அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, June 29, 2010

டி.சர்ட்டில் மினி கவுன் அன் ஸ்கர்ட்.

டி சர்ட்டில் ஸ்கர்ட்
தேவையானவை
டி சர்ட் 1 [பனியன்கிளாத்]
பூனம் துணியில் 1 யாட் [2 முழம்]
நூல்
கத்த்ரிக்கோல்
தையல் மிசின் [இதில்லாம எப்புடிதைக்கமுடியும் ஹி ஹி கையாலும் தைக்கலாம்]
டி சர்ட்டை  இதுபோல் கீழ்பாகத்தில் நறுக்கவும் அதாவது இடுப்புபட்டிக்கு தேவையானைதை
அதோடு பூனம் துணியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் அடுக்கு கொசுவம் வைப்பதற்கு தோதாக[ஏதுவாக]
இது  ஸ்கர்ட்டுக்கு இடுப்பளவுக்கு தேவையான பட்டி
இடுப்புபகுதிக்கு எளாஸ்டிக்கும் வைக்கலாம். ஜிப்பும் வைக்கலாம்.
அதை ஒருபுறம் இணைக்கவும்
இதேபோல் இணைத்துக்கொண்டு

பூனம்துணியை இரண்டாக மடித்து அந்த இடுப்புப்பட்டியில் சேர்த்து அடுக்கியதுபோல் கொசுவம் வைத்து  தைக்கவும்

தைத்ததும் மறுபுறமும் இணைத்தது திருப்பினால் இதுபோல் வரும்

இது மேல்கவுனுக்கு
அதில் காலியாக இருக்கும் கழுதின் கீழ் இதுபோல் திருடி கலர்ஸ் வைத்து டிசைன் செய்துக்கொள்ளலாம் பார்க்க அழகாகயிருக்கும். இந்த டிசைன் செய்து 1 மணிநேரம் காயவிடனும். தைத்திவிட்டும் செய்யலாம்.

 மேல்கவுனுக்குக்கும் அதன் ஒருபுறத்தை முதலில் தைத்துஇணைத்துவிட்டு, அதேபோல் அடுக்கி தைக்கவும்
இதற்கு தாங்களின் இஸ்டத்திற்கு தகுந்தார்போல் இரு அடுக்கு.
 ஒரு அடுக்கு எனத் தைக்கலாம்

நான் தைத்திருப்பது இரு அடுக்கு.

இப்போது மினி ஸ்கர்ட் அன் கவுன் ரெடி.

இதை தத்தித்ததி நடக்கும் அழகுகுட்டிகளுக்கு போட்டால் அழகு டபுளாகும்.
 சிறிதாக ஆகிவிட்ட டிசர்ட்டில்கூட[ புதிதாக இருந்தால்]

இதேபோல் தைக்கலாம் இப்படி செய்துபாருங்களேன்.


டிஸ்கி// இது ஊரிலிருக்கும் என் தங்கையின் மகள் 
அழகுச்செல்லம் ஆதிராக்குட்டிக்கு தைத்துள்ளேன்.
எப்படியிருக்கு இந்த பெரியம்மாவின் கைவண்ணம்.

அன்புடன் மலிக்கா

Sunday, June 27, 2010

பயர் வெடிகுண்டு.

.
பயர் உருண்டை
என்ன வெடிகுண்டு என பார்த்து பயந்துபோயிட்டீங்களா சும்மா அதிருதுல்ல அப்படின்னு எல்லாரும் சொல்லுறாகளே நாமளும் சொல்லுவோமேன்னுதான் ஹி ஹி 

தேவையானவை

சிவந்த பயர் கால்கிலோ
தேங்காய் துருவியது 1 கப்
சீனி தேவையான அளவு.
பயர்வகைகள் நிறைய இருக்கு அதில் இதுவும் ஒன்று எங்க ஊரில் இதை பெரும்பயர் என்பார்கள்.

