அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, January 31, 2010

ஜாக்கெட்டுக்கு வெட்டுவது எப்படி

முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக்கொள்ளவும்

அதன் மேல் அளவுஜாக்கெட்டின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் தையலுக்கு விட்டு வெட்டவும்

வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்
மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்

அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு
அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,
வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்
அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ....
                                         இதுகழுத்துக்கு
                              
இது கைகளுக்கு

தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்
தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்
முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்
அதேபோல் கைகளில் முன்பக்கத்தைவிட பின்பக்க அக்குள்பக்கம் சற்று பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
இப்போது வெட்டிய டிசைன்
இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு
கிராசாக வெட்டவும்
அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்
இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு
இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்
இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்

இதை நாம் தைய்பதில்தான் இருக்கிறது அதன் அழகே!!!!!

இது ஜாக்கட்டை வைத்து அளவெடுத்து தைக்கும் முறைஇதில் சந்தேகங்களிருந்தால் கேட்கவும்
 
அன்புடன் மலிக்கா

Thursday, January 28, 2010

ஐந்து ஆறுவகை அப்பம்


தேவையானவைகள்

பச்சரிசி 3 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
சோறு தேவைக்கேற்ப
உப்பு

அரிசியைஊறவைத்து தேங்காய் சோறு சேர்த்து அரைக்கவும்[முதல்நாளிரவு]
நன்றாக பொங்கியிருந்தால் அப்பம் மிருதுவாக இருக்கும்
அப்பமாவுடன் உப்புசேர்த்து பதமாய் கலந்து நான்ஸ்டிக்சட்டியில் ஊற்றிமெதுவாகசுற்றி
விட்டு மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்
இதுசாத அப்பம்
------------------------------------------------------------------------------
அப்பமாவு 5 கரண்டி 2 முட்டைதண்ணீருக்கு பதிலாக அரைப்பதில்
சேர்ப்பதற்கு கொஞ்சம் மஞ்சள்தூள்
சிறியவெங்காயம்6. பச்சைமிளகாய்2 .சீரகசோம்பு [முழுது].
1டீஸ்பூன் சேர்த்து
கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து மாவுடன் சேர்த்து உப்புபோட்டு
நன்றாக கலக்கி நான்ஸ்டிக் அப்பச்சட்டியில் ஊற்றி எடுக்கவும்
இது மஞ்ஜசப்பம்
--------------------------------------------------------------------------------
5 கரண்டி மாவில் 3 முட்டை ஜீனீ நெய்தேவைகளுக்கேற்ப சேர்த்து
முட்டை நன்றாக அடித்து கலக்கி மாவுடன்சேர்த்து சட்டியில் ஊற்றி எடுக்கவும்
இது ஜீனீ அப்பம்
--------------------------------------------------------------------------------
5 கரண்டிமாவில் மஞ்சள்தூளும் சீரகசோம்புத்தூluம் கருவேப்பில்லையும்
மாவுடன்சேர்த்து வார்த்தெடுக்கவும்
இது பிலாச்சப்பம்
--------------------------------------------------------------------------------
அப்பமாவை இட்லிமாவுபதத்துக்கு கெட்டியாக கலக்கி உப்புசேர்த்து கலக்கி
இட்லி சட்டியில் ஊற்றிஎடுத்தால்
இது வண்டப்பம்

தேங்காய்க்குபதிலாக உளுந்து சேர்த்தும் அரிசியுடன் அரைக்கலாம்
இது கொலஸ்டால் உள்ளவர்களுக்கு நல்லது

அன்புடன் மலிக்கா

Monday, January 25, 2010

குடியரசு தின வாழ்த்துக்கள்


அடக்குமுறைசெய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
சூடிய தினம்

உப்புசத்தியாகிரங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்

தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்

தன்
வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன்
வாழ்நாட்க்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்

சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த
தியாகிகளின்
தியாக தினம்

 நம்தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை
இன்றுமட்டும்
நினைப்பதில்
நியாயமில்லை

எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை

சுதந்திரகாற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக

நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போரடியகளையும்
நினையுகூறுவோமாக.

அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்

என்அன்பான
குடியரசு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா

Monday, January 18, 2010

முத்துத்தொங்கல்


:தேவையான பொருட்கள்:
பல கலர்களில்
முத்துமணிகள்
ஊக்கு
சிறியவலையன்கள்
நரம்புகள் [இல்லையென்றால்]
பொடிகம்பிகள்

முதலில் கம்பியைஎடுக்கவும்

அதில்உருண்டையான மணியை போடவும்

அதற்க்கு மேல் சிறிய பாசியை போட்டு அதற்க்குமேல்
டய்மன் பாசி படத்தில் காட்டியப்படி போடவும்

மறுபடியும் படத்தில் காட்டியப்படி போடவும்


அந்த கம்பியை நன்கு முறுக்கி விடவும்

முறுக்கியகம்பியில் நடுவில்சிறிய வளையம்போட்டு
அதில் பெரிய பாசியை மாட்டவும்


அந்த வளையத்தில் காதில் போடும் கொக்கியை மாட்டவும்


அழகானகம்மல்ரெடி


உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றபடி டிசைன்கள்செய்யவும்
உங்கள் குழந்தைகளுக்கு போட்டு மகிழுங்கள்
அன்புடன் மலிக்கா

மனதை வெல்க

Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என்மனமார்ந்த
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


நல் ஆரோக்கியத்தோடும்
நல்வளத்தோடும்
நல்சுகத்தோடும்
நாளும் பொழுதும்
நலமாய் விளைய

பழையதை களைந்து
புதியது நிறைந்து
புத்தம் புது உறவாய்
புதுமண மலராய்
புவியெங்கும்

தமிழ்மணம் வீசட்டும்
தரணியெங்கும்
தமிழர்களின் குணம்
தங்கமாய் ஜொலிக்கட்டும்

அன்புடன் மலிக்கா

Friday, January 8, 2010

நண்டு சூப்நண்டு தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சிரியவெங்காயம் 10
தக்காளி 1

ப.மிளகாய் 2 ,3
கொத்தமல்லி
சீரகம்சோம்பு [முழுது] 2 ஸ்பூன்
முழு மிளகு 2 ஸ்பூன்
லெமன் ஷூஸ் கொஞ்சம்
உப்பு

சிறிய வெங்காயம் 5
 ப,மிளகாய் சோம்புசீர்கம் மிளகு அனைத்தையும் இடித்து
நண்டுடன் மீதி 5 வெங்காயத்தையும் தக்காளியையும்
கட்செய்துபோட்டு இடித்தவைகளையும் சேர்த்து உப்புபோட்டு
மூடிகொதிக்கவிடவும்

வாசம் மூக்கைத் துலைத்ததும்
இறக்கி திறந்து லெமன் ஜூஸை ஊற்றி ஒருகிண்டுகிண்டி
கொத்தமல்லி போட்டுகொஞ்சம் இளஞ்சூட்டோடு குடிக்கவும்
இது ஜலதோசத்துக்கும் நல்லது
குளிர்நேரத்திற்கும் படுசூப்பராக இருக்கும்..

அன்புடன் மலிக்கா

Sunday, January 3, 2010

சிக்கன் ஃபிராங் குருமா


சிக்கன் ஃபிராங் 5

காளிஃபிளவர் ½ கப்
பீண்ஸ் 10
கேரட் 1
தக்காளி 2
பல்லாரி 2
கொள்ளு 1 கப்
மல்லித்தூள் 1 ½ ஸ்பூன்
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது கொஞ்சம்
ரைன்போ மில்க் 3 ஸ்பூன்
ஆயில்
உப்பு
மல்லியிலை

குக்கரில் கொள்ளை வருத்துக்கொண்டு அதிலேயே தண்ணீருடன் தக்காளியும்சேர்த்து வேகவிடவும் 5 விசில் வந்ததும்,பல்லாரி பீன்ஸ்,கேரட்,களிஃபிளவர், அனைத்தும் கட்செய்து,

ஒரு வானலியில் 1ஸ்பூன் ஆயில்விட்டு சிறிது வதக்கவும்

வெந்து இருக்கும் கொள்ளுடன் வதக்கியவைகளைப்போட்டு,அதனுடன் மஞ்சள்,மல்லித்தூள்,உப்பு,சேத்து தேவையான தண்ணீர்விட்டு,குக்கரைமூடி 3 விசில் விடவும்.

காய்கள் வதக்கிய வானலியிலேயே,சிக்கன் ஃபிராங்கை கட்செய்து அதில் மிளகாய்தூள்,உப்பு,இஞ்சிபூண்டு விழுதுசேர்த்துபிரட்டி,பொரித்தெடுக்கவும்.

குக்கரிலுள்ளவைகள் ரெடியானதும் திறந்து அதில் பொரித்த சிக்கன் ஃபிராங்கைபோடவும், பின் ரையின்போமில்க் 3 ஸ்பூன் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவிபறிமாறவும்.

இது மிகுந்த சுவையாக இருக்கும்,பாக்கிஸ்தான் ரொட்டி,பரோட்டா,சப்பாத்தி,சாதம்கூடவும் சாப்பிடலாம்,


[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.