அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, January 7, 2014

இன்னும் முன்னேறு!


 
பெற்ற பிள்ளைகளால்
பெற்றோருக்கு கிடைகும் சந்தோஷம்
காசு பணத்திலல்ல, அவர்களின் வளர்ச்சியிலும்
அவர்கள் நன்னடத்தையிலும், அவர்களின் முன்னேற்றத்திலும்
அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியிலும்தான்,
ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவதும் விரும்புவதும் அதுவே
என் மகன் இவன் என்பதை விட, இவனின் தாய் நான் என்பதில்
என்று ஒரு பெற்றோர்கள் நெகிழ்ந்து மகிழ்கிறார்களோ
அன்றே அவர்களின் தீரா ஆவல்கள் நிறைவேறுகிறது
அவ்வகையில் தற்போது நான், படிப்பிலும் விளையாட்டிலும்
சிறப்பதுபோல் அவன் வாழ்விலும் செயலிலும் சிறந்துவிளங்கிட
சிரம்தாழ்த்தி இறைவனிடம் வேண்டுகிறேன். 
டேபில் டென்னிஸ்ஸில் முதலிடம்
புட்பாலில் முதலிடம்
ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம்
மற்றுமொரு ஃபுட்பாலில் ரன்னர்.

ஸ்டேட் அன் டிஸ்டிக் லெவலில்.
முதல் மற்றும் இரண்டாமிடம்
மேக்ஸ் அன் இங்லீஸ் தேர்வில் என
இம்முறை ஊர்வரும்போது
பதக்கமும் கப்பும் சர்ட்பிக்கெட்டும் வாங்கிவந்து மகிழ்வித்தான்

உடல்நலம் சற்று அடிக்கடி சறுக்கிறது நோஞ்சானாக இருக்கின்றான்,
சத்துள்ள உணவு சாப்பிட அடம்பிடித்தால்
சவளைப்பிள்ளையாக இருக்கும் என்று யாரோ சொன்னது நியாபகம் வருது
இரண்டு வருடமாகியும் குற்றால சீசனும் அவனுடலுக்கு
இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை  
குற்றாலம்  சையத் ரெசிடண்டல்ஸில் 
பத்தாம் வகுப்பில் படித்துகொண்டிருக்கும்
எனது மகனுக்கு தங்கள் அனைவரின்
பிராத்தனையென்னும் துஆக்கள் வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடு வாழவும் 
வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்லமதிபெண் எடுத்து
அவனின் எதிர்கால எண்ணங்களும் ஆசைகளும்  நிறைவேறவும்,
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்.
 

குறிப்பு: குழந்தைகளுக்குள் என்ன இருக்கோ அதுதான் வெளிப்படும்
ரொம்ப போட்டு எல்லாவற்றையும் திணித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவே மறுக்கும், அது படிப்பானாலும் சரி, அவர்களால் முடியுமென்ற உற்சாகத்தை மட்டுமே நாம் ஊக்கமாக கொடுத்தால்போதும்
பல நேரம் முடிவது சில நேரம் முடியாமலும் போகலாம் 

அதற்காக அவர்களை குற்றஞ்சொல்லி குத்திக்காட்டகூடாது ,குறிப்பாக அடுத்தப்பிள்ளைகளை எடுத்துக்காட்டி ஒப்பீடுக் காட்டகூடாது,அது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது எனது கருத்து...


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.