அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, October 30, 2010

நல்லெண்ணை சாதமும், மருத்துவமும்..


தேவையானவைகள்..


நல்லெண்ணை 2 குழிக்கரண்டி


சிறிய வெங்காயம் 150 கிராம்

முட்டை 1

மிளகுதூள் 1 ஸ்பூன்
உப்பு

சோறு 2.கப்.
நல்லெண்ணையை சூடுவந்ததும் வெங்காயத்தை வதக்கவும்

வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளறவும் எண்ணையின் சத சதப்பிலேயே

மிளகுத்தூளை போட்டு ஒருகிண்டி கிண்டி சோற்றைப்போட்டு எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு

இறக்கி இளம்சூட்டோடு பிடித்து பிடித்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும்
தொண்டைவலி தலைச்சூடு திடீர் வயிற்றுவலி போகும் என என் அம்மாவின் அம்மா செய்து தரும் பலனும் கிடைத்திருக்கு.
இது சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------

நல்லெண்ணையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.
நல்லெண்ணையை தலை முதல் கால் வரை தேய்த்துக் குளிப்பதால் உடல் சூட்டைக் குறைக்கிறது.உடலில் படியும் அழுக்கையும், எண்ணெய் பசையையும் அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைக்கவும் இது உதவும்.

மேலும் பூப்படையும். [வயதுக்குவரும்] பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதற்குக் கொடுக்கலாம்.

அவ்வாறு கொடுப்பதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படும். மேலும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணை செய்கிறது என்பது அக்காலம் தொட்டுவரும் சிறப்[பு]மாம்.

இதன் தனிச்சிறப்பு. உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான்  கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை, ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையும் செய்கிறது.

டிஸ்கி//நல்லதுன்னு சொன்னா நல்லாக்கேட்டுகோனும் புரிஞ்சிதோன்னோ..

அன்புடன் மலிக்கா..

Wednesday, October 27, 2010

அடி மருதாணி.
டிஸ்கி//மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல்
போன்றவைகளுக்கு, இலை மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் இடலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில்
தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். புண், நகப்புண்,  இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். . நகங்களில் தடவினால் நகம் சூப்பராக சிவக்கும்.[படித்தும், செய்ததும்தான்]

ஹலோ ஹலோ இருங்க இதகேட்டுட்டு போங்க
இதெல்லாம் பிரஷ்சாக இருக்கும் மருதாணியில் செய்யவேண்டும். இதேபோல் கோன் மருதாணியில் அல்ல. இதை வாங்கி இப்படியெல்லாம் செய்துவிட்டு டாக்டர்கிட்ட ஓடாதீங்க. அப்புறம் என்னையும் தேடிவந்து ரெண்டு சாத்து சாத்திடாதீங்க.

Sunday, October 24, 2010

அடடா”உப்பு” வில் இத்தனை உண்டா! [உப்பு வைத்தியம்]


சொட்டை[யாஆஆ..] மண்டையில் முடி முளைக்க:
உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம்.

[அதற்காக போட்டு எந்நேரமும் அழுதி தேய்த்து ரதம் வர வைத்துவிடாதீர்கள்.அதானுங்க ரத்தம் ஹா ஹா அப்பால உள்ளதும்போச்சுடுடா நொல்லக் கண்ணான்னு ஆகிடும்]

நகச்சுத்தியா!:
உப்பு, வெங்காயம்.சுடுசோறு. இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நகச் சுற்றில் கட்டிக்கொண்டால் குணமாகும்.

[சம அளவு எடுக்கும்போது சூடா சுல்லுன்னு இருக்கேன்னு ஒருவாய் சாப்பிடதோன்றும் தப்பில்லை அதை செய்துகோங்க]


முள் குத்திடுச்சா [வலி நீங்க:]
உப்பு, மிளகு, சரியளவு எடுத்து நல்லெண்ணையில் வத்தக்கிக்கொண்டு அதன் மேல் ஒத்தடம் தந்தால் இதம் தெரியும்.

