அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, June 30, 2011

கொடுவா கருவாட்டுத் தொக்கு

என்ன தொக்கை பார்த்ததும் நாவில் நீர் ஊறுதா? இல்லை மூக்கில் நாத்தம் ஏறுதா? அதெல்லாம் உங்களை பொருத்துதான் அதுக்கெல்லாம் கலைச்சாரல் நிர்வாகம் பொருப்பாகாது சொல்லிப்புட்டேன்.. ஆமா
தேவையானவைகள்
கொடுவாக் கருவாடு துண்டு 4
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 4
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 1  ஸ்பூன்
மஞ்சள் பொடி1 ஸ்பூன்
சீரகம் சோம்பு பொடி 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி
ஆயில் 2 ஸ்பூன்
உப்பு வேண்டாம் கருவாட்டில் இருக்கும்

 கருவாடை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி க்கொள்ளவும்.தக்காளி. வெங்காயம்.பச்சை மிளகாய்  அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும்,

ஒரு பவுலில் துண்டாக்கிய கருவாடு. மற்றும் அரிந்துவைத்துள்ள தக்காளி வெங்காயம் மற்றும் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட், ஆகியவற்றை ஒன்றாக சேர்வது போல் கலந்துகொண்டு
.  அடுப்பில் கடாய்வைத்து ஆயில்விட்டு சூடானதும் இந்த கலவையை அதில்போட்டு கிளறிவிட்டு மூடி வைக்கவும். திறந்தும் இருக்கலாம்[அப்புறம் வாசம் பக்கத்து வீடுக்கு மட்டுமல்ல பத்தாவது வீட்டுக்கும் அடிக்கும் அதுக்கு நான் பொருப்பல்ல] ஒரு 3 நிமிடத்தில் வாசத்தோடு ஆயில் பிரிவதுபோல் தளதளன்னு வந்திடும். அப்படி வரும்போது அடுப்பை மிதமாக்கி நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு 2 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்..

கமகம கருவாட்டுத்தொக்கு ரெடி.

சும்மா சுடுசோறும் ரசம் அல்லது மோர் வைத்துக்கொண்டு ஒரு வெட்டு வெட்டலாம்.

இது சைவக்காரங்களுக்கு அலர்ஜியாம் அதனால் இங்க வந்து எட்டிபார்த்துவிட்டு நாத்தம் அப்படினெல்லாம் மூக்கை பொத்திக்கொண்டு ஓடப்புடாது ஓகே..
அடுத்த தபா உங்களுக்கு பிடிச்ச  சைவக்கறி சமச்சிப்போடுறேன் சரியா என்ன நம்ம டீல் ஓக்கேதானே!

20 comments:

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து தொக்கு செய்ததில்லை...செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு...

அன்புடன் மலிக்கா said...

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து தொக்கு செய்ததில்லை...செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு...//

வாங்க கீத்து நலமா.. செய்து பாருங்க சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க டேஸ்ட் எப்படியிருந்ததுன்னு..

மிக்க நன்றி கீதா..

குணசேகரன்... said...

பதிவும் படமும் அருமை

'பரிவை' சே.குமார் said...

அக்கா... கருவாட்டு செய்முறை படிக்கையில் நாவில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை.

காஞ்சி முரளி said...

இதாம்பா...!
இந்த முத்துபேட்ட, அதிரை, கமுதி, கீழக்கர ஆளுங்ககிட்ட....!

சாதம் இல்லாட்டியும்....
தம்முனா துண்டு கருவாடு பீஸ் இருக்கோணம்....!

இல்லன்னா..! சாப்பாடு இறங்காது...!

நமக்கு....!
ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....!
ஆள விட்டா போதுமடா சாமி.............!

அன்புடன் மலிக்கா said...

//குணசேகரன்... said...

பதிவும் படமும் அருமை.//

அப்ப கருவாடு பிடிக்கும் குணாவுக்கு வெரிகுட்.. நன்றி குணா..

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...

