அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, November 29, 2009

கலவை பூரி



/தேவையானவை/


இடியப்பமாவு 2 கப்
கோதுமை மாவு 2 கப்
உப்பு
ஆயில்
சிறிதளவு சோடாப்பு அல்லது ஜீனீ



இரு மாவையும் கலந்து அதில் உப்பு சோடாப்பு சேர்த்து தண்ணீர் விட்டு  நன்றாக பிசைந்து கொள்ளவும்

பின்பு உருண்டைகள் போட்டு அதை இதேபோல்



சப்பாத்திகட்டையால், அல்லது பிரஸிங் மூலம் நிறைய செய்துகொள்ளவும்

கடாயில் ஆயில் விட்டு சூடானதும்


                                                       ஒன்று ஒன்றாக போட்டு


                                            இதுபோல் இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்


                                                     
சுவைமிகுந்த பூரி ரெடி!



குழந்தைகள் சிறிய பூரியில் உள்ளுக்குள் கிழங்குவைத்து சாப்பிட விரும்புவார்கள் அவர்களுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்


இதற்கு உருலைகிழங்கிலும் சைடிஸ் செய்யலாம். பூசணிக்காவிலும் செய்யலாம்..

அன்புடன் மலிக்கா

Tuesday, November 24, 2009

மீன் கூட்டு


தேவையானைவை


ஷாஃபி மீன் 2 பெரியது

தக்காளி 1 பெரியது

சிறிய வெங்காயம் 10

பச்சைமிளகாய் 3

கரம் மசாலா 1 டேபிள்ஸ்பூன்

மிளகுதூள் 1ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 ஸ்பூன்

சோம்பு சீரகம் வறுத்து பொடித்தது 2 ஸ்பூன்

கொத்தமில்லை

உப்பு ஆயில்

தாளிக்க

உளுந்து கடுகுகறுவேப்பில்லை....


மீனை நன்றாக சுத்தம்செய்து [தலையை தவிர்த்துவிட்டு]
மீனை உப்பும் மஞ்சலும் சேத்து தண்ணீர்கொஞ்சமாக வைத்து
10 நிமிடம் வேகவைக்கவும் வெந்ததும்

அதன் முட்களை எடுத்துவிட்டு உதிர்த்து வைக்கவும்
ஒரு கடாயில் ஆயில் விட்டுகடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து கருவேப்பில்லை

கட்செய்த வெங்காயம் தக்காளி பூண்டு ப,மிளகாய் சேர்த்து வதக்கி மசாலாக்கலையும் உப்பும் சேர்த்து கிளரவும்

அது வதங்கியது [அடுப்பை சிம்மில்வைத்து] உதிர்த்து வைத்திருக்கும் மீனைபோட்டு மெதுவாக கிளரவும் அந்த கலவையுடன் செட்டாகும்பதத்தில் கொத்தமல்லி தூவி பரிமாரவும்..

இந்த மீன் கூட்டு மிகுந்த சுவையாக இருக்கும்
இதை வெரும் ரசம்வைத்து சாதத்துக்கூட சாப்பிட டேஸ்டாக இருக்கும்
சப்பாத்தி, நாண்  கூடவும் சாப்பிடலாம்..

அன்புடன் மலிக்கா

Sunday, November 22, 2009

மரவல்லிக்கிழங்கு அடை

                                                         தேவையனவை

மரவல்லிக்கிழங்கு 1/2 கிலோ
முட்டை 2
தேங்காய் 1 கப்
இடியப்பமாவு 1 கப்
ஜீனீ தங்களின் விருப்பத்திற்கேற்ப
உப்பு சிறிது
நெய் சுட்டெடுக்க




முதலில் ம.கிழங்கை சிறிதாக நருக்கி மிக்சியில் இடவும்


அதனுடன் முட்டை ஜீனீ உப்பு சேர்த்துகொள்ளவும்

கொரகொரப்பாக அரைத்துகவும்

கொஞ்சம் கெட்டியாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

பின்பு ஒருநான்ஸ்டிக் ஃபிரேபேனில் 1 ஸ்பூன் நெய்விட்டு

கட்டை தோசைப்போல் ஊற்றவும்

[அடுப்பை சிம்மில் வைத்து] மூடிவைக்கவும்


                                                        
பின் திறந்து திருப்பிபோட்டு 2 பகுதியும் நன்றாக வேக விட்டுஎடுக்கவும்

இது மாலைநேர டிபனுக்கு நல்லது

                                    குழந்தைகள் விரும்பிசாப்பிடுவார்கள்
                                                                               

இதையே காலை டிபனுக்கு செய்யம் போது ஜீனீயை தவித்து
வெங்காயம் ப,மிளாகாய் நைசாக அரிந்துபோட்டு ஆயில்விட்டு
தோசைபோல் வார்த்தெடுக்கலாம்..