[அதுக்காக சுட சுட வைதுடாதீங்கப்பூ அப்புறம் கால் கொப்புளிச்சிடும்]

காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்து [விட்டால்]
 கொய்யின்னு சவுண்டு வருமே:

கொஞ்சம் உப்பை நீரில் கலந்து கரைத்து அதை மெதுவாக காதில் விடவேண்டும் சில நிமிடத்தில் எந்த பூச்சியும் வெளியேறிவிடும்.

[அதுக்காக பாம்புபுற்றில் போய் ஊற்றிப் பார்த்துறாதீங்கப்பு அப்பாலா அச்சோஓஓஓ]

விஷக்கடிக்களா!:
குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால், உப்பைகொஞ்சம் தண்ணீபோட்டு கெட்டியாகக் கரைத்தி கடிவாயில் தடவினால் குணங்கொடுக்கும்.
சக்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத்தண்ணீர் விட்டு உள்ளுக்குள் கொடுப்பதும் நல்லது.

[அதுக்காக உப்புதண்ணீரை கடகடண்ணு குடிச்சிறாதீங்க அப்புறம் உப்புநீர் வந்துடும் அதுக்கு நான் பொறுப்பல்லப்பா]

டிஸ்கி// இவைகளெல்லாம் மல்லி கண்டதும். படித்ததும்தான். பலமான சந்தேகமெல்லாம் கேக்கப்புடாது அப்புறம் நான் அழுதுடுவேன் இன்னும் உப்பைபற்றிய குறிப்புகள் இருக்கு அதெல்லாம் அடுத்தமுறை. இப்பயில்ல ஏன்னா விரல் வலிக்குது ரொம்ப நேரம் கீப்போர்டை தட்டுவது. இருங்க உப்புபோட்டு விரல்கழுவிட்டு அப்புறமா வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்


அன்புடன் உப்பு. அச்சோ

அன்புடன் மலிக்கா

Tuesday, October 19, 2010

நாக்கடுகு. நார்தங்காய் தொட்டுக்கறி[சம்பல்]


தேங்காய் துருவியது 1 கப்

நாக்கடுகு

[இதை இங்கிலீஸில் எப்படி சொல்வாங்கன்னு தெரியலை ஹா ஹா]

கருவேப்பில்லை

நார்தங்காய் ஊறுகாய்

சிகப்பு மிளகாய் காரத்திற்கேற்ப

சின்ன வெங்காயம்

உப்பு

நாக்கடுவையும் சிகப்புமிளகாவையும். வெறும் சட்டியை சூடாக்கி அதில்  வறுக்கவும் மணம் வரும் அப்போது தேங்காயுடன் மற்றபொருளையும் சேர்த்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
அவ்வளவுதான் மிக ஈசியான சம்பல்.அதேசமயம் ரசம் சாதம் இறால்சாதம். தேங்காய் சாதம் இவைகளுக்கு நல்ல காம்பினேஷன். சும்ம படு சோக்க இருக்கும். சுட சுட சோறுவைத்து அதில் இதைசேர்த்து பிசைந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் தெரியுமா. அதெல்லாம் சொன்னாத்தெரியாது. சாப்பிட்டு பாருங்க..

இதுதானுங்க நாக்கடுகு

போட்டுட்டோமுல்ல ஸாதிக்காக்கா அது இதுதான் பெயர் தெரியாததல்ல இதை நாக்கடு[வு]கு என எங்கபக்கம் சொல்லுவாங்க அதான் அதன் பெயர்
அதுக்குமேல தெரியாதுங்கோ வேணுமுன்ன கிஸ்ட்ரி எடுத்து பார்க்கலாம் எனக்குதான் தெரியாதே ஹி ஹி ஹி
அன்புடன் மலிக்கா

Friday, October 15, 2010

ஒத்தையாளா நின்னு எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்!

