அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, January 19, 2012

வலைதளத்தில் ஆரம்பித்த உறவு வியாபாரம் வரை.


வலைதளத்தில் ஆரம்பித்த எங்கள் உறவு, இன்று குடும்ப உறவாகி, இரு சகோதரிகள் சேர்ந்து பிசினஸ் செய்யும் அளவிற்க்கு கொண்டுவந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

நாங்களும் ஆரம்பிச்சிட்டோம் என்னாத்த கடையத்தான். வீட்டிற்குள்ளேயே மாடியில்   புர்கா மற்றும் பேன்ஷி ஐயிட்டங்கள் அனைத்தும் துபையிலிருந்து வரவழைத்து தருகிறோம் [வெட்டியாதானே இருக்கோம். சும்மாயிருந்தா வெட்டிக்கதைதானே பேசிக்கிட்டு இருப்போம் அதேன் இப்படியொரு ஏற்பாடு] இது சென்னை பிளாசாவின் ஒரு அங்கம்தான் இந்த மலிக்கா பிளாசா [ஹா ஹா] அதன்ன சென்னை பிளாசா என்கிறீர்களா? அது நம்ம சமையல் அட்டகாசம் ஜலிலாக்காவோட கடைதான். சென்னையில் இருக்கு.

நான் கொஞ்சம் டிசைன் செய்வேன் [அட நம்புங்கப்பா] அதை வைத்து நானாக டிசைன் போட்டு ஆடர்செய்து புர்கா போடுவேன். ஜலிக்காவீட்டுபோயிருந்தபோது புர்காவைபார்த்து நல்லாயிருக்கே என்றதோடு. சென்னை பிளாஷாவின் விபரம் சொன்னார்கள்[ 1 வருடம்தான்] ஆகிறதென்றார்கள்.

நான் ஊருக்கு வந்திருந்தபோது சிலர் என் புர்காக்களை கண்டுவிட்டு இதேபோல் கல் மற்றும் டிசைனில் எங்குகிடைக்கும் வாங்கி தருகிறாயா? என கேட்டதும் டக்கென ஜலிக்கா நியாபகம். உடனே மெயில் செய்து கேட்டேன். கேட்டதும் உடனே  புர்கா அனுப்பிவிட்டார்கள் சென்னையிலிருந்து.

வந்தெல்லாம் மிகவும் காஸ்டிலியாக இருந்தது. உடனே மெயில் அனுப்பினேன் அக்கா இது டவுனல்ல, கிராமம்தான் இங்குள்ளதற்க்கு தகுந்தார்போல் இன்ன விலையில் இப்படி டிசைனில் இன்ன சைசில் இருக்கவேண்டும் என போட்டோக்கள் எடுத்து அனுப்பினேன்.
அதோடு பேன்ஷி ஐயிட்டங்களும் வேண்டும் என்றேன்

அடுத்த 15 நாளில் கூரியரில் வந்துவிட்டது மாசா அல்லாஹ் நினைத்தபோல் இருந்தது வியாபரமும் அல்ஹம்துல்லிஹ் என இருந்தது இதையே ஏன் தொடர்ந்து செய்யக்கூடாதுன்னு முடிவுசெய்து, 3 வது பார்சல் வந்துவிட்டது .4,வதுக்காக வெயிட்டிங்க்.

அதிகம் மற்றும் குறைவான விலைகளில் அதாவது 1000.திலிருந்து 4000 வரை புர்கா மாடல்கள் இருக்கு. துணிகள் மற்றும் ஸ்டோன்கள் தரமானதாக இருக்கும். தற்போதுள்ள அனைத்து டிசைன்களும் ஒரிஜினல் ஸ்டோன்கள் மற்றும் உயர்ரக துணிவகைகள்.

மக்களின் தேவையறிந்து, அவர்களின் பொருளாதாரம் அறிந்து, வியாபாரம் செய்தால் இன்ஷா அல்லாஹ் ஒரு நிலையான வியாபாரத்தை நிலைநிறுத்தலாம். இறைவனின் உதவியால் தொடங்கிவிட்டோம். அவனே நல்லமுறையில் நடத்தித்தரவேண்டும்.

