அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, March 30, 2010

முதல் இந்திய அழகியும். நானும்.என்னடா இந்திய அழகியும் நானும் என்று போட்டிருந்ததேன்னுதானே விழுந்தடித்து ஓடிவந்திங்க [ஆமா இவுக அழகாயிருந்துட்டாலும்]

முதன் முதல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற (வருடம் 1949) ப்ரமிலா (Esther Abraham). இந்த அழகிய பெண்ணுக்கு வயது இப்போது 90.

இவர்தான் முதல் இந்திய அழகியாம் என்ன அழகா இருக்காங்க [என்னைப்போலவே! என்ன அவங்க கருப்பா இருக்காங்க ”அடியே மல்லி கண்ணை விளக்கிப்பார் அது கருப்பு வெள்ளை போட்டோ]

கண்களே காதல் கவிதை சொல்லுதே
கண்ணங்களோ அழகை அள்ளுதே
செவ்வித இதழ் சில்லென்ற புன்னகையைச் சிந்துதே
முன்நெற்றி ரோமங்கள்
மொத்த அழகுக்கும் முகவரியாய் இருக்குதே

இதுயார். இப்ப நீங்கதான் விளக்கிபார்க்கனும் அவங்கதான் இவங்க
என்ன ஒரு வசீகரம் முதுமையிலும் இளமையின் பூரிப்பு
தோல்மட்டுமே சுறுக்கத்தால் புன்னகையோ பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல்.
[இதேபோலத்தான் இன்னும் கொஞ்சகாலம் கழித்து மல்லியும் நல்லாதானிருக்குது கற்பனைசெய்து பார்க்கும்போது என்ன இன்னும் வயதுகூடிப்போய் என்பின்னே மச்சான் ஹையா ஜாலிதான்]

//மெயிலில் வந்தது என்னைகவர்ந்தது//

அப்புறம்
எங்கவீட்டு அன்புச்செல்லம் 7.ஆம் வகுப்பு பாஸாகிவிட்டார்.
அனைத்திலும் நல்ல மார்க்.  81 ஃபர்சண்டேஜ் .. நிறையகுழந்தைகள் நல்ல மார்க் எடுத்திருக்காங்க அவர்களுகாகவும்.என் அன்புச்செல்லத்துக்காவும்
//மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க//

அனைவரின் துஆக்களும் பிராத்தனைகளும் என்றென்றும். வேண்டும்
என் செல்லத்துக்கு.

அச்சோ ஒன்னு சொல்லனுமே அவருடைய ஆர்ட்டுக்கு வந்த கருத்துக்களை படிக்கச்சொன்னேன்.ஜெய்லானி எழுதியிருந்த கருத்தை படிக்கும் முன் ஹை சூப்பர் கிரீன் ரோஸ், என்று சொல்லிவிட்டு. 

கெலர் க்க்க்க்க்க்கப்பு வொள்ள்ள்ளை ப அ அ அ டம் கெடுத்த்த்து வொரைய்ய்ய்யப் பிழ்கவெம் . என்னமம்மி இந்த அங்கிள் இப்படி எழுதியிருக்காங்க ரொம்ப நல்ல அங்கிள்மம்மி என்றார்.

அல்லாவே அது கலர் கருப்பு வெள்ளை படம் கொடுத்து வரையப் பழகுங்ங்கள் என்று எழுதியிருக்காங்கன்னு சொன்னேன் ஓ அப்படியா வெரி வெரி தேங்ஸ்ன்னு சொல்லுங்கமம்மி. நெக்ஸ்ட் என்னை குட்பாய் யின்னு சொன்ன அத்தனை பேருக்கும் பிஃக்[பெரிய] தேங்ஸ் சொல்லுங்க மம்மின்னாரு. என் செல்லத்துக்கு ஊக்கம் கொடுத்த இன்னும் கொடுக்க இருக்கின்ற அனைவருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி

அன்புடன் மலிக்கா

Sunday, March 28, 2010

அன்புச்செல்லத்தின் அழகிய கைவண்ணம்

என்வீட்டுச்செல்லம் குட்டி ஹீரோ முகமது மரூஃப்


இவருக்கு வரைவதும்.கிராஃப்ட் செய்வதும்  ரொம்பப்பிடிக்கும். எதையும் பார்த்த நிமிசத்தில் அதைபோலவே வரைந்துவிடனும்.
முயற்ச்சி செய்து வெற்றியும் பெறுவார்.

