அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, April 27, 2010

வெங்காயக்கறி..

//இது நம்மோடதல்ல சுட்டது//

தேவையானவை


சிறியவெங்காயம் 150 கிராம்
பச்சைமிளகாய் 3
சோம்பு சீரகப்தூள் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்1 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட்ட் 1ஸ்பூன்
மிளகாய்தூள் 1/2 ஸ்பூன்
முட்டை 1
தேங்காய்பால் 1கப்
தக்காளி 1
உப்பு
ஆயில்
இடியப்பமாவு 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க:
கடுகு, உளுந்து, பூண்டு2 பீஸ், கருவேப்பில்லை,

ஒரு கடாயில் தேவையான ஆயில்விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டுவெடித்ததும் உளுந்து
பூண்டுகட்செய்தது கருவேப்பில்லைபோட்டு,
 பின்பு
வெங்காயத்தை இரண்டாக நறுக்கியும், அதனுடன் பச்சைமிளகாய்போட்டு
லேசாக வதங்கியதும்
கொஞ்சம் தண்ணீரில் மசாலாக்களுடன், உப்புபோட்டு அதனுடன் சேர்த்துமூடிவைக்கவும்.

மசாலா வாசம்போனதும்
திறந்து முட்டைஊற்றி கிளறிவிட்டு, வெந்ததும் இடியப்பமாவைதூவி
கிளறிவிட்டு தேங்காய்ப்பால் சேர்க்கவும்

கொஞ்சம் சதசதப்பாக இருக்கும்போது இறக்கிவிடவும்
கொத்தமல்லி தூவி சாப்பிடவும்.

இது மிகுந்த சத்தான உணவு.எனது உம்மம்மா[அம்மாவின் அம்மா]  இதை அடிக்கடி செய்து தருவார்கள். தற்போது அதெல்லாம் மிஸ்ஸிங்.

சாதம். சப்பாத்தி. குப்பூஸ். கூட சாப்பிடலாம்.
வெயில்காலத்தில் தண்ணீர் சத்து நிறைய தேவைப்படும், அப்போது இதேபோல் தண்ணீர் சத்துள்ள சாப்பாட்டு அயிட்டங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது..


மிஸ்கி;; [ரெசிப்பி செய்யும்போது போட்டோ புடிக்கல. அச்சோ போட்டோ எடுக்கல அதான் இப்புடி]
என்னாடா சிறிய வெங்கயத்துல கறின்னு போட்டுவிட்டு பெரிய வெங்காயத்த படத்துல போட்டிருக்காளேன்னு பாக்குறீகலா. அதெல்லாம் சும்மா ஒரு டிரிக்குதான்.உடனே ஓடிவந்து ஜெய்லானி கேட்பாகல்ல. என்னதிது அந்த வெங்காயமுன்னு சொல்லிட்டு இந்த வெங்காயமான்னு,,, அதேன் முந்திக்கிட்டோம் எப்புடி./அன்புடன் மலிக்கா

Saturday, April 24, 2010

சங்குசிப்பியில் கைவண்ணம்.


கடல்களில்

பீச்சுக்கு போனால் அங்கே மணல்மேல் கி[டை]டக்கும் சிப்பிகளையும் சங்குகளையும் கொண்டு நாம ஒரு அழகுப்பொருளை உண்டாக்கலாம்.

/இது தொங்கவிடும் ஸ்டைலுக்கு/

தேவையான பொருட்கள்


லேஸ்
கம் [பெபிக்கால்]
சிப்பிக்கள்.சங்குகள்.
ஒரு நீடோ டின்  மூடி சிறியது அல்லது
அமுல்ஸ்பிரே டின் மூடியோ ஒன்று
[அச்சோ ஜெய்லானி இதையும்கேட்டுடாதீங்க.
அதனுள் ஒட்ட கொஞ்சம் கலர்பேப்பர்.

எந்தகலரில் லேஸ் எடுக்கிறோமோ அதே கலரில் அந்தமூடியின் உள்பகுதிக்கு ஒட்டவும்

சிப்பிகள் சிறு சிறுசங்குகள் எடுத்து நம் எண்ணத்திற்க்கேற்ப வடிவமைக்கலாம்.

லேஸில்சிறிது இடைவெளி விட்டு சிப்பிக்களை ஒட்டவும்.