சகோதரிகளாய் நாங்க தொடங்கியுள்ள இந்த பிசினஸ் எந்தளவு சக்சஸாகும் என்பது இறைவனிடத்தில்தான் உள்ளது. நல்லதே நாடுவான் என்ற நம்பிக்கையோடு
தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்  பிராத்தனைகளையும் என்றும் எதிர்பார்கிறோம்.

சரி வந்ததுதான் வந்தீங்க கொஞ்சம் டிசைனையும் பார்த்துவிட்டு போங்களேன்.
வேண்டுமெனில். போனை எடுங்க, நம்பரை போடுங்க, மாடல் சொல்லுங்க, உடனே அனுப்பி வைக்கிறோம்..எப்படியிருக்கு டிசைன்கள் மற்றும் மாடல்கள். இதுபோல் பலமாடல்கள் இருக்கிறது இங்கு சென்றும் பாருங்கள். மாடல் நம்பர்களை பார்த்து அந்த மடல் வேண்டுமென்று சொன்னால் கூரியரிலும் அனுப்புவோம். கூரியர் சிலவும் சேர்த்து பணம் அனுப்பவும்.[என்னாம்மா யோசிக்கிறாங்ப்பு! பாவங்க பச்சபுள்ளைங்க இப்பதான் வியாபராம் ஆரம்பிச்சிருக்கு]

புக்கா மற்றும் மஃப்தா. ஹெட்கவர். மற்றும் பேன்ஷி ஐயிட்டங்கள்.
ஸ்டோன் வளையல், ஸ்டோன் நெக்லஸ், ஸ்டோன் கம்மல்,ஸ்டோன் கிளிப், ஸ்டோன் ஹேர் கிடிக்கி,கிரஸ்டல் மணிவகைகள்.ஹேண்ட் பேக் .ஸ்டோன் புர்கா பின்.ஸ்டோன் கொண்டை வலைகள். இன்னும் இன்னும் நிறைய ஐயிட்டங்கள்.

அனைத்தும் துபையிலிருந்து வரவழைத்து தருகிறோம் . என்ன விதமாக வேண்டுமென்றாலும் அதுபோல் சைஸ் மற்றும் ஸ்டோன் என தங்களுக்கு வேண்டுமெனில் ஆடரின் பேரிலும் புர்கா தைத்து தரப்படும்.அதேபோல் வீட்டு பொருள்கள். மற்றும் பெட்ஷீட். கம்போர்ட் என்ன வேண்டுமென்றாலும் தேவையெனில் என்ன மாடல் எப்படி என சொன்னால் அதையும் வரவழைத்து தருவோம்..

ஆடர்களுக்கு தொடர்புக்கொள்ள
என் ஈமெயில் மற்றும் போன் நம்பருக்கும் தொடர்பு கொண்டு ஆடர்கள் கொடுக்கலாம்..
fmalikka@yahoo.in
9578167664.

இதிலும் டிஸ்கி போடாங்காட்டி நல்லாயிருக்காதுல்ல.

டிஸ்கியோ டிஸ்கி:
அதனோடு. சுடிதார்கள் மற்றும் ப்ளவுஸ்களும். குழந்தைகளுக்கான கெளவுன்களும்[மாடல்கள் தரனும்] தைத்து தரப்படும்..


என்றும்  உங்கள்
அன்புடன் மலிக்கா


42 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்..சிறப்பாக செயல்பட இறைவன் போதுமானவன்..

வஸ்ஸலாம்..

அன்புடன் மலிக்கா said...

அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

தங்களின் அன்பான துஆக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.. மிக்க நன்றி..

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து சிறப்பாக,செழிப்பாக பெருக
எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.

ஜெய்லானி said...

நீரோடையைப்போல ஆரம்பித்த இந்த வியாபாரம் ஆறாக கடலாக பல்கி பெருக வாழ்த்துக்கள்....!! வாழ்த்துக்கள் :-).என்னுடைய துவாவும் :-)

அன்புடன் மலிக்கா said...

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து சிறப்பாக,செழிப்பாக பெருக
எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.//

வாங்கக்கா. தங்களின் வருகைக்கும் துஆவிற்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...

