அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, December 21, 2009

பாப்லட் மீன் கறி

தேவையானவை

பாப்லட்மீன் [வாவல்] 6,,,7..
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகய் 3
இஞ்சிபூண்டு விழுது 2டீஸ்பூன்
கொத்தமல்லிதூள் 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
தேங்காய் 1 கப்
லெமன் ஜூஸ்

/தாளிக்க பூண்டுபல் 5 சிறியவெங்காயம் 4 கருவேப்பில்லை வெந்தயம்/
மீனை சுத்தம்செய்து தலைகளைமட்டும் தனியாக்கிவிட்டு2 ,2 ,துண்டுகளாக்கிகொள்ளவும்
அதில் இஞ்சிபூண்டு மிளகாய்தூள் உப்பு போட்டு 10 நிமிடமூறவிடவும்
ஓவன் கண்டினரில் ஆயில்விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி ப மிளகாய் போட்டு 2 நிமிடம் வைக்கவும்
பின் வெளியிலெடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும்
அதனுடன் தலைகளையும் சேர்க்கவும்
மசாலாக்களையும் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு வைத்து மூடி 10,15, நிமிடம் ஓவனில் வைக்கவும்.

மசாலா வாசனை போனதும் திறந்து கொள்ளவும்
மீதமுள்ள அனைத்து ஊறவைத்திருந்த மீனை பொறித்தெடுத்து  அந்தமசாலாக்குழம்பில் போடவும்
அதன்மேல் தேங்காயை அரைத்து ஊற்றவும்.
மீண்டும் 2 நிமிடம் ஓவனில் வைக்கவும். ரெடியானதும்

1 ஸ்பூன் லெமன் ஜூஸ் ஊற்றவும்
மீன்பொறித்த ஆயிலிலேயே தாளிக்கவும். தாளித்தவைகளைப்போட்டு பரிமாரவும்

இது ருசியான மீன்கறி எல்லவற்றிக்கும் ஏற்ற டிஸ்.

அன்புடன் மலிக்கா

Tuesday, December 15, 2009

ஆச்சர்யம்

பார்க்கவே அதிசயமாக இருந்தது மனிதர்கள் எதிலெதில் எப்படியெப்படியெல்லாம் வாழ்க்கிறார்கள்.
என்னிலையிலும் காக்கக்கூடியவன் இறைவன் என்பதால் கல்லான குகைகளுக்குள்ளும் மலைகளுக்குள்ளும் வீடுகளை அமைத்து வாழ்க்கிறார்கள்.

நம்மைவிட மேன்மையானவர்களை கண்டு அதேபோல்வாழ்வேண்டும் என்றெண்ணி உள்ளதையும் பறிகொடுத்துவிடாமல்

நமக்கு கிடைத்த வாழ்க்கையெண்ணி நாள்பொழுதில் நொடிக்கொடி இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.இது எனக்கு மெயிலில் வந்தது

அன்புடன் மலிக்கா

Sunday, December 6, 2009

எனது கைவண்ணம்இதற்கு விளக்கம் வேண்டம் என நினைக்கிறேன்.
நமக்கு பிடித்த டிஷைன்களை நாமே போட்டுக்கொள்ளும்போதும், பிறருக்கு போட்டுவிடும்போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்,
மருதாணி சிவந்ததும் பார்க்கனுமே கண்களை, அம்மாடியோ எத்தனை அழக்குன்னு நம்மைநாமே சொல்லிக்கொள்ளலாம் [ஹி ஹி ஹி]

அன்புடன் மலிக்கா

Thursday, December 3, 2009

நாங்களும் படம் காட்டுவோம்இது எங்க வாரிசுங்கோ அன்பு மகன் மஃரூப்

ஓமான்நாட்டில் முசந்தம் என்னும் இடத்திற்குபோனோம்

அங்குஎங்கள் கண்களுக்கு விருந்தளித்த
பல காட்சிகளை என்கேமராவுக்குள் பதித்ததை இங்கு உங்களுக்காக தந்துள்ளேன் பார்த்து ரசியுங்கள்

இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக அற்புதமானவை
அவன் மிக நுட்ப்பமானவன்
ஆற்றலுடையவன் இறைவன் மனிதனைப்படைத்து, இந்த உலகிலுள்ள அனைத்தையும் பார்த்து ரசித்து
உணர்ந்து சிந்தித்துசெயல்படசொல்லியிருக்கிறான்

இந்த உலகத்தை சுற்றி அதிலுள்ளதை தெரிந்து தெளிவுபெறும் மனிதனுக்கு இறைவனின் அற்புதமும் அறிவுப்பூர்வமான ஆற்றல்களும்
அவனின் கண்ணியமும் கலைரசனையும் தெரியும்..


