அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, March 5, 2011

உருளை கட்லெட்..

பெரிய உருளைகிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
முட்டை 2
சோளமாவும் ரவாவும் தேவையான அளவு
உப்பு
சீரகப்பொடி 1.ஸ்பூன்
மிளகாய்தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
ஆயில் பொரிதெடுக்க
உருளைக்கிழங்கை முக்கால் வேக்காடக வேகவைத்து அதை சற்று பிசைந்து பொடியாக நறுக்கிய
வெங்காயம். பச்சைமிளகாய். கொத்தமல்லி இலை. மிளகாய்பொடி சீரகசோம்புப்பொடி உப்பு ஆகியவைகளைசேர்த்து பிசைந்து கொண்டு
இதுபோல் உருண்டை பிடிக்கவும்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதில்
இந்த உருண்டையை முக்கியெடுத்து-பின்பு 
                                                       சோளமாவு மற்றும் ரவாவாவையும் கலந்துகொண்டு அதில் பிரட்டி.
ஆயில் சூடானதும் மிதமாக தீயை வைத்து, மெதுவாக ஆயிலில்போட்டு உடைத்துவிடாமல் பக்குவமாக திருப்பிபோட்டு
பொன்முறுவலாக சிவந்ததும் எடுக்கவும்
இப்போது சூடான சுவையான கட்லெட் நொடியில் ரெடியாகிவிடும். அப்படியேவும் சாப்பிடலாம். சாஸ், மற்றும் மயோனஸ், அல்லது பூண்டு சட்னியுடனும், தொட்டு சாப்பிடலாம்..
அன்புடன் மலிக்கா..


18 comments:

காஞ்சி முரளி said...

hai...!

naanthan 1st...!

vada... che uruda cutlet enakkuthan..

காஞ்சி முரளி said...

நேத்து யாரோ சொன்னாங்கோ...!
என்னாவோன்னு...!

ஆனா... இன்னைக்கு பதிவா...?
இது... கொஞ்சம்..
இல்ல...இல்ல
அதிகமான ஓவர்தான்...!

எல் கே said...

முட்டை இல்லாமல் செய்ய முடியுமா ??

தமிழ்வாசி பிரகாஷ் said...

ம்ம்ம்... செஞ்சு சாப்பிடலாம் போல

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

ஜெய்லானி said...

ஆஹா..நேத்து ஏரியா முழுக்க வாசம் அடிச்ச மாதிரி தெரிஞ்சுதே..அதானா இது ..ஹி..ஹி..

//நேத்து யாரோ சொன்னாங்கோ...!
என்னாவோன்னு...!//

அட இதுக்குள்ள வாசம் அங்கு வரை அடிச்சிடுச்சோ...!! :-))

ஸாதிகா said...

மலிக்கா அருமையான கட்லட்டை அழகாக செய்து காட்டி இருக்கின்றீர்கள்.

செந்தில்குமார் said...

மல்லிக்கா

ம்ம்ம்...லீவுமட்டும் கிடைக்கட்டும் முயற்ச்சிப்போம்

apsara-illam said...

சலாம் மலிக்கா..,மிகவும் அருமையான கட்லட்.நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

அன்புடன் மலிக்கா said...

எல் கே said...

முட்டை இல்லாமல் செய்ய முடியுமா ??//

முடியும் கார்த்திக்.
கான் மாவை சற்று தண்ணீர்விட்டு கெட்டியாக கரைத்து அதின் இந்த உருண்டையை நனைத்து பிரட் கம்சில் புரட்டி நன்ஸ்டிக் பேனில் கொஞ்சமாக ஆயில் விட்டு பொரித்து எடுக்கலாம்..

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்கள் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

பாவா ஷரீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

என்னையும் நினைவில் வைத்து சலாம் சொன்னது
மிகுந்த சந்தோசம் சகோ

இலக்கிய உலகில் கலக்(கிய)க சகோ மலிக்காவிற்கு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

One of my favourites... to reduce oil usage, I put it on dosa pan... comes out good... but not as good as deep fried...ippadi kilappi vittuteengale sapidara aasayai...:))))

Pranavam Ravikumar said...

Nice...!

போளூர் தயாநிதி said...

கட்லட்டை அழகாக செய்து காட்டி இருக்கின்றீர்கள்.

apsara-illam said...

சலாம் மலிக்கா அக்கா...,தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.

நன்றி.

அன்புடன்,
அப்சரா.

malar said...

அஸ்ஸலாமு அலைக்கம்...

உங்கள் விசாரிப்புக்கு நன்றி...

பதிவோ பினூட்டமோ போட்டால் கம்பியூட்டரே கதி என்று இருக்கு .அதனால் தான் வரவில்லை..

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.