நீரோடையைப்போல ஆரம்பித்த இந்த வியாபாரம் ஆறாக கடலாக பல்கி பெருக வாழ்த்துக்கள்....!! வாழ்த்துக்கள் :-).என்னுடைய துவாவும் :-)//

அட நம்ம அண்ணாத்தே! வாங்க வாங்க.
தங்களின் அன்பான வாழ்த்துக்கும் துஆவிற்க்கும் அன்பார்ந்த நன்றிகள்..

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்த்துகள்!, உங்களின் வியாபரத்தில் "பரக்கத்" கிடைக்க எமது பிரார்த்தனைகள்.

இது நல்லதொரு ஊக்கம் ...

அன்புடன் மலிக்கா said...

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்த்துகள்!, உங்களின் வியாபரத்தில் "பரக்கத்" கிடைக்க எமது பிரார்த்தனைகள்.

இது நல்லதொரு ஊக்கம் ..//


வ அலைக்குமுச்ஸலாம்..

வாங்க ஜமால்காக்கா. தங்களின் வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சி.

ஆமாம் காக்கா வீட்டில் இருந்தே பார்ப்பதால் நமது பெண்களும் எவ்வித தயக்கமுமின்றி வந்துபோகிறர்கள்.

ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஏதோ நம்மாள முடிந்தது..

நன்றி காக்கா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வாழ்த்துகள்..உங்கள் தொழிலும் நட்பும் உயர்ந்து விளங்கட்டும்...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

என்னுடைய‌ துவாக்க‌ளும் உங்க‌ளுக்கு ம‌லிக்கா..

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள் மல்லி , நமக்கு ஒரு பேன்சி நகை செட் அனுப்புங்க

மின்மினி RS said...

புர்கா பார்க்க ரொம்ப நல்லாருக்கு. சூப்பரா டிசைன் பண்ணிருக்கீங்க மலிக்காக்கா. வாழ்த்துகள். இறைவனின் பரக்கத்தை கொண்டு மேலும் சிறப்பாய் அமைய இறைவனிடம் துவா செய்கிறோம்.

Avargal Unmaigal said...

நல்ல எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எல்லாம் நல்லபடியாகவே பெருகிவளரும். வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு. வாழ்க வளமுடன்

வடுவூர் குமார் said...

சில வடிவமைக்குள் நிஜமாகவே அட போடவைக்கின்றன.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மாஷா அல்லாஹ்.

உங்கள் எண்ணம் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள் மற்றும் துஆக்கள்!

Rathnavel said...

வாழ்த்துகள்.

கணேஷ் said...

நல்லவிதமான இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி மேலும் மேலும் வளர இந்த அண்ணனின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்ம்மா!

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ், நல்ல ஒரு உருப்படியான விடயம், வெட்டிப்பேச்சுக்களிலிருந்து புதிய வர்த்தம், அல்லாஹ் தாங்களின் வியாபாரத்திற்கு பரக்கதை தருவானாகவும், தேவைப்பட்டால் நானு ஆர்டர் தருகிறேன்...

susi said...

அக்கா டிசைன்களெல்லாம் சூபராக இருக்கு.
அந்த கம்மல் அழகாக இருக்குக்கா.

நான் தூக்குடியில் இருக்கிறேன் எங்களுக்கு அனுப்பமுடியுமா?

அன்புடன் மலிக்கா said...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வாழ்த்துகள்..உங்கள் தொழிலும் நட்பும் உயர்ந்து விளங்கட்டும்...//

வாங்க வாசன் தங்களின் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

என்னுடைய‌ துவாக்க‌ளும் உங்க‌ளுக்கு ம‌லிக்கா..//

துஆவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இர்ஷாத்..

அன்புடன் மலிக்கா said...

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள் மல்லி , நமக்கு ஒரு பேன்சி நகை செட் அனுப்புங்க.//

அடடா வாங்கக்கா. கும்பகோணத்துக்கு பார்சல் ரெடி என்ன பேன்ஷி செட் வேண்டும் சொல்லுங்கக்கா . உங்களுக்கு இல்லாமலா. செல்ல மகள்களுக்கும் சூப்பர் டிசைன்களில் இருக்குக்கா.

வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சிக்கா..

அன்புடன் மலிக்கா said...

மின்மினி RS said...

புர்கா பார்க்க ரொம்ப நல்லாருக்கு. சூப்பரா டிசைன் பண்ணிருக்கீங்க மலிக்காக்கா. வாழ்த்துகள். இறைவனின் பரக்கத்தை கொண்டு மேலும் சிறப்பாய் அமைய இறைவனிடம் துவா செய்கிறோம்.//

அன்பு நிறைந்த வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த துஆக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி மின்மினி.

அன்புடன் மலிக்கா said...

Avargal Unmaigal said...

\\நல்ல எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எல்லாம் நல்லபடியாகவே பெருகிவளரும்.// ஆமீன்

//வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு. வாழ்க வளமுடன்.//

வாருங்கள் சகோ. தங்களின் முதல் வருகைக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

வடுவூர் குமார் said...

சில வடிவமைக்குள் நிஜமாகவே அட போடவைக்கின்றன.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்./

வாருங்கள் சகோ

இன்ஷாஅல்லாஹ் இனிமேல் அடடடா ஆ போடவைப்பதுபோல் செய்யலாம் சகோ.

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மாஷா அல்லாஹ்.

உங்கள் எண்ணம் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள் மற்றும் துஆக்கள்!//

வாலைக்குமுச்ஸலாம்

தங்களின் பாசமான வாழ்துகளுக்கும் துஆக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

அன்புடன் மலிக்கா said...

Rathnavel said...

வாழ்த்துகள்.//

வாங்கய்யா தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

கணேஷ் said...

நல்லவிதமான இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி மேலும் மேலும் வளர இந்த அண்ணனின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்ம்மா!//

வாங்கண்ணா வாங்க. அண்ணனின் பாசம் நிறைந்து மனமார்ந்து வாழ்த்தும் வாழ்த்துகளுக்கு இந்த தங்கையின் அன்பு நிறைந்த நன்றிகள் கணேஷண்ணா.

கணேஷண்ணா சாந்தி அண்ணியின் கழுத்துக்கு வைர[கொரியா கற்களில்] நெக்லஸ் அனுப்பட்டா! . //5,0000 கொடுக்கவேண்டிய இடத்தில் 5,000 கொடுத்தால் இல்லையில்லை 500 கொடுத்தால் போதும்// ஹா ஹா ஹாஹா..

அன்புடன் மலிக்கா said...

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ், நல்ல ஒரு உருப்படியான விடயம், வெட்டிப்பேச்சுக்களிலிருந்து புதிய வர்த்தம், அல்லாஹ் தாங்களின் வியாபாரத்திற்கு பரக்கதை தருவானாகவும், தேவைப்பட்டால் நானு ஆர்டர் தருகிறேன்...//

வாங்க சகோ. வெட்டிப்பேச்சுக்கு விட்டாச்சி லீவு
தங்களின் அன்பான துஆக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிச்சயம் தாருங்கள். தங்களை சார்ந்த நண்பர்களுக்கும் சொல்லுங்கள்..

சிறுக சிறுக சேமித்து தன் தேன் கூட்டை நிறைக்குமாம் தேனீ. எங்களின் இந்த தொடக்கத்தில் இறைவன் ஹலாலானமுறையில் முன்னேற்றத்தை தரசெய்வானாக![ஆமீன்]

அன்புடன் மலிக்கா said...

susi said...

அக்கா டிசைன்களெல்லாம் சூபராக இருக்கு.
அந்த கம்மல் அழகாக இருக்குக்கா.

நான் தூக்குடியில் இருக்கிறேன் எங்களுக்கு அனுப்பமுடியுமா?
//
ஓ அனுப்பலாமே! என்ன தேவையென தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி அனைத்தும் என் மெயிலுக்கு அனுப்புங்கள். கூரியர் சிலவோடு சேர்த்து நான் தரும் அக்கோண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பிவிடுங்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

wow....super நல்லதொரு முயற்சி! இப்படிதான் செயல்பட வேண்டும்... முயற்சியாளர்களுடன் இறைவன் இருக்கிறான்...வாழ்த்துக்கள்.

isaianban said...

இறைவன் வியாபாரத்தில் பரக்கத் நாடுவானாக. ஆமீன்.. நான் தங்களின் வளர்ச்சிக்கு துவா செய்கிறேன் அக்கா....

ரெஜியா அபுதாகிர் said...

மலிக்கா கலக்குறே போ...வாழ்த்துக்கள்..நன் அறுசுவை.காம் பார்த்துருக்கேன் அதுல ஜலீலா நு பேர் ல நெறைய டிப்ஸ் படிச்சுருக்கேன் ..ஒருசமயம் நீ சொல்ற ஜலீலா அவங்கள கூட இருக்கலாம்..எது எப்படியோ ....வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

கிளியனூர் இஸ்மத் said...

wow....super நல்லதொரு முயற்சி! இப்படிதான் செயல்பட வேண்டும்... முயற்சியாளர்களுடன் இறைவன் இருக்கிறான்...வாழ்த்துக்கள்.//

வாங்க அண்ணன்.
அங்கு அனைவரும் நலமா? அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்..

தங்களின் வருகைக்கும் அன்பான கருதுகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

isaianban said...

இறைவன் வியாபாரத்தில் பரக்கத் நாடுவானாக. ஆமீன்.. நான் தங்களின் வளர்ச்சிக்கு துவா செய்கிறேன் அக்கா....//

தம்பியின் அன்பான துஆக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா said...

ரெஜியா அபுதாகிர் said...

மலிக்கா கலக்குறே போ...வாழ்த்துக்கள்..நன் அறுசுவை.காம் பார்த்துருக்கேன் அதுல ஜலீலா நு பேர் ல நெறைய டிப்ஸ் படிச்சுருக்கேன் ..ஒருசமயம் நீ சொல்ற ஜலீலா அவங்கள கூட இருக்கலாம்..எது எப்படியோ ....வாழ்த்துக்கள்/

அட பானு எப்படியிருக்கே.
ஆமாம் அதே ஜலிலாக்காதான்..

தமிழ்குடும்பத்தில் http://www.tamilkudumbam.com/
நாங்கள் பலகியது இன்று அக்கா தங்கையாகிவிட்டோம்..

உன் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அது நீ எப்ப வரே. பார்த்து எவ்ளோ நாலாச்சி இல்லயில்ல காலமாச்சி..

ஹுஸைனம்மா said...

அட்ரா சக்கைன்னானாம்!! மாஷா அல்லாஹ், நல்ல செய்தி!!

நம்ம ‘பிரியாணி’ நாஸியாதான் பாத்துட்டுச் சொன்னாங்க... ம்ம்... நடத்துங்க. நடத்துங்க... அப்ப துபாய்க்கு இனி “சரக்கு எடுக்க” வந்தாத்தேன் உண்டுபோல!! :-)))))))))

காஞ்சி முரளி said...

///தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி அனைத்தும் என் மெயிலுக்கு அனுப்புங்கள். கூரியர் சிலவோடு சேர்த்து நான் தரும் அக்கோண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பிவிடுங்கள். ////

அதுதானே....! பார்த்தேன்
முத்துப்பேட்ட
மூஞ்சூறு
மூணுகாலுல நடந்துபோகுதேன்னு...!

மலிக்கான்னா சும்மாவா...!
ரொம்ப உஜாரான ஆளுங்கதா....!

நமக்கு இந்த விவரமெல்லாம் பத்தாது...!

நாங்கெல்லாம் எதுக்கொதவாத மடசாம்பிராணி...!

காஞ்சி முரளி said...

ரெண்டு ஜிமிக்கி செட்டும்..!

ஒரு வைரகொரிய நெக்லேஸ் பார்ஸல்...!

(காசெல்லாம் இப்ப கிடையாது...! கடன்தான்)

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி said...

ரெண்டு ஜிமிக்கி செட்டும்..!

ஒரு வைரகொரிய நெக்லேஸ் பார்ஸல்...!

(காசெல்லாம் இப்ப கிடையாது...! கடன்தான்) //அப்போ எனக்கு 4 செட் பார்ஸல் ஹா..ஹா.. :-)))

பார்த்து செல்லுங்க said...

கலக்குங்க

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மலீக்கா தங்கமே கலக்குறே.. போ.. சந்தோஷமா இருக்கு. ப்லாகை பிசினசுக்கும் பயன் படுத்தலாம்னு சூப்பர் ஐடியா டா..:)

உனக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் பெற்றுக் கொள்ளவும்.:)

வாழ்க வளர்க.. மாஷா அல்லாஹ்..:)

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.