அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, December 3, 2009

நாங்களும் படம் காட்டுவோம்இது எங்க வாரிசுங்கோ அன்பு மகன் மஃரூப்

ஓமான்நாட்டில் முசந்தம் என்னும் இடத்திற்குபோனோம்

அங்குஎங்கள் கண்களுக்கு விருந்தளித்த
பல காட்சிகளை என்கேமராவுக்குள் பதித்ததை இங்கு உங்களுக்காக தந்துள்ளேன் பார்த்து ரசியுங்கள்

இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக அற்புதமானவை
அவன் மிக நுட்ப்பமானவன்
ஆற்றலுடையவன் இறைவன் மனிதனைப்படைத்து, இந்த உலகிலுள்ள அனைத்தையும் பார்த்து ரசித்து
உணர்ந்து சிந்தித்துசெயல்படசொல்லியிருக்கிறான்

இந்த உலகத்தை சுற்றி அதிலுள்ளதை தெரிந்து தெளிவுபெறும் மனிதனுக்கு இறைவனின் அற்புதமும் அறிவுப்பூர்வமான ஆற்றல்களும்
அவனின் கண்ணியமும் கலைரசனையும் தெரியும்..


நிலம் கடல் வானம் மூன்று ஒன்றிணைந்த அழகே


படபடத்த புறாக்களின் அணிவகுப்புக்குள் அசந்துபோனோம்

அட தண்ணிரே இல்லாத உயரத்தில் ஒருஒற்றைமரம்மட்டும் அழகாய்

அதோ தெரியுதே அங்குதான் பிரியாணியைவைத்து ஒருகட்டு கட்டினோம்

எங்க வாரிசு புறாக்களின் கூட்டத்திற்கு நடுவே கைகொட்டிய ஆனந்தம்


இருமலைகளுக்கு கிடையில் காணும் காட்சிகள்
எங்கவீட்டு குட்டி ஹீரோ

நீருக்கும் மலைகளுக்கும் மேலே பகல் நிலவு என்கேமராவுக்கு போஸ்கொடுத்தது

அலைகளோடு உறவாடியபடி

பூநாரைகளின் நீர்க்கோலம்

எங்கவீட்டுச்செல்லம்

அதோ தெரியுதா அதுதான் டால்பின் துள்ளிக்குதித்ததே பார்க்கனும் எங்கள் கண்களுக்கு விருந்தாக

இதானுங்க நாங்க பயணம் செய்த போட் [அதாங்க விசைப்படகு]வாகனம்

இந்த மீனிலிருந்து நாங்களும் வாங்கிவந்தோமுல்ல நல்லா வறுத்து தின்னோமுல்ல

மலைகளுக்கு அப்புறமும் இப்புறமும் கடல்நீரின் காட்சி

திரும்பும்போது மூடிய மேகத்துக்குள் ஒளியபோய்கொண்டிருந்த மலைகள்.

படகு சவாரி போக 3 மணிநேரம் வர 2, 30 நேரம், [கொஞ்சம் வேகமாக வந்திட்டோம்]
அம்மாடியோ அடித்த கூத்துகள் மறக்கமுடியாது இன்றும், படகிலே அடுப்பை பற்றவைத்து இஞ்சி ஏலக்காய் போட்டு ஒரு டீ போட்டுதந்தாங்க நம் ஜென்டில்மேன்கள் செமசூப்பர்.

பார்க்கவேண்டிய இடம் மனம் அமைதியை உணர்ந்தது ஆனந்தம் அடைந்தது.

அன்புடன் மலிக்கா

24 comments:

அபுல் பசர் said...

மிக அழகான பயண கட்டுரை.
பார்க்கவும், படிக்கவும்.
தங்களின் எழுத்துப்பணி தொடர நல்வாழ்த்துக்கள்.
அபுல்பசர்.
abulbazar.blogspot.com

ராஜவம்சம் said...

படமும் அதர்க்கான விளக்கமும் நலம்

(முழு நேர பதிவராகிட்டிங்களோ?)

Anonymous said...

படங்கள் அழகு

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல அழகான,படக்காட்சி,அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்கள்.மாஷா அல்லாஹ்.

இங்கேயும் பிரியானிதானா,அக்கா?பேஷ்,பேஷ்!

sarusriraj said...

malikka super trip photos r very nice

Suvaiyaana Suvai said...

very nice photos!! and pleasant area!!

கருவாச்சி said...

//அட தண்ணிரே இல்லாத உயரத்தில் ஒருஒற்றைமரம்மட்டும் அழகாய் //
ரொம்ப அருமை உங்கள் கவிதை போல

ஸாதிகா said...

