அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, October 12, 2011

வெங்காயம் தெரியுமா? வெங்காயம்.


 வெங்காயம் தெரியுமா வெங்காயம் அதாங்க ஆனியன். வேணா மலிக்கா வேணா அழுதுருவோம் அப்படிங்கிறீங்களா!  சரி சரி. அந்த வெங்காயத்தின் பலன்களை பலரும் பலவித சொல்லியிருக்காங்க இதோ இப்படியும் சொல்லியிருக்காங்களாம் என்னான்னு பார்த்து அதன் பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
 ------------------------------------------------------------------------
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
 
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
 
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
 
[நமக்கு மெயிலில் வந்தது உங்கள் பார்வைக்கும். ]
 
என்ன 50 தையும் படிச்சி மனதுக்குள் புதைச்சாச்சா.  இனி அப்படியே சாப்பிட்டாலும் சரி இல்லை இப்படியே சாப்பிட்டாலும் சரி அதன் குண நலன்கள் நமது நலன்களை கவனித்துக்கொள்ளும்..
டிஸ்கி// வெங்காயமே பிடிக்காதுப்பா அப்படிங்கிறவங்களுக்காக! அதை பிடிக்கவைக்சீக்கிரம் ஒரு கருவிமூலம் வெங்காயபேபி கண்டுபிடிக்கபோறாங்களாம். பேபின்னா எல்லாருக்கும் பிடிக்குமுல்ல அதான் எப்புடி [யாரு கண்டுபிடிக்கபோறாங்கனெள்ளாம் கேட்கக்கூடாது அது பரம ரகசியம்.]

21 comments:

ராமலக்ஷ்மி said...

வெங்காயம் நல்லதெனத் தெரியும். ஆனால் இத்தனை நல்லதென உங்கள் பகிர்வின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!

Kannan said...

வெங்காயத்தை பற்றி நன்கு புரிந்து கொண்டேன்.........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

சே.குமார் said...

வெங்காயம் நல்லதுன்னு தெரியும்.... ஆனா இம்புட்டுப் பலன் இருக்கா... நல்ல பகிர்வு.

Jaleela Kamal said...

வெங்கயாம் வெங்காயம் தான்
ஆனால் என் சமையலுக்கு வெங்காயம் இல்லாம சான்சே இல்லை.
ஏற்கனவே மெயில் வந்திருந்தாலும்
இங்கு பதிந்து வைபப்தால் எப்ப வேனுமுன்னாலும் பார்த்துக்கலாம் இல்லையா

என்ன ஆச்சி நான் சொன்ன விஷியத்த பற்றி ஒரு மெயில் பதிலும் காணுமே

DrPKandaswamyPhD said...

கருப்பு பேக்ரவுண்டல வெள்ளை எழுத்து பிரமாதமாய் இருக்கும்னு யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க சொல்லியிருக்காங்க போல இருக்குதுங்க.
நல்லாத்தான் இருக்குங்க. ஆனா படிக்கத்தான் முடியலீங்க.

சத்ரியன் said...

வலைப்பக்கத்தின் பின்புலத்தில் இத்தனை வகை பழங்களா? பாக்கவே சாப்பிடனும் போல தோனுதே!

வெங்காய பதிவு வேற நிறைய தகவலை அள்ளி வீசியிருக்கு.

புலவர் சா இராமாநுசம் said...

வெங்காயத்தில் இத்தனைப்
பலனா
நம் காயம் சுகப்படவே
வெங்காயம் சாப்பிடுவீர்
நன்றி மல்லிகா!

புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் said...

ஓட்டுப் போட்டும் பதிவாக
இல்லையே ஏன்

புலவர் சா இராமாநுசம்

thirumathi bs sridhar said...

ivlo visiyam irukkaa?.pakirvirku nanri sakothari

மாய உலகம் said...

வெங்காயம் என்று சாதாரணமாக சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் இவ்வளவு பயன் இருக்கிறது என்று தங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்... பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

//14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.//

நான் மூக்கு பொடி வைக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது ...அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//DrPKandaswamyPhD said...

கருப்பு பேக்ரவுண்டல வெள்ளை எழுத்து பிரமாதமாய் இருக்கும்னு யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க சொல்லியிருக்காங்க போல இருக்குதுங்க.
நல்லாத்தான் இருக்குங்க. ஆனா படிக்கத்தான் முடியலீங்க.//

ம்..ஆமா கண்ணைக்கூசுது யுவர் ஹானர் .

அன்புடன் மலிக்கா said...

அன்புமிக்க உறவுகளின் கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா said...

ஆகா இப்பதான் நெறைய பேருக்கே தெரிந்ஞ்சிருக்கா. இதில் இவ்ளோ விசயமிருக்குன்னு. அல்லாரும் நம்மலபோலதான்போல.

அன்புடன் மலிக்கா said...

DrPKandaswamyPhD said...

கருப்பு பேக்ரவுண்டல வெள்ளை எழுத்து பிரமாதமாய் இருக்கும்னு யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க சொல்லியிருக்காங்க போல இருக்குதுங்க.
நல்லாத்தான் இருக்குங்க. ஆனா படிக்கத்தான் முடியலீங்க.//

டாக்டருக்கே வெள்ளெழுத்து புடிபடலையா.

அந்த நல்லவங்க யாருன்னு சொல்லிடட்டா உங்களுக்கு சிங்சாங் போட்டிருக்காங்கள்ல ஒரு பச்சக்கலரு அவுகதான் அந்த வேஏஏஏஏஏஎண்டியவங்க..

அன்புடன் மலிக்கா said...

//ஜெய்லானி said...

//14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.//

நான் மூக்கு பொடி வைக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது ...அவ்வ்வ்வ்//

உங்களப்போல இருக்கும் ஆளுக்கு வெங்காயவெடியை வைக்கலாமுன்னு நெனக்கிறேன் எப்புடி..

அன்புடன் மலிக்கா said...

வருகை தந்து கருத்துக்கள் பகிர்ந்து வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி..

Cpede News said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் பதிவெழுதியிருக்கும் உங்களுக்கு இனிய வரவேற்பும் வெங்காயம் பற்றிய உபயோகமான பதிவிற்கு அன்பான பாராட்டுக்களும்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பயனுள்ள தகவல்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.