடி செய்து தருவார்கள்.[நாங்க செய்யும் முறை இப்படிதான்]

 இது ஜெய்லானி அண்ணாவுக்காக சென்ற வெள்ளியன்று செய்யச்சொல்லி. இரு குடும்பங்கள் சாப்பிட்டோம். அண்ணாத்தே உங்க புண்ணியத்தில் ஒரே வாரத்தில் இருமுறை இச்சாப்பட்டு கிடைத்தமைக்கு மிக்க நன்றிங்கண்ணா!

இது ரைஸ்குக்கரில் எனக்குமட்டும் செய்தது அதுவும் புழுங்கல் அரிசியில் எப்புடி

                                  
இதுக்கு சைடிஸ்
வெரும் வெள்ளரியும் தயிரும் மல்லியும் உப்பும்
காராமணி மிச்சரும் மிக்ஸிங் கூட வே பேரிச்சமழமும்
எப்படி...
இப்படி அடிக்கடி ஏதாவது புது டிஸ்ஸா கேளுங்க அந்த சாக்கில் நாம் வெளுத்து வாங்கிருவோம்...

அன்புடன் மலிக்கா

28 comments:

Jaleela Kamal said...

ரொம்ப நலல் இருக்கு அதுவும் ஸ்பெட் பை ஸ்டெப் போட்டு இருக்கீங்க.

நானும் இதே போல் தான் அறுசுவையில் தோழிகள் கேட்டு கொண்டதால் இருமுறை செய்து நல்ல வந்ததும் அங்கு குறீப்பு போட்டேன் ஆனால் படம் எல்ல்லாம் போடல,

ரொம்ப நல்ல இருக்கு, கோழி வேக வைத்த தண்ணீரில் செய்வது தான் இந்த் சாப்பாட்டுக்கு தனி ருசி,

சிக்கன் சூப் சாப்ப்பாடு போல் பிள்ளைகளுக்கு போன் லெஸில் செய்து கொடுக்கலாம்.

மலிக்கா ஒரே அரபி உணவா அதுவும் இருமுறையா அசத்துங்கள்.

யாசவி said...

I love this when I was in Middle east

:)

Thanks for the receipie :)

Jaleela Kamal said...

மிக அழகாக புது வீட்டுட்டுடன் ஒரு புது டிஷ் சூப்பர்,
அலங்கரிப்பு, சைட் டிஷ் எல்லாம் அருமையோ அருமை மொத்ததில் கப்ஸா ருசியோ ருசி

யாசவி said...

I love this when I was in Middle east

:)

Thanks for the receipie :)

Mohamed G said...

சூப்பர் கப்சா டிஷ்,படங்கள் அருமை.

நாஸியா said...

அட இது தான் கப்ஸாவா? நானும் எல்லாரும் இது ரொம்ப ஈசின்னு சொல்லும்போது கப்ஸா விடுறாங்கன்னுலோ நினைச்சிட்டு இருந்தேன்! ஹிஹி.. :)

இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு பாக்கனும்

செந்தில்குமார் said...

இவ்வளவு நாள் நான் அமீரகத்தில் இருந்தும்

இந்த டிஷ்சை மிஸ் பன்னிட்டேன் மல்லிக்கா

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...நான் chicken stockயில் சில சமயம் wild rice வேகவைத்து அதனை grilled chickenயுடன் சாப்பிடுவோம்...அப்படி வேகவைக்கும் ரைஸுல் இந்த கப்ஸா ரைஸுல் ஒரே டேஸ்டில் இருக்குமா...

Asiya Omar said...

கப்ஸா ரைஸ் பார்க்க அழகாக இருக்கு.அருமை.

ஜெய்லானி said...

மலீகாக்காவ் !! இதை படிக்கும் போதே ரியாத்-ன் நினைவுகள் வருது.ம்..ஏக்க பெருமூச்சிதான்..
ரெஸிபியும் , படங்களும் சூப்பர் . இனி அசத்திடுவோமுல்ல நாங்களும் .

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவும் டாங்ஸுங்கோஓஓஓஓ

சசிகுமார் said...

சாப்பாட்ட விட கறி தான் அதிகமாக உள்ளது ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

மலிக்கா.எனக்கு மிகவும் பிடித்தது இந்த கப்சா.இதில் தாளிப்பதற்கு எலுமிச்சை,நாரத்தங்காய் தோல் போல் ஒன்றினை தாளிப்பில் போட்டு லேசான புளிப்பு சுவையுடன் இருக்குமே?அதனைப்பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே?கப்சா ரைஸுக்கு அதுதானே தனி மணத்தினை கொடுக்கும்.அதன் பெய்ர்,விபரங்கள் தெரிந்தால் போடவும்.

ஹுஸைனம்மா said...

ரொம்ப ஈஸிதான்னு கேள்விப்பட்டிருக்கேன்; செய்ததில்லை. ஆமா, இதில காஞ்ச லெமன் போல எதுவோ கிடக்குமே, அது என்னது?