அப்பப்ப அவர் வரைவதை கிளிக் செய்வது என் வேலை. அப்படி எடுத்த போட்டோக்களில் சில.

இவரின் குறும்பு ரொம்ப பிடிக்கும்.
இரவில் எப்போதும் உறங்குமுன் மூன்று முத்தம் கொடுப்பதும் பெறுவது வழக்கம் என்னிடம். கொஞ்சநேரம்
கதை சொல்வேன் ஆன்மீகம் ரொம்ப பிடிக்கும் எல்லாவற்றையும்கேட்டு கேட்டுத்தெரிந்துகொள்வதில் ஆர்வம்அதிகம்.

அப்படி போனவாரம் கதைசொல்லும்போது,இரவு மணி 11, லேட்டாயிடுச்சி.தூங்கு என்றேன். சரி சரி முத்தம் தாங்க மம்மி [அம்மான்னு சொல்லச்சொன்னா அது பெரியவனா போனதும் இப்ப மம்மிதான்]

நல்லபிள்ளையா நடந்துகிட்டாதான். லீவ் விட்டாச்சி நிறைய நேரம் விளையடாமல் டைப்பிங் ஸ்பீட் கத்துக்கோ மற்றதிலும் கவனம் செலுத்து நல்லபிள்ளையா நடந்துகிட்டா நிறைய முத்தம் தருவேன் என்றேன்.

உடனே சட்டென எழுந்து ஸ்டைலாக நடந்துவிட்டு திரும்பிப்பார்த்து என்ன மம்மி சூப்பராக நடந்தேனா என்று சொன்னாரே பார்க்கனும். என்னத்தச்சொல்ல இக்காலத்து பிள்ளைங்கள ரொம்பவே ஸ்மார்ட்டா இருக்குதுங்க. அப்படியே அள்ளியணைத்து முத்துமிட்டுவிட்டு படுக்கச்சென்றேன்.

சொன்னதையே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்றேன். [அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லை நம்ம
பெற்றபிள்ளையின் அறிவுத்தளத்தைக்கண்டு..]எதவும் புதுசா முயற்சி செய்துவிட்டால்
அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எப்படி நான் என் அறிவுத்தளத்தை வளர்த்துக்கொண்டேன்னு..
சொல்வது..இன்னும் இருக்கு அப்பப சொல்கிறேன்..
அன்புடன் மலிக்கா

Saturday, March 27, 2010

எனக்குகிடைத்ததும் நான்கொடுப்பதும்

அன்பு மேனகா எனக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதில் வல்லவர். இவரிடமிருந்து விருதைமட்டுமல்ல நல்ல நல்ல சமையலையும் கற்றுக்கொண்டதோடு செய்துபார்த்து சாப்பிடுவதும் வழக்கம்..

மனிதன் மனிதனிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பையும் ஆதரவென்ற ஊக்கத்தையுமே!
அதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதிலும் பரிமாற்றிக்கொள்வதிலும் பல்கிப்பெருகும். என்பது
மலிக்காவின் கருத்து.[ஆமா இவுக கருத்து கறுப்பச்சி]

தற்போது எனக்கு மேனகா சத்தியா அவர்கள் வழங்கிய விருதை நானும் சிலருக்கு கொடுத்து மகிழ விரும்புகிறேன்.

மலரை மலருக்கே கொடுத்தா நல்லாவாயிருக்கும் அதனால
மலர்விருதை மங்கைக்கு கொடுப்பதைவிட அவங்களை கட்டியாளும்[சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்] மன்னவர்களுக்கு கொடுக்களாமுன்னுதான்.

