மணி வேக வேகமாக அந்த பிரபல பத்திரிக்கை அலுவலகத்தினுள்ளே நுழைந்தார்,
யாரிங்கே நியூஸ் எடிட்டர் எனக்கேட்ட மணியின் கேள்விக்கு
வலப்புறம் நீட்டிய விரலின்பக்கம் கோபமாக விரைந்து செல்லும் மணியை நோக்கியே,அங்கிருந்த அனைவரின் கவனமும் இருந்தது.
சாத்தியிருந்த கண்ணாடிக் கதவையும்தாண்டி மணியின்குரல் கனீரென
வெளியே ஒலித்தது,மனசாட்சியே இருக்காதா உங்களுக்கெல்லாம்,பத்திரிக்கை நடத்தினால் எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் செய்யலாமென்ற தைரியமா?
பத்திரிக்கை நடத்துவதெற்கென்ற தர்ம நியாயமெல்லாம் கிடையாதா?
எந்த செய்தி கிடைத்தாலும் அதனை ஒன்றுக்கு மூன்றாக்குவதே உங்களுக்கெல்லாம் வேலை
அடுத்தவரின் வேதனைகளையும் காயங்களையும் வைத்து நீங்கள் சம்பாதிக்கிறீர்களே?காசுள்ளவன் குசுவிட்டால் நாறாத நாத்தம், காசில்லாதவன் விட்டால் காசிவரைக்கும் நாறுகிறதே எப்படிங்க!
ஏழைகளென்றால் பரபரக்கும் செய்தியாக வெளியாகுகையில்! பணக்காரர்களென்றால் பார்த்துப் பதுங்குகிறதே ஏனுங்க?
என் பொண்ணு எங்கக்கிட்ட கோவிச்சிகிட்டு 1 வாரம் அவ தாய்மாமன் வீட்டுக்கு போனதை,
அக்கம்பக்கதிலுள்ளவங்க ஆயிரம் முடிச்சிப்போட்டுபேச அதை எப்படியோ உங்க காதுக்கு எட்ட முழுமையா விசாரிக்காம கதை கதையா திரிச்சி
அக்கம்பக்கதிலுள்ளவங்க ஆயிரம் முடிச்சிப்போட்டுபேச அதை எப்படியோ உங்க காதுக்கு எட்ட முழுமையா விசாரிக்காம கதை கதையா திரிச்சி
”பதினாறு வயது பருவம் படிதாண்டியது” யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம்” ஓடியபெண்ணை தேடித்தேடி பெற்றோர்கள் திண்டாட்டம் என்று
”சுடச்சுட” முதன்மைச் செய்தியில்போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கீங்களே! என்னங்க நியாயமிது ஒருசெய்தியை அரைகுறையா கேட்டு, உருவமேயில்லா ஒன்றுக்கு கைகால் ஏற்படுத்தி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோட்டு,அடுத்தவங்கள கேவலப்படுத்தி வயிற எரியவிட்டு அதில் நீங்க குளிர்காய்கிறீங்களே கேட்க யார் வரப்போறாங்க என்ற தைரியம்தானே! அப்படியே வந்தாலும் எதையேனும் சொல்லி சமாளிச்சிடலாமென்கின்ற திமிர்தானே இப்படியெல்லாம் ஆடுறீங்க!
ஒட்டுமொத்தமா ஒன்னு கேட்கவா!
உங்க வீட்டு பிள்ளைங்களோ,அல்லது உங்களின் நெருங்கிய உறவுகளோ! கூத்தடிக்க கிளப்பிற்கு போனாலோ! கூடிக்களிக்க மகாபல்லிபுரம் போனாலோ! அப்படியிப்படின்னு கோடி கோடியா சுருட்டினாலோ! 4,5 சின்னவீடு, பெரியவீடு வச்சிருந்தாலோ! அல்லது, நடுரோட்டில் நாயைவிடக் கேவலமாக நடந்தாலோ! அல்லது காதலென்ரபேரில் கர்ப்பமாகி வந்து நின்றாலோ! அல்லது யாருடனும் ஓடிப்போனாலோ! சுடச்சுட செய்தியாக்குவீங்களா? அல்லது முதன்மைச்செய்தியில் போட்டு முன்னுரிமை கொடுத்து சந்தோஷப்படுவீங்களா!

உங்களுக்கென்று வரும்போதுமட்டும் மானம்,கெளரவம்!அதே பிறருக்கென்று வரும்போது வேடிக்கை விளையாட்டா! என தன் நெஞ்சடைக்க, விழிகள் செந்நீரைச் சுரக்க, வார்த்தைகளை சூடாக்கி சப்தமிட்டபோது,வேதனை கலந்த ஆதங்கம் எதிரொலித்ததை உள்வாங்கி,சப்த நாடியையும் அடக்கி, சத்தமில்லாமல் கேட்டு நின்றன பத்திரிக்கை அலுவலகமும்,அதன் பணியார்களும்..
டிஸ்கி//
இது எனது முதல் குட்டிக்கதை முயற்ச்சி..
எப்படியிருக்கு சொல்லிட்டுபோனா நல்லாயிருக்கும், இல்லாட்டி அழுவேன் சொல்லிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்
டிஸ்கி//
இது எனது முதல் குட்டிக்கதை முயற்ச்சி..
எப்படியிருக்கு சொல்லிட்டுபோனா நல்லாயிருக்கும், இல்லாட்டி அழுவேன் சொல்லிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்
4 comments:
நல்லாத்தான் இருக்கு.... ஆனாலும் இன்னும் கொஞ்சம் மேட்டரை சேர்த்து சொல்லியிருந்தா கதை களை கட்டியிருக்கும்... முதல் முயற்சி என்பதால் வாழ்த்துகள்
அப்படியே அந்த பிளாகின் பேகிரவுண்டை மாத்திடுஙக படிக்கும்போது மிகவும் கண்களை எரிச்சலடைய வைக்கிறது... (இது எனது கருத்துதான்)
கதை...
தொடர்கதை...
சிறுங்கதை...
குறுங்கதை.... அப்படீன்னு பல கதைகள் படித்திருக்கிறேன்...
இது என்ன
குட்டியோண்டு கதை...
விளக்கமா சொல்லணும்னா...
5 பைசாவுக்கு கடலை வாங்கினா...
உடைத்த கடலை கொசுறு கொடுப்பதை போல...
“கொசுறு கதை”....
சும்மா... சும்மா...
விறுவிறுப்பா துவங்குற கதை...
சட்டுன்னு கிளைமாக்சுக்கு போயிடுச்சு...
புதுசுல்ல... போகப் போக எல்லா சரியாயிடும்...
கதை நல்லாயிருக்கு... இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் இன்னும் நல்ல கதைகளைப் படைக்கலாம்...
வாழ்த்துக்கள்.
Post a Comment