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ரொம்ப ஈஸிதான்னு கேள்விப்பட்டிருக்கேன்; செய்ததில்லை. ஆமா, இதில காஞ்ச லெமன் போல எதுவோ கிடக்குமே, அது என்னது..

அதன் சொல்லிட்டேளே காய்ந்த எழும்பிச்சையின்னு. குறிப்பிலும் சேர்த்தாச்சி. மறந்துட்டேன். மிக்க நன்றிங்கோ. அதுக்குதாம் அம்மா ஹுசைனைம்மா வேனுமுங்குரது..ஹி ஹி

எம் அப்துல் காதர் said...

மல்லிகாக்காவ் நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவுக்கு பெயர் கப்ஸா அல்ல! "மந்தி கப்ஸா" , துபையில் பெரும்பாலும் இந்த மந்தி கப்ஸா தான் கிடைக்கும் என்று என் நண்பர் சொன்னார். இங்கு தம்மாமில் (சவுதி) கப்ஸா கலராக இருக்கும். இன்னும் சில contents கலந்திருக்கும். அதை விசாரித்து போடவும்.

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
ரொம்ப நலல் இருக்கு அதுவும் ஸ்பெட் பை ஸ்டெப் போட்டு இருக்கீங்க.

நானும் இதே போல் தான் அறுசுவையில் தோழிகள் கேட்டு கொண்டதால் இருமுறை செய்து நல்ல வந்ததும் அங்கு குறீப்பு போட்டேன் ஆனால் படம் எல்ல்லாம் போடல,

ரொம்ப நல்ல இருக்கு, கோழி வேக வைத்த தண்ணீரில் செய்வது தான் இந்த் சாப்பாட்டுக்கு தனி ருசி,

சிக்கன் சூப் சாப்ப்பாடு போல் பிள்ளைகளுக்கு போன் லெஸில் செய்து கொடுக்கலாம்.

மலிக்கா ஒரே அரபி உணவா அதுவும் இருமுறையா அசத்துங்கள்..//

ஆமாக்கா நீங்க சொன்னதுபோல் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

ஏதோ அண்ணாத்த புண்ணித்தால
இருந்தாலும் அடிக்கடி இதப்போல அரபி சாப்பாடுகள்தான் அதிகம்.

மிக்க நன்றி ஜலிக்கா..

அன்புடன் மலிக்கா said...

யாசவி said...
I love this when I was in Middle east

:)

Thanks for the receipie :)

ரொம்ப தேங்ஸ்மா யாசவி. பெயர் நல்லாயிருக்கு..

//Jaleela said...
மிக அழகாக புது வீட்டுட்டுடன் ஒரு புது டிஷ் சூப்பர்,
அலங்கரிப்பு, சைட் டிஷ் எல்லாம் அருமையோ அருமை மொத்ததில் கப்ஸா ருசியோ ருசி

அப்பாடா இப்பதான் திருப்தி. அக்காவே சொல்லியாச்சி பின்ன அப்பீலேது.. ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா said...

Mohamed G said...
சூப்பர் கப்சா டிஷ்,படங்கள் அருமை.

ரொம்ப சந்தோஷம் முஹம்மத் அவர்களே!மிக்க நன்றி..


//நாஸியா said...
அட இது தான் கப்ஸாவா? நானும் எல்லாரும் இது ரொம்ப ஈசின்னு சொல்லும்போது கப்ஸா விடுறாங்கன்னுலோ நினைச்சிட்டு இருந்தேன்! ஹிஹி.. :)

இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு பாக்கனும்//

அட ஆமாம்புள்ள இதுதான் கப்ஸா. அந்த கப்சாவல்ல ஓகே. ரொம்ப ஈசிதான் புள்ள செய்துபாருங்க..புள்ளைக்கும் கொடுங்க. என்னது!!!!!!!!!!அப்படினென்னலாம் கேட்கக்கூடாது..ஓகே..

அன்புடன் மலிக்கா said...

செந்தில்குமார் said...
இவ்வளவு நாள் நான் அமீரகத்தில் இருந்தும்

இந்த டிஷ்சை மிஸ் பன்னிட்டேன் மல்லிக்கா..//

ஆகா. இனி மிஸ்பண்ணாம சாப்பிடுங்க செந்தில். இங்கே மந்தி ன்னும் ஒரு டிஸ் இருக்கு அதுவும் இதேபோல்தானிருக்கும் என்ன கோழியை தந்தூரி ஸ்டைலில் வச்சிருபாங்க அதன் மேல..

