அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, February 27, 2010

மீதமாகும் சாதத்தில்

சோறு மீதமிருந்தால், அதை வீண் விரையம் செய்யாமல் வடகம், முறுக்குவற்றல், போடலாம்...


சோறுடன் சிகப்புமிளகாய் சீரகம் உப்பு[ப,மிளகாயும் சேர்க்கலாம்] சேர்த்து மிக்ஸியில்அரைத்து, அதைமுறுக்கு உரலில் பிழிந்துவிட்டு 2நாள் காயவைத்து பின்பு பொரித்தெடுக்கலாம்

உரல் இல்லாவிட்டால் துணியை தரையில்விரித்து ஒருஸ்பூனில் எடுத்து அப்படியே ஸ்பூனைக்கொண்டு லேசாக தேய்துதுவிட்டால் போதும் அழகாக காய்ந்துவிடும்

//வெளிநாடுகளில் உள்ளவர்கள் துணிகாயவைக்கும் ஸ்டான்டுகளில்மேல் ஒருதுணியைவிரித்து அதன் மேல் காய வைக்கலாம்


பின் குறிப்பு: சோறுடன் கொஞ்சம் அரிசியும் ஊறவைத்து அரைத்துசேர்த்தால் இன்னும் சுவையாக மொரு மொரு என்று இருக்கும்.


அன்புடன் மலிக்கா

Sunday, February 21, 2010

சிக்கன் பாஸ்தாபாஸ்தா 1 பாக்கெட்

வேகவைத்து உதிர்த்த சிக்கன் 1கப்

பல்லாரி 1

கெச்சப் 3 ஸ்பூன்

சீஸ் 2 பீஸ்

சில்லி சாஸ் 2 ஸ்பூன்

பெப்பர் 1 ஸ்பூன்

கொத்தமல்லி
கேரட், பீன்ஸ்
பச்சைபட்டாணி [இவையனைத்தும்கொஞ்சம் கொஞ்சம்]
உப்பு
ஆயில்

பாஸ்தாவை 7 நிமிடம் வேகவைத்துக்கொண்டு ஒரு கடாயில்
ஆயில்விட்டு அதில் கட்செய்த வெஜிட்டபிள் பல்லாரி சிக்கன்பீஸ் போட்டு வதக்கி அதனுடன் கெச்சப், சீஸ், சில்லிசாஸ், உப்பு போட்டு கிளறி

அது செட்டானதும் அதனுடன் வேகவைத்த பாஸ்தாவைசேர்க்கவும். அதன்மேல் பெப்பர்தூவி கிளறிவிடவும்
இறக்கும் சமயத்தில் கொத்தமல்லி கட்செய்துபோடலாம்
எது உண்டோ அதைவைத்து அலங்காரம் செய்து பரிமாறலாம்அன்புடன் மலிக்கா

Wednesday, February 17, 2010

நொடியில் பிரட் பஜ்ஜி


தேவையானவைகள்

கடலைமாவு 1 கப்

இடியப்பமாவு 1/4 கப்

இஞ்சிபூண்டுவிழுது 1/2 ஸ்பூன்

மிளகுதூள் சிறிதளவு

கலர் அல்லது குங்குமப்பூ சிறிது

உப்பு

பிரட் 5 6

ஆயில்


பிரட்டை நீளவாக்கில் கட்செய்துகொண்டு, மாவுகளை கெட்டியாக [சற்றுதளர்ச்சி]கரைத்துக்கொண்டு


பிரட்டை உடைத்துவிடாமல் சற்றுகவனமாக மாவில் நனைத்துப்போடவும்


இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்


இது உடனடியாக செய்யக்கூடிய ரெசிபி

கிரிஷ்பியாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்

அன்புடன் மலிக்கா

Wednesday, February 10, 2010

பச்சைப்பயர், கொள்ளு கேக்

               
தேவையானவைகள்

கொள்ளு ¼ கப்

பச்சைப்பயர் உடைத்தது ¼ கப்

வெள்ளை உளுந்து ¼ கப்

ஜீனீ 2 கப்

முட்டை 2

பசு நெய் 3 ஸ்பூன்

வெண்ணை 3 ஸ்பூன்

ரையின்போ மில்க் 1 கப்

முந்திரி திராட்சை

சாக்லெட்
              
கொல்லு ப, பயிர் உளுந்து மூன்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். ரொம்ப நைசாகவேண்டாம்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதனுடன் நெய் வெண்ணை ஜீனீ உப்பு சேர்த்து

