அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, May 24, 2010

அமீரகக்கிளை அறிமுகவிழாவின் புகைப்படங்கள்..

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிமுகவிழா.[அமீரகக்கிளை] கடந்த 7-5 2010 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு, துபை பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில்.மிக சிறப்பாக நடைப்பெற்றது. சிறுமி, வஃபா.  அல்ஹம்து சூராவை அழகாய் விளக்கத்துடன் ஓதி துவங்கி வைக்க


சிறப்பு விருந்தினர்களாக,
கொழும்பு தமிழ்சங்க துணைத்தலைவர்.காவியத்திலகம் டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன். அவர்களும். எளிய மார்க்கத்தை இனிய இதயத்தில் ஏற்றுக்கொண்ட[பேராசிரியர் பெரியார்தாசன் என்னும்]
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார்குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்.
செய்யது எம். சலாஹுதீன் அவர்களும். மற்றும் சிறப்புமிக்க பெரியவர்களும் வந்திருந்துவிழாவை சிறப்பித்தார்கள்.

விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. பேராசிரியரின் அற்புதமான உரை அனைவரையும் ஈர்த்து அன்போடு கட்டிப்போட்டது என்றால் அதுமிகையாது. தெளிவான தெள்ளத்தெளிவான இஸ்லாத்தைப்பற்றியும் மனோதத்துவத்தைப்பற்றிய பேச்சும் அதற்கான விளக்கமும். மிக மிக அருமை. அங்கிருந்து கேட்டோர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. சுபகானல்லாஹ்.


அல்லாஹ் யாரை தன்வசப்படுத்திக்கொள்ள நாடுகிறானோ அவனே நேர்வழிப்பெற்றவன். அவ்வழியில் நம்மையும் இணைத்துக்கொள்வானாக!


இது நான்தான்.
பாலைமணலைவிட படுபயங்கரமாக
ஜுரமென்றபெயரில் தேகமெங்கும் அனல்பறக்க.
கூடவே நானுமிருப்பேன் என்று இருமலும் சேர்ந்திருக்க.
அறிமுகக்கவிதையை வாசித்துவந்தமர்ந்தேன் மூச்சுவாங்க..

ஈடிஏ. செய்யது எம். சலாஹுதீன் அவர்கள்.
டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள்தலைவர்அப்துல் கதீம் அவர்கள். அப்துல்லாஹ் அவர்களுக்கு சால்வை அணிவித்தபோதுவிழாவிற்க்கு வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி

என் அழைப்பையும் ஏற்று வந்திருந்த நல்லுள்ளங்களும் மகிழ்ச்சிகலந்த
நன்றி நன்றி நன்றி...

//
இதில் பிரசுரிக்கபட்டுள்ள போட்டோக்கள் அனைத்தும். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் [அமீரககிளை] ஆட்சிமன்றகுழுவின் தலைவர் திரு. அப்துல் கதீம் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. [என் போட்டோவைத்தவிர]//

இதுதான் நான் வாசித்த கவிதை..
சிகரத்தை நோக்கி

பன்னாட்டுக் கழகமிது-நல்ல
பண்பாளர்கள் உருவாகியது
இஸ்லாமிய இயக்கமிது -நல்
ஈமானை வளர்குமிது

இலக்கிய கழகமிது -நல்
இலக்கியவாதிகளை உருவாக்குமிது
இலக்கிய பணிகளிலே- தன்னை
இணைத்துக்கொள்ளும் மனிதர்கட்கு
இயன்ற உதவிசெய்து உயர்த்துமிது

பெண்களுக்கும் ஊக்கம்தந்து- நற்
பண்புகளைக் காட்டுமிது
நல்லெண்ணெங்களை ஊக்குவிக்க
நற்பணிகள் செய்யுமிது

கட்சியில்லை கொடியுமில்லை
நன்மைசெய்ய துடிக்கிறது
களங்கமில்லா எண்ணங்களால்
கழகம் சிகரம்தொட போகிறது

பாலை பரப்பிலிருந்தும் -இஸ்லாமிய
இலக்கியம் பரப்பிடுவோம்
இயக்கம் பாரெங்கும் பரவிடவே –அயர்ச்சி
பாராது உழைத்திடுவோம்

இறைவனில் அருளாலே
இயக்கத்தை நடத்திடுவோம்
ஈமானில் உறுதியுடன்
இனியபாதையில் நடந்திடுவோம்..அன்புடன் மலிக்கா

17 comments:

நாடோடி said...

