அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, July 19, 2010

சாண்ட்வெஜ்...


தேவையான பொருட்கள்

பிரட் 8 பீஸ்
சீஸ்
கெச்சப்
மயோனஸ்
ஆயில் மிளகு உப்பு

பேஸ்ட்டுக்கு பொதினா கொஞ்சம், கெட்டித்தயிர் கொஞ்சம்,
வேகவைத்து அரைத்த கொண்டக்கடலை கொஞ்சம், சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.


”கலவைக்கு”
பச்சைபட்டானி, பீன்ஸ், உருலைகிழங்கு, கொத்தமல்லி, கேரட்,
இவைகள் தேவையானாளவு எடுத்துகொள்ளவும்,
பச்சைபட்டானியையும் உருலையை ஓவனில் 6 நிமிடம் வேகவைத்து
ஓவன் கண்ட்டெனரில் சீஸை போட்டுஅதில் துருவிய கேரட் ,
கட்செய்த கொத்தமல்லி, பீன்ஸ், உருலை, பட்டாணி, அதனுடன் மிளகு, உப்புசேர்த்து
எல்லாத்திலும் சேர்வதுபோல் கிளரிவிட்டு பின்


ஓவனில் 3 நிமிடம்வைக்கவும் ரெடியானதும்


இதுபோல் பிரட்டை வட்டமாக கட்செய்து அதில் மயோனஸ் தடவிவிட்டு

பொதினா பேஸ்ட்டை தடவி அதன்மேல் இந்தக்கலவையில் கொஞ்சம் வைத்து கெச்சப்பும்போட்டு மேலே

ஒரு பிரட்வைத்து இதேபோல் மூடி பரிமாரலாம்

இல்லை மூடாமலும் பரிமாரலாம்


மயோனஸ் கெச்சப் தேவையில்லை என்றாலும் தவிர்த்துக்கொள்ளலாம்
குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை இதை சாப்பிடலாம், டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும்...
அன்புடன் மலிக்கா

Wednesday, July 14, 2010

மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன்..


.ஸ்பெசல் அவித்த மீன்கறி
மீன் கால் கிலோ
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
பச்சைமிளாய் 4
வரமிளகாய் 3
எண்ணை 1 ஸ்பூன்
கடுகு
உப்பு

மீனைக்கழுவி துண்டுக்களாக்கி அதில் உப்பைதடவி மஞ்சள் தூள் வரமிளாய் கடுகு இவற்றை விழுதுபோல் அரைத்து அதை மீனுடன் கலக்கவும் பச்சைமிளகாயைகீறிகொண்டு எண்ணையும் சேர்த்து அதையும் அதனுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதனை குக்கரில்[ தண்ணீர் கொஞ்சம் ] 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

அவித்த மீன் வாசனையுடன் சாப்பிட டேஸ்டாக இருக்கும் இது
புத்தகத்தில் படித்து செய்த சமையல்.

அன்புடன் மலிக்கா..

கருவிலிருக்கும் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!


இந்த தகவல்கள் நமக்கு மெயிலில் வந்தது. அல்லாரும் அறிந்துகொள்ளட்டடுமேன்னு இதில்[இது ஏற்கனவே படித்ததுதான் மீண்டும் படிப்பதில்------- அப்படின்னு கருத்துக்கள் வரும் ஹி ஹி.. அதுவும் சரியே. இருந்தாலும் தெரியாதவுக தெரியட்டுமேன்னு ஒரு அக்கரைதான்..

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இதுத் தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில்,”கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.

அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

Saturday, July 10, 2010

மேகி கோதுமை முர்தபா..

தேவையானவைகள்.

மேகி நூடல்ஸ் -3 பாக்கட்

மக்ரூனி -1 கப்
முட்டை -5
காய்கறிகள் பொடியாக நறுக்கியது -2 கப்
கேரட். காளிபிளவர்.பீண்ஸ்.சோளம்.
வெங்காயம் -1
தக்காளி -1
மல்லியிலை 1/2 கட்டு
கரம் மசலா -2 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு..
கோதுமை தோசைக்கு
கோதுமை 1/4 கிலோ
உப்பு தண்ணீர்
கோதுமைதோசையின் பததுக்கு மாவைகலந்துக்கொள்ளவும்.
மேகி மக்ரூனியை வேகவைத்து வடித்துக்கொண்டு.
 அதை ஒரு அகன்ற பாதிரத்தில்போட்டு அதனுடன் நறுக்கிய காய்கறிகள். தக்காளி. வெங்காயம். உப்பு. மல்லியிலை. கரம் மசாலா. முட்டை அனைத்தையும் ஒன்றாக அப்பாத்திரத்திலேயேபோட்டு நன்றாக கலக்கவும்.
 பின்பு நான்ஸ்டிக்  தோசைக்கல்லில் எண்ணைவிட்டு

                               இதுபோல் ஊற்றி அடுப்பை மிதமாக்கவும்
 மேல்புறம் வெந்ததும் அதிலேயே நான்கு துண்டாக கட்செய்யவும். பின்பு திருப்பிபோடவும்.
 அது வெந்ததும் ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

 மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லில் சிறிது எண்ணைவிட்டு அதில் கோதுமைதோசை சுட்டெடுக்கவும்.
 அதையும் ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
 ஒரு பெரிய தட்டில் கோதுமைதோசையை வைத்து அதன் மேல்புறம் ஒரு துண்டு மேகி முர்தபாவை வைக்கவும்.
 இதுபோல் மடக்கவும் அதை இணைக்க சிறு குச்சிகள் [பல்குத்தும்குச்சி. சாப்பிட்டதும் பல்லில் மாட்டிக்கிட்ட தேவையும் படுமுல்ல] கொண்டு இணைக்கலாம் அல்லது அப்படியே பிளேட்டில் வைத்தும் கொடுக்கலாம்.
 ருசி மிக அருமையாக இருக்கும்.