ஜெய்லானி


சைவக்கொத்துப்பரோட்டா


அக்பர்


பனித்துளி சங்கர்


மங்குனி அமைச்சர்


என் உயிரே


ஸ்டார்ஜன்


நாடோடி..


வாங்க வாங்க மன்னர்களே! வந்து பெற்றுக்கொள்ளுங்கள்..

அன்புடன் மலிக்கா

Thursday, March 25, 2010

ஏதோ நமக்கு தெரிந்தது!!இட்லி வார்க்க பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்த்துஇட்லி எடுக்கும்போது துணியில் ஒட்டாமல் எடுக்கஇட்லி வார்ப்பதற்குமுன் கொஞ்சம் எண்ணை கையில் தொட்டுஇட்லிதட்டில் துணியைபோட்டுக்கொண்டு தடவவும் இட்லி சூப்பராக ஒட்டாமல் வரும்.முட்டையை 6 அல்லது 7 நிமிடங்கள் மட்டும் வேகவைக்கவேண்டும் அதனுள்ளே உள்ளசத்துக்கள் அப்படியே கிடைக்கும்.


காய்கறிகளை அரைவேக்காடோடு சமைத்து சாப்பிடுங்கள், அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.முடிந்தால் பச்சையாக சாப்பிடும் காய்கறிகளை அப்படியே கடித்துசாப்பிடுங்க  [அச்சோ கழுவாமல் இல்லை]

 பால்காய்ச்சினதும் பாலை இளஞ்சூட்டோடு கொடுக்கவும். குடிக்கவும்.

[ஆகா வந்துட்டாங்கப்பா இதச்சொல்ல ஆராய்ச்சி ஆம்புலென்ஸ்ன்னு, ஜெய்லானியின் சத்தம் எல்லாரையும் விட சத்தமாக கேட்குது]
அன்புடன் மலிக்கா

Monday, March 22, 2010

மண்பானையில் கைவண்ணம்
தேவையான பொருட்கள்

சிறிய மண்பானை 1

சங்கு 4

பூக்கள் தேவையான கலரில்

பெபிக்கால்

பிடித்த கலர்கள் பெயிண்டிக்கிற்குமண்பானையில் பிடித்த கலர் போடவும் [பெயிண்ட் இல்லாமலும் செய்யலாம்]

காய்ந்ததும் பெபிக்கால் வைத்து சுற்றிலும் பூக்களை ஒட்டவும்

முகப்புப் பகுதியில் டிஃப்ரண்டான பூஅல்லாத இதுபோன்ற டிசைனும் ஒட்டலாம்

அதுவும் காய்ந்ததும் பானையின் வாயிற்பகுதியில் சங்கில் பெபிக்கால் தடவிக்கொண்டு

வாயின் ஓரங்களில் ஒட்டி சிறிது நேரம் பிரஸ் பண்ணியபடி இருக்கவும்

இதேபோல் ஒட்டி முடிக்கவும்

நன்றாக காய்ந்ததும் அதில் தண்ணீர் ஊற்றி

இதுபோல் பூக்களைபோட்டுஓவன் மற்றும் டைனிங் டேபிளிலும் வைக்கலாம்

டீ டெபிளிலும் வைக்கலாம்

தமிழ்குடும்பத்திலும் [தமிழ்குடும்பம்.காம்]என் குறிப்புகள். படைப்புகள் வந்திருக்கிறது இனியும் தொடர்ந்துவரும்.

அன்புடன் மலிக்கா
மனதை வெல்க!

Sunday, March 21, 2010

அவரைக்காயிலும் வைத்தியம் ..கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய்.


மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருவது அவரை.
புரதம், சுண்ணாம்புசத்து,இரும்பு,வைட்டமின்சத்துக்கள் ஒருங்கே உள்ளன.
மிக எளிதில் செரிமானமாகக்கூடியது அவரை
பலவீனமான குடல் உடையவர்களும் இரவு நேரத்திலும்
பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.
முற்றிய அவரையயைவிட பிஞ்சு அவரை நல்லது.