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
மிகவும் அருமையாக இருக்கின்றது...நான் chicken stockயில் சில சமயம் wild rice வேகவைத்து அதனை grilled chickenயுடன் சாப்பிடுவோம்...அப்படி வேகவைக்கும் ரைஸுல் இந்த கப்ஸா ரைஸுல் ஒரே டேஸ்டில் இருக்குமா...//

ஊஹும். அந்த டேஸ்ட் வேற கீத்து.
இந்த டேஸ்ட் வேற..இதபோல் செய்து சாப்பிட்டு பாருங்க தெரியும்.வித்தியாசம்..



//asiya omar said...
கப்ஸா ரைஸ் பார்க்க அழகாக இருக்கு.அருமை.//

வாங்கக்கா ஆசியாக்கா உங்கலை வரவேற்க வந்தேனக்கா..நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
மலீகாக்காவ் !! இதை படிக்கும் போதே ரியாத்-ன் நினைவுகள் வருது.ம்..ஏக்க பெருமூச்சிதான்..
ரெஸிபியும் , படங்களும் சூப்பர் . இனி அசத்திடுவோமுல்ல நாங்களும் .

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவும் டாங்ஸுங்கோஓஓஓஓ..//

ஆகா பின்னோக்கிப் போயாச்சி.
அப்படியே அண்ணாந்து பாத்தியலா அண்ணாத்தே ரீவேனிங்ல ஓடியதோ..

ஆக நாங்களும் வெளுத்து வாங்கிட்டோம்.. நன்றிங்கண்ணா..




/சசிகுமார் said...
சாப்பாட்ட விட கறி தான் அதிகமாக உள்ளது ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

இதன் ஸ்பெசலே அதுதான் சசி.
மிக்க நன்றிமா..

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
மலிக்கா.எனக்கு மிகவும் பிடித்தது இந்த கப்சா.இதில் தாளிப்பதற்கு எலுமிச்சை,நாரத்தங்காய் தோல் போல் ஒன்றினை தாளிப்பில் போட்டு லேசான புளிப்பு சுவையுடன் இருக்குமே?அதனைப்பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே?கப்சா ரைஸுக்கு அதுதானே தனி மணத்தினை கொடுக்கும்.அதன் பெய்ர்,விபரங்கள் தெரிந்தால் போடவும்
//
அதான்கா முன்பு மறந்துட்டேன் ஹுசைன்னமா சொன்னதும் போட்டுட்டேன்..இப்ப பாருங்க..
மிக்க நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா said...

எம் அப்துல் காதர் said...
மல்லிகாக்காவ் நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவுக்கு பெயர் கப்ஸா அல்ல! "மந்தி கப்ஸா" , துபையில் பெரும்பாலும் இந்த மந்தி கப்ஸா தான் கிடைக்கும் என்று என் நண்பர் சொன்னார். இங்கு தம்மாமில் (சவுதி) கப்ஸா கலராக இருக்கும். இன்னும் சில contents கலந்திருக்கும். அதை விசாரித்து போடவும்.//

நீங்க சொல்வதுசரிதான் அதுவும் இதேபோல்தானிருக்கும் ஆனா அந்த மந்தியில், கோழியை தந்தூரி ஸ்டைலில் வச்சிருபாங்க. நாங்க சவுதி மற்றும். தாயுஃப் பிலும் இதேபோல்தான் சாப்பிட்டோம். வேறுசில இடங்களில் ஒருவித அரபி மசலா சேர்த்திருந்தாங்க.இதிலும் கலரோ அல்லது குங்குமபுவோ கூட சேர்த்தால் இன்னும் கொஞ்சம் கலர்வரும். அல்லது அந்த மசாலா சேர்தாலும் கலைவருமுன்னு நினைக்கிறேன் இது மசாலா இல்லாதா கப்ஸா.

மிக்க மகிழ்ச்சி தாங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும்..மிக்க நன்றி

செ.சரவணக்குமார் said...

எங்க ஊர் சாப்பாட்டைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இங்கு பார்ட்டி என்றாலே கப்ஸா தான்.

படங்களும் மிக அருமை.

செ.சரவணக்குமார் said...

ஆனால் சவுதியில் உள்ள கப்ஸாவின் ஸ்பெஷலே சுட்ட கோழிதான்.

அன்புடன் மலிக்கா said...

செ.சரவணக்குமார் said...
எங்க ஊர் சாப்பாட்டைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இங்கு பார்ட்டி என்றாலே கப்ஸா தான்.

படங்களும் மிக அருமை../

நமக்கு தெரிந்த வரையில் எழுத்தியாச்சி. மிக்க நன்றி சகோதரரே!

அன்புடன் மலிக்கா said...

செ.சரவணக்குமார் said...
ஆனால் சவுதியில் உள்ள கப்ஸாவின் ஸ்பெஷலே சுட்ட கோழிதான்.//

இரண்டு மூன்று முறை அப்படியும் சாப்பிட்டோம்.

Unknown said...

mallika ungaludaiya intha blogkai ipoluthu thaan paarkiren. inshaa allah, ini time kidaikum pothu anaithaium paarpen.maasha allah asathureenga mallika

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.