பீன்ஸ் போலவேயிருக்கும். [இது பீன்ஸின் தங்கச்சிபோல]


பயரை குக்கரில் போட்டு வேகவைத்துக்கொண்டு அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு.,அப்பயரை லேசான சூட்டுடன் பிசையவும். அதோடு தேங்காய் சீனி சேர்த்துப்பிசையவும். ரொம்ப நைசாக பிசையாமல் கடிபடுவதற்கு தோதாக சிறுசிறு துகள்கள்கிடப்பதுபோல் பிசைந்து இதுபோல் வேணும் வடிவத்தில் உருண்டைகள் பிடித்து சாப்பிட்டால் மிகுந்த சுவையோடு இருக்கும்.சத்தும் நிறைந்தது. பசங்களுக்கு. பிடிப்பதுபோல் வெல்லம் வேண்டுமென்றாலும் சேர்கலாம்.


எப்படியோ உடம்புக்கு சத்து சேர்ந்தால் சரி அதோடு நாமும் 2. உருண்டை அப்படியே துண்ணுகிட்டால் நமக்கும் ரொம்ப நல்லது. வாய்வு உள்ளவங்க அடிக்கடி சாப்பிடவேண்டாம். அப்புறம் அங்க புடிக்கிது இங்க புடிக்குதுனெல்லாம் சொல்லக்கூடது. ஓகே..

டிஸ்கி// இப்பயரை வைத்து கறி. கூட்டு பயர்சோறு என நம்க்கு இஸ்டப்படதுபோல் செய்யலாம்.

Wednesday, June 23, 2010

எனதுமகனின் கைவண்ணம் [மலிக்கா]











தொழுகைப்பாயில்[முஸல்லாவில்] உள்ள பள்ளிவாசல்இது . அவர் தொழுது முடித்துவிட்டு ஒருநாள் அந்த பாயை எடுத்துப்போட்டு இதை வரைந்துக் கொண்டிருந்தார். வந்துபார்த்தேனா சந்தோஷம் தாங்கலை.
 மனம் சொன்னது எடு கேமராவை சுடு படத்தையின்னு அவர் வரைந்துகொண்டிருக்கும்போதே கிளிக் கிளிக்.செய்தேன்..

எப்படியிருக்கு. சொல்லுங்க [ அன்புடன் மரூஃப் ]
இத நான் கேட்கலை அவுகதான் அங்கிள். ஆண்டி. அண்ணா. அக்கா. எல்லார்கிட்டேயும் கேட்டுசொல்லுங்கனாக அதேன் கேட்டேன்..

அன்புடன் மலிக்கா.

Saturday, June 19, 2010

கேரளா பச்சக்கறி கூட்டு

நன்றி கூகிள்

கேரட்
உருலைக்கிழங்கு
அவரைக்காய்
பீன்ஸ்
மத்தங்காய் [பூசனிக்காய்]
சிறிய வெங்காயம் 10
தக்காளி 1
பச்சைமிள்காய் காரத்திற்கேற்ப
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
சீரக சோம்பு [பொடியல்ல] 1 டீஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
உப்பு.

தாளிக்க: தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் [மதி]
கருவேப்பில்லை கடுகு உளுந்து சிகப்பு மிளகாய்.

முதலில் நறுக்கிய காய்கறிகளை உப்பு மஞ்சள்பொடி தண்ணீர் அளவோடு வைத்து முக்கால்வேக்காடு வேகவைய்கவும்
மிக்சியில் பாதிவெங்காயம் பாதிதக்காளி பச்சைமிளகாய் சீரகம்சோம்பு சேர்த்து விழுதாக [ரொம்பநைசாக வேண்டாம்] அரைத்துக்கொள்ளவும்

காய்கறிகள் வெந்ததும் வேறு பாத்திரத்தில் 1 ஸ்பூன் .தேங்காய் எண்ணை  ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பில்லை மீதமுள்ள வெங்காயம் தக்காளி சேர்த்துதாளித்து
அதில் காய்கறிகளையும் அரைத்தவிழுதையும் போட்டு
நன்றாக கலந்ததும் 2 நிமிடம் மூடிவைத்து இறக்கவும்
இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இது ஒரு சத்துள்ளகூட்டு... வெள்ளைசாதம். ரசம். இக்கூட்டு மதி. வேணுங்கில். சுட்ட அப்பளம். இல்லைங்கில் நாரங்கா அச்சாரு மதி.

