அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, January 31, 2011

அட நமக்குத்தாங்கோ.


டென்ஷனைக் குறைக்க 10 வழிகள். அட நம்மக்குதாங்கோ..

1 வீட்டிலுள்ள சாமான்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைக்கவும், எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழகிக் கொள்ள வேண்டும். முக்கியமாகப் பேனா, வாட்ச், வாகன சாவிகள், செக்புக், கிரெடிட் கார்ட், ரேஷன் கார்ட், பால் கார்ட், பீரோ, வீட்டுச் சாவிகள், டெலிபோன் அட்ரஸ் புக் இப்படி முக்கியமான சாமான்களை எடுத்த இடத்தில் திரும்ப வையுங்கள்.

2. சிலர் பிரச்சனைகளே வராது என்று அசட்டு தைரியத்துடன் அலட்சியமாக இருப்பார்கள். அங்கு தான் தவறு செய்கிறார்கள். பிரச்சனைகளை எதிர்பாருங்கள். மனம் எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, கடைசி நாள் வரை பயண டிக்கெட்டை ரிசர்வ் செய்ய மாட்டார்கள். எல்லாம் அங்கே போனால் கிடைக்கும் என்ற அலட்சியம், சில சமயம் காலை வாரி விடும். லீவு சமயங்களில் ஒரு மாதம் முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்வது நல்லது. அது போல் ஏதாவது ஒரு இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போக வேண்டுமென்றால் (தேர்வு, இண்டர்வியூ) ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பலாமே. வழியில் போக்குவரத்து நெரிசல், ஊர்வலம், மறியல், பந்த் இப்படி எதிர்பாராத தடங்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டும்.

3. காஸ் தீர்ந்து விட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலை இன்று. எப்போதும் மண்ணெண்ணெய் ஸ்டாக்கில் வைத்துக் கொள்வது நல்லது. சமயத்திற்குக் கை கொடுக்கும். பாதி வீடுகளில் ஸ்டவ் கூடக் கிடையாது என்பது தான் உண்மை. காஸ் வரும் வரை இடைக்காலத்தில் உதவுவது ஸ்டவ்தான். மின்சார அடுப்புகளைக் கூட நம்பமுடியாது.

4. கோடைக்காலத்தில் கூடவே கரண்ட் கட்டையும் எதிர்பார்க்க வேண்டியதுதான். மெழுகுவர்த்தி, டார்ச், தீப்பெட்டி எல்லாம் ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள். இருட்டில் இதை வாங்கி வைத்திருக்கக்கூடாதா? என்று யாரையும் திட்டி பிரயோஜனமில்லை.

5. இன்று வாகனங்கள் இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. அடுத்த தெருவுக்குப் போக வேண்டுமென்றால் கூட, ஸ்கூட்டர் அவசியமாகி விட்டது. எப்போதும் வாகனங்களில் குறைந்தது இரண்டு லிட்டர் பெட்ரோல் நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது. அதுபோல் வாகனங்களை சர்வீஸுக்குக் கொடுத்து, நல்ல நிலையில் எப்போதும் வைத்திருந்தால் தான் வழியில் தகராறு செய்யாமல் ஓடும்.

6. மாணவ மணிகளுக்கு டென்ஷனே தேர்வு தான். அன்றாடப் பாடங்களை அன்றே முடிப்பதுதான் சிறந்த வழி. மணிக்கணக்கில் வாயால் படிப்பதை விட எழுதிப் பார்ப்பது மனதில் விரைவில் பதியும். எழுதிப் படியுங்கள்.

7. ஆபீஸ் வேலையோ, வீட்டு வேலையோ எது முக்கியம், எது அவசரம் என்று ஒரு பட்டியலிட்டு அதன் படி செயல்படுத்துங்கள். டெலிபோன் பில், மின்சார பில், பால் கார்டு போன்றவைகளைக் குறிப்பிட்ட தேதியில் கட்டவோ, வாங்கவோ, வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அலட்சியமாக சோம்பி இருந்து விட்டு, கடைசி தேதியில் இங்கும் அங்குமாக அபராதத் தொகையுடன் கட்டும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்.