வெஜ் காரங்க முட்டையை தவிர்த்து
மேகி செய்வதுபோல் செய்து இந்த கோதுமைதோசைக்குள் வைத்து சாப்பிட்டுபாருங்கள் இருவேறு வித்தியாச ருசியும் கலந்து சூப்பராக இருக்கும்.



இது ரு நல்லரெசிபியாக இருந்தது. என்ன இருந்தது கேட்குறீங்களா?

நானே இத முதல் முறையா டிரைப்பண்ணினேன். என்னது அப்படிப்பார்க்குறீங்க உண்மையத்தாங்க சொல்லுதேன்
நல்லாயிருந்ததுன்னு பெண்பதிவர்கள் சந்திச்சோமே அப்போது சொன்னாங்களே! என்ன? என்ன கேட்டிங்க ஓ அதுவா இதுன்னுதானே. அதேதான் இது..

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..

அன்புடன் மலிக்கா

Thursday, July 8, 2010

இதுதானா அது! சொல்லவேயில்ல!

(தி.மு) திருமணத்திற்கு முன்

[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

------------------------------------------------------------------
 ....................................
--------------------------------------------------------------

என்ன தேடுறீங்க விசயம் இருக்குது கீழேபாருங்க
[இது நம்ம சேத்துகிட்டது]


இப்போது
(தி.பி) திருமணத்திற்குப் பின்

அப்படியே கீழிருந்து மேலே படியுங்கள்

இது மெயிலில் வந்ததுங்கோ நான் படித்ததும் சரி நாம் பெற்ற இ------து இவ்வையகமும் பெறட்டுமென்றுதான்.
இதில் பாருங்கப்பா பொண்ணுங்க ரொம்ப நல்லவங்கன்னும். எப்போதும் பாவப்பட்ட ஏமாறுகிற  ஜீவன்களென்றும் சொல்லாமா சொல்லிட்டாங்க.
இதிலிருந்து என்ன புரியுது..
ஆண்கள் எப்போதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்  [நீங்க நெனக்கிறதுதான் கேட்குதே] அதேதான்...

Sunday, July 4, 2010

தால் பாணியும். தங்க தோசையும்.

தேவையானவை

நன்றி கூகிள்

துவரம்பருப்பு -1/4 கிலோ
தக்காளி  பழுத்தது -1
உருலைக்கிழங்கு -2
 பெரிய வெங்காயம் -1
சிறிய வெங்காயம் -10
ப,மிளகாய் -2
பூண்டு  பல் -10
முழு சோம்பு -1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் -4
மஞ்சள்தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பில்லை
கடுகு
உப்பு
ஆயில்


குக்கரில் பருப்பு கட்செய்த உருலை, தக்காளி, வெங்காயம், உப்பு மஞ்சள்தூள் போட்டு

4,  விசில்வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் ஆயில்விட்டு அதில் கடுகு சி,மிளகாய்

பூண்டுபல் சிறியவங்காயம் [கட்செய்தது] கருவேப்பில்லைபோட்டு வதக்கிக்கொண்டு அதில்
இந்த பருப்புக்கலவையை சேர்க்கவும் பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்
இது உடனடி தால்பாணி 10. நிமிடத்திற்குள் செய்துவிடலாம்.

இந்த தால்பாணி. வெள்ளைசாதம்கூட தொக்கு. கறி கோழி முட்டை. இப்படி ஏதாவது ஒன்று பொரித்துக்கொண்டு இதை ஊற்றி சாப்பிடலாம். . தோசை இட்லிக்கும். இதை செய்து சைடிஸாக வைத்துக்கொள்ளலாம்.
இப்பசரியா ஸாதிக்காக்கா..


இது அம்மாவுக்காக அன்புமகன் சுட்ட தோசை
ரோஸ்ட் டம்மா ரோஸ்ட்
இது மரூஃப் சுட்ட ரோஸ்ட்
அம்மாவுக்கு மட்டும் ஒன்னு
மத்தவங்களுக்கு பன்னு
எப்படியிருக்கு அன்புமகனின் கைமணம்..

ஒரே அழுச்சாட்டியம் இன்னைக்கி நாந்தான் உங்களுக்கு தோசை சுட்டுத்தருவேன்னு.நான் சொன்னேன் தோசை சுடுகிறேன்னு கையை சுட்டுக்கொள்வாய் அதுமட்டுமல்லாமல் தோசை வட்டமாக வராதுன்னு தோசைதானே வட்டமாக வராது நான் ரோஸ்ட் சுட்டுதாரேன்னு சொன்னாரே பார்கனும். சொன்னதோடு நிற்காமல் அழகாய் சுட்டும் தந்து அசத்திபுட்டாருல்ல.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.