6, 7 வருடம். சேச்சிகளின் ஒக்க நின்னு அவாளின் பஷ்ணங்கள் உண்டாக்கியத ஞான் நோக்கியதாம். அதில் இதுவும் ஒருவகையாக்கும். எனக்கு கேரளத்திண்ட பஷ்ணங்கள் வளிய இஷ்டப்பட்டு. புட்டும் கடலக்கறியும். கப்பயும் மீங்கறியும்.

பின்ன செம்மீங்கறியும். பாலப்பமும். இன்னும் இன்னும் பின்னே உங்களுக்கு ஞான் உண்டாக்கிகானிக்கும் [அது யாரானு என்ன விழிக்கின்னது ஓ எண்ட சேச்சியானு தோ இப்ப வாரேன் சேச்சீஈஈஈஈஈஈ] ஒன்னும் விசமிக்கேண்டாம் எண்ட சேச்சி என்ன விழிச்சி ஞான் பின்ன வர ஓகே இப்போ இது மதி..

அன்புடன் மலிக்கா

Sunday, June 13, 2010

ரெட் சில்லி சிக்கன் பக்கோடா.

ரெட் சில்லி சிக்கன் பக்கோடா.




சிக்கன். எலும்பு நீக்கியது 1/4 கிலோ

சிகப்பு மிளகாய். 7 காரத்திற்கேற்ப

வெங்காயம். பொடியாக அரிந்தது 1/2 கப்

கருவேப்பில்லை. கொஞ்சம்

சீரகம் சோம்பு. 1 1/2 டீஸ்பூன்

இஞ்சி. பொடியாக அரிந்தது

ஓட்ஸ். 3 ஸ்பூன்

உப்பு. ஆயில். பொரித்தெடுக்க

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய சிறிய பீஸாக்கிக்கொள்ளவும்

அதனுடன் உப்பு சேர்துவைத்துவிட்டு.
மிக்சியில். சோம்பு, சீரகம், கருவேப்பில்லை,
கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஓட்ஸையும் சிக்கன்கூட சேர்த்து அதன்கூட வெங்காயம் இஞ்சியையும் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு 5 நிமிடம் வைத்துவிட்டு
ஆயில் சூடானதும்தீயை மிதமாக்கி, அதில் இந்த சிக்கனை பக்குவமாக போட்டு எடுக்கவும்.சிவக்கவிட்டு எடுக்கவும்.

அப்படியே எடுத்து எடுத்து சாப்பிட்டோமுன்னா. சிக்கன் சாஃப்டாகவும் அதன்கூட உள்ளவைகள்  கிரிஸ்பியோடும். செம டேஸ்டோடும் இருக்கும் இதுக்கு கெச்சப் சூட்டாகும். சும்மாவே துண்ணலாம்.

டிஸ்கி// சுட்டு வச்சிட்டு திரும்பி வரத்துக்குள்ள தட்டில் மீதி ரெண்டுதான் இருந்தது அதுவும் ஆக சின்ன பிஸ்.யாருக்குன்னு கேக்கலயே அது அது. எனக்கில்லை இத சுட்டவங்களுக்குதான்[ஸ்ஸ்ஸ் இதெல்லாம் யார்கிட்டேயும் சொல்லக்கூடாது ஓகே அப்புறம் என்ன வைவாங்கோ]

 ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம வலைக்குள்ளேயும் வந்து 101. இதயங்கள் . மாட்டியிருக்காங்கன்னா பாத்துக்கோங்களேன் அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மாட்டியவர்களுக்கும்
இனி வந்து மாட்டப்போறவங்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.

அன்புடன் மலிக்கா

Wednesday, June 9, 2010

ஆரோக்கியம் வேண்டுமா?

