அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, December 8, 2011

மட்டி ஸ்பெசல்..

 மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும் அதனை ஒரு அகன்றபாத்திரத்தில் சிறு தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும் அதனை
 இப்படி நகத்தால் சற்று நீக்கினால் நன்றாக திறக்கும் அதனுள் இருக்கும் மட்டியை ஒவ்வொன்றாக எடுத்து
 தனி தட்டில் வைத்துக்கொள்ளவும்.
அதை சமைக்க தேவையானவை.

மட்டி தேவையான அளவு
கத்தரிக்காய் சற்று சிறியதாக அரிந்தது 2
சிறிய வெங்காயம் 1 கப்
தேங்காய்பால் 1 கப்
பொரியரிசி மாவு 3,4.  ஸ்பூன்.
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மஞ்சள்தூள்.1/2 ஸ்பூன்
மிளகாய்தூள்  1 ஸ்பூன்
சீரக சோம்புதூள். 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள்  1 ஸ்பூன்
பச்சைமிளாய் 2.3
கருவேப்பில்லை தாளிக்க
உப்பு
எண்ணை..

குக்கர்ஃபேனில் .மட்டி நறுக்கிய கத்தரிக்காய்.வெங்காயம்.ப,மிளகாய்.இஞ்சிபூண்டு விழுதுசேர்த்து , மசாலாக்களை கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்து அதனோடுசேர்த்து
உப்பிட்டு குக்கரை முடிவைக்கவும்.உப்பு கம்மியாக சேர்த்துதான் சமைக்கனும் இதில் உப்பு இருக்கும்.

5 விசில் வந்ததும் ஆவியை போக்கிவிட்டு மூடியை திறந்து.
பொரியரிசிமாவைபோட்டு கிளறிவிட்டு பிரண்டதுபோல் வந்ததும்
தேங்காய்பாலை ஊற்றி சற்று கொதிவந்ததும்.
சிறிய கடாயில் ஆயில்விட்டு சூடானதும் நறுக்கிய சிறியவெங்காயம். கருவேப்பில்லை போட்டு தாளித்து
ரெடியான மட்டிகலவைவோடு தாளித்தவைகளையும் சேர்க்கவும்.
சுவையான மட்ட்சி ஸ்பெசல் ரெடி.
ரசம்வைத்து வெள்ளை சோற்றோடு சாப்பிட சூப்பராக இருக்கும். ஆப்பம் தோசைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இது ஒரு தனி சுவையில் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.

இதை வேகவைத்ததும் உரித்து எடுக்கும்போதே சாப்பிடலாம் உப்பு சுவையோடு திண்ண திண்ண ருசிக்கும்.. நாங்க அப்படியே திம்போமே! என்றாள் குட்டிதேவதை ஆதிரா..மட்டியை உரித்துக்கொடுக்கும் அண்ணனின் கையை உரிஞ்சிக்கொண்டே..

Monday, November 14, 2011

அழகு தேவதை..

ஆதிராவின் அணிவகுப்பு 
அள்ளிக்கொள்ளும் அழகோவியம் 
பார்க்கும் விழிகளையெல்லாம்
மயக்கும் வண்ணக்காவியம்.
லேப்டப் என்ன
லேட்டஸ்ட் போனென்ன
ஐபோட் என்ன
ஐபோன் என்ன
அனைத்தும் ஆதிராவுக்கும் அத்துப்படி
அதில் விளையாடும்
ஆதிராவின் அழகிய விரல்களடி..

Wednesday, October 12, 2011

வெங்காயம் தெரியுமா? வெங்காயம்.


 வெங்காயம் தெரியுமா வெங்காயம் அதாங்க ஆனியன். வேணா மலிக்கா வேணா அழுதுருவோம் அப்படிங்கிறீங்களா!  சரி சரி. அந்த வெங்காயத்தின் பலன்களை பலரும் பலவித சொல்லியிருக்காங்க இதோ இப்படியும் சொல்லியிருக்காங்களாம் என்னான்னு பார்த்து அதன் பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
 ------------------------------------------------------------------------
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
 
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
 
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
 
[நமக்கு மெயிலில் வந்தது உங்கள் பார்வைக்கும். ]
 
என்ன 50 தையும் படிச்சி மனதுக்குள் புதைச்சாச்சா.  இனி அப்படியே சாப்பிட்டாலும் சரி இல்லை இப்படியே சாப்பிட்டாலும் சரி அதன் குண நலன்கள் நமது நலன்களை கவனித்துக்கொள்ளும்..
டிஸ்கி// வெங்காயமே பிடிக்காதுப்பா அப்படிங்கிறவங்களுக்காக! அதை பிடிக்கவைக்சீக்கிரம் ஒரு கருவிமூலம் வெங்காயபேபி கண்டுபிடிக்கபோறாங்களாம். பேபின்னா எல்லாருக்கும் பிடிக்குமுல்ல அதான் எப்புடி [யாரு கண்டுபிடிக்கபோறாங்கனெள்ளாம் கேட்கக்கூடாது அது பரம ரகசியம்.]