சிப்பியில் ஹோல்[ஓட்டை] போடுவதெல்லாம் சற்றுசிரமம் அதனால்
ஃபெபிக்கால் வைத்துஒட்டுவது மிகசுலபம்

இதுபோல் பல மாடல்கள் செய்யலாம்


டைனிங் டேபிளில் வைக்க

ஷோகேஸில் வைக்க,

வரவேற்பறையில்,தொங்க விடலாம்.

சிப்பியில் பெயிண்டிங் செய்து
அதை எந்தஷேப்பிலும் பூவாக முயலாக இப்படி எதுவேண்டுமென்றாலும்
செய்து மாட்டலாம்.

.
//நாங்க பீச்சிக்கு[கடலுக்கு] போகும்

நேரத்தில் இதுபோல் எடுத்துக்கொண்டு வருவோம் சும்மா கிடைக்கும் இயற்கை அழகைவிட்டுவைப்போமா அதேன் அதைக்கொண்டுவந்து இப்படியெல்லாம் அழகு படுத்தி, அழகுக்கு அழக்கு சேர்த்துருவோமுல்ல//


இது நாங்க ஏற்கனவே தங்கியிருந்த வீட்டின்[துபையில்] வரவேற்பறை எப்படியிருக்கு.


கிடைக்கும் பொருளைவத்து அதை அழகுபொருளாக மாற்றக்கற்றுக்கொள்ள பழகிக்கொள்ளனும்.
வீட்டில் நேரமேபோகலை என சும்மா அடுத்தாத்தைப்பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதைவிட இதுபோன்ற நமக்குள் இருக்கும் சிறு சிறு திறமைகளை நாமே வெளிக்கொண்டுவர முயற்சித்தால் நமக்கும் நல்லது.
 நம்மால் பிறருக்கும் நல்லது [கண்ணும் அழகு]..

அன்புடன் மலிக்கா


Wednesday, April 21, 2010

வேண்டுகோள்! செம்மொழி மாநாட்டில்!!!

செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
கிடைக்கவேண்டும்..
இதுபோன்ற உழைப்புகளுக்கும் கண்டுப்பிடிப்புகளுக்கும்.
 நிச்சியம் அங்கீகாரம் வேண்டும்.
 நம்முடைய தளங்களில் வெளியாகும் சிறு படைப்புகளுக்கே அங்கீகாரமென்னும் கருத்துரைகள் பெறுவதில் எத்தனை திருப்தியடைகிறோம். மகிழ்கிறோம்.

அதேபோன்று.அதைவிடமேலாக நாம் இன்று உபயோகப்படுத்தும்.தமிழெழுத்துருக்களை நமக்கு கண்டுப்பிடித்து நமக்குதவிய இன்று நாம் வலைத்தளங்களில் தமிழின் உதவியோடு வலம் வர காரணகர்த்தாவக இருந்த ஒருவரை கெளவுரவிப்பது சிறந்தல்லவா?தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://www.pudhucherry.com/

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேடல்களுக்கு உதவியாக இருக்கும்.

SOURCE THIS ARTICLE : அதிரைக்காரன்


இவ்வளவு பெரிய அனைவருக்கும் உபயோகமானவைகளை கணினிக்குள் கண்டுபிடித்து  செயலாற்றிய உமர்தம்பி அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் நியாயமானதுதானே!

ஆதலால் அனைவரும் தங்கள் கருத்துக்களின்மூலம் தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இதுபோன்று நீங்கள் செய்யும், கொடுக்கும் ஆதரவு நாளை உங்களின் ஆக்கங்களுக்கே நற்பயனை தேடித்தரும். இன்ஷா அல்லாஹ்.

கெளரவிக்கப்படவேண்டியவர்கள்  நிச்சயம் நன்மதிப்புடன் கெளரவிக்கப்படவேண்டும்.
உங்கள் ஆதரவை கருத்துக்களாக எதிர்ப்பார்க்கும்..