வெண்ணிற அவரைகாய் வாயு, பித்தம்,இவற்றைக்கண்டிக்கும். உள்ளுறுப்புக்களின் அலர்ஜியைப்போக்கும்:
எரிச்சலை அடக்கும்.

நீரளிவுநோய்,பேதித்தொல்லை,அடிக்கடி தலைநோய்வருதல், ஜீரணக்கோளறாரு.

சீதபேதி,இவற்றிற்கு அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பலனுண்டு.


அஸ்ஸாமில் காதுவலிக்கும், தொண்டைவலிக்கும். அவரையின் சாற்றை பயன்படுத்துகிறார்கள். [யாரும் ரொம்பப்பேசி காதில் ரத்தம் வந்தாலும் இதை ஊற்றலாமோ ஆராயனும்]]

இரத்தக்கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது
அண்மைய கண்டுப்பிடிப்பாம்.[

இரத்தத்தை கொதிக்கவிடாதிங்கோ அப்புறம் கொதித்தபடியே இருபீர்கள் இது நம்ம கண்டுபிடிப்பு]

அவரையைப்பற்றிய பழைய வைத்திய நூல்குறிப்பு கிடைத்துள்ளது.
”கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும்
பொங்குதிரி தோடாதோர் புண்சுரத்தோர்-
கண்முதிரைப் பில்லநோய்க்காரர்களுக்குங்
காழுறையா வண்முதிரைப் பிஞ்சாம் விதி.”//

[விளக்கிடுச்சா, விளங்காட்டி என்ன குத்தம் சொல்லக்கூடாது ஓகே]
படித்தை பதிந்திருக்கிறேன் - நீங்களும் தெரிந்துகொண்டு பயன்பெறவே இதைபதிக்கிறேன்.

நொடியில் அவரைக்கூட்டு 


//இதை அழகாய் நறுக்கி சிறியவெங்காயம் கடுகு கருவேப்பில்லை உளுந்துபோட்டு கொஞ்சம் ஆயில்விட்டு அதில் தாளித்து
நறுக்கிய அவரையை அதில்போட்டு சிறு உப்பிட்டு லேசாய் தண்ணீர் தெளித்து 3 நிமிடம் மூடி பின் திறந்து ஒருகிண்டுகிண்டி [வேணுமுன்னா தேங்காய்பூபோட்டு] அப்படியே சிறிய
[இல்லன்னா பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய] பவுலில் ரெடியான அவரைகூட்டைஎடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் போட்டு[ இல்லன்னா கையாலே] ரசித்து ரசித்து அள்ளி துண்ணா எப்படியிருக்கும்..


என்ன இப்போதே அவரைக்காய் வாங்க புறப்பட்டதுபோல் தெரிகிறது.
எப்படியோ அவரைக்காய் துண்ணாசரிதான்..


அன்புடன் மலிக்கா

Wednesday, March 17, 2010

ஸ்பெசல் தைரிய சாதம்


என்னடா இது தைரிய சாதமுன்னு போட்டுயிருக்கேன்னு ஓடிவந்தீகளா
ஹா ஹா
இது

முந்திரி சோசேஜ் சாதம்

தேவையானவைகள்

பாஸ்மதி அரிசி 3  கப்
கீ [நெய்] தேவையான அளவு
தக்காளி 1 சிறியது
வெங்காயம் 1
சிக்கன் சோசேஜ் 1 பாக்கட்
[இதை சிக்கன்ஃபிராங், ஹாட்dடாக் என ஏதேதோ சொல்லுராக மொத்ததில் சிக்கன் அரைத்து பாக்கட்டில் அவ்வளவுதான்]
இஞ்சிபூண்டு 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
ப, மிளகாய் 3
முந்திரி 10
ஆயில், உப்பு. தேவையான அளவு
கொ.மல்லி அலங்கரிக்க.
பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளிக்க.

