அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, January 3, 2010

சிக்கன் ஃபிராங் குருமா


சிக்கன் ஃபிராங் 5

காளிஃபிளவர் ½ கப்
பீண்ஸ் 10
கேரட் 1
தக்காளி 2
பல்லாரி 2
கொள்ளு 1 கப்
மல்லித்தூள் 1 ½ ஸ்பூன்
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது கொஞ்சம்
ரைன்போ மில்க் 3 ஸ்பூன்
ஆயில்
உப்பு
மல்லியிலை

குக்கரில் கொள்ளை வருத்துக்கொண்டு அதிலேயே தண்ணீருடன் தக்காளியும்சேர்த்து வேகவிடவும் 5 விசில் வந்ததும்,பல்லாரி பீன்ஸ்,கேரட்,களிஃபிளவர், அனைத்தும் கட்செய்து,

ஒரு வானலியில் 1ஸ்பூன் ஆயில்விட்டு சிறிது வதக்கவும்

வெந்து இருக்கும் கொள்ளுடன் வதக்கியவைகளைப்போட்டு,அதனுடன் மஞ்சள்,மல்லித்தூள்,உப்பு,சேத்து தேவையான தண்ணீர்விட்டு,குக்கரைமூடி 3 விசில் விடவும்.

காய்கள் வதக்கிய வானலியிலேயே,சிக்கன் ஃபிராங்கை கட்செய்து அதில் மிளகாய்தூள்,உப்பு,இஞ்சிபூண்டு விழுதுசேர்த்துபிரட்டி,பொரித்தெடுக்கவும்.

குக்கரிலுள்ளவைகள் ரெடியானதும் திறந்து அதில் பொரித்த சிக்கன் ஃபிராங்கைபோடவும், பின் ரையின்போமில்க் 3 ஸ்பூன் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவிபறிமாறவும்.

இது மிகுந்த சுவையாக இருக்கும்,பாக்கிஸ்தான் ரொட்டி,பரோட்டா,சப்பாத்தி,சாதம்கூடவும் சாப்பிடலாம்,


[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]

அன்புடன் மலிக்கா

17 comments:

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். செய்து பார்க்கலாம்.

சிக்கனுக்கு பதிலா இறால் போட்டா நம்ம ஊர் வாசனையும் வருமோ.

Mrs.Faizakader said...

நாவில் நீர் ஊற வைக்கிறிங்களே அக்கா

நாஸியா said...

இருங்க இருங்க உங்க வீட்டுக்கு ஒரு நாள் வாரேன்!

அதென்ன சிக்கன் ஃப்ராங்க்? கேள்விபட்டதில்லையே

sarvan said...

looks good

sarvan said...

looks good

அண்ணாமலையான் said...

"[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]"
என்னது? சிக்கன தவிர்க்கனுமா? அதுக்கு சாப்புடறதயே தவிர்த்துடலாமே?
இனிய புத்தாண்டு வாழ்துக்கள்...

பித்தனின் வாக்கு said...

[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]

சிக்கனுக்குப் பதிலாக பாதியாக நறுக்கிய உருளைக் கிழங்கை போட்டு செய்யலாம். நன்றி மலிக்கா. அல்லது சோயா போட்டும் செய்யலாம்.

thenammailakshmanan said...

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்மா மலிக்கா

சாப்பிடும் ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,நீங்களும் நம்ம ஊர்தானாமே?

அன்புடன் மலிக்கா said...

S.A. நவாஸுதீன் said...
ஹ்ம்ம். செய்து பார்க்கலாம்.

சிக்கனுக்கு பதிலா இறால் போட்டா நம்ம ஊர் வாசனையும் வருமோ/

நம்மூர் வாசனைக்கு ஈடாகுமா இதெல்லாம்.

இதைவிட அதான் அண்ணா சூப்பர்..

அன்புடன் மலிக்கா said...

Mrs.Faizakader said...
நாவில் நீர் ஊற வைக்கிறிங்களே அக்கா
/

நன்றி பாயிஜா தங்கச்சி..//நாஸியா said...
இருங்க இருங்க உங்க வீட்டுக்கு ஒரு நாள் வாரேன்!/


வாங்க கேட்டதெல்லாம் செய்துதாரேன்

/அதென்ன சிக்கன் ஃப்ராங்க்? கேள்விபட்டதில்லையே
/

அதுவா சிக்கனை அரைத்து நீலவக்கில் ஓமக்குச்சிபோன்ற வடிவத்தில் பேக்கிங்கில் இங்கு கிடைக்கும் நாஸியா.
நம்ம அண்ணாதாதே கிட்ட கேளுங்க அதை இங்கு பலபேர்களில் சொல்கிறார்கள். சிக்கன் ப்ராங். ஹட் டாக்.. சோசேஜ்.. என்று..

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையான் said...
"[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]"
என்னது? சிக்கன தவிர்க்கனுமா? அதுக்கு சாப்புடறதயே தவிர்த்துடலாமே?
இனிய புத்தாண்டு வாழ்துக்கள்/

ஆக கெளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.

மிக்க நன்றி அண்ணாமலையாரே..

அன்புடன் மலிக்கா said...

looks good

January 3, 2010 3:38 AM

sarvan said...
looks good
//

மிக்க நன்றி சரவணா

அன்புடன் மலிக்கா said...

பித்தனின் வாக்கு said...
[வெஜ்காரர்கள் இதில் [சிக்கன் ஃபிராங்கை தவிர்த்து செய்யலாம்]

சிக்கனுக்குப் பதிலாக பாதியாக நறுக்கிய உருளைக் கிழங்கை போட்டு செய்யலாம். நன்றி மலிக்கா. அல்லது சோயா போட்டும் செய்யலாம்.
//

ஆமா அப்படியும் போட்டு செய்யலாம்
மிக்க நன்றி பித்தனின் வாக்கு.. வாக்கு சரியாகதானிருக்கும்

அன்புடன் மலிக்கா said...

/thenammailakshmanan said...
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்மா மலிக்கா

சாப்பிடும் ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்க//


ரொம்ப மகிழ்ச்சிம்மா, கருத்துக்கமிக்க நன்றிம்மா

அன்புடன் மலிக்கா said...

பாத்திமா ஜொஹ்ரா said...
அக்கா,நீங்களும் நம்ம ஊர்தானாமே
/

ஆமா ஜொகரா. நீங்க எந்த தெரு?

அக்பர் said...

உடனே சமையல் செஞ்சு பார்க்கணும் போல இருக்கு.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.