அக்கா... கருவாட்டு செய்முறை படிக்கையில் நாவில் எச்சில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை.//

அடடா தம்பிக்கு கொடுக்கமுடியாம்போச்சே. சரி அடுத்தமுறை செய்யும்போது கொடுத்தனுப்புறேன்..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...

இதாம்பா...!
இந்த முத்துபேட்ட, அதிரை, கமுதி, கீழக்கர ஆளுங்ககிட்ட....!

சாதம் இல்லாட்டியும்....
தம்முனா துண்டு கருவாடு பீஸ் இருக்கோணம்....!

இல்லன்னா..! சாப்பாடு இறங்காது...!//

இவ்ளோ நல்லா தெரிஞ்சி வச்சிருக்கியலே சாமி.. பாவம் அவங்க ருசிக்கு அவங்க துண்ணுராங்க அதுகுமா பொறுக்கல..

//நமக்கு....!
ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....!
ஆள விட்டா போதுமடா சாமி....//

நில்லுங்க சாமி ஓடாதேள். ஓடாதேள். அண்ணிகிட்ட சொல்லி உங்களுக்கு மட்டும் சமைக்கவேணாமுன்னு சொல்லிடுறேன்..

ஜெய்லானி said...

ஆஹா..கருவாடு வாசனை ஆளை தூக்குதே இன்னும் இருக்கா ?

இனியன் பாலாஜி said...

பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுது. ஆனால் நான் சாப்பிட முடியாதே.என் மனைவி ஒரு சைவம். நன்றாக இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்கள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லவும்.
iniyan balaji

மாலதி said...

பதிவும் படமும் அருமை

அம்பாளடியாள் said...

அருமையான சமையல்க் குறிப்பு .மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும்
சிறப்புற .............

Unknown said...

அருமையான சமையல் குறிப்பு. படத்துடன் சொல்லியது ரொம்ப அருமை. என் போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுடையது. மேன்மேலும் இது போன்று பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...

ஆஹா..கருவாடு வாசனை ஆளை தூக்குதே இன்னும் இருக்கா ?//

இருக்கு இருக்கு ஓடிவாங்க இங்கே..

அன்புடன் மலிக்கா said...

பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுது. ஆனால் நான் சாப்பிட முடியாதே.என் மனைவி ஒரு சைவம். நன்றாக இருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் உங்கள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். உங்கள் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லவும்.
iniyan balaji//

வாங்க பாலாஜி ஜி அவர்களே எப்படியிருக்கீங்க நலமா எங்கள் வீட்டில் அனைவரும் மிகுந்த நலம்.

தங்கள் வீட்டில் அனைவரும் நலமா? ஏன் அடிக்கடி வருவதில்லை. தங்கள் வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா said...

மாலதி said...

பதிவும் படமும் அருமை//

மிக்க நன்றி மாலதி..

//அம்பாளடியாள் said...

அருமையான சமையல்க் குறிப்பு .மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும்
சிறப்புற .............//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி....

அன்புடன் மலிக்கா said...

க‌.அசோக்குமார் said...

அருமையான சமையல் குறிப்பு. படத்துடன் சொல்லியது ரொம்ப அருமை. என் போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுடையது. மேன்மேலும் இது போன்று பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//

வாங்க அசோக். தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

தங்களின் எதிர்பார்ப்பின்படி..நிச்சயமாக எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை மற்றும் பகிர்வுகளை பகிர்ந்துகொள்வேன்..

ஜெய்லானி said...

//இருக்கு இருக்கு ஓடிவாங்க இங்கே.//

பாருங்க குசும்பை.... போகும் போது ஃபிரிட்ஜாவது விட்டுட்டு போய் இருப்பீங்களா ..!! அவ்வ்வ்வ்வ்

அன்புடன் நான் said...

எளிமையான செய்முறையும் தெளிவான படமும் பிடித்திருந்தது.

Jaleela Kamal said...

வாசம் ரொம்ப வே மூக்கை துளைத்து விட்டது

எல்லா குறிப்பும் இணைத்து விட்டேன் வந்து பாருங்கள்

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.