8 .தீடீர் விருந்தாளிகள் அல்லது உறவினர்கள் வருவார்கள் என்று எப்போதும் எதிர்பாருங்கள். வங்கியில் பணம் வைத்திருப்பது நல்லது. எதிர்பாராத அதிகப்படி செலவுகளைச் சாமாளிக்க உதவும். அது போல் விருந்தாளிகள் வருவது சாமான்களிலிருந்து அவர்களைச் சுற்றிக் காண்பிக்கப் போகும் இடம் வரை (எந்த நாளில் எங்கே போக வேண்டும்) மனதில் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊர் விஷயங்கள் உங்களுக்குத்தானே நன்றாகத் தெரியும். இதனால் கடைசி நேரக் குழப்பங்கள் குறையும்.

9. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சரி தான். ஆனால் சிறு சிறு உடல் உபாதைகள் வரத்தான் செய்யும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கேட்கவே வேண்டாம். தலைவலி, பல்வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கான மருந்துகள் எப்போதும் கைவசம் ஸ்டாக் இருக்க வேண்டும். நடுராத்திரியில் அடுத்த வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய அவசியமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுபோல் பண சக்திக்கோ, உடல் சக்திக்கோ மீறிய வேலைகளை நண்பர்கள் அல்லது உறவினர்களின் வற்புறுத்தலுக்காக செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.
  உதாரணமாக திட்டமிடாமல் நினைத்த நேரத்தில் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு உங்களைக் கூப்பிடுவார்கள். பணம் பின்னால் கொடுக்கலாம்… நீ வந்தால் போதும் என்று வற்புறுத்துவார்கள். இமேஜை காப்பாற்றிக் கொள்ள, போய் விட்டு வந்து அழுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பயண ஒவ்வாமை, பணத் தட்டுப்பாடு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். வறட்டுக் கெளரவத்திற்குத் தலையைக் கொடுத்து விட்டு, உடல்நலம் கெட்டுப் போவதுடன், பணமும் கரைந்து போவதுதான் மிச்சமாகும். கூடவே வீட்டில் உள்ளவர்களிடம் டென்ஷனுடன் கத்திக் கொண்டிருப்பீர்கள்.

10. ஸ்டிரைக், அடை மழை காலங்களில் ஓரிரு தினங்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவானேன். வீண் டென்ஷனை விலைக்கு வாங்குவானேன்? குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் வரை, வாசலுக்கும் உள்ளுக்கும் நடக்க வேண்டிய டென்ஷனை குறைக்கலாமே. சிறிய கிளாஸாக இருந்தால் லீவு போடுவது தவறில்லை. போர்ட் எக்ஸாம் எழுதப்போகும் குழந்தைகள், ஒன்று மழை நின்ற சமயத்தில் முன்னதாகக் கிளம்பலாம். இல்லை, பொறுப்பாக அவர்களைக் கொண்டு விட்டு வரலாம்.
  முடிவாக அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முக்கால்வாசி டென்ஷன்களுக்கு நாமே தான் காரணம். பலதும் தவிர்க்கக் கூடியது. எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் அலட்சியப்போக்கு, திட்டமிடாமை, அதை விட அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகள் தான். இதையும் மீறி வாழ்க்கையில் எதிர்பாராத டென்ஷன்கள் வரலாம். வரும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் நண்பர்களின் உதவி, பணபலம் மற்றும் வாகன வசதி இருந்தால் ஓரளவு சமாளித்து விடலாம்.
இதைவிட, மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம் டென்ஷனாகிறார்கள். எந்தப் பிரச்சனைகளையும் குடும்பத்தாருடன் நிதானமாகப் பேசி, கலந்தாலோசித்து முடுவு எடுங்கள். வயதில் சிறியவர்களானாலும் சில சமயம் சிறந்த யோசனைகளைக் குழந்தைகள் கூடக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மன ஒருங்கிணைப்பு இருந்து விட்டால் டென்ஷனுக்கு இடமேயில்லை.

