அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, August 30, 2010

வாடா வாடா இறால் வாடா.

இறால் வாடா

தேவையானவைகள்.
இறால் [தோல் நீக்காதது]
ஆப்பமாவு புளித்தது 5 கரண்டி[கெட்டியாக]
இடியப்பகப்பி 2 கரண்டி
அரிசி வறுத்து அரைத்தது 2 ஸ்பூன்[கொரகொரப்பாக]
சோடாப்பு 1பிஞ்

இறாலை தண்ணீர்விட்டு நன்றாக அதன்உள்ளிருக்கும் அழுக்கு போகும்வரைஅலசிவிட்டு
அதனுடன் உப்புசேர்த்து வெறும்சட்டியில் [கருக்கவும்] அதாவதுவறுக்கவும்
சிவந்தகலரில்வரும்அதைஆரவிட்டவும் 
.
புளித்த ஆப்பமாவுடன் இடியப்பகப்பியையும்.
பொறியரிசிமாவு இரண்டையும்சேர்த்து
கூடவே சோடாப்பையும் சேர்த்து நன்றாகபிசைந்து 5 மணிநேரம்வைக்கவும்

                                
உள்ளடத்திற்கு தேவையானைவைகளை தயார் செய்துகொண்டு
அடுப்பில் அகன்ற சட்டி வைத்து அதில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு
அது சூடானதும்,கருவேப்பிலைபோட்டு. அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ்,தக்காளி வெங்காயத்தையும்போட்டு வதக்கவும்.
அது வாசம் வந்ததும் மசாலாக்களை சிறிது தண்ணீர்விட்டு உப்பும்போட்டு கரைத்து அதனுடன் ஊற்றி கிளறவும்.அது வெந்ததும் தேங்காய் துருவலை

அதனுடன் சேர்த்து
நன்றாக கிளறி இறக்கவும்.
மாவு வாடை சுடும் பதத்துக்கு வந்ததும், அதை எடுத்து ஒரு வாழையிலையோ, அல்லது இதுபோன்ற பிளாஸ்டிகவரோ அதன்மீது தண்ணீர்தடவி,
சிறு உருண்டை
 உருட்டிவைத்து இதுபோன்று தட்டவும்
பின்பு செய்திருக்கும் உள்ளடத்தில் அந்த உருண்டைக்கு தகுந்தாற்போல் அதன்மேல் வைக்கவும். பின்பு மீண்டும் சிறு உருண்டை தட்டி அதன்மேல் மூடவும்
அதன் நடுவில் இதுபோல் ஓட்டைபோடவும்.
அதன் ஓரத்தில் கருக்கிய இறாலை அழுத்தியதுபோல் வைக்கவும்
இப்போது ஒரு கடாயில் ஆயில் வடை முங்கும் அளவிற்க்கு ஊற்றி அது சூடானது அதில் மெதுவாக இந்தவடையை எடுத்துப்போடவும்.
இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்                                      
இதுதான் இரால்வாடா

இது நோன்பு ஸ்பெசல்.இது நோன்பு காலங்களில் எங்கள் ஊர்பகுதிகளில் மிக மிக பேமஸ். இதை அதிகம்பேர் விரும்பி சாப்பிடுவார்கள்.மற்ற வடை பஜ்ஜிபோல் அல்லாமல் இது மிகவும் ருசியாகவும் வித்தியாதமாகவும் இருக்கும்.
இதை செய்வது சற்று சிரமம், வேலையும் அதிகமென்பதால் குறிப்பிட்டவர்களே சுடுவார்கள் அதை வாங்க கியூவில் நிற்கனும்.

செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.

அதிலும் நோன்புக்கஞ்சிக்கூட சேர்த்து ஊரவைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்..

இது தமிழ்குடும்பத்தில் சமையல் போட்டிக்காக நான் அனுப்பிய முதல் குறிப்பு. எப்படியிருக்கிறது என் ரெசிபி
உங்கள் ஆதரவை அதிலும் தாருங்கள். இங்கே கிளிக் செய்யவும்.
 
டிஸ்கியோ டிஸ்கி//
என்னது மரியாதையில்லாமல் வாடா ந்னு அப்படியெல்லாம் ரெசிபிக்கு பேர் வச்சிருக்கீங்கன்னு  கேக்கக்கூடாது ஓகே இதுக்குபேர் அப்படித்தான் உங்க ஊர் பகுதிகளில் சொல்வார்கள்.
ரொம்ப மரியாதையானவங்க நாங்கோ பாத்தேளா?  . நாங்க எப்போவும் வித்தியாசமானவங்கோ.யாராது கொம்பு கொண்டு வாரது அடிக்க, நாயில்லைங்கோ இந்த பேர்வச்சது ஆத்தாடி ஓடிடு மல்லிஅன்புடன் மலிக்கா

Friday, August 27, 2010

இதயம் இதயம் இயங்கனுமா?

இதயம் இதயம் இயங்கனுமா? இன்னல்களென்னும் அடைப்புகள்  இல்லாமலே!

பத்திரமாக பாதுகாக்கவேண்டிய இதயத்தை பாழ்ப்படுத்திவிடாமல் கவனமாக காக்கவேண்டிய நம்கடமையல்லவா.
அதை பத்திரப்படுத்தி பாதுகாப்பாய் இயங்கச்செய்வது நம்கையில்
அல்ல அல்ல நம் நாவில்தானிருக்கிறது.
நாவைக் கட்டுப்படுத்தினால் நன்மைகள் பல உண்டு. உடலுக்கும் சரி மனதுக்கும் சரி நாவை பேணினால் நல்லதே நடக்கும்.அட
பேணிக் காத்துதான் பாருங்களேன்.

ஆகவே! எது நம்மை உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவு என டாக்டரின் ஆலோசனையின்படி கேட்டுக்கொண்டு அதன்படி செயல்படுவதே சாலச்சிறந்தது.

கீழிருக்கும் இச்செய்தி நம்மளுக்கு மெயிலில் வந்ததுங்கோ.நம்மமட்டும் பாதுகாத்தாபோதுமா எத. அட இதயத்த சொன்னேனுங்க,
அதேன் உங்க கொழுப்பை குறைத்து  உங்க இதயத்தையும் பாதுகாக்கலாமேன்னுதேன் இத இங்க ரீபீட் செய்திருக்கேனுங்க. உபயோகமாக்கிகொண்டா உங்க இதயத்துகு நல்லது இல்லையின்னா என் விரல்களுக்குதான் வேதனை.

என்ன என்ன அப்படிப்பாக்குறீங்க பின்னே கஷ்டப்பட்டு இத ரீமிக்ஸ்செய்து
1.மணிநேரமா உக்காந்து படமெல்லாம் ஒட்டி அனுப்பியது என் விரல்கள்தானே அதேன் சொன்னேன்.

ஃபாலோபண்ணுவீகதானே பின்னே இதயமாச்சே அதுக்கு ஒன்னுன்னா நாம எப்புடி இப்படி இருக்கமுடியும் சோக்கா.

அந்தச்செய்தி இதுதானுங்கோ.


காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?
நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.


காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கும்
.
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி:
கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்:
வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்:
இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி:
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்
எலுமிச்சம்பழம்:
உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு:
இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது. தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
சுரைக்காய்:
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்:
இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி:
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி,:வெண்டைக்காய்:
இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்..


அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.