போட்டோ ப‌கிர்விற்கு ந‌ன்றி...

Chitra said...

அருமையான பகிர்வு..... படங்களும் நல்லா இருக்குதுங்க..... கவிதையும் அருமை. பாராட்டுக்கள்!

ஜெய்லானி said...

எல்லாமே அருமையா இருக்கு. நேரிலதான் வர முடியாம போச்சி :-(

காஞ்சி முரளி said...

காய்ச்சலுடன்....
இலக்கிய விழாவிலும் கவிதை மழையா....!

////பேராசிரியரின் அற்புதமான உரை அனைவரையும் ஈர்த்து அன்போடு கட்டிப்போட்டது என்றால் அதுமிகையாது. தெளிவான தெள்ளத்தெளிவான இஸ்லாத்தைப்பற்றியும் மனோதத்துவத்தைப்பற்றிய பேச்சும் அதற்கான விளக்கமும். மிக மிக அருமை. அங்கிருந்து கேட்டோர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.////

பெரியார்தாசனின் பேச்சினை என் கல்லூரி விழாவில்... அதாவது... இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன்.... 1984லிலேயே கேட்டு மெய்மறந்து போனவன்... அப்போது அவர் எங்கள் தாய்க்கல்லூரியான "பச்சையப்பன் கல்லூரி"யின் துறைத் தலைவர்... அவர் அன்றே... ரஷ்யாவை எடுத்துக்காட்டி 2030இல் வறட்சி ஏற்படுவதற்கு... இன்றே... அதாவது 1984லிலேயே அவசரக்கூட்டம் போட்டு ஆய்வு செய்கின்றனர்... ஆனால் நம் நாட்டில்..." என்று கல்லூரி மாணவராகிய எங்கள் உள்ளங்களை தட்டிஎழுப்பியவர்... அவர் பேச்சில் மயங்கதவரே இல்லை எனக்கூறலாம்... நீங்கள் இன்றுதான் கேட்டிருக்கிறீர்கள் ... அதுதான் இந்த வியப்பு....

கவிதையும்... கருத்தும்... படங்களும்.. அருமை...

நட்புடன்...
காஞ்சி முரளி....

பனித்துளி சங்கர் said...

உங்களின் கவிதை சிறப்பாக இருந்தது . வாழ்த்துக்கள் .
விழாவை நேரில் கண்ட ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்களின் பதிவு .புகைப்படங்கள் அனைத்தும் அருமை .பகிர்வுக்கு நன்றி !

dheva said...

நல்ல பகிர்வு....! அடுத்த முறை எங்களுக்கும் தெரிவியுங்கள் ...கலந்து கொள்கிறோம்!

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
போட்டோ ப‌கிர்விற்கு ந‌ன்றி...//

மிக்க நன்றி ஸ்டீபன்..

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
அருமையான பகிர்வு..... படங்களும் நல்லா இருக்குதுங்க..... கவிதையும் அருமை. பாராட்டுக்கள்.//

ரொம்ப ரொம்ப சந்தோஷம் சித்ராமேடம்.மிக்க நன்றி..

தேடும்மனம். said...

ரொம்ப ரொம்ப நன்றி மலிக்கா நேரில் வரமுடியாத குறைய தீர்த்துட்டீங்க. இனி உங்க புரோகிராம் எதுமிருந்தால் ப்லீஸ் எங்களுக்கும் டிக்கட் அனுபுங்கப்பா. எப்படியாவது ஒருநாள் நிச்சியம் உங்களைப்பார்ப்பேன்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
எல்லாமே அருமையா இருக்கு. நேரிலதான் வர முடியாம போச்சி :-(//

ரொம்ப நன்றி அண்ணாத்தே!

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
எல்லாமே அருமையா இருக்கு. நேரிலதான் வர முடியாம போச்சி :-(//

ரொம்ப நன்றி அண்ணாத்தே!

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
காய்ச்சலுடன்....
இலக்கிய விழாவிலும் கவிதை மழையா....! //

இஸ்லாமும் இலக்கியமும் கலந்த விழா அதான் அங்கேயும் மழை..படிக்கும் வரை காய்ச்சல் காணாமல்போனது. முடித்ததும் மீண்டும் வந்தது..