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.

மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)

25 கோடி பள்ளில படிப்பவர்கள்


1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்


15 கோடி வேலை தேடுவோர்


1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்.


மிச்சம் இருப்பது நீயும் நானும். நீ எப்ப பார்த்தாலும் மெயில் அனுப்பறது/ படிக்கிறதுலேயுமே பிஸியாயிருக்கே!

அச்சோ நான் மட்டும் ஒத்தையாளா இருந்து  எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்.
[இந்த போட்டோ மட்டும் நம்ம தேர்வு ஹி ஹி]

இது எனக்கு மெயிலில் வந்த மெசேஜ்.
சிரிக்கும்படியாக இருந்தாலும் சிந்திக்கும்படியும் இருக்கு.டிஸ்கி// எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பு எததுக்கோ விருது கொடுக்குறாக இதப்போல சிந்திக்கும் சங்கத்துக்குன்னு ஓரு விருதுகொடுக்கமாட்டேங்குறாங்களே!!!!!!!!!!!!!

அன்புடன் மலிக்கா

Monday, October 11, 2010

பசுநெய் ஆப்பம்.
தேவையானவை
ஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]
பசுநெய் தேவையான் அளவு
முட்டை 4
உப்பு
சோடாப்பு
கருவேப்பில்லை


ஆப்பமாவுடன் பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்]  சேர்த்து கலக்கைக்கொள்ளவும்
ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்
2. நிமிடம் மூடி வைக்கவும்
திறந்து திருப்பிப்போடவும்
இருபுறமும் வெந்து சிவந்ததும்

எடுத்து பரிமாறவும்.
இதற்கு எங்க பகுதிபக்கம் ஜீனி அதன்மேல் தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்க்கு முட்டைகுழம்பு,அல்லது
சிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்.

நல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்
 டிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.
பசங்களின் டேஸ்டே வித்தியாசமானதுதானே..


Friday, October 8, 2010

சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்!
நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் இணையத்தில் உள்ளதை எடுத்து அனுப்பியுள்ளார் நம் குடும்பத்து உறுப்பினர்.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10, சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே !!!

உங்க உடம்பை நீங்கதானே பார்த்துக்கொள்ளோனும் அதுக்குதேன் இதெல்லாம் ஓகேவா..அன்புடன் மலிக்கா

Sunday, October 3, 2010

ஆடிய ஆட்டமென்ன! என்ன! என்ன!

பெருநாள் லீவில் ஒருநாளைக் கொண்டாட  அல்அயின் போயிருந்தோம் [இது 25 .30 வதாவது தடவையின்னு நினைக்கிறேன்] அங்குபோட்ட ஆட்டமிருக்கே அதோடு உடல்கண்ட ஆட்டமிருகே அப்பப்பா சொல்லில் வடிக்கமுடியாது.

5. குடும்பம் ஒன்றாக சேர்ந்து 4 காரில் அல் அயினுக்கு போனோம். .அங்குபோய் சேர்ந்தபோது பகல் 11 மணி.
அங்கிருக்கும் ஃபன்சிட்டிக்கு போகமுடிவுசெய்து [பகலென்ன. வெயிலென்ன. ஆட்டம்போட], டிக்கெட்  40 திர்கம்தான் ஒரு ஆளுக்கு எல்லாம் கேமிலும் எத்தனைமுறை வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம் என்றதால். டபுள் ஓக்கேன்னு புகுந்தாச்சி.