என்றும்
அன்புடன் மலிக்கா  

Sunday, April 18, 2010

டம்ளிங் [அரபி உணவு]

கோதுமை மாவு 2 கப்
ஈஸ்ட் சின்ன ஸ்பூன் அளவு
உப்பு
தண்ணீர் 1 கப்
ஆயில் பொரித்தெடுக்க
அஷீ Dத் பேரிச்சம்பழச்சாறு
அல்லது தேன்கோதுமை மாவுடன் தண்ணீர் ஈஸ்ட் உப்பு சேர்த்து நன்றாக அடித்து பிசையவும் சற்று இளகளாக அதௌ அடித்துபிசையும்போதே பொங்கியதுபோல் வரும் 15 நிமிடம் பிசைந்து வைக்கவும்.
கடாயில் ஆயில் சூடானதும் கைகளிலேயே சிறிய வெங்காயம் அளவுக்கு
எடுத்து எடுத்து போடவும் மிதமான தீயில் வைக்கவும் அடுப்பை.
குளோப்ஜாமூன் போலவே சற்று உப்பியதாக வரும் அதை எடுத்து
தேவையான அளவு பைவுல்களில் வைத்து


அஸீதையோ. தேனையோ
அதன் மேல் ஊற்றி சாப்பிட்டால் அப்பப்பா அதன் டேஸ்ட் இருக்கே அது சாப்பிட்டால்தான் தெரியும் மிருதுவாய் சாப்பிட ருசியாய் இருக்கும்.


அரபிகளின் இனிப்பு பதார்த்தங்களில் இதுவும் ஒரு மெயின் டிஸ். இங்கே ஃபெஸ்டிவேல் மற்றும் விசேச நாட்களில் அவர்கள் இதை சுட்டும் தரும்போதே இரண்டு மூன்று பிளேட் வாங்கி அப்படியே சாப்பிடுவோமுல்ல. சிறிய பிளேட் 5 திர்கம்தான்.நாங்க வாரத்தில் இருமுறை செய்துவிடுவோம் பசங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்
மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ.

இந்த மாவு ரெடிமேடாகவும் இங்கே கிடைக்கிறது அதையும் பிசைந்துவைத்துதான் ஆயிலில் பொரித்தெடுக்கனும்..
சுட்டு சாப்பிடுங்கோ இனி இது நம்ம உணவு ஓகே..
//குஸ்கி --சுட்டு டேஸ்ட் அன் டெஸ்ட் பாத்துவிட்டு எனக்கு மூன்று பிளேட் பார்சல்.என்னது வெரும் பிளேடா ,,,ஆங் அஸ்கு,, டம்ளிங்கோட அக்ரிமெண்ட் ந்னுனா கரகீட்டா இருக்கோனும்.


நம்ம ஸாதிகாக்காதான் அரபி ஃபுட் எக்ஸ்போட்டாமே. அச்சோ அந்த ஏற்றுமதியல்லங்கோ இதுபோல் செய்து அசத்துரதுக்கு[அவங்க பக்கம்போனா என்னாமா போட்டா புடிச்சி போட்டுகீறாங்கோ அதெல்லாம் சுட்டதாம் இல்லக்கா[அந்த சுட்டது ஒகே ] கத்தார் டம்ளிங் எனக்கு வேணும் ஹூம் ஹூம் ஹூம்]

Thursday, April 8, 2010

சைனீஸ் சூப் [நம்ம ஸ்டைலில்]

                                    
                                                தேவையானவைபேபிக்கான் 2 கப்[ இளம் பிஞ்சி சோளம்]
முட்டை 1
ஜவ்வரிசி 1 கப்
மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
மல்லி
பச்சைமிளாய் 2
உப்புஜவ்வரிசியை 3 நிமிடம் ஊறவைத்ததுடன்

குக்கரில் சோளத்தைபோட்டு அதனுடன் 4 கப் தண்ணீர்வைத்து
ஜவ்வரிசியையும் போட்டு உப்பும் சேர்த்து 5. விசில் விடவும்.
குக்கரை திறந்து அதில் முட்டையின் வெள்ளை கருவைமட்டும் சிதறியதுபோல் ஊற்றவும் சற்று கலக்கிவிட்டு பின்பு பச்சைமிளாய் பொடியாய் நறுக்கி

மிளகுத்தூளையும் போடவும் சிறிது கொதிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லியை பொடியாக நறுக்கித் தூவவும்.


