அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, January 31, 2010

ஜாக்கெட்டுக்கு வெட்டுவது எப்படி

முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக்கொள்ளவும்

அதன் மேல் அளவுஜாக்கெட்டின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் தையலுக்கு விட்டு வெட்டவும்

வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்
மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்

அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு
அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,
வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்
அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ....
                                         இதுகழுத்துக்கு
                              
இது கைகளுக்கு

தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்
தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்
முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்
அதேபோல் கைகளில் முன்பக்கத்தைவிட பின்பக்க அக்குள்பக்கம் சற்று பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
இப்போது வெட்டிய டிசைன்
இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு
கிராசாக வெட்டவும்
அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்
இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு
இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்
இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்

இதை நாம் தைய்பதில்தான் இருக்கிறது அதன் அழகே!!!!!

இது ஜாக்கட்டை வைத்து அளவெடுத்து தைக்கும் முறை



இதில் சந்தேகங்களிருந்தால் கேட்கவும்
 
அன்புடன் மலிக்கா

18 comments:

S.A. நவாஸுதீன் said...

ரெண்டுலையும் ஓட்டு போட்டாச்சு தங்கச்சி.

மீனாட்ச்சி said...

ஆகா என்ன ஒரு விளக்கம் மிக அருமை நானும் இதைதான் எதிர்பார்த்திருந்தேன் மிகுந்த நன்றிங்க.

நாஸியா said...

சூப்பரு!

ஸாதிகா said...

அடுத்து பிளவுஸை ஒவ்வொன்றாக இணைத்து எப்படி தைப்பது என்பதையும் செயல் முறை விளக்கம் படங்களுடன் கொடுங்கள்

Menaga Sathia said...

சூப்பர்ர் மலிக்கா.ஸாதிகா சொன்னதை வழிமொழிகிறேன்...

திவ்யாஹரி said...

சூப்பர்ர் மலிக்கா.ஸாதிகா சொன்னதை வழிமொழிகிறேன்...

me too.. thanks malikka

Jaleela Kamal said...

rompa aruami

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமை

Jaleela Kamal said...

மலிக்கா எப்படி இத்தனை பொறுமையா இவ்வளவையும் இனைத்தீர்கள்.

நானும் பிளவுஸ் தைக்க சொல்லி கொடுக்கலாமென்று நினைத்தால் முடிய மாட்டுங்கிறது.

sabeeca said...

சலாம் ராத்தா.
மார்பளவு எப்படி எடுப்பது.இப்படி கட் பன்னினா,துண்டு, துண்டா போயிருமே. தைப்பதற்க்கு கஸ்ட்டமாக இருக்காதா.யக்கோவ் விளக்கம் தரவும்.

அன்புடன் மலிக்கா said...

/sabeeca said...
சலாம் ராத்தா.
மார்பளவு எப்படி எடுப்பது.இப்படி கட் பன்னினா,துண்டு, துண்டா போயிருமே. தைப்பதற்க்கு கஸ்ட்டமாக இருக்காதா.யக்கோவ் விளக்கம் தரவும்/


வ அலைக்குமுஸ்ஸலாம்.
வாங்கம்மா மின்னலு.
ஜாக்கடை வைத்துதான் மார்[அளவும் எடுக்கனும். அது சரியில்லை என்னும் பட்சத்தில் அளவு டேப் வைத்து அதை கட்செய்யலாம்.

துண்டு துண்டா வெட்டினாத்தானே இணைக்கமுடியும். முடிந்தால் நாளை அல்லது மறுநாள் தைப்பதும் விளக்கம் போடுகிறேன் சரியா..

நிலாமதி said...

பெணகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி உங்களுக்கு.

கதிர்தமிழன் said...

வணக்கம் மேடம் நான் புதுசு உங்க வெப்சைட் பார்த்து படிக்கிறேன் பழகி விட முடியுமா

shiva@raja said...

dear malika how to cutting reclon blouse?iam very intrested tailoring so you will teach varieties of bloueses in your website thankyou .

nasriya said...

hello mam,enakku neck loossa varudhu.pls help me to rectify

suji said...

Azhaga solli tharel

sheeja said...

அருமையான விளக்கம்......

Unknown said...

டாட் பிடிப்பது எப்படி?

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.