[தக்காளி,  ப,மிளகாய் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும் 
முந்திரியை நைசாக அரைத்துக்கொள்ளவும்]

அரிசியை கழுவிவிட்டு, 10 நிமிடம் ஜில்தண்ணீரில் ஊறவைக்கவும் .
அடுப்பில் சட்டிவைத்து காய்ந்ததும் நெய்விட்டு பட்டை, லவங்கம்,
பிரிஞ்சி இலை போட்டு தாளித்து. பின்பு வெட்டிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளி ப மிளகாய்.அதில்போட்டு வாசனைவரும்வரை கிளரவும்.
வாசனைவந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்டைபோட்டுகிளரவும்
அதுவும் வாசனைவந்ததும். 1 க்கு 1.1/2 என தண்ணீர்வைத்து அதனுடன் அரைத்தமுந்திரியையும்சேர்த்து தாளித்துடன் ஊற்றவும். உப்புப்போட்டு மூடிவைத்து சிறுகொதிவந்ததும் ஊறிய அரிசியை அதில் போட்டு மூடவும் அடுப்பை லேசாக வைக்கவும்.

10 ,15 நிமிடம்தான் வெந்துவிடும் அதற்குமுன்
சிக்கன் சோசேஜை வட்டவட்டமாக கட்செய்து இஞ்சிபூண்டு மிளகாய்தூள் உப்புபோட்டு அதை ஆயிலில் பொரித்தெடுக்கொள்ளவும்.

அதற்குள் மணமணக்க சாதம் வெந்துவிடும் அதை கிளறிவிட்டு பாதி சாதத்தை அள்ளிக்கொண்டு பொரித்துவைத்திருக்கும் சோசேஜை
இரண்டு அடுக்கு மூன்று அடுகுகளாக போடவும்கடைசியாக கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி அதன்மேல்தூவி [இன்னும் சத்துக்கு 10 முந்திரியையும் வறுத்து அதன்மேல் தூவலாம்]ஆவிபறக்க டைனிங் டேபிளுக்கு கொண்டுவரவும்.
இதற்கு சைடிஸாக வறுத்தரைத்த மட்டன் கறிகுழம்பு ம்ம்ம் செம டேஸ்டாக இருக்கும் ஒருபுடி பிடித்துவிட்டு 2 மணிநேரம்கழித்து சின்னக்குட்டிதூக்கம் போடுங்க.
சீக்கிரம் பசிக்கும் மீண்டும் சாப்பிட ஹாஹாஹா

[டிஸ்கி]  ஸ்டெப்பென் ஸ்டெப்பாக இன்றைக்கு எடுக்க முடியவில்லைங்கோ
மறுநாள் செய்தா இதில் இணைச்சிவிடுறேங்கோ]

அன்புடன் மலிக்கா

Tuesday, March 9, 2010

மைக்ரோ ஓவனில் கிரீன் சாம்பார்


பச்சை பயர் உடைத்தது 1/4 கிலோ
பல்லாரி [பெரிய வெங்காயம்] 1
தக்காளி 1
சாம்பார்பொடி 3,ஸ்பூன்
ஸ்பினாச்[கீரை] 1 கட்டு
மத்தங்காய்[பூசணிகாய்]
கொஞ்சம் அதனுடைய தோலும் தனியே
உப்பு
மல்லி- தூவ
தாளிக்க,,
ஆயில், கடுகு
கருவேப்பில்லை

பருப்பை ஓவனில் 3 நிமிடம் வைத்து வருத்தெடுக்கவும், பின்பு தண்ணீர்விட்டு தக்காளியும் சேர்த்து10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்

அதனுடன் மத்தங்காய், அதந்தோல் கட்செய்த கீரை, பல்லாரியை- ஒருஸ்பூன் ஆயில்விட்டு அதைவதக்கி அதனுடன்சேர்க்கவும்