இது உடலுக்கு மிகவும் சத்தான சூப். குடிக்கும்போதே சோளம் இடையில் கடிபடும்போது செம டேஸ்டியாக இருக்கும்.
ஜவ்வரிசி சேர்ப்பதால் குளுமையும் கூட


இந்த சூப்  துபையில் மதினத்துல் ஜுமைராவில்

இண்டர் நேஷனல் ஹோட்டலில் சாப்பிட்டோம். அங்கு அனைத்து நாட்டின் ரெஸ்பிகளும் சும்மா சோக்க இருக்கும். அதில் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் செய்துபார்த்தபோது இந்த சூப்பும் இருந்தது சாப்பிட்டதும் பிள்ளைகளுகு ரொம்ப இஸ்டப்பட்டுவிட்டது
அடிக்கடி செய்துகேட்கிறார்கள்.

[அந்த ஹோட்டலில் நம்ம ஹீரோ]

ரெஸிபி எப்படி செய்வதுன்னு அவங்களிடமா கேட்கமுடியும் சாப்பிட்ட டேஸ்டை வைத்து நாமே செய்வோமுன்னு செய்தா!
அப்படியே அந்த டேஸ்ட். [நெசமாங்கோ நம்புங்கோ]
என்ன அவங்க ஏதோ இருவகை சாஸ் சேர்க்கிறர்கள் அது நமக்கு வேணாமுன்னு பச்சைமிளகாயும் மல்லியும் சேர்த்துக்கொண்டேன்
அவர்கள் பச்சைமிளாய் மற்றும் மல்லி சேர்க்கவில்லை.
நம்ம நாக்கு கேட்க்குமா அதான் கொஞ்சம் நான் சேர்த்துக்கொண்டேன்.

நீங்களும் டெஸ்ட் பண்ணுங்கோ செய்துபார்த்து.

அன்புடன் மலிக்கா

Wednesday, April 7, 2010

தயிர் பஜ்ஜி..

தேவையானவை

 கடலைமாவு 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
  தயிர் 3/4 கப்
பச்சைமிளகாய் 4
பொதினாமல்லி 1/கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி கொஞ்சம்
மிளகுத்தூள் கொஞ்சம்
உப்பு
ஆயில் பொரித்தெடுக்க

ஒரு பவுலில் மாவுகளைப்போட்டு அதில் அனைத்தையும் சேர்த்து
அதோடு தயிரையும்போட்டு உளுந்துவடை பதத்துக்கு
பிசைந்துகொள்ளவும்
ஆயில் சூடு வந்ததும்
ஒரு ஸ்பூனில் எடுத்து எடுத்துபோட்டு பொரித்தெடுக்கவும்.
10 நிமிடத்தில் ரெடி
காரச்சட்னி அல்லது கெச்சப் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
சும்மாவே சாப்பிட சூப்பராக இருக்கும்.


எங்கவீட்டு ஹீரோ தயிர் பஜ்ஜிக்கே தயிர்போட்டு சாப்பிடும் அழகே அழகுதான் மம்மி இன்னும்கொடுங்கன்னு சாப்பிட்டார்ன்னா பாத்துக்கோங்க.
இதுதான் தயிர்போட்டு சுட்டபஜ்ஜியா
அதுக்கு நாங்க தொட்டுக்கவே தயிரப்போட்டுக்குவோமுல்ல

அப்படி பாக்கதீங்க என்னைய உங்க கண்ணுபட்டுடும்

டிரிப்ள் ஓகே சூப்பராக இருக்கு

வின்பண்ணிட்டீங்க மம்மி
செம சூப்பராயிருக்கு 100/ 75 கொடுக்கலாம்
நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க

மறக்காம எப்படி சாப்பிட்டேன்னு சொல்லிட்டுபோங்க.
செய்தது மம்மின்னாலும் ஃபஸ்ட் சாப்பிட்டது நாந்தானே அதான்
அன்புடன் முகமது மஃரூப்

Monday, April 5, 2010

நாங்களும் கடிப்போமுல்ல!


டிக்கட்டே இல்லாமல் எங்கு வேண்டுமோ பயணம் செய்ய!
உடனே அனுகவும்!
ஆகா நல்ல செய்தியாவுல இருக்குன்னு வந்தீகளா வந்ததுதான் வந்திக வாங்க வாங்க
வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்,
அச்சச்சோ பென்ச் போடலையே! சரி சரி கண்ணால படிச்சிவிட்டு கையால கருத்தையும் சொல்லிடுங்க!
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா..


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது..


உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

[இந்தபோட்டோ ஜெய்லானியின் கைவண்ணத்தில் உருவானது
நன்றி ஜெய்லானி]

செல்லம் பள்ளிகூடந்தான் இல்லையே!
எங்கடாப்போற பேக்க மாட்டிண்டு”

அதா மம்மி
பீப்புல்ஸா பாத்து  போரடிச்சி போச்சி
அதான்
என் பியூட்டிஃபுல் டியர பாக்கபோறேன்”

என்னடா சொல்லுரே இப்பவே பிகரா ச்சே டியரா?

அச்சோ மம்மி நம்ம ஜெய்லானி அங்கிள்
ஜூவுல ”டீர் டீர்” மான் இருக்காம் மம்மி
அதுக்குத்தான் இந்தபேக்குல புல்லு கொண்டுபோறேன்’.....

மேலே உள்ள 5 பேக்கும் [ஸ்ஸ்ஸ்] ஜோக்கும் மெயில வந்திச்சி.
நம்ம ஹீரோ ஜோக்குமட்டும் என் மூளையிலிருந்து வந்திச்சி
ஹா ஹா

என்னா ஒரு காலம்பாத்தீகளா! 
ஜோக்குகூட சோக்கா ரயிலில். அச்சோ
மெயிலில் வருது டிக்கட்டே எடுக்காம
ஹி ஹி ஹி.

ஹை இப்படியும் சொல்லலாமோ!

அன்புடன் மலிக்கா

Saturday, April 3, 2010

சுட்ட இட்லியை மீண்டும் சுட!


இட்லி 4
3 டேபிள் ஸ்பூன் கடலைமாவு அல்லது [கோதுமை]
சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது தேவையான அளவு
ப,மிளகாய் காரத்திற்கேற்ப
முழு சோம்பு சிறிதளவு
கருவேப்பில்லை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
உப்பு
ஆயில்

இட்லியை லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில்போட்டு ரொம்ப நைசாக இல்லாமல் அரைத்து
எடுக்கவும் அதில் கடலைமாவு வெங்காயம் ப மிளகாய் உப்பு கருவேப்பில்லை
சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
அதை ஆயிலில் பொட்டும் பொரித்து எடுக்கலாம் இல்லன்னா
வெங்காய பஞ்சி பிசிரிவிட்டதுபோல் போட்டு எடுக்கலாம்
இல்லையென்றால் வடைபோல் தட்டி நாண்ஸ்டிக் ஃபேனில்
கொஞ்சமாக ஆயில்விட்டு பொரித்து எடுக்கலாம்

[எப்படியோ வீணாக்காமல் செய்து சாப்பிட்டால் சரி இல்லன்னா பிச்சக்கார பொட்டி அதாங்க ஃபிரிஜ் அதில் மூன்று நான்கு நாளைக்கு வைத்துவிட்டு அப்புறம் கச்சடாவில் போடுவதற்கு இதபோல செய்து சாப்பிடலாமுன்னு சொல்லவந்தேன்] 


1ஸ்பூன் இடியப்பமாவு சேர்த்துக்கொண்டால் மொறுமொறுப்பு கூடுதல் கிடைக்கும் . இந்த ரெசிபி  சுவையாக இருக்கும்..


[இந்த பிளேட் என் செல்லத்தோடது அவர் சொல்லிட்டார் இனி எந்த ரெசிபியும் இதில் வைத்துதான் போட்டோ எடுத்துப்போடனுமாம் செஞ்சிட்டோமுல்ல]

[அச்சோ அச்சோ அடி ராக்காயி கதைய கேட்டியா
 இங்கே இட்லி சுடவே நேரமில்லையாம் இதில் சுட்ட இட்லியைவேறு மீண்டும் சுடனுமாம் என்ன கொடுவினைடியிது.
அவுக அவுக நின்ன நிலையிலேயே கிடைத்ததை பிச்சி மேஞ்சிக்கிட்டு போயிகின்னேயிருக்காக இவுகவேற.
இல்லாதததையும் பொல்லாததையும் சொல்லிக்கிட்டு.
இவுகளபோல வேலையில்லாதவுக செய்துக்குன்னு கிடக்கட்டும் நாம ஃபாஸ்ட்ஃபுட்டு  வாங்கி துண்ணுக்குவோம் இல்லடி]


அன்புடன்மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.