Thursday, June 30, 2011

கொடுவா கருவாட்டுத் தொக்கு

என்ன தொக்கை பார்த்ததும் நாவில் நீர் ஊறுதா? இல்லை மூக்கில் நாத்தம் ஏறுதா? அதெல்லாம் உங்களை பொருத்துதான் அதுக்கெல்லாம் கலைச்சாரல் நிர்வாகம் பொருப்பாகாது சொல்லிப்புட்டேன்.. ஆமா
தேவையானவைகள்
கொடுவாக் கருவாடு துண்டு 4
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 4
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 1  ஸ்பூன்
மஞ்சள் பொடி1 ஸ்பூன்
சீரகம் சோம்பு பொடி 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி
ஆயில் 2 ஸ்பூன்
உப்பு வேண்டாம் கருவாட்டில் இருக்கும்

 கருவாடை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி க்கொள்ளவும்.தக்காளி. வெங்காயம்.பச்சை மிளகாய்  அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும்,

ஒரு பவுலில் துண்டாக்கிய கருவாடு. மற்றும் அரிந்துவைத்துள்ள தக்காளி வெங்காயம் மற்றும் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட், ஆகியவற்றை ஒன்றாக சேர்வது போல் கலந்துகொண்டு
.  அடுப்பில் கடாய்வைத்து ஆயில்விட்டு சூடானதும் இந்த கலவையை அதில்போட்டு கிளறிவிட்டு மூடி வைக்கவும். திறந்தும் இருக்கலாம்[அப்புறம் வாசம் பக்கத்து வீடுக்கு மட்டுமல்ல பத்தாவது வீட்டுக்கும் அடிக்கும் அதுக்கு நான் பொருப்பல்ல] ஒரு 3 நிமிடத்தில் வாசத்தோடு ஆயில் பிரிவதுபோல் தளதளன்னு வந்திடும். அப்படி வரும்போது அடுப்பை மிதமாக்கி நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு 2 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்..

கமகம கருவாட்டுத்தொக்கு ரெடி.

சும்மா சுடுசோறும் ரசம் அல்லது மோர் வைத்துக்கொண்டு ஒரு வெட்டு வெட்டலாம்.

இது சைவக்காரங்களுக்கு அலர்ஜியாம் அதனால் இங்க வந்து எட்டிபார்த்துவிட்டு நாத்தம் அப்படினெல்லாம் மூக்கை பொத்திக்கொண்டு ஓடப்புடாது ஓகே..
அடுத்த தபா உங்களுக்கு பிடிச்ச  சைவக்கறி சமச்சிப்போடுறேன் சரியா என்ன நம்ம டீல் ஓக்கேதானே!

Tuesday, June 21, 2011

என்று வரும் எங்கள் பாடம்.


கல்வி கண் போன்றது. 
ஆனால் ஒளிகொடுக்கவேண்டிய கல்வியே இன்று ஒளியற்றல்லவா கிடக்கிறது
சமரசமில்லாமல் போனதால்  சமச்சீர்க் கல்வி சடுகுடு ஆடப்படுகிறதோ?அப்படியானால்
குழந்தைகளில் எதிர்கால கல்வியின் நிலைபாடுதான் என்ன?


ஏற்கனவே தாமதமாக திறக்கபட்ட பாடசாலைகளில் தற்போது எவ்வித கற்ப்பித்தலும் இல்லாமல் குழந்தைகள்  போவதும்  பள்ளிக்கூடங்களில் சும்மா இருந்து வருவதுமாக உள்ளார்கள். பாடங்கள் நடத்தவேண்டிய நேரத்தில் பாடபுத்தகமில்லாமல் வெறுமினே விளையாடிக் களித்துவிட்டு வந்தால்  அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?

இதற்கு எப்போது ஒரு முடிவுவரும் அதுவரை குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு விளையாடி வரத்தான் அதிகாலையில் எழுந்து அடித்துப்பிடித்து அவசர அவசரமாக அனைத்து பணிகளும் செய்து அவர்களை பள்ளிக்கு அனுப்புவது.  இதேநிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு செல்லவேண்டிவருமென்றே அறியாமல் பெற்றோரும் குழந்தைகளும் அல்லல்படுவது சரியா?

கல்விக்கூடங்கள் திறந்தபின் இந்நிலை நீடிப்பது சரியானதா?  கல்வியின் அவசியத்தை வழியுறுத்தும் அரசே! அதனை இந்த நிலைக்கொண்டு வந்திருப்பதுதான் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. குழந்தைகளின் கல்வி நலனில் அக்கரைகொண்டு அதிவிரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்குமா? 

இப்படிக்கு 
கல்விக்காக காத்திருக்கும்  பெற்றோர்கள் சங்கம். பெற்றோர்கள் சங்கத்தில் நீங்களும் இருக்கீங்களா? கருத்துக்களை பகிரவும்..

Monday, June 13, 2011

உஷாரா கவனிங்க!..

அட இது நீங்களான்னு உத்துப்பார்கிறீங்களா!!! ஒருகாலத்தில் இப்படிதான் நீங்களும் இருந்தீங்களாம் உங்க அம்மா அப்பா சொன்னாங்க.
“யாராண்டாசொன்னாங்க” அட என்னாண்டதாப்பு..

என்ன கவனிப்பு எதை கவனிக்கவேண்டும் என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்கதோன்றுமே இதோ உங்களுக்கான விடை.


குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும் தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கற்றுக்கொள்ளும் திறன்

இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

சத்தமில்லாத மரணம்

இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து

இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில் தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.

குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அரவணைப்பு முக்கியம்

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

என்ன படிச்சி முடிச்சிட்டீங்களா .

மேல உள்ளவைகள் மெயிலில் எனக்கு வந்தது. நல்லவைகளை நாடறியச் செய்யவேண்டாமா? அதனால் இதை  உங்கள் கண்பார்வைக்கு கொண்டுவந்தேன்.. சரி சரி   இனி கவனமாக இருங்கள்.
ஒருகுழந்தை பெற்றெடுக்கும் பாடுஅப்பப்பா  அதை சொல்லில் வடிக்கமுடியாது. பிறந்தவுடன் அதான் பிறந்துடுச்சேன்னு ஏனோ தானோன்னு இருக்காமல்[என்னமல்லி இப்படி சொல்ற நாங்களெல்லாம் அப்படியில்ல ரொம்ப கண்ணும் கருத்துமாதான் பார்த்துக்கிறோமுன்னு சொல்றது கேட்குது இருந்தாலும் சொல்லவேண்டியது நம்ம பொறுப்பில்லையா அதான்]

மிகுந்த கவனத்தோடு பச்சிளங்களை வளர்த்தெடுக்கவேண்டும். அப்புறம் வளர்ந்து. ஆளாகி. நாளாகி .எதிர்த்துபேசி. ஏன்னுகூட பார்க்கம. கேட்காம போறதுன்னா போயிட்டுபோகட்டும்.  இது நம்மளோட கடமை இதை நம்ம ஒழுங்க செய்திடனும் பலனையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. அதெல்லாம் இறைவன் கொடுப்பான் என்ன சரிதானே!

அன்புடன் மலிக்கா.

Wednesday, June 1, 2011

எப்பபாத்தாலும் பதிவு பதிவுன்னுகிண்ணு..

என்ன கோடைவெயில் கொளுத்துதா!

கொஞ்சம் சில்லுன்னு ஏதாவது குடிக்கனும்போல் தோணுதா.
என்ன தேடுறீங்க! என்ன குடிக்கலாமுன்னா! இதோ இதபோல் செய்து குடிங்க.
சும்மா சூ சு

[3பேருக்கு]
 வாழைப்பழம் 1
 ஐஸ் கட்டி 1 கப்
 ஆரஞ்ச் குல்கோஸ் 5 ஸ்பூன்
  ஜீனி 3 ஸ்பூன்
பிரஷ் பால் 2 கிளாஸ்

மிக்சியில் வாழைப்பழத்தையும் ஐஸையும்போட்டு ஒரு சுற்று.பின்பு அதில் பால். குல்கோஸ் ஜீனி அனைத்தையும்போடு ஒரு சுற்று. அவ்வளவுதான்.அப்படியே சில்லுன்னு குளு குளுன்னு குடிக்கலாம்.
இருங்க அப்படியேன்னதும் மிக்ஸியோடு தூக்கி குடிக்காதீங்க .ஒரு கிளாஸில் ஊற்றி குடிங்க  ஹ்கி ஹி ஹி..

அட இது என்ன யேன் தெரியாத மாங்காய். 
ஆமாப்பு அடிக்கிர வெயிலில் மனிதனே காயும்போது தம்மாதுண்டு மாங்கா காயாதா! பச்சமாங்க வாங்கி அதை சிறிய துண்டாக போட்டு அதில் உப்பும் பச்சைமிளகாயும் போட்டு வெயிலில் ஒரு 3 மணிநேரம் வச்சிஞ்டு அப்பால துண்ணா சும்மா சூப்பரா இருக்குமுல்ல..

அடடா இந்த பெரிய மனுசன் என்ன துண்ணுறார். ”ஓ அதுவா” அதாங்க! சிக்கன் [ப]பெர்கராம். என்னாது எங்களுக்கு இல்லையா! பாத்துப்பு தொண்டையில் சிக்கன் கூவிறபோகுது..
ஹா ஹா இதாரு.என்ன தெரியலையா!  நல்லா உத்துபாருங்கப்பு. இருட்டுல கண்ணுதெரியாமதான் நானே எடுத்தேன்..நல்லாவுல்ல சிளீப்புறாரு. நாங்க பொறத்துபோயி சுத்திட்டு நைடு 12. 1/2 வந்தா! கார்பார்க்கிங்கில் நம்ம காரு பேக்குல சும்மா சோக்கா சிளீபிகின்னு இருந்தாரு  விடுவோமா! அதான் நம்ம ”செல்”லுல சிறைபிட்ச்சிட்டோம் ..எப்பபாத்தாலும் பதிவு பதிவுன்னு யின்னாத போடுறது. இந்த கம்பிபிட்டர் பொட்டியில் எம்மா பதிவு குவிஞ்சிக்கிடக்கு. ஆனாலும். எத்த போடுறதுன்னு ஒரே கன்பிஷாச்ச்ங்கப்பு அதே இப்புடி..

Saturday, May 21, 2011

என்ன வந்தாலும் வரட்டும் நமக்கென்ன!

 
                                                                நன்றி கூகிள்
என்ன வந்தாலும் வரட்டும் நமக்கென்ன! யார் என்ன சொன்னால் நமக்கென்ன அப்படின்னு நினைச்சீங்கன்னா. சாமி கண்ணக் குத்துதோ இல்லையோ. நான் தேடிவந்து கண்ணை குத்துவேன் அப்படினெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க.. செல்போன் சொன்னாலும் சொல்லும்..

என்னதான் காட்டுக் கத்தலாக கத்தினாலும். தொண்டை வலிக்க சொன்னாலும் நமக்கு எடுபடுமா இந்த அறிவுரையெல்லாம். படிக்கும்போது மட்டுமே ஆ அப்படியா!... இனி கவனமாக இருக்கனும் என ஒரு மனம் சொல்லிக்கொண்டேயிருக்கும்போதே, உள்ளிருக்கும் இன்றொரு மனம் அட இவங்களுக்கு வேற வேலையேயில்லைப்பா. பின்ன எதுக்கு இதெல்லாம் கண்டுபிடிக்கிறாங்களாம் அதை புலக்கத்தில் விடுறாங்களாம். பாதிப்பு அவங்களுக்கில்லையே மத்தவாளுக்குதானேன்னு செய்வதெல்லாம் செய்திடுவாங்க. வருமானத்தையும் பெருக்கிகிடுவாங்க.இது இல்லாமல் ஒன்னுமே செய்யமுடியாது என மக்கள் வரும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு இப்படியெல்லாம் பயமுறுத்தி  நம்மை படுத்துறாங்கப்பா என சொல்லுமே..

இருந்தாலும் சொல்வது கடமை. ஏற்பதும் ஏற்காததும் அவரவரின் உரிமை. என்ன சரிதானே! நல்லவற்றை கேட்டாலும் பார்த்தாலும் உடனே மற்றவங்களுக்கு எடுத்துச்சொல்லிடனுமுன்னு நம்ம மனசு சொல்லும் அதான் நமக்கு வந்த மெயில்வழி செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன் உங்களோடு.. பிடிச்சிருந்தா ஏத்துக்கோங்க பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை படிச்சி வச்சிக்கோங்க எதுக்கும் உதவும்.....
 ---------------------------------------------------------------------------------- 

செல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் என விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில்,

‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும்.ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

  செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. செல்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு விஷயத்தில் மனித உடலில் ஊருடுவும் ரேடியோ அலைகளின் அளவுக்கு (ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேடி & எஸ்ஏஆர்) கட்டுப்பாடு உள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது

.குடியிருப்பு பகுதிகள் அதிகம் கொண்ட இடங்கள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள்,மருத்துவமனைகள் அருகே அதிக கதிர்வீச்சை வெளியிடக்கூடிய செல்போன் டவர்களை அமைக்கக் கூடாது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவு ஒரு கிலோவக்கு 2 வாட் மட்டுமே. சராசரியாக 6 நிமிடங்கள் போனில் பேசினால் வெளியாகும் அளவு இது. இதைவிட அதிக கதிர்வீச்சு கொண்ட செல்போன்களால் ரேடியோ அலைகள் அதிகளவில் வெளியாகும். எனவே, அனுமதிக்கப்பட்ட அளவை 2 வாட்டில் இருந்து அமெரிக்க தொலைத் தொடர்பு கமிஷன் வரையறுத்துள்ள 1.6 வாட்டாக குறைக்கவும் ஆய்வுக் குழு வலியுறுத்தியுள்ளது.செல்போன் மற்றும் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் குழு எச்சரித்துள்ளது.மூளை புற்றுநோய் தாக்கலாம் மும்பை ஐ.ஐ.டி. மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில்

 ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது என்றார்.  என்ன பாதிப்புகள்? செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.///

என்ன படிச்சாச்சா. சரி இனி என்ன செய்யலாமுன்னு யோசிச்சிகிட்டே நடையக்கட்டுங்கோ. இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்திச்சி செயல்படுங்க...

 என்றும் உங்கள் நலம் விரும்பும்
அன்புடன் மலிக்கா..

Monday, May 9, 2011

வெற்றிகள் குவியட்டும்..


இந்தபோட்டோவில் இருப்பது. எனது பெரிய மச்சான்.[மாமன் மகன். கணவரின் அண்ணன்.] அவர்களின் மகன். ஜெயினுல் அஸ்லம்.
இவர்   குமாரப்பாளையம் ஸ்ரீ வித்திய விகாஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் இவ்வருடம் 12 ஆம் வகுப்புத் தேர்வில்.
1200. மார்க்கிற்க்கு. 1134.மார்க  எடுத்துள்ளார்.

எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம்.மிக்க மகிழ்ச்சி.
ஜெயினுல் அஸ்லத்திற்க்கு.எங்களின் மன்மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். படிப்பில் இன்னும் பலநிலையில் முன்னேற இறைவன் அருள்புரிவானாக..வெற்றிகள் குவியட்டும்...

இன்று 12,ஆம்  வகுப்பு ரிசல்ட். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களைவிட அவர்களின் குடும்பங்கள்தான் என்ன எழுதியுள்ளார்களோ! எப்படி எழுதியுள்ளார்களோ!என்ன மார்க்க வருமோ! என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்திருப்பார்கள். இதோ இன்று அவர்களின் எதிர்பாப்புகளுக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கும்.

நல்ல மார்க் எடுத்து தேர்வான குழந்தைகளுக்கு  பதிவர்களின் சார்பாக நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில். சற்று குறைந்த மதிப்பெண்களை வாங்கிய குழந்தைகளுக்கு இனிவரும் காலங்களில் இன்னும் பயிற்ச்சியெடுத்து நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.

பெற்றோர்களுக்கு!.. தங்களின் குழந்தைகளிடம் முதலில் நல்ல நட்போடும் அன்போடும் அரவணைத்து, அவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கி  சாதனை படைக்க தூண்டுகோலாகவும்.ஏற்றம்காண ஏணியாவும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நச்சரித்துக்கொண்டேயிருந்தால் எரிச்சல்தான் வரும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து. அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதோர் வழியை காட்டவேண்டும்..

வாழ்த்துக்களுடன்
அன்புடன் மலிக்கா

Tuesday, April 19, 2011

நண்டுக் கறி..

நண்டு 1கிலோ
வெங்காயம் 3
தக்காளி 2
பச்சைமிளகாய் 5
கொத்தமல்லி
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
கரம் மசலா 1 ஸ்பூன்
சீரகம் சோம்புதூள் 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
தேங்காய் துருவல். 3/4 கப்
பாதாம்பருப்பு 15.20
பட்டை -லவங்கம்
உப்பு
ஆயில்

நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டாக போட்டுக்கொள்ளவும்.

தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும், பட்டை லவங்கம் போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். வதங்கியதும்,இஞ்சிப்பூண்டு பேஸ்டையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.அதுவும் வதங்கி வாசனை வந்ததும். பின்பு நண்டை அதனுடன் சேர்த்து சற்று பிரட்டி. பின்பு மசாலக்களை தண்ணீர்விட்டு  கரைத்து அதனுடன் சேர்த்து கொத்தமல்லியில் பாதியை அந்த கலவையுடன் சேர்த்து உப்பிட்டு மூடவும்.

கொதித்து வாசனை வந்ததும் திறந்து,பாதாமுடன் தேங்காப்பூவையும்போட்டு  மிக்ஸியில் நன்றாக அரைத்த விழுதை அதந்த நண்டுடன் சேர்த்துகிளறி சற்று வைத்திருந்துவிட்டு மீதமுள்ள கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நண்டுக்கறி ரெடி

இது மிகவும் ருசியாக இருக்கும் சாதம். மற்றும் சப்பாத்தி. பரோட்டக்களுக்கு மிகவும் ஏற்றது.
நாங்களெல்லாம் 10 கிலோ தந்தாலும் அப்படியே சாப்பிடுவோமுல்ல
                                                 அதுவும் ரசித்து ருசித்து.
                                                 எப்புடியிருக்கு நானும் ஸ்ரீராமும் நண்டு சாப்பிடுவது..
போதுமா நாங்க துண்ணது? ஹா ஹா

Sunday, April 3, 2011

பெண்களில் விரலில் இவ்வளவு இருக்கா!


Ladys finger reduces cholesterol - Food Habits and Nutrition

ஓடோடி வந்தவர்களுக்கு: பெண்களின் விரல்களில் எவ்வளவு பயன் இருக்கு என்பதை அறியத்தருகிறேன் படித்து பயன் பெறுங்கள்..

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
வரலாறு:
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
வகைகள்:
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
விசேஷ குணம்:
வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
வாங்குவது எப்படி?:
இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.
பாதுகாப்பு:
ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
சமைக்கும் போது கவனிக்க:
இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.
மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து:
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

இத்தகவல் நமக்கு மெயிலில் வந்தது. பலரும் பயனடைய இங்கே பதிவிட்டுள்ளேன்

அம்மாடியோ இவ்ளோ இருக்கா இந்த பெண்களின் விரல்களில். இனி விட்டுவைக்கலாமா விரலை வெட்டாமலே சாப்பிட்டுவிடலாமே.
அதாங்க கழுவிவிட்டு அப்படியே சாப்பிடலாமுன்னு சொல்கிறேன் சரிதானே..

என்ன எங்கே கிளம்பிட்டீங்க கூடையை எடுத்துகிட்டு ஓ விரல் வாங்கவாவ அதுவும் பெண்களின் விரல். ம்ம்

அன்புடன் மலிக்கா

Saturday, March 5, 2011

உருளை கட்லெட்..

பெரிய உருளைகிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
முட்டை 2
சோளமாவும் ரவாவும் தேவையான அளவு
உப்பு
சீரகப்பொடி 1.ஸ்பூன்
மிளகாய்தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
ஆயில் பொரிதெடுக்க
உருளைக்கிழங்கை முக்கால் வேக்காடக வேகவைத்து அதை சற்று பிசைந்து பொடியாக நறுக்கிய
வெங்காயம். பச்சைமிளகாய். கொத்தமல்லி இலை. மிளகாய்பொடி சீரகசோம்புப்பொடி உப்பு ஆகியவைகளைசேர்த்து பிசைந்து கொண்டு
இதுபோல் உருண்டை பிடிக்கவும்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதில்
இந்த உருண்டையை முக்கியெடுத்து-பின்பு 
                                                       சோளமாவு மற்றும் ரவாவாவையும் கலந்துகொண்டு அதில் பிரட்டி.
ஆயில் சூடானதும் மிதமாக தீயை வைத்து, மெதுவாக ஆயிலில்போட்டு உடைத்துவிடாமல் பக்குவமாக திருப்பிபோட்டு
பொன்முறுவலாக சிவந்ததும் எடுக்கவும்
இப்போது சூடான சுவையான கட்லெட் நொடியில் ரெடியாகிவிடும். அப்படியேவும் சாப்பிடலாம். சாஸ், மற்றும் மயோனஸ், அல்லது பூண்டு சட்னியுடனும், தொட்டு சாப்பிடலாம்..
அன்புடன் மலிக்கா..


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.