சாம்பார்பொடி,உப்பும் சேர்த்துகொள்ளவும்

தேவையான அளவு தண்ணீர்விட்டு ஓவனில் மீண்டும் 10 நிமிடம் மூடி வைக்கவும்

நல்ல வாசம் வந்ததும் வெளியிலெடுத்து கொஞ்சமாக லெமன் ஜூஸ் ஊற்றவும்
[கருவேப்பில்லை கடுகு தாளித்துக்கொள்ளவும்]
தாளித்தவைகளைஊற்றி அதன்மேல் நறுக்கிய மல்லி தூவி பறிமாரவும்

இது நல்ல டேஸ்டுடன் இருக்கும்
சாதம், இட்லி, மற்றவைகளுக்கும் ஏற்றதுஅன்புடன் மலிக்கா

Monday, March 8, 2010

வா பெண்ணே வா [மகளிர்தின வாழ்த்துக்கள்]


அன்பார்ந்த மாந்தர்களே! அன்புத்தோழிகளே! அருமை பெண்பதிவர்களே! உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.


பெண்களுக்காக பெண்களைபோற்றும் இத்தினம் வருடந்தோரும் வருவதைவிட வருடத்தில் ஒவ்வொருநாளும் வரும்படி உங்களை நீங்களே! [சாரி] நம்மை நாமே! தெளிவுப்படுத்தி,திறமைப்படுத்தி. வாழ்கையையும், குடும்பத்தையும்,நாட்டையும், நம்மாளான நல்லசெயல்பாடுகளை செய்து முன்னேற்ற முயற்ச்சிப்போம்.
பெண் என்பவள். பேதையுமல்ல, போகப்பொருளுமல்ல, பொம்மையுமல்ல,பொழுதுபோக்குமல்ல.

பெண் என்பவள் பெண்ணாகவே பெண்ணுக்குறிய மனப்பக்குவத்துடன்,பெண்ணுக்குறிய பொறுமையுடன்.பெண்ணுக்குறிய அடக்கத்துடன்.
குடும்பத்தை பேணிக்காப்பவளாகவும். இருப்பதில் தவறில்லையன நினைக்கிறேன்.

ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாகிவிடாமல்.
ஏனென்றால்
ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.ஆவதும்[நல்லவகள். கெட்டவைகள்.] பெண்ணாலே! அழிவதும் [கெட்டவைகள். நல்லவகள்.]பெண்ணாலே!

என்பதை நினைவில்கொண்டு மிகச்சிறந்தவர்களாக. பவித்தரமானவர்களாக, பெண்களாகிய நாம் சிறந்து விளங்கி வாழ்வோம். உயர்வோம்.உயர்த்துவோம்.

மீண்டும் அனைவருக்கும் அன்பான மகளிர்தின வாழ்த்துக்களைச்சொல்லிக்கொள்கிறேன்..வா பெண்ணே வா


வெற்றிநடை போடவா
விவேகத்துடன் செயல்பட வா


சாதனைகள் புரிய வா
சமத்துவத்தை போற்ற வா


சிறப்பான கல்வி கற்று வா
வாழ்வில் சிறந்து விளங்கி வா


வாழ்க்கை என்ற பொக்கிஷம்
அதை
பேணிக்காத்து வாழனும்


குடும்பம் என்ற கோபுரம்
உன்னால்
தலை நிமிர்ந்தே நிற்கனும்


நாளை
வெற்றியென்ற உலகினில்
நீ இன்றே
நாடு போற்ற உயர வா..
அன்புடன் மலிக்கா

Saturday, March 6, 2010

அன்புள்ள அம்மாக்களுக்கு


இதோ தேர்வு நெருங்கிவிட்டது தங்களின் அன்புச்செல்வங்களுக்கு[ இங்கு [துபையில்]இன்றிலிருந்து என் மகனுக்கு எக்ஸாம் ஆரம்பம்.]
இந்தியாவில், மார்ச் ஏப்ரலில்]

கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டிய நேரம், தந்தைகளைவிட,
தாய்களுக்கு
பொறுப்புணர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் இருக்கவேண்டும்.

இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலும் தேவையான ஆகாரமும் கண்டிப்பாக தேவை
நல்ல ஊட்டமுள்ள சத்தான ஞாபகசக்திக்கு உகந்த உணவு கொடுக்கவேண்டும்
ஜூஸ்கள் மற்றும் விட்டமின்கள் அடங்கிய வல்லாரை போன்ற ஞாபகசக்தியை தூண்டும் வகையில் உள்ள ஆகாரம் கொடுக்க வேண்டும்

அடுத்து எந்த நேரமும் படி படி எனசொல்லாமல் நேரம் ஒதுக்கி படிக்கச்சொல்லுங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகம் கண்விழிக்கவிடவேண்டாம் அதை தவிர்த்து நேரத்தோடு உறங்கவைத்துவிட்டு அதிகாலையில் எழுப்பி படிக்கச்சொல்லுங்கள்

இரண்டொருநாள் சிரமமாக இருக்கும் பின் தானே எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
அதிகாலையின் படிப்பு கட்டாயம் மனதில் பதியும்.

இதயெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு உங்களின் அன்பும் ஆதரவும் கனிவான பேச்சும்தான்

ஊக்கம்கொடுப்பதென்பது அனைத்தயும்விட நல்ல டானிக்.
நீ நன்றாக படிப்பாய், நன்றாக எழுதுவாய், நம்பிக்கைவைத்துப்படி எல்லாம் நல்லதாகவே நடக்கும்என அவர்களுக்கு அடிக்கடி தைரியமூட்டுங்கள்
சுமையை சுமப்பவர்களுக்கு  சுமையின் வலியும், வேதனையும், அதன் அளவும்புரியும்.அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்.

அதேபோல் முதல்நாள் இரவே பரிட்சைக்குண்டான அனைத்தையும் தயார் செய்து ரெடியாக வைத்துவிடுங்கள். அப்புறம் கடைசிநேரத்தில் பென்சிலை வைத்துவிட்டானே! ஸ்கேலை வைத்துபோய்விட்டானே என நீங்கள் டென்ஷனாகி அவர்களையும் டென்ஷனாக்காமல் இருக்க கவனத்துடன் தேவையானதை நீங்களே அவர்களிடம் எடுத்துவைக்கச்சொல்லி பக்கத்தில் இருங்கள்.


ஆதலால் தாய்மார்கள்தான் அதிக அளவில் அக்கரை கொள்ளவேண்டும்.ஏனென்றால் அதிகநேரம் தாய்மார்களின் அரவணைப்பில்தான் பிள்ளைகள் இருக்கிறது

[தற்போது அதெல்லாம் இல்லை தாய் தந்தை இருவருமே வேலை வேலையென சென்றுவிடுவதால் பிள்ளைகளின்பாடு சற்று திண்டாட்டம்தான் இருந்தாலும் தாயல்லவா நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்]

வெற்றி தோல்வி என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று அதனால் எதுவாக
இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவத்தை அவர்களுக்குள் உருவாக்குங்கள்
அதற்குமுன் நீங்களும் அதற்கு தயாராகுங்கள்.

நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
இறைவனின் உதவியால்..

அன்புடன் மலிக்கா

Friday, March 5, 2010

பாட் ஒர்க் -2

பாட் 1
வாட்டர் கலர்கள்
பிரஷ்
பூங்கொத்துகள் பிடித்த கலரில்

3 d, கலர்

ஸ்டெப்பென் ஸ்டெப்பாக இருப்பதால் விளக்கம் வேண்டாம் என நினைக்கிறேன்
சந்தேகம் இருந்தால் கேட்கலாம்,
இது குழந்தைகளும் ஈசியாக செய்யலாம்..

[டிஸ்கி இது ஏற்கனவே வெளிட்டது ஆனால் அதை தற்போது காணவில்லை என்றுசொல்லி [ B,P. P.  பிளாக் போஸ்ட் போலீஸ் ஸ்டேசனில்] கம்லைண்ட் கொடுத்துள்ளேன். கண்டுபிடிக்கும் வரை இது இருக்கட்டுமஎன்றுதான்.. ஹி ஹி ஹி.]

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.