11. என்ன படிச்சிமுடிச்சாச்சா. சரி எவ்வளவுக்கெவ்வளவு டென்ஷனை குறைக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது
நடப்பது நடந்தே தீரும். நடப்பதற்கு முன் யோசிக்கவேண்டியைகளை விட்டு விட்டு நடந்துமுடிந்தபின் வருத்தப்படுவதில் அர்த்தமேயில்லை. ஆகவே டேக்கிட்டீஸி பாலிஸின்னு எதையும் ஈஸியாக எடுத்துக்கொண்டு. [அதுக்காக எல்லாதிலும் அல்ல இருப்பதில் கவனமாக இருந்துகொண்டு] வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டே செல்லுங்கள். அனைத்தும் நன்மையாக முடியும். இது இதுமட்டும்தான் நம்மோடது மற்ற மேலே உள்ள பத்து வழிகளும் நமக்கு மெயிலில் வந்தது அதை உங்களுக்கு அறிவிக்கத்தான் இந்த பதிப்பு எப்புடி..

அன்புடன் மலிக்கா

Saturday, January 22, 2011

இறால் காய்கறி குழம்பு


தேவையானவை.

இறால் தேவையானளவு
முறுங்கைகாய் 2
கருணைகிழங்கு 1/2 கப்
பீன்ஸ் 10
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
மல்லிதூள் 2 ஸ்பூன்
சோம்புசீரகத்தூள் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
புளி
ரயின்போ பால் 
ஆயில்
உப்பு
தாளிக்க கருவேப்பில்லை கடுகு.
சட்டியை சூடாக்கி ஆயில்விட்டு அதுசூடானதும், நறுகியகாய்கள் மற்றும் தலைநீக்கி சுத்தம் செய்த இறால் அனைத்தையும் போட்டு வேசாக வதக்கவும்.
அது சற்றுவதங்கியதும் மிளகாய்தூள் போட்டு
வதக்கவும்
புளியை சற்று ஊறவைத்து கரைத்து அத்துடன் மசாலாக்களையும் சேர்த்து கரைக்கவும்
வதங்கிய இறால் காய்களுடன் கரைத்த மசாலாவை ஊற்றவும்
தேவையான அளவு தண்ணீர்விட்டு  உப்புபோட்டு மூடிவைத்து, நன்றாக கொதித்து மசாலாவாசம் போனதும் திறந்து . கருவேப்பிலை,கடுபோட்டு தாளித்து  ஊற்றவும்

இரால் காய்கறி குழம்பு ரெடி.
இது தேங்காய்பால் சேர்க்காமல் ரெயின்போ பால் சேர்த்த குழம்பு.
சாதம். குபுஸ்.மற்றும் சப்பாதிக்கூடவும் சாப்பிட டேஸ்டாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா
ரசித்து பின் ருசிக்கவும்.

Sunday, January 9, 2011

நடந்தால் உடம்பு கூடவே வருதா?உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்


1. குளிர்பானம் கூடவே கூடாது

2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்

3. பகல் தூக்கம் கூடாது

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்

5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்

6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது

7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்

8. வாழைப்பழம் உண்ணக் கூடாது

9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்

10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்

11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்

12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்

13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது

16. புளி சேர்க்கக் கூடாது

17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது

18. நிறைய நீர் அருந்த வேண்டும்

19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

20. மது அருந்தக் கூடாது

21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது

22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது

23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்.

இது நம்மளோடது
24.
சாப்பாடு ருசியாக இருக்கேன்னு கொஞ்சமா வச்சிறாதீங்க கொஞ்சமா வச்சிறாதீங்கன்னு தட்டை நீட்டக்கூடாது.

25. அடுத்தாத்து சாப்பாடு நான்னாயிருக்குமேன்னு அவாவீட்டுக்குபோயிருக்கிறச்சே ஒரு வெட்டு வெட்டக்கூடாது..


இது பார்க்கமட்டும்தான்..அதாவது எனக்குமட்டும்]

என்ன எல்லாதையும் படிச்சாச்சா. அப்படியே ஃபாலோபண்ணுங்க.
என்னங்க எல்லாமே கூடாதுன்னுசொன்னா எதை சாப்பிடுவதுன்னெல்லாம் எடக்குமடக்கா கேட்கக்கூடாது. நடந்தா உடம்பு கூட வரவேண்டாமுன்னு நினைக்கிறவங்க இதை ஃபாலோபண்ணலாம்.

இது என் சொந்த கதையல்ல சுட்டகதை.
ஆசானிடமிருந்து மெயிலில் வந்தது அதை நாமமட்டும் வாசித்துவிட்டு வச்சிருந்தா எப்புடி அதான் உங்களாண்டையும் சொல்லிக்கலாமுன்னு ..

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.