உள்ளே போனதும் கூட்டம் எக்கசக்கம் [லீவ்நாளாச்சே அப்படிதானிருக்கும் சும்மா பில்டப் விடாம மத்ததச்சொல்லு] சரின்னு எல்லா கேமுக்கும் போகிறமாதரி ஓர்யிடத்தில் கொண்டுபோயிருக்கும்  5, வீட்டு சாப்பாடுகளையும். நொறுக்குத் தீனிகளையும் வைத்துவிட்டு, யார்யார் எங்கெங்கேபோகனுமோ போங்கன்னாச்சி. குட்டிஸ்களெல்லாம் ஆளைவிட்டாபோதுமுன்னு ஒருசெட்டாக எஸ்கேப்.
3 ஆண்கள் மட்டும். நம்ம மச்சனையும் சேர்த்துதான். இந்த ஆட்டத்துக்கு நாங்கவரலைப்பா. எங்களுக்கு பேசவேண்டிய வேலையிருக்குன்னுசொல்லி அழகிய எஸ்கேப்.

சரி சரிபேசிக்கிடே நின்னா எல்லாத்துக்கும் கூட்டம்கூடிரும் வாங்க எதிலாவதுபோய் முதலில் இடம்பிடிப்போம் [ஏன்ன அப்புறம் வரலாற்றில் இடம்பிடிக்கனுமுல்ல] இது இதில்போய்ய் ஏறலாமுன்னு ஏகப்பட்ட டிஸ்கஸ் வேணவே வேணா இது அந்தரத்தில் 6. 7 .முறை தலைகீழா நிற்கிறது என என்மகள் பயமுறுத்தியும். அதெல்லாமில்லை என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம் என நானும் என் தோழியும். [மற்ற 3 பயந்தாங்கோழி ] பார்த்தாலே தலைசுத்துன்னு நின்னுட்டாங்க
சரி தலைசுற்றும்போது அப்படியே முதுகைபார்த்துக்கொண்டு நிற்கட்டும் வா என என் தோழியில் கைகளைப்பிடிது இழுத்துச்சென்றேன்.

ஆட்டத்துக்கு வரலை ஆனா ஆடுவதை பார்க்கவருகிறேன்சொல்லி மச்சான் வந்து எங்க ஹேண்ட் பேக்கெல்லாம் வாங்கிகொண்டு வெற்றிவாகை சூடிவா மச்சின்னு ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டாக. [இப்படி அசால்ட் ஆறுமுகம்போல் அனைத்திலும்  தைரியம் போக கற்றுக் கொடுத்ததே அவுகதானே]

இதோ இதில்தான் முதலில் ஏறினோம்
நானும் தோழியும் .ஒரு கேங்.  எங்களுக்கு முன் என் தோழியின் கணவர். நான் வரலையின்னு சொல்லி அங்கேயே நின்ன மற்றொரு தோழியின் கணவர் வேகமாகவந்து அவர் அருகில் அமர்ந்தார். மானம்போய்விடும் பெண்களே தைரியமாய் வந்துட்டாங்க அப்புறம் எனக்கு என்ன பயம் அதேன் வந்துட்டேன்னு.
அனைவரும் ஏறியதும் சன்னல் கதசை அடைப்பதுபோல் அனைவரியும்போட்டு பூட்டி சாவி எடுத்துட்டாக. ஏன்னா அந்தரத்தில் தலைகீழா நிற்கும்போது யாரும் விழுந்துடக்கூடாதுல்ல அதுக்குதான் விழுந்தாலும் அதுக்குல்லேயே கிடக்கட்டுமுன்னுதான்.

தலைகீழ் நிற்கும் ஸ்கைஃப் ஃப்ளையர் ஏறினோமா!ஆஆஆஆ
மெல்ல மெல்ல தாலட்டி அம்மாடிடியோஓஓஓஓ ந்னு அலறவச்சது என் தோழியை [பேஷ்மெண்ட் வீக்காயிருந்தாலும் நாம வெளியில் [காட்டிக்கமாட்டோமுல்ல] 

என்கூடயிருந்த தோழி பட்டபாடுயிருக்கே. அடியே ஏண்டி என்னை இதுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்னு ஒரு ஒப்பாரி வைச்சாளே பார்க்கனும்.
சொன்னாளே சொன்னாளே
 என் புள்ள சொன்னாளே போகாதே போகாதேன்னு
அதில்போய் ஏறாதேன்னு இப்ப இங்க வந்து தலைகீழ தொங்கவிட்டுடியேடி படுபாவின்னு புலம்பியதும்.