நன்றி கூகிள்
அரபகத்தின் உணவுகளில் அதிக ஆயிலோ மசாலாக்களோ கிடையாது
அவர்களின்உணவுகள் எல்லாமே நம்மைலிருந்து வித்தியாசமானவைகள்.

நெருப்பில் சுட்டெடுக்கப்பட்ட ரொட்டிகள்
பச்சைக்காய்கறிகள், பச்சை கீரைகள், பழவகைகள்
வேகவைத்த உணவுகள், கொழுப்பில்லாத பதார்த்தங்கள், இயற்கை பொருள்களின் உணவுகள் என்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறார்கள்.

சிக்கன் மட்டனைக்கூட தண்ணீரில் குங்குமப்பூ உப்பு லவங்கம் ஏலக்காய்
பிரிஞ்சி இலை என இவைகளை சேர்த்து அதில் இவைகளை வேக வைத்து முக்கால் பதம் வெந்ததும் அதில் உள்ள சிக்கனையோ மட்டனையோ எடுத்துவிட்டு அந்த தண்ணீரிலே அரிசிபோட்டு வேகவைத்து வெந்ததும் அதன்மேல் இந்த பீஸுகளை வைத்து சிறிது நேரம் தம்மிலிட்டு பின் அதைதான் சாப்பிடுவார்கள்[ அதான் கப்ஸா. மந்தி. அப்புடின்னு நிறைய பேரிருக்கு]

                                                                       நன்றி கூகிள்
அதன் சைடிஸ் என்ன தெரியுமா வெரும் பச்ச தக்காளி வெங்காயம் ப,மிளகாட் புதினா சேர்த்து கொரகொரப்பாக அரைத்த அந்த சட்னிதான்
என்னா டேஸ்டும். குங்குமப்பூ வாசமும். திகட்டாத உணவு

அதேபோல் ஆயிலில் எதையும் பொரிக்கமாட்டார்கள். எல்லாமே
நெருப்பில் சுட்ட கறிகள்தான் அதிகம் விரும்புவார்கள் அதிலும் மசாலாக்கள் கிடையாது
தயிர். மிளகுதூள். உப்பு. ஸ்பைசியாக.சில்லி சாஸ்
 கலருடன் வேண்டும் என்றால் அதில் குங்குமப்பூ
பொடிச்ச  சீரகம். ஓமம். பட்டை. பிரிஞ்சிப்பூ. சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள் அதில்
கொஞ்சம் சேர்த்து. 2 மணிநேரத்திற்கு முன்பாகவே ஊரவைத்து பின் சுடுவார்கள்.

                இது நாங்க பிக்னிக்கில் சுடும்போது எடுத்த கிளிக்.

அதன் சைடிஸ் பச்சை முள்ளங்கிகீரை கேரட் வெள்ளரிக்காய், ஹஸ் இலை. முள்ளங்கி என எல்லாமே பச்சையாக இருக்கும்
அதன்கூட கொண்டக்கடலையை வேகவைத்து அரைத்து அதில் ஆலிவ் ஆயில்ஊற்றி சாப்பிடுவார்கள்

                                                         நன்றி கூகிள்
இதனுடன் குப்பூஸ் என்னும் பலவகை நான் ரொட்டிகள் எல்லாமே
எண்ணை இல்லாதது முடிந்தவரை பழங்கள்தான் சாப்பிடுவார்கள்
மூன்றுவேளை உணவுகளில் இயன்றவரை இருவேளை ரொட்டிதான்
மட்டன் சிக்கன்கூட வேகவைதுதுதான்.
தேங்காய்பாலோ ஆயிலோ மசாலாக்களோ புளியோ கிடையாது
புளிக்கு பதிளாக புளிப்புதேவைப்பட்டால்
எழுமிச்சைபழத்தை காயவைத்து அதைத்தான் உபயோகிப்பார்கள்.

