அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, January 31, 2011

அட நமக்குத்தாங்கோ.


டென்ஷனைக் குறைக்க 10 வழிகள். அட நம்மக்குதாங்கோ..

1 வீட்டிலுள்ள சாமான்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைக்கவும், எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழகிக் கொள்ள வேண்டும். முக்கியமாகப் பேனா, வாட்ச், வாகன சாவிகள், செக்புக், கிரெடிட் கார்ட், ரேஷன் கார்ட், பால் கார்ட், பீரோ, வீட்டுச் சாவிகள், டெலிபோன் அட்ரஸ் புக் இப்படி முக்கியமான சாமான்களை எடுத்த இடத்தில் திரும்ப வையுங்கள்.

2. சிலர் பிரச்சனைகளே வராது என்று அசட்டு தைரியத்துடன் அலட்சியமாக இருப்பார்கள். அங்கு தான் தவறு செய்கிறார்கள். பிரச்சனைகளை எதிர்பாருங்கள். மனம் எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, கடைசி நாள் வரை பயண டிக்கெட்டை ரிசர்வ் செய்ய மாட்டார்கள். எல்லாம் அங்கே போனால் கிடைக்கும் என்ற அலட்சியம், சில சமயம் காலை வாரி விடும். லீவு சமயங்களில் ஒரு மாதம் முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்வது நல்லது. அது போல் ஏதாவது ஒரு இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போக வேண்டுமென்றால் (தேர்வு, இண்டர்வியூ) ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பலாமே. வழியில் போக்குவரத்து நெரிசல், ஊர்வலம், மறியல், பந்த் இப்படி எதிர்பாராத தடங்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டும்.

3. காஸ் தீர்ந்து விட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலை இன்று. எப்போதும் மண்ணெண்ணெய் ஸ்டாக்கில் வைத்துக் கொள்வது நல்லது. சமயத்திற்குக் கை கொடுக்கும். பாதி வீடுகளில் ஸ்டவ் கூடக் கிடையாது என்பது தான் உண்மை. காஸ் வரும் வரை இடைக்காலத்தில் உதவுவது ஸ்டவ்தான். மின்சார அடுப்புகளைக் கூட நம்பமுடியாது.

4. கோடைக்காலத்தில் கூடவே கரண்ட் கட்டையும் எதிர்பார்க்க வேண்டியதுதான். மெழுகுவர்த்தி, டார்ச், தீப்பெட்டி எல்லாம் ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள். இருட்டில் இதை வாங்கி வைத்திருக்கக்கூடாதா? என்று யாரையும் திட்டி பிரயோஜனமில்லை.

5. இன்று வாகனங்கள் இல்லாத வீடுகளைப் பார்க்கவே முடியாது. அடுத்த தெருவுக்குப் போக வேண்டுமென்றால் கூட, ஸ்கூட்டர் அவசியமாகி விட்டது. எப்போதும் வாகனங்களில் குறைந்தது இரண்டு லிட்டர் பெட்ரோல் நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது. அதுபோல் வாகனங்களை சர்வீஸுக்குக் கொடுத்து, நல்ல நிலையில் எப்போதும் வைத்திருந்தால் தான் வழியில் தகராறு செய்யாமல் ஓடும்.

6. மாணவ மணிகளுக்கு டென்ஷனே தேர்வு தான். அன்றாடப் பாடங்களை அன்றே முடிப்பதுதான் சிறந்த வழி. மணிக்கணக்கில் வாயால் படிப்பதை விட எழுதிப் பார்ப்பது மனதில் விரைவில் பதியும். எழுதிப் படியுங்கள்.

7. ஆபீஸ் வேலையோ, வீட்டு வேலையோ எது முக்கியம், எது அவசரம் என்று ஒரு பட்டியலிட்டு அதன் படி செயல்படுத்துங்கள். டெலிபோன் பில், மின்சார பில், பால் கார்டு போன்றவைகளைக் குறிப்பிட்ட தேதியில் கட்டவோ, வாங்கவோ, வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அலட்சியமாக சோம்பி இருந்து விட்டு, கடைசி தேதியில் இங்கும் அங்குமாக அபராதத் தொகையுடன் கட்டும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்.

8 .தீடீர் விருந்தாளிகள் அல்லது உறவினர்கள் வருவார்கள் என்று எப்போதும் எதிர்பாருங்கள். வங்கியில் பணம் வைத்திருப்பது நல்லது. எதிர்பாராத அதிகப்படி செலவுகளைச் சாமாளிக்க உதவும். அது போல் விருந்தாளிகள் வருவது சாமான்களிலிருந்து அவர்களைச் சுற்றிக் காண்பிக்கப் போகும் இடம் வரை (எந்த நாளில் எங்கே போக வேண்டும்) மனதில் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊர் விஷயங்கள் உங்களுக்குத்தானே நன்றாகத் தெரியும். இதனால் கடைசி நேரக் குழப்பங்கள் குறையும்.

9. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சரி தான். ஆனால் சிறு சிறு உடல் உபாதைகள் வரத்தான் செய்யும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கேட்கவே வேண்டாம். தலைவலி, பல்வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற எளிய நோய்களுக்கான மருந்துகள் எப்போதும் கைவசம் ஸ்டாக் இருக்க வேண்டும். நடுராத்திரியில் அடுத்த வீட்டுக் கதவைத் தட்ட வேண்டிய அவசியமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுபோல் பண சக்திக்கோ, உடல் சக்திக்கோ மீறிய வேலைகளை நண்பர்கள் அல்லது உறவினர்களின் வற்புறுத்தலுக்காக செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.
  உதாரணமாக திட்டமிடாமல் நினைத்த நேரத்தில் சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு உங்களைக் கூப்பிடுவார்கள். பணம் பின்னால் கொடுக்கலாம்… நீ வந்தால் போதும் என்று வற்புறுத்துவார்கள். இமேஜை காப்பாற்றிக் கொள்ள, போய் விட்டு வந்து அழுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பயண ஒவ்வாமை, பணத் தட்டுப்பாடு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். வறட்டுக் கெளரவத்திற்குத் தலையைக் கொடுத்து விட்டு, உடல்நலம் கெட்டுப் போவதுடன், பணமும் கரைந்து போவதுதான் மிச்சமாகும். கூடவே வீட்டில் உள்ளவர்களிடம் டென்ஷனுடன் கத்திக் கொண்டிருப்பீர்கள்.

10. ஸ்டிரைக், அடை மழை காலங்களில் ஓரிரு தினங்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவானேன். வீண் டென்ஷனை விலைக்கு வாங்குவானேன்? குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் வரை, வாசலுக்கும் உள்ளுக்கும் நடக்க வேண்டிய டென்ஷனை குறைக்கலாமே. சிறிய கிளாஸாக இருந்தால் லீவு போடுவது தவறில்லை. போர்ட் எக்ஸாம் எழுதப்போகும் குழந்தைகள், ஒன்று மழை நின்ற சமயத்தில் முன்னதாகக் கிளம்பலாம். இல்லை, பொறுப்பாக அவர்களைக் கொண்டு விட்டு வரலாம்.
  முடிவாக அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முக்கால்வாசி டென்ஷன்களுக்கு நாமே தான் காரணம். பலதும் தவிர்க்கக் கூடியது. எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் அலட்சியப்போக்கு, திட்டமிடாமை, அதை விட அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகள் தான். இதையும் மீறி வாழ்க்கையில் எதிர்பாராத டென்ஷன்கள் வரலாம். வரும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் நண்பர்களின் உதவி, பணபலம் மற்றும் வாகன வசதி இருந்தால் ஓரளவு சமாளித்து விடலாம்.
இதைவிட, மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம் டென்ஷனாகிறார்கள். எந்தப் பிரச்சனைகளையும் குடும்பத்தாருடன் நிதானமாகப் பேசி, கலந்தாலோசித்து முடுவு எடுங்கள். வயதில் சிறியவர்களானாலும் சில சமயம் சிறந்த யோசனைகளைக் குழந்தைகள் கூடக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மன ஒருங்கிணைப்பு இருந்து விட்டால் டென்ஷனுக்கு இடமேயில்லை.

11. என்ன படிச்சிமுடிச்சாச்சா. சரி எவ்வளவுக்கெவ்வளவு டென்ஷனை குறைக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது
நடப்பது நடந்தே தீரும். நடப்பதற்கு முன் யோசிக்கவேண்டியைகளை விட்டு விட்டு நடந்துமுடிந்தபின் வருத்தப்படுவதில் அர்த்தமேயில்லை. ஆகவே டேக்கிட்டீஸி பாலிஸின்னு எதையும் ஈஸியாக எடுத்துக்கொண்டு. [அதுக்காக எல்லாதிலும் அல்ல இருப்பதில் கவனமாக இருந்துகொண்டு] வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டே செல்லுங்கள். அனைத்தும் நன்மையாக முடியும். இது இதுமட்டும்தான் நம்மோடது மற்ற மேலே உள்ள பத்து வழிகளும் நமக்கு மெயிலில் வந்தது அதை உங்களுக்கு அறிவிக்கத்தான் இந்த பதிப்பு எப்புடி..

அன்புடன் மலிக்கா

21 comments:

சே.குமார் said...

அக்கா....
நல்லாத்தான் சொல்லியிருக்கீக...
நாம கடைபிடிப்போமான்னு நெனச்சா 50% கூட போமுன்னு வரலையே?