தலைகீழ் நிற்கும்போது எனக்கு கால் ஆடிய ஆட்டமிருக்கே அப்படியே வெளியே வந்துவிடுவோமோ என்பதுபோல் உடம்புவழுக்கியது. அப்படியிருந்தும் எனக்கு சிரிப்புதாங்கலை.
அடியே அப்படியே கண்ணைத் திறந்துபாரேன் எப்படி தெரியுதுன்னு சொன்னதும் அடி பாதகி இப்படியாப்பட்டவளாடி நீ. நான் கண்ணைதிறந்தா செத்துடுவேன் என் குடலெல்லாம் வாய் வழியாவருதே என்னப்பெத்த உம்மாவே! நீ முன்னாடிபோய் சேந்துட்டா இவ இப்ப என்னை உங்கிட்ட அனுப்பப்போறாளே என அது சுத்தச் சுத்த என்னை திட்டி தீர்த்துவிட்டாள்.
முன்னாடியிருந்த ஜீவன்களின் நிலையோ அய்யஹோ கேட்கவே வெ வெ வேணாம். முக்கலும் முனங்கலும். இவ கத்த கத்த அங்கிருந்து சும்மாயிருடி இங்கேயே ஆட்டம்காணுது நீவேறன்னு.

என்னதான் நான் ஸ்டார்ங்கயிருந்தாலும் ம்ஹூம் உள்ளுக்குள் நாடிநரம்பெல்லாம் ஆட்டம்கண்டு. ஒருவழியா குடலெல்லாம் கலங்கி கண்களெல்லாம் சிவந்து. தலைசுற்றி [இதெல்லாம் நமக்கில்லை ஹி ஹி]
வந்து இறங்கியாச்சி.

வந்ததோட விழுந்தது முதுகில் ஒரு அடி யாருக்கு எனக்குதான். பாவி பாவி சுத்துதடி தலையன்னு அவசொல்ல. பக்கத்தில் வீட்டுக்காரவுக நின்னுகிட்டு மேலேபோனவகளையெல்லாம் கொண்டுபோய் காட்டிவிட்டு கூட்டியாந்துட்டாகளே! என்னமோ பண்ணுதேன்னு சொல்ல,
வராத பயந்தாகோழியெல்லாம்  அதுக்குதாம்ம்பாஅப்பவே சொன்னோம் நான் வர நான்வரலைன்னு ஜாலராபோட, என் மச்சான் மட்டும் வெரிகுட் கீப்பிட்டப் இந்தா தண்ணீர் குடி அடுத்த ஆட்டதுக்கு ரெடியாக்குன்னு சொல்ல. எல்லாம் நீங்க கொடுக்கும் தைரியம்தான் மலிக்காவுக்கு கொஞ்சமாவது பயமிருக்கானு பாருங்க அப்படின்னு சொல்லிக்கொண்டே [எனக்கு ஆடிய ஆட்டம் எனக்குதானே தெரியும் இவாளுக்கு எங்கே புரியும் ஆன மச்சானுக்கு புரிஞ்சிபோச்சி அதுக்குதேன் உடனே தண்ணீரை நீட்டியது]
கொஞ்சநேரம் அப்படியே போய் அமர்ந்து தண்ணீரருந்திவிட்டு மீண்டும் ஸ்டாட்
இதுதான் தண்டாரம் கிரைண்டரைவிட படுவேகமாய் படுவேகத்திலும் வேகமாய் சுற்றியும் ஆட்டியும். அசதியோடு கொண்டுவந்து தள்ளிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் இறங்கிவந்தோம் பேசிவைதுக்கொண்டு அதே தோழியும் நானும். மயக்கம் கண்ணைக்கட்ட அப்படியிருந்து விடுவோமா அடுத்து