நிலம் கடல் வானம் மூன்று ஒன்றிணைந்த அழகே


படபடத்த புறாக்களின் அணிவகுப்புக்குள் அசந்துபோனோம்

அட தண்ணிரே இல்லாத உயரத்தில் ஒருஒற்றைமரம்மட்டும் அழகாய்

அதோ தெரியுதே அங்குதான் பிரியாணியைவைத்து ஒருகட்டு கட்டினோம்

எங்க வாரிசு புறாக்களின் கூட்டத்திற்கு நடுவே கைகொட்டிய ஆனந்தம்


இருமலைகளுக்கு கிடையில் காணும் காட்சிகள்
எங்கவீட்டு குட்டி ஹீரோ

நீருக்கும் மலைகளுக்கும் மேலே பகல் நிலவு என்கேமராவுக்கு போஸ்கொடுத்தது

அலைகளோடு உறவாடியபடி

பூநாரைகளின் நீர்க்கோலம்

எங்கவீட்டுச்செல்லம்

அதோ தெரியுதா அதுதான் டால்பின் துள்ளிக்குதித்ததே பார்க்கனும் எங்கள் கண்களுக்கு விருந்தாக

இதானுங்க நாங்க பயணம் செய்த போட் [அதாங்க விசைப்படகு]வாகனம்

இந்த மீனிலிருந்து நாங்களும் வாங்கிவந்தோமுல்ல நல்லா வறுத்து தின்னோமுல்ல

மலைகளுக்கு அப்புறமும் இப்புறமும் கடல்நீரின் காட்சி

திரும்பும்போது மூடிய மேகத்துக்குள் ஒளியபோய்கொண்டிருந்த மலைகள்.

படகு சவாரி போக 3 மணிநேரம் வர 2, 30 நேரம், [கொஞ்சம் வேகமாக வந்திட்டோம்]
அம்மாடியோ அடித்த கூத்துகள் மறக்கமுடியாது இன்றும், படகிலே அடுப்பை பற்றவைத்து இஞ்சி ஏலக்காய் போட்டு ஒரு டீ போட்டுதந்தாங்க நம் ஜென்டில்மேன்கள் செமசூப்பர்.

பார்க்கவேண்டிய இடம் மனம் அமைதியை உணர்ந்தது ஆனந்தம் அடைந்தது.

அன்புடன் மலிக்கா

Tuesday, December 1, 2009

இங்கே வாங்கோ விருது மழை

அன்புத்தோழி மேனகா சத்தியா அவர்களும்,
அன்பான ஸாதிகா அக்காவும்,
எனக்கு இந்த மூன்று விருதுகளையும் தந்துள்ளார்கள்
தோழமைகளின் ஊக்கம் புதுஉற்ச்சாகத்தைத்தந்துள்ளது.

நம்முடைய வளர்ச்சிக்கு முக்கியகாரணமாக இருப்பவர்கள் தோழமைகள் என்பதை விருதுகள் மற்றும் கருத்துக்களின் வாயிலாக ஊக்கப்படுத்துவதன்மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

சந்தோஷமும் மகிழ்ச்சியும் கரைபுரண்டு கண்ணுக்கெட்டியதூரம்வரை கடலாகமாறிக்கிடக்கிறது.

மென்மேலும் என் தோழமைகளின் ஊக்கமும் தூண்டுதலும் என்னாலும் எனக்கு தரவேண்டுமாய் கேட்டுக்கொண்டு
விருதுகள் வழங்கிய தோழி மேனகா சத்தியாவிற்க்கும்
அன்பான ஸாதிகா அக்காவிற்க்கும் என் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்


அன்புத்தோழி மேனகா சத்தியா
தந்த இரு விருதுகள்
இது
                                     அன்பான ஸாதிகா அக்கா தந்த விருது 

இந்த விருதினை என் தோழமைகளான

பீர் அண்ணா

பித்தனின் வாக்கு

பா ராஜாராம்

இராகவன் நைஜீரியா

கிளியனூர் இஸ்மத்

[கவிதைகள்] விஜய்

ஜலீலாக்கா

அபூ அப்ஷர்

தியாவின் பேனா பேசுகிறது

ராஜவம்சம்

கருவாச்சி

பிரபாகரண்ணா

எதிரொலி நிஜாம்

வழங்குகிறேன் இந்த விருதினை அன்போடு ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்றென்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.