                       எப்புடியிருக்கு வாசனை வருதா

ஆரோக்கியமான இயற்கையான உணவுதானே மனிதனை ஆரோக்கியமாக
வாழவைக்க உதவுகிறது
கொஞ்சம் சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்
ஆரோக்கியமென்பது மனிதனுக்கு மிக முக்கியம் நாம் வாழ்ந்து முடியும்வரை.


நமக்கு நாமே பாரமாகவோ
நாம் பிறருக்கு பாரமாகவோ  இருக்கக்கூடாது
அதனால் முடிந்தவரை நம் ஆரோக்கியத்தை நாம்தான் காக்கவேண்டும்
ஆரோக்கியத்தின் ஒருபங்கு உணவிலும் இருக்கிறது
ஆதலால் உணவுமுறையை சரியாக பேணிக்கொள்ளுங்கள்.

வாரத்தில் 7 நாட்கள். அதில்

1 .மட்டன்
2 .காய்கறிகள்
3. கடல் உணவுவகைகள்
4 . பருப்பு வகைகள்
5 . காய்கறிகள்.

6.  சிக்கன்
7. ரசம் மோர் அப்பளம். இப்படி

வார செட்டியூல்ட் போட்டுக்கொண்டு அதிலும் ஆயில் தேங்காய்பால் புளி மசாலா இவைகளை அளவோடு சேர்த்து. [சிலவைகளை சேர்கவில்லையென்றாலும் பரவாயில்லை] சமைத்து உண்டுவந்தால். ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும்.

எட்டிப்பார்க்கும் ரியாஸும்.என்னாடா சுட்டுகிட்டேயிருக்காங்க எப்போ தருவாங்களோ! சரிவா நாமபோய் விளையாடிட்டு வருவோமுன்னு மரூஃப் பிடம் சொல்கிறானோ...

 ருஸ்கி//ஏதோ நமக்கு தெரிந்ததை அள்ளிவிட்டுட்டோம் அவுக அவுக சூழ்நிலைகளைபொருத்து ஆரோக்கியத்தை கட்டிக்காத்துக்கொள்ளுங்கள்..
..மொத்தத்தில் ஆரோக்கியம் முக்கியம்.அம்பூட்டுதான்


அன்புடன் மலிக்கா

Monday, June 7, 2010

சாஃப்ட் கேக்.


தேவையானவை.

வறுத்த ரவை 1 கப்
இடியப்பமாவு[அரிசிமாவு] 1  கப்
முட்டை 2
பட்டர். அல்லது, பசு நெய் 1/4  கப்
ஜீனி 1 கப்
முந்திரி
சக்லேட் 1
பேக்கிங்சோடசிறிதளவு
உப்பு சிறிதளவு

முட்டையை நன்றாக அடித்துகலக்கி கொண்டு அதில் நெய்,உப்பு, சோடாப்பு, ஜீனியையும்போட்டு கலக்கி அதனுடன் ரவை, அரிசிமாவு,
போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும் பொங்கிவரும்வரை.

அதை. ஒரு ஓவன் பவுலில். அல்லது [கேக்செய்யும் ஃபானில்] சிறிது நெய் தடவி இதை அதன்மேல் சமமாக ஊற்றி. முந்திரியை நெய்யில் வறுத்தும் அதன்மேல் போடலாம் இல்லையெனில் சும்மாவும் அதன்மேல் அலங்கரிப்பதுபோல் தூவி, ஓவனில்10 நிமிடம் வைத்தால் போதும்.

சாஃப்ட் கேக் ரெடி.
வெளியில் எடுத்து இதேபோல் பிளேட்டில் வைத்து சூட்டோடு அதன்மேல் சாக்லேட் துருவிபோட்டு அப்படியே கட் பண்ணி சாப்பிட்டால், சும்மா பொசு பொசுன்னு சாப்பிடவே அருமையாக அதே சமயம் மணத்துடனும் இருக்கும்.