படங்கள் அருமை.இன்னும் கொஞ்சம் விலாவாரியாக பயணக்கட்டுரையை எழுதி இருக்கலாம்.

S.A. நவாஸுதீன் said...

விடுமுறை சந்தோசமா கொண்டாடியிருக்கீங்க. போட்டோ ஒவ்வொன்றும் (உங்க கமெண்ட்டும்) மிக அருமை உங்க கவிதைகள் மாதிரியே.

அன்புடன் மலிக்கா said...

/அபுல் பசர் said...
மிக அழகான பயண கட்டுரை.
பார்க்கவும், படிக்கவும்.
தங்களின் எழுத்துப்பணி தொடர நல்வாழ்த்துக்கள்.
அபுல்பசர்.
abulbazar.blogspot.com/

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அபுல்.
தொடர்ந்து வரவும்..

அன்புடன் மலிக்கா said...

/ராஜவம்சம் said...
படமும் அதர்க்கான விளக்கமும் நலம்/
மிக்க மகிழ்ச்சி ராஜவம்சம்..

(முழு நேர பதிவராகிட்டிங்களோ?)

ஹி ஹி சும்மா வெட்டியாயிருக்கும் நமக்கு வேறுவேலைவேண்டாமா அதான் இப்படி:{

அன்புடன் மலிக்கா said...

/சின்ன அம்மிணி said...
படங்கள் அழகு/

நன்றி சின்ன அம்மிணி..


/sarusriraj said...
malikka super trip photos r very nice


நன்றி சாருக்கா../

அன்புடன் மலிக்கா said...

/ பாத்திமா ஜொஹ்ரா said...
நல்ல அழகான,படக்காட்சி,அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்கள்.மாஷா அல்லாஹ்./

ஆமாம் பாத்திமா அல்லாஹ்வின் படைப்புகளை காணகண்கோடிவேண்டும் அத்தனை அழகும்,அற்புதமும். பிரம்மிப்பும்.அம்மம்மா சொல்ல வார்த்தைகளில்லை..

/இங்கேயும் பிரியானிதானா,அக்கா?பேஷ்,பேஷ்!/
என்ன செய்ய மூன்று வேலையில் ஒருவேலை பிரியாணி, ஒருவேலை இரால்சோறு. ஒருவேலை. இரவு தெருவழியில் கிடைத்த அத்தனையும்..ஹி ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
//அட தண்ணிரே இல்லாத உயரத்தில் ஒருஒற்றைமரம்மட்டும் அழகாய் //
ரொம்ப அருமை உங்கள் கவிதை போல/

ரொம்ப நன்றி கருவாச்சி..

/Suvaiyaana Suvai said...
very nice photos!! and pleasant area!/

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுவையோ சுவை!

seemangani said...

படங்களும் விளக்கமும் அருமை.
சகோ...
உங்கள் நீரோடையில் என் (கனவு)கட்டு மரம் நுழைய முடியவில்லையே என்??சகோ...

அக்பர் said...

படங்களும் விளக்கமும் அருமை. பையனை க்ளோசப் சாட்டில் எடுத்திருக்கலாம்.

ஹுஸைனம்மா said...

மலிக்கா,

படங்களும், கமெண்ட்களும் உங்களின் கவிநயத்தை வெளிப்படுத்துகின்றன. அதிலும், அந்த உச்சிமரம், அற்புதம்!!

மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சும்மாவா சொன்னாங்க!!

Sammy said...

உங்க பையன் நல்ல ஸ்மார்ட் ... படம் மற்றும் விளக்கங்கள் நல்லா இருந்துதுங்கோ ....

MALARVIZHI said...

படங்கள் அற்புதம். மருதாணி அதைவிட அற்புதம். நல்ல டிசைன்கள் .

பிரபாகர் said...

கடுமையான வேளைப்பளு... இப்போதுதான் பார்க்கிறேன்... அருமை சகோதரி. மருமகன் நன்றாக போஸ் கொடுக்கிறார்....! க்யூட்...

பிரபாகர்.

சக்தி த வேல்..! said...

ஆகா...! எனக்கும் photography பிடிக்கும்.. எந்த cameraவில் எடுத்திங்க.. நல்லா இருக்கு ..உங்க வீட்டு செல்லம் cuteஆகா இருகிறார்

உண்மை உணர்வுகள். said...

very nice...

balaji said...

அருமை

இறைவனின் படைப்பும்
உங்களின் படைப்பும்

இனியன் பாலாஜி

sabira said...

uggal rasanai super.........

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.