அன்புடன் மலிக்கா




Friday, November 20, 2009

கொங்கு மீன் வறுவல்


தேவையானவை

மீன் 6 [விருப்பமுள்ள மீன்]
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு
ஆயில் 2 ஸ்பூன்
கொங்கு மசாலா 2 ஸ்பூன்

[கொங்கு மசாலாவுக்கு மிளகு நிலக்கடலை கருப்பு எள்ளு
சேர்த்து அரைத்துக்கொள்ளவும்]

மீனின்மேல் லைட்டாககீறிக்கொண்டு மசாலாக்களையும் உப்பையும்சேர்த்து பிரட்டி
தோசைக்கல்லில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு மீனைபோட்டு
இருபுறமும் பொறியவிட்டு எடுக்கவும்
இது சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சிறிய மீன்களுக்கு சுவை கூடுதலாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

Wednesday, November 18, 2009

லேஸ் நெக்லஸ்




தேவையானவை


                                                   நைலான் லேஸ்
                                     முத்து மணிகள் தேவையான கலரில்
                                                       வலையன்கள்
                                     நரம்பு [அல்லது பொடி கம்பிகள்]
                                                       சிறிய டாலர்
                                                            ஹூக்{கொக்கி}


                                                              
                       
நைலான் லேஸில் முதலில் டாலரை கோர்கவும்
 

                  பின்பு அது இரண்டாகபடத்தில் காட்டியப்படி மடிக்கவும்
                                                            
நரம்புகளில் மணிகளைக்கோர்த்துக்கொள்ளவும் அதை வலையன்களில்
நம் எண்ணங்களுக்கேற்றபடி மாட்டிக்கொள்ளவும்



                                                           
அதில் வலையன்களில் மாட்டிவைத்திருக்கும் மணிகளை
               இதனுடன் முதல் வலையனில் கேப் இருப்பதைபோல் அதனுடன்
                                                                 இணைக்கவும்
                                                                                   

இப்படி சேர்த்து கடைசியில் நுணி லேஸில்முனையில் சிறிது மடித்ததுபோல்ஒரு வலையனை மாட்டவும் மறு முனையும்


 அதேபோல்
 செய்து
                                                    ஹூக்கை மாட்டவும்


இப்போது அழகிய லேஸ் நெக்லஸ் ரெடி இதேபோல் பலவண்ணங்களில் ஆடைகளுக்கேற்ப நாமே செய்துகொள்ளலாம்
                                                           

நான் ஏற்கனவே செய்த முத்துமணி தொங்களுக்கு இது பொருதமாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

Tuesday, November 17, 2009

இடியப்பசோறு



தேவையானவை

ரெடிமேட் இடியப்ப பாக்கட் 1

பெரிய வெங்காயம் 1

தக்காளி பாதி

கருவேப்பில்லை

பட்டை, பிரிஞ்சி இலை

கொத்தமல்லி

உப்பு

ஆயில்

முட்டை

சீரகத்தூள் 1 டீஸ்பூன்





செய்முறை

இடியப்ப பாக்கட்டை 2 நிமிடம் வெண்ணீரில் போட்டு வடித்துவிட்டு
 ஒரு கடாயில் ஆயில் விட்டு அதில் பட்டை பிரிஞ்சி இலைபோட்டு வாசம்வந்ததும் நறுக்கியவெங்காயம் தக்காளி கருவேப்பில்லையையும்போட்டு
வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளரவும் உப்பும் சீரத்தூளும்போட்டுசேர்த்துகிளரவும் அதுவதங்கி வரும்போது வடித்துவைத்துள்ள இடியப்பத்தை அதில் சேர்த்து கிளரவும் எல்லாம்சேர்வதுபோல் கிளரிவிட்டு கொத்தமல்லிதூவி பரிமாறவும்





