அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, January 15, 2015

சுடச்சுட பசுநெய் ஆப்பம்..




தேவையானவை
ஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]
பசுநெய் தேவையான் அளவு
முட்டை 4
உப்பு
சோடாப்பு
கருவேப்பில்லை


ஆப்பமாவுடன் பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்]  சேர்த்து கலக்கைக்கொள்ளவும்
ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்
2. நிமிடம் மூடி வைக்கவும்
திறந்து திருப்பிப்போடவும்
இருபுறமும் வெந்து சிவந்ததும்

எடுத்து பரிமாறவும்.
இதற்கு எங்க பகுதி பக்கம் ஜீனி  தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்கு முட்டைகுழம்பு,அல்லது
சிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்
நல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்

 டிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.
பசங்களின் டேஸ்டே வித்தியாசமானதுதானே..

 [அன்பர் 3 வரின்  வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இங்கே ..மீள்பதிவு ]


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.