அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, June 13, 2010

ரெட் சில்லி சிக்கன் பக்கோடா.

ரெட் சில்லி சிக்கன் பக்கோடா.
சிக்கன். எலும்பு நீக்கியது 1/4 கிலோ

சிகப்பு மிளகாய். 7 காரத்திற்கேற்ப

வெங்காயம். பொடியாக அரிந்தது 1/2 கப்

கருவேப்பில்லை. கொஞ்சம்

சீரகம் சோம்பு. 1 1/2 டீஸ்பூன்

இஞ்சி. பொடியாக அரிந்தது

ஓட்ஸ். 3 ஸ்பூன்

உப்பு. ஆயில். பொரித்தெடுக்க

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய சிறிய பீஸாக்கிக்கொள்ளவும்

அதனுடன் உப்பு சேர்துவைத்துவிட்டு.
மிக்சியில். சோம்பு, சீரகம், கருவேப்பில்லை,
கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஓட்ஸையும் சிக்கன்கூட சேர்த்து அதன்கூட வெங்காயம் இஞ்சியையும் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு 5 நிமிடம் வைத்துவிட்டு
ஆயில் சூடானதும்தீயை மிதமாக்கி, அதில் இந்த சிக்கனை பக்குவமாக போட்டு எடுக்கவும்.சிவக்கவிட்டு எடுக்கவும்.

அப்படியே எடுத்து எடுத்து சாப்பிட்டோமுன்னா. சிக்கன் சாஃப்டாகவும் அதன்கூட உள்ளவைகள்  கிரிஸ்பியோடும். செம டேஸ்டோடும் இருக்கும் இதுக்கு கெச்சப் சூட்டாகும். சும்மாவே துண்ணலாம்.

டிஸ்கி// சுட்டு வச்சிட்டு திரும்பி வரத்துக்குள்ள தட்டில் மீதி ரெண்டுதான் இருந்தது அதுவும் ஆக சின்ன பிஸ்.யாருக்குன்னு கேக்கலயே அது அது. எனக்கில்லை இத சுட்டவங்களுக்குதான்[ஸ்ஸ்ஸ் இதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லக்கூடாது ஓகே அப்புறம் என்ன வைவாங்கோ]

 ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம வலைக்குள்ளேயும் வந்து 101. இதயங்கள் . மாட்டியிருக்காங்கன்னா பாத்துக்கோங்களேன் அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மாட்டியவர்களுக்கும்
இனி வந்து மாட்டப்போறவங்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

அன்புடன் மலிக்கா

21 comments:

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் மலிக்கா சூப்பர்ர்ர்.அப்படியே எடுத்து சாப்டாச்சுப்பா...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்னும் பல இதயங்களை வெல்ல என் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
மிகவும் அருமையாக இருக்கிறது உங்களின் சமையல் . பகிர்வுக்கு நன்றி

Mohamed G said...

சூப்பர்,ஆனால் 7 மிளகாய் பயமுறுத்துகிறது.

LK said...

உள்ளேன்

Chitra said...

102 ...... Congratulations!

Pakoda looks good. Adding oats to this recipe is new to me. :-)

நாடோடி said...

மாலையில் இது போல் செய்து சாப்பிட்டால் சூப்ப‌ரா இருக்கும்... நூறு ஆயிர‌ம் ஆக‌ வாழ்த்துக்க‌ள்..

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

ஐய்யா எனக்கு தான் முதலில் பகோடா
ஒரு புது விதமாக இருக்கு,

பூங்கொத்துக்கு மிக்க நன்றி

எம் அப்துல் காதர் said...

ஆஹா நான் தான் மொதோ மொதொவா..அப்ப அம்புட்டும் எனக்கே எனக்காவா அக்கா!
ரெட் சில்லி சிக்கன் பக்கோடா. soooper.

மலர் செண்டை ரெண்டு கைகளாலும் பெற்றுக் கொண்டேன்.

http://mabdulkhader.blogspot.com/

நீங்களும் எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க!

ஜெய்லானி said...

பஜ்ஜி சொஜ்ஜின்னதும் கல்யான நாள் நினைவு வந்து பார்த்தா... நல்ல வேளை தப்பிச்சேன்.......!!!


சிக்கன் பக்கோடா. + ஹமூஸ் ரெண்டு பிளேட் பார்ஸல்..........!!!

ஜெய்லானி said...

ஆஹா....இன்னைக்கு நாந்தான் லேட்டா .....வடை , ஆயா , காக்கா எல்லாம் போச்சே..!!!

Software Engineer said...

இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com

Geetha Achal said...

மிகவும் அருமையான இருக்கின்றது...சூப்பர்ப்...

காஞ்சி முரளி said...

///// ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம வலைக்குள்ளேயும் வந்து 101. இதயங்கள் . மாட்டியிருக்காங்கன்னா பாத்துக்கோங்களேன் அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மாட்டியவர்களுக்கும் இனி வந்து மாட்டப்போறவங்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்////

என்னவோ சொல்லியிருக்கீங்க.... நா ஒரு டியூப்லைட்... ஒண்ணும் புரியல...
இருந்தாலும்

வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி...

அன்புடன் மலிக்கா said...

அது ஒன்னுமில்லை முரளி. இந்த கலைச்சாரலை பாலோவர்ஸைதான் சொன்னேன்.
இப்ப புரிஞ்சிதுதான்னோ..

அன்புடன் மலிக்கா said...

menaga sathiya said"வாவ்வ்வ் மலிக்கா சூப்பர்ர்ர்.அப்படியே எடுத்து சாப்டாச்சுப்பா..."

நன்றி menaga!!!!!!!! எப்படி இருந்தது??????????

அன்புடன் மலிக்கா said...

நன்றி geetha achal,mohamed g,software engineer,

காஞ்சி முரளி said...

appadiya..!

வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்.......நட்புடன்...
காஞ்சி முரளி...

மனோ சாமிநாதன் said...

ரெட் சில்லி சிக்கன் பக்கோடா அருமையாக இருக்கிறது மலிக்கா!
உடனே செய்து பார்க்கத் தூண்டுகிறது!!

Ammupappa said...

Hi,

very nice blog. thanks for using my templates. your 2 blogs are get listed in my template users list.

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW MY PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.