அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, November 20, 2009

கொங்கு மீன் வறுவல்


தேவையானவை

மீன் 6 [விருப்பமுள்ள மீன்]
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு
ஆயில் 2 ஸ்பூன்
கொங்கு மசாலா 2 ஸ்பூன்

[கொங்கு மசாலாவுக்கு மிளகு நிலக்கடலை கருப்பு எள்ளு
சேர்த்து அரைத்துக்கொள்ளவும்]

மீனின்மேல் லைட்டாககீறிக்கொண்டு மசாலாக்களையும் உப்பையும்சேர்த்து பிரட்டி
தோசைக்கல்லில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு மீனைபோட்டு
இருபுறமும் பொறியவிட்டு எடுக்கவும்
இது சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
சிறிய மீன்களுக்கு சுவை கூடுதலாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

18 comments:

Sammy said...

சிறிய மீன் பேர், ரெண்டு முனு சொல்லுங்களேன்......பேர் மட்டும் சொன்னீங்கனா ...அடுத்து ஆத்து மீனா ? கடல் மீனா ? அப்படினும் கேட்பேன். ஏதோ பார்த்து கொஞ்சம் சொல்லுங்க. நமக்க ரொம்ப பிடிச்ச டிஷ் :-)

S.A. நவாஸுதீன் said...

Print எடுத்து வச்சிட்டேன். பெருநாள் லீவ்ல உபயோகப்படும். நன்றி

அன்புடன் மலிக்கா said...

சின்னமீன் பெயரா?

கெண்டை

வெல்லாம்

கத்தாழை [இதுவும் மீன் பெயர்தான்]

நெத்திலி..

ஏன் சம்மி என்ன வம்புல மாட்டிவிடத்தானே கேட்டது [ஏன்னா எனக்கும் மீன் பெயரெல்லாம் தெரியாதுங்கோ சின்ன மீனுன்னா சின்ன மீனுதான்]

முதல் வருகைக்கும் என்னை அழக்காய் மாட்டிவிட்டதற்க்கும் மிக நன்றி தொடர்ந்து வாங்கோ.

அப்புறம் நாங்க ஆத்துமீன் குளத்துமீனெல்லாம் சாப்பிடமாட்டேங்கோஓஓஓஓஓ

ஒன்லி கடல் மீன்தான்..[எப்படி நம்ம எஸ்கேப்பு].

பிரபாகர் said...

சகோதரி,

மீன் வறுவல் செய்து சாப்பிட்டுவிட்டு பார்த்தால்... உங்கள் இடுகை... கொஞ்சம் முன்னமே பார்த்திருந்தால்... ம்... இனி அடுத்த வாரம்தான்...

பிரபாகர்.

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு மீன் வறுவல்.அடுத்த முறை நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

கருவாச்சி said...

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"

நாங்க எல்லாம் கண்மாய மொத்தமா குத்தகைக்கு எடுத்து எல்லா மீனையும் சாப்ட்டவய்ங்க மலிக்கா

Geetha Achal said...

மீன் வறுவல் நல்லா இருக்கு மலிக்கா அக்கா.

கொங்கு மசாலாவினை செய்ய பொருட்கள் கொடுத்து இருக்கின்றிங்க..

அதனுடைய அளவினையும் கொடுத்தால் நல்லா இருக்கும்..மிளகு, வேர்க்கடலை, எள்ளு எல்லாம் எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும்.

அக்பர் said...

இப்படியும் மீன் ஃப்ரை பண்ணலாமா.

கொங்கு மசாலா இப்பதான் கேள்விப்படுதேன்.

ஸாதிகா said...

பார்க்க நன்றாக உள்ளது.சேர்த்து இருக்கும் மசாலா சுவையைக்கூட்டும்.

Jaleela said...

ஒரு விபெரெண்டான மீன் வறுவல் ரொம்ப அருமை மலிக்கா

என் பகுதிக்கு வாங்க ஜோக் போட்டு உள்ளேன்

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
Print எடுத்து வச்சிட்டேன். பெருநாள் லீவ்ல உபயோகப்படும். நன்றி/

ரொம்ப சந்தோஷம் நவாஸ்ண்ணா,
கவனமாக செய்து சாப்பிடுங்க..

அன்புடன் மலிக்கா said...

பிரபாகர் said...
சகோதரி,

மீன் வறுவல் செய்து சாப்பிட்டுவிட்டு பார்த்தால்... உங்கள் இடுகை... கொஞ்சம் முன்னமே பார்த்திருந்தால்... ம்... இனி அடுத்த வாரம்தான்...

பிரபாகர்./

அதுக்கென்ன இன்னொருநாள் செய்து சாப்பிட்டுபாருங்க பிரபாகரண்ணா..மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

/Mrs.Menagasathia said...
சூப்பராயிருக்கு மீன் வறுவல்.அடுத்த முறை நிச்சயம் செய்து பார்க்கிறேன்/

செய்துபார்த்து சொல்லுங்கள் மேனகா எப்படியிருந்ததுன்னு..

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"

நாங்க எல்லாம் கண்மாய மொத்தமா குத்தகைக்கு எடுத்து எல்லா மீனையும் சாப்ட்டவய்ங்க மலிக்கா/

அவிங்களா நீங்க. அப்போ உங்காத்துக்குவந்தா நல்லா சாப்பிடலாம், அதுசரி நீங்க சமைப்பீங்களா??/

அன்புடன் மலிக்கா said...

/அக்பர் said...
இப்படியும் மீன் ஃப்ரை பண்ணலாமா.

கொங்கு மசாலா இப்பதான் கேள்விப்படுதேன்/

ஆமாம் அக்பர் இந்த மசாலாவில் மீன் பிரை சூப்பரக இருக்கும்..

அன்புடன் மலிக்கா said...

/Geetha Achal said...
மீன் வறுவல் நல்லா இருக்கு மலிக்கா அக்கா.

மிக்க நன்றி கீத்து..

கொங்கு மசாலாவினை செய்ய பொருட்கள் கொடுத்து இருக்கின்றிங்க..

அதனுடைய அளவினையும் கொடுத்தால் நல்லா இருக்கும்..மிளகு, வேர்க்கடலை, எள்ளு எல்லாம் எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும்./

மிளகு.50 கிராம் [காரத்திற்கேற்பவும் சேர்த்துக்கொள்ளலாம்]
வேர்கடலை 100 கிராம்
எள்ளு 100 கிராம்

எல்லாம் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம் கீத்து

அன்புடன் மலிக்கா said...

/ ஸாதிகா said...
பார்க்க நன்றாக உள்ளது.சேர்த்து இருக்கும் மசாலா சுவையைக்கூட்டும்/

இதில் மசாலாவின் சுவைதான் சூப்பரே, மிக்க நன்றி ஸாதிகாக்கா.

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
ஒரு விபெரெண்டான மீன் வறுவல் ரொம்ப அருமை மலிக்கா

என் பகுதிக்கு வாங்க ஜோக் போட்டு உள்ளேன்/

மிக்க நன்றி ஜலீகாக்கா..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.