அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, June 21, 2011

என்று வரும் எங்கள் பாடம்.


கல்வி கண் போன்றது. 
ஆனால் ஒளிகொடுக்கவேண்டிய கல்வியே இன்று ஒளியற்றல்லவா கிடக்கிறது
சமரசமில்லாமல் போனதால்  சமச்சீர்க் கல்வி சடுகுடு ஆடப்படுகிறதோ?அப்படியானால்
குழந்தைகளில் எதிர்கால கல்வியின் நிலைபாடுதான் என்ன?


ஏற்கனவே தாமதமாக திறக்கபட்ட பாடசாலைகளில் தற்போது எவ்வித கற்ப்பித்தலும் இல்லாமல் குழந்தைகள்  போவதும்  பள்ளிக்கூடங்களில் சும்மா இருந்து வருவதுமாக உள்ளார்கள். பாடங்கள் நடத்தவேண்டிய நேரத்தில் பாடபுத்தகமில்லாமல் வெறுமினே விளையாடிக் களித்துவிட்டு வந்தால்  அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?

இதற்கு எப்போது ஒரு முடிவுவரும் அதுவரை குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு விளையாடி வரத்தான் அதிகாலையில் எழுந்து அடித்துப்பிடித்து அவசர அவசரமாக அனைத்து பணிகளும் செய்து அவர்களை பள்ளிக்கு அனுப்புவது.  இதேநிலையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு செல்லவேண்டிவருமென்றே அறியாமல் பெற்றோரும் குழந்தைகளும் அல்லல்படுவது சரியா?

கல்விக்கூடங்கள் திறந்தபின் இந்நிலை நீடிப்பது சரியானதா?  கல்வியின் அவசியத்தை வழியுறுத்தும் அரசே! அதனை இந்த நிலைக்கொண்டு வந்திருப்பதுதான் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. குழந்தைகளின் கல்வி நலனில் அக்கரைகொண்டு அதிவிரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்குமா? 

இப்படிக்கு 
கல்விக்காக காத்திருக்கும்  பெற்றோர்கள் சங்கம். பெற்றோர்கள் சங்கத்தில் நீங்களும் இருக்கீங்களா? கருத்துக்களை பகிரவும்..

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோன்ற நாட்களில் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியையும், நீதி போதனை வகுப்புக்களையும் நடத்தலாம்.

பாடப்புத்தகத்தில் உள்ளது தான் கல்வியா? சுத்தம், சுகாதாரம், சுற்றுச்சூழலைப்பராமரித்தல், போக்குவரத்து விதி முறைகள், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகள், அன்பு, உண்மை, நேர்மை என கற்கவேண்டியவைகளும், கற்பிக்க வேண்டியவைகளும் ஏராளமாக உள்ளனவே.

ஆனால் ஒன்று, இதை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு, இந்தப்பாடங்கள் பற்றியெல்லாம் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டுமே!

நல்ல பதிவு. என்றைக்கு விடியுமோ!

மதுரை சரவணன் said...

viraivil arasu mudivedukkum.. ippothu muthal marrum aaraam vakuppukkalukku paata puththakangkal viniyokikkappattullana..

நிரூபன் said...

அரசியல் எனும் கால்களுக்கு நடுவே, புட்பாலாக மாணவர்களின் வாழ்வு,
சமச்சீர் கல்வி பற்றிய ஜெயலலிதாவின் இறுமாப்பினால் பாதிக்கப்படப் போவது அப்பாவி மாணவர்கள் தான்.

சங்கவி said...

நிச்சயம் நல்ல கல்வி விரைவில் கிடைக்கும் என நம்புவோம்... நம்பிக்கைதானே வாழ்க்கை....

ஹுஸைனம்மா said...

இதுலயும் நமக்கு நாமே திட்டம்தான் பெஸ்ட் போல!!

A.R.ராஜகோபாலன் said...

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம்
மாணவ மாணவியரின் பாடுதான் படு மோசம்
என்று மாறும் இந்த இழி நிலை
கல்வியும் அரசியலாக்கப் பட்டதனால் வந்த கொடுமை இது

புலவர் சா இராமாநுசம் said...

பழைய கள்ளு புதிய மொந்தை

அம்மைக்கு பிடித்து ஈகோ-அதுவரை
பசங்க பாக்கடும் போகோ

அவ்வளவுதான்-----

புலவர் சா இராமாநுசம்

சே.குமார் said...

என்றைக்கு விடியுமோ?

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.