ரிஸ்கி//உடனடியாக செய்ததால் ஸ்டெபென் ஸ்டெப்பாக எடுக்கமுடியவில்லை
வாயில் வைக்கப்போகும்போதுதான் நினைவுவந்தது
                                                 உடனே ஒரு கிளிக்


நேரங்கிடைக்கும் மாலைவேளையில்
இதுபோன்று செய்து
 சாப்பிடுவதும். சாப்பிடக்கொடுப்பதுமே
ஒரு கலை!

அன்புடன் மலிக்கா

Sunday, June 6, 2010

ஜாக்கெட் தைய்பது எப்படி? [இப்படிதான்]



முதலில் இடுப்பு பட்டிக்கு வெட்டி வைத்திருப்பதை உள்புறம்எடுத்து அதே போலவே இதுபோன்ற கனமானதுணியில் அதேஅளவுவெட்டிக்கொண்டு
                                          அதையும் சேர்த்து தைய்க்கவும்
                                          தைத்ததும் இதுபோல் இருக்கும்
பின் கொட்ரி இதேபோல் கிராஷாக அந்த இடுப்புபட்டியின் அளவை சரியாக கணக்கிட்டு தைக்கவும்
பின் இரண்டாவதாக பட்டன் வைக்கும் இடத்திலும், முன்பக்க அக்குளின் சற்று மேலும், இதேபோல் சிறுபிடிப்பாக இரு இடத்திலும் ஆரம்ப இடத்தில் சற்றுபெரியதாக வந்து முடியுமிடத்தில் கூராகவரும்படி தைத்துக்கொள்ளவும்
இப்போது இடுப்புப்பட்டி தைய்க ரெடி
 
இப்போது இரு தோள்களை இணைக்கவும்
இப்போது முன்பக்கம் வெட்டிய கிராஷ்சையும், இடுப்புபட்டியின் முன்கிராஷையும்இதேபோல் இணைத்துதைய்கவும்
 
                           இணைத்ததும் இதுபோல் இருக்கும்
  
அடுத்து பட்டன் பட்டி அதை முன்கழுத்து பக்க இடதுபக்கத்தின்மேல் வைத்து
வெளியிலிருந்து உள்பகுதிக்குள் தைய்க்கவும்
வலது பக்கம் உள்பகுதியிலிருந்து மேல்பகுதிக்குவருவதுபோல்
[இதேபோல]
இது மேல்நோக்கித் தைய்பது
அடுத்து கழுத்துப்பட்டி எந்த கழுத்து விருப்பமோ அதற்கு தகுந்தார்போல் பட்டி சிறிது பெரிதாக வெட்டிக்கொள்ளவும், இது //பானா// கழுத்து, கழுத்தின் முன்பக்கத்திலிருந்து பட்டியை மேல்வைத்து தைக்கவும் 
                                               
இதேபோல் நான்கு பக்கத்தில் மூலை வரும் [மடக்கி தைய்ப்பது] அதை தைய்த்துவிட்டு திருப்பி உள்புறம் தைத்தவும்
அதை கொஞ்சம் கவனமாக தைத்தால்தான் கழுத்து சரியாக வரும்
இதோ அனைத்து பக்கமும் தைய்த்த நிலையில்
கடைசியாக கைகள் இதேபோல் கைகளின் ஓரங்களில் சிறுபட்டியாக தைய்த்துகொண்டு இதேபோல் இருகைகளையும் இணைத்துக்கொள்ளவும்
இணைத்த கைகளை மெயின் ஜாக்கெட்டில் இணைக்கவும்
இதோ இணைத்ததும்
இப்போது ஜாக்கெட் ரெடி.

இங்கேகிளிக் செய்தால் ஜாக்கெட் கட்டிங் செய்வது எப்படின்னு இருக்கு அதேபோல் வெட்டி இதேபோல் தைய்துப்பாருங்கள்

சிஸ்கி//எதுவும் சந்தேகமிருந்தால் கேட்கவும்.
நான் டைலர் இல்லீங்கோ ஏதோ எனக்கு தெரிந்ததை. நான் எப்படி தைப்பேனோ அதை உங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான். 

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.