நன்றாக அடித்துக்கொள்ளவும்

அதனுடன் அரைத்து கலவையை சேர்த்து கொஞ்சம் கலக்கவும்
ஒவனில் கேக்செய்யும் பேசனில் கொஞ்சம் நெய்விட்டு சூடாக்கி
அதில் இந்த மாவுக்கலவையை ஊற்றவும்
ஈவனானதும் அதன்மேல் வருத்த அல்லது வருக்காத முந்திரி திராட்சையை அலங்கரித்து
ஓவனில் 20  நிமிடம் வைக்கவும்

 நல்லமனத்துடன் ரெடியாகிவிடும்
வெளியில் எடுத்து சாக்லெட்டை அதன்மேல் துருவவும்
அந்தசூட்டிலேயே சாக்லெட் மெல்ட்டானதும்
               
இதுபோல் கட்செய்து சாப்பிடவும்.
இது உடலுக்கு மிகவும் நல்லது ஊட்டச்சத்துமிக்க உணவு.

குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.

அன்புடன் மலிக்கா

Sunday, February 7, 2010

இரால்கோலா கறி. பொரியல்

தேவையான பொருட்கள்


இரால் 1/4 கிலோ

தேங்காய் 1

சிறியவெங்காயம் 10

பல்லாரி 3

தக்காளி பழுத்தது 3

பச்சைமிளகாய் 2,3,

கறுவேப்பில்லை

தனியா 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 ஸ்பூன்

மிளகாய்தூள் காரத்திற்கேற்ப

புளிப்புக்கேற்ற புளி கொஞ்சம்
வெந்தயம்
உப்பு
ஆயில்
முழுசீரகம் சோம்பு கொஞ்சம்

மீதமுள்ள இராலையும் அதனுடன் முழு சீரகம்சோம்பு கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து
தண்ணிருக்கு பதிலாக முட்டையை ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும் கடைசிஅரையலின்போது
சிறியவெங்காயமும் ப, மி. உப்பும் சேர்த்து அரைக்கவும்


இதேபோல்[கொஞ்சம் கொரகொரப்பாக]
ஒரு சட்டியில் வெந்தயத்தை வருத்துவிட்டு அதில் ஆயில்விட்டு நருக்கிய பல்லாரி தாக்காளி போட்டு வதக்கவும்

அது நன்றாக வதங்கியதும் அதில் மசாலாக்களை தேவையான அளவு


தண்ணீவிட்டு புளியைகரைத்து அதனுடன் இந்த இராலையும்


நன்றாக நொருங்கபிசைந்து வதங்கியதில் ஊற்றவும்

அரைத்து வைத்துள்ள இந்த கோலாவை ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் போடவும்
பின்பு ஒரு 2 நிமிடம் தீயை மிதமாகவைய்க்கவும் பின் திறந்து தேங்காய்பால் ஊற்றி


தளித்த்தவைகளைபோட்டு பரிமாருவதற்குமுன் கொத்தமல்லி தூவவும்


ஒரு பிரேஃபானில் 2 ஸ்பூன் ஆயில்விட்டு இதேபோல்சிறிய சிறிய வடையாகவும் போட்டு


இருபுறமும் சிவக்கவிட்டு சுட்டு எடுக்கலாம்


இது மிகுந்தசுவையுடன் கூடிய ஒரு ரெசிபி


இது மிக மிக அருமையான ஒருடிஸ் சுவையாகவும் அதேசமயம் செய்யம்போதே
வாசனை பலமாகி சாப்பிட தூண்டும்
சாதம் இடியப்பம் மற்றும் எல்லாவற்றிற்கும் ஏற்ற ரெசிபி

Wednesday, February 3, 2010

கோதுமை ரவா பரோட்டாதேவையானவை
2 கப் கோதுமை
1 கப் ரவா
1 முட்டை வேண்டாமென்றால் தவிர்கவும்
இளம் சூட்டில் மாவு பிசைய தண்ணீர்
தேவைக்கேற்ப உப்பு
சிறு பிஞ்ச் சோடாப்பு அல்லது
1 ஸ்பூன் ஜீனி
சுட்டெடுக்க ஆயில்
இதற்கு கொஞ்சம் ஆயில் போதும்

இரு மாவையும்கலந்து தண்ணீர் உப்பு சோடா அல்லது ஜீனி சேர்த்து நன்றாக பிசையைவும் வழக்கம்போல் பரோட்டா மாவு பதத்துக்கு
தண்ணீரோடு கொஞ்சம்  7 அப் சேர்த்து பிசைந்தால் பரோட்டா மிருதுவாக இருக்கும்.
உருண்டை போட்டுவைத்து நேரம் கழித்தும் சுடலாம், உடனேயும் சுடலாம்.இதற்கு காரச்சட்னி சைடிஸாக.
 உங்களுக்கு எது வேணுமோ அது செய்துக்கோங்க
மைதாவைவிட கோதுமை உடலுக்கு நல்லதுன்னு சொல்வாங்க
செய்து சாப்பிட்டு பாருங்க..

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.