அரசன் said...

நல்லா சொல்லிருக்கிங்க ...
தொடர்ந்து கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் ...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல அறிவுரைகள் சூப்பரான பதிவு நன்றிகள் பல......

Jaleela Kamal said...

பத்து வழிகளும் சூப்பர்,
எல்லாம் எல்லோருக்கும் சிலது நடந்து கொண்டு இருபப்து தான்
நானும் படிச்சி பூட்டேஇல்ல இனி டேக்கிட் ஈசிதான்
யாருக்கும் சட்டுன்னு எட்டாது இப்படி படிக்கும் போது ஆஹா நாம என்ன தப்பு பண்ரோமுன்னு எட்டும்

shalihazubair said...

ம்ம்ம் ரெம்ப நல்ல அட்வைஸ் சேச்சி.

முடிஞ்ச வரை முயற்ச்சி பன்னுறோமுங்கோ.

ஜெய்லானி said...

//மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம் டென்ஷனாகிறார்கள். எந்தப் பிரச்சனைகளையும் குடும்பத்தாருடன் நிதானமாகப் பேசி, கலந்தாலோசித்து முடுவு எடுங்கள். வயதில் சிறியவர்களானாலும் சில சமயம் சிறந்த யோசனைகளைக் குழந்தைகள் கூடக் கொடுப்பார்கள். குடும்பத்தில் மன ஒருங்கிணைப்பு இருந்து விட்டால் டென்ஷனுக்கு இடமேயில்லை.//

யக்காவ் இதைதான் முதல்ல நீங்க போட்டிருக்கனும்...!! என்னுடைய வழி முறை இதான் ..அதனால எப்பவும் நோ டென்ஷன் ;)

apsara-illam said...

காலத்திற்க்கேற்ற தேவையான பத்து வழிகளை தான் சொல்லியிருக்கீங்க மலிக்கா.... மெயிலில் வந்தாலும் பலரோடு பகிர்ந்து கொள்ளும் பொது அது நிறைய பேருக்கு நிச்சயம் உதவும்.இதில் பல விஷயங்களை நானும் கடைபிடிக்கின்றேன் என்கிறபோது பெருமையா.... காலரை தூக்கி விட்டு கொள்கிறேன் மலிக்கா...
நல்ல பதிவை கொடுத்த மலிக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

காஞ்சி முரளி said...

வணக்கமுங்க...!

அட்வைஸ் அம்புஜம் மாமி...! - உங்க
அட்வைஸ படிச்சிட்டு வாரேனுங்க....!

ஸாதிகா said...

அருமையான டிப்ஸ்கள்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையா சொல்லிருக்கிங்க.

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி..

கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதான் தனிதனியே போடமுடியலை 1 வாரத்துக்கப்புறம் அடிச்சி ஆடிடலாம் ஓகே

இல்லாங்காட்டியும் போட்டுட்டுதான் மறுவேலைபாப்பே போ போ அப்படின்னுதானே சொல்லுறீங்க .. என்ன சொன்னாலும் கோவிச்சக்கமாட்டேன் ஹி ஹி

VAI. GOPALAKRISHNAN said...

கொடுத்துள்ள டிப்ஸ் அனைத்துமே அனைவருக்குமே மிகவும் உபயோகமானது தான். நல்ல பதிவுக்கு நன்றி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good tips!

Ramani said...

நல்ல உபயோகமானபதிவு.
மனங்கனிந்த வாழ்த்துக்கள்

Lakshmi said...

கொடுதுள்ள டிப்ஸ் அனைவருக்குமே பயன் படும். நன்றி.

sakthistudycentre-கருன் said...

அன்புடன் மலிக்கா சொன்னது…

இந்தக் கனவுகள்
வந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
இவைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?//

கனவுகள் பலிக்க வேண்டுவோம்..
/////////////////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Thanglish Payan said...

Padikkum pothe tension varthu..athukku enna panrathu..:)

just kidding

its good.

செந்தில்குமார் said...

மலிக்கா...

ம்ம்ம்ம் நல்லாதான் இருக்கு ஆன கடைபிடிக்கிரத நினைச்சாதான்....அப்பாப்பா.....

தமிழ்த்தோட்டம் said...

பயனுள்ள பகிர்வு

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு ஜெய்லானி.

இதை வாழ்க்கையில் மறவாமல் கடைப்பிடித்தால் நிச்சியம் நலமாக வாழலாம்.

நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

பிரச்சனைகளை எதிர்பாருங்கள். மனம் எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.//
மிகத்தேவையான வாழ்க்கைத் தத்துவம். அழகாகச் சொல்லி பதிய வைத்தீர்கள் அன்புடன் மலிக்கா. நன்றி.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.