////பேராசிரியரின் அற்புதமான உரை அனைவரையும் ஈர்த்து அன்போடு கட்டிப்போட்டது என்றால் அதுமிகையாது. தெளிவான தெள்ளத்தெளிவான இஸ்லாத்தைப்பற்றியும் மனோதத்துவத்தைப்பற்றிய பேச்சும் அதற்கான விளக்கமும். மிக மிக அருமை. அங்கிருந்து கேட்டோர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.////

பெரியார்தாசனின் பேச்சினை என் கல்லூரி விழாவில்... அதாவது... இன்றைக்கு 25 வருடங்களுக்கு முன்.... 1984லிலேயே கேட்டு மெய்மறந்து போனவன்... அப்போது அவர் எங்கள் தாய்க்கல்லூரியான "பச்சையப்பன் கல்லூரி"யின் துறைத் தலைவர்... அவர் அன்றே... ரஷ்யாவை எடுத்துக்காட்டி 2030இல் வறட்சி ஏற்படுவதற்கு... இன்றே... அதாவது 1984லிலேயே அவசரக்கூட்டம் போட்டு ஆய்வு செய்கின்றனர்... ஆனால் நம் நாட்டில்..." என்று கல்லூரி மாணவராகிய எங்கள் உள்ளங்களை தட்டிஎழுப்பியவர்... அவர் பேச்சில் மயங்கதவரே இல்லை எனக்கூறலாம்... நீங்கள் இன்றுதான் கேட்டிருக்கிறீர்கள் ... அதுதான் இந்த வியப்பு....
//

ஆமாம் முரளி முதல்முறை நேரில் உரைகேட்டது மிகவியப்பாய் அதேசமயம் பிரம்ப்பாய் இருந்தது. ஒரு மனிதருக்குள் எவ்வளவு திறமை ஆளுமை அதை வெளிப்படும் திறன்.
மன உறுதி.

பேச்சென்றால் அனைவரும் பேசுவதும் பேச்சாகிவிடமுடியாதல்லவா. பேசும்திறமையை வெளிப்படும் முறையில் மற்றவர்களை கவர்ந்துதிழுக்கும் திறன் அனைவருக்கும் கிடைக்காதல்லவா!
எல்லாம் இறைவனின் நாட்டம்..

என்ன இருந்தாலும் நீங்க சீனியர் அதான் முந்திக்கிட்டீங்க. நாம இப்பதானே முதலடி எடுத்துவைக்கிறோம்


//கவிதையும்... கருத்தும்... படங்களும்.. அருமை...

நட்புடன்...
காஞ்சி முரளி....//

மனிக்ழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
உங்களின் கவிதை சிறப்பாக இருந்தது . வாழ்த்துக்கள் .
விழாவை நேரில் கண்ட ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்களின் பதிவு .புகைப்படங்கள் அனைத்தும் அருமை .பகிர்வுக்கு நன்றி !/

ரொம்ப ரொம்ப சந்தோஷம் பனித்துளி.
அழகான கருத்துக்கு அனபான நன்றி..

அன்புடன் மலிக்கா said...

dheva said...
நல்ல பகிர்வு....! அடுத்த முறை எங்களுக்கும் தெரிவியுங்கள் ...கலந்து கொள்கிறோம்!//

இறைவன் நாடினால் நிச்சயம் தெரிவிக்கிறேன் தேவா
மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/malar said...
ரொம்ப ரொம்ப நன்றி மலிக்கா நேரில் வரமுடியாத குறைய தீர்த்துட்டீங்க. இனி உங்க புரோகிராம் எதுமிருந்தால் ப்லீஸ் எங்களுக்கும் டிக்கட் அனுபுங்கப்பா. எப்படியாவது ஒருநாள் நிச்சியம் உங்களைப்பார்ப்பேன்//

அல்ஹம்துலில்லாஹ்.
மிக்க மகிழ்ழ்சி மலர்.

என்னது டிக்கெட்டா அம்பாசமுத்திரத்திற்கு நான் பிளைட் விட்டதும் முதல் ஆளா உங்களுக்குதான் டிக்கட் ஓகே.

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடுவான் சந்திப்போம்..

நன்றி மலர்விழி..

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் மலிக்காரொமப் அழகாதொகுத்து போட்டு இருக்கீஙக. கவிதையும் அருமை

jaseela said...

அழைப்பு வந்தும் வர முடியாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது......ஆனால் அடுத்த நாள் சிவஸ்டார் பவனில் முனைவரின் சிறு உரைக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.......அருமையான இலக்கியப் பேச்சு!!!....படங்கள் அருமை....:)

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.