இதோ  இதுதான் ட்ரைனாமாம் என்னாமா போகுது. போட்டதே ஒரு சடன் பிரேக் போட்டதும்  அடித்ததே முதுகுதண்டில் [அதெல்லாம் யாருக்கு வலிச்சது அப்பறமுல்ல இருக்கு அம்மா வலிக்குதே]அப்படியே பின்னாடியேபோய்
 சுத்தி சுத்தி ஒருவழியாகி, உடல் வலியாக்கி கொண்டுவந்து நிறுத்தியது.
அடுத்து அடுத்து என கிட்டதட்ட அனைத்திலும் ஏறியாச்சி.
அப்ப போட்டோ எங்கே அப்படிங்கிறீங்களா
போட்டோக்கள் எடுக்க ஆள்வேணுமுல்ல.3. 4. கேமுக்கு கூடவந்தாக. அப்புறம் அவுகளுக்கு சோலியிருக்காதா அதேன்.


ஆனாலும் ஆடிய ஆட்டமிருக்கே. கொண்டுபோன சாப்பாட்டைக்கூட [ஒரு பிளேட் மட்டுதான்] சரியாக சாப்பிடலை. இதில் என் செல்லதின் பர்சைவேறு[அதில் பெருநாள்காசு 150 திர்கம் இருந்தது] யாறோ அபேஸ் பண்ணிட்டாங்கோ.
[உறவினர்கள் கொடுக்கும் பெருநாள் காசை பெருநாள் லீவில் வெளியில்போகும்போது எப்போதுமே நாந்தான் செய்வேன் என  பெட்ரோல் அல்லது. எண்ட்ரஸ் டிக்கெட் அல்லது சாப்பாடுயென ஏதாவது அவனின் பணதிலிருந்து செலவு செய்வான் தனெக்கென்று எதுவும் அதில் தனியாக செய்துகொள்ளமாட்டான் அன்று வேண்டாம் இருக்கட்டும் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டோம்.அவனிடமிருந்து நிறைய நாங்கள் கற்றுகொள்கிறோம்.]

 நாங்க ஜாமான்கள் வைதுவிட்டுபோன இடத்தில் விளையாட டிரஸ் மாற்றிவிட்டு அதிலேயே பர்சையும் வைத்துவிட்டு போயிருக்கான்.வந்துபார்த்தால் காணோம்.

 பாவம் புள்ள சாப்பிடவேயில்லை தான்போன அத்தனை ரையிடுகளுக்கும்போய் பார்த்து களைத்துபோய் வந்தான் கிடைக்காமல். எத்தனை சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. மம்மி எவ்வளவு கேர்ஃபுல்ல வைத்திருந்தேன் தெரியுமா.எப்படி மம்மி போனதுன்னு.அதுக்குதான் நான் டிக்கெட் எடுக்கிறேன் சொன்னேன் என்று ஒரே புலப்பம். சரி விடு நீ யாருக்கோ பெருநாள் காசு கொடுதேன்னு நினைச்சிக்கோன்னு சொல்லி சமாதானப்படுத்தி அழைத்துவந்தோம்.

ஆடிய ஆட்டம் 1 வாரம்வரை ஆட்டியது உடம்பை. ஆனாலும் இன்றுவரை தோழிதிட்டியததையும். கத்தியதையும்.  நினைக்கும்போதெல்லாம் சிரிப்புவரும். இதோ சிர்த்துக்கொண்டேதான் இதை எழுதினேன்.
சில சம்பவங்கள் மனதில் தங்கிவிடும் இதுவும் அதுபோலதான்.

இனி அடுத்த ஆட்டத்தில் சந்திப்போம். இருக்கே அடுத்து மலையேறியது
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.