[5 அல்லது 7 நிமிடத்தில் தயராகிவிடும்]
வீட்டில்சுட்ட இடியப்பத்துலும் 5 எடுத்து அதை தேங்காப்பாலில் நனைத்தும் இதுபோல் செய்யலாம்

Saturday, November 14, 2009

ஜம்கி டிஷைன்





                                                               தேவையானவைகள்
                                                                           டிரஸ்

                                                                     அயனிங்பூக்கள்,

                                                                          ஜம்கிகள்,


                                                                        ஊசிநூல்,

                                                                   அயன் பாக்ஸ்

                                                                  பிளாக் செயின்
 


உங்களுக்குபிடித்த டிஷைன்களை முதலில் வரைந்தும் கொள்ளலாம், அதற்க்கு மேல் ஜம்கி வைத்து 2 பக்கமும் தைக்கவும்

  படத்தில் இருப்பதைபோல் கழுத்தை சுற்றிலும் வைக்கலாம்


இதனைப்போல் பூக்களாகவும் வரையலாம்


செயினை எடுத்து அதனை 4,காக மடிக்கவும்


அதனை பூக்களின் நடுவில்வைத்து தைக்கவும்


                                                         இப்போது அழகியபூரெடி




                                                            இது கை பகுதி

டிரஸ்ஸை தைத்துக்கொண்டும் வேண்டும், இப்படி நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி டிஷைன் செய்யலாம்


முதலில் டிரஸ்ஸை தைத்துக்கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்வேண்டுமோ அதில் இதுபோல் அயன் செய்யலாம்
இதுபோல் பேப்பர்போட்டு அயன் செய்யவும்


படத்தில் காட்டியப்படி பூவைத்து அதன்மேல் அயன்செய்யவும்


அந்தபூவின் மூலையும் சிறிய செயின் தொங்கவிடவும்



இது நான் தைத்துவிட்டு அதன்பிறகு டிஷைன் செய்தது


இது எந்தவைகையான டிரஸுகளுக்கும் இதுபோன்று நாம் டிஷைன் செய்துகொள்ளலாம்.

அன்புடன் மலிக்கா
                                                              

Tuesday, November 10, 2009

தோழமைகளே வாருங்கள்

இதனால் நான் சகலமானவர்களுக்கும்தெரிவிப்பது என்னெவென்றால்
நம்ம சமையல் ராணி சகலகலா கலக்கல்.
என் அன்பு ஜலிலாக்கா
எனக்கு இரண்டு விருது கொடுத்திருக்காங்க.
அவங்க எனக்கு விருதுகொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கம்கொடுத்து
கெளரவப்படுத்தியமைக்கு
மிகுந்த மகிழ்ச்சி  மிக்க நன்றிஜலீலாக்கா....



இத நாமலேவச்சிருந்தா எப்படி நம்முடைய தோழமைகளுக்கும் கொடுத்து உற்சாகப்படுத்தனுமுன்னு முடிவுபண்ணினேன்,

அதனால்
இதோ இந்த விருதை என் தோழமைகளான

சாருக்கா [ஏன்க்கா குறிப்பு போடுவதில்லை மீண்டும் கோலக்குறிப்பை ஆரம்பிங்க]

ஆசான், அன்புடன் புகாரி

வெண்ணிற இரவுகள் கார்த்திக்

க பாலாஜி

வானம்பாடிகள்

பாக்தாதிலிருந்து பூங்குன்றன்

ஹேமா

புலவன் புலிகேசி

[மனவிலாசம்] நவாஸுதீன் அண்ணா

ஷபீக்ஸ்

பூங்குழலி

பல்சுவை நிஜாமுதீன் அண்ணா

அனைவரும்வந்து பெற்றுக்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

எல்லாரும் அவங்க அவங்க திறமைகளை வெளிக்கொண்டுவர இந்தவலைபூக்கள் ஒரு பாலமாக அமைகிறது
அனைவருக்குள்ளும் திறமைகள் இருக்கு அதை வெளிப்படுத்த ஒரு வழிகிடைத்தால் போதும் புகுந்துவிளையாடிவிடலாம்..

 நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள
நல்ல சிந்தனைகள் வெளியில் வர
நாம் அனைவரும் முயற்ச்சிபோமாக!!




இது எனக்கே எனக்காம்  [ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.