அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, December 27, 2010

சிக்கன் காளிஃப்ளவர் மசாலாக்கறி!


சிக்கன் 1/2 கிலோ
காளிஃப்