அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, December 8, 2011

மட்டி ஸ்பெசல்..

 மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும் அதனை ஒரு அகன்றபாத்திரத்தில் சிறு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும் அதனை
 இப்படி நகத்தால் சற்று நீக்கினால் நன்றாக திறக்கும் அதனுள் இருக்கும் மட்டியை ஒவ்வொன்றாக எடுத்து
 தனி தட்டில் வைத்துக்கொள்ளவும்.
அதை சமைக்க தேவையானவை.

மட்டி தேவையான அளவு
கத்தரிக்காய் சற்று சிறியதாக அரிந்தது 2
சிறிய வெங்காயம் 1 கப்
தேங்காய்பால் 1 கப்
பொரியரிசி மாவு 3,4.  ஸ்பூன்.
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மஞ்சள்தூள்.1/2 ஸ்பூன்
மிளகாய்தூள்  1 ஸ்பூன்
சீரக சோம்புதூள். 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள்  1 ஸ்பூன்
பச்சைமிளாய் 2.3
கருவேப்பில்லை தாளிக்க
உப்பு
எண்ணை..

குக்கர்ஃபேனில் .மட்டி நறுக்கிய கத்தரிக்காய்.வெங்காயம்.ப,மிளகாய்.இஞ்சிபூண்டு விழுதுசேர்த்து , மசாலாக்களை கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்து அதனோடுசேர்த்து
உப்பிட்டு குக்கரை முடிவைக்கவும்.உப்பு கம்மியாக சேர்த்துதான் சமைக்கனும் இதில் உப்பு இருக்கும்.

5 விசில் வந்ததும் ஆவியை போக்கிவிட்டு மூடியை திறந்து.
பொரியரிசிமாவைபோட்டு கிளறிவிட்டு பிரண்டதுபோல் வந்ததும்
தேங்காய்பாலை ஊற்றி சற்று கொதிவந்ததும்.
சிறிய கடாயில் ஆயில்விட்டு சூடானதும் நறுக்கிய சிறியவெங்காயம். கருவேப்பில்லை போட்டு தாளித்து
ரெடியான மட்டிகலவைவோடு தாளித்தவைகளையும் சேர்க்கவும்.
சுவையான மட்ட்சி ஸ்பெசல் ரெடி.
ரசம்வைத்து வெள்ளை சோற்றோடு சாப்பிட சூப்பராக இருக்கும். ஆப்பம் தோசைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இது ஒரு தனி சுவையில் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

இதை வேகவைத்ததும் உரித்து எடுக்கும்போதே சாப்பிடலாம் உப்பு சுவையோடு திண்ண திண்ண ருசிக்கும்.. நாங்க அப்படியே திம்போமே! என்றாள் குட்டிதேவதை ஆதிரா..மட்டியை உரித்துக்கொடுக்கும் அண்ணனின் கையை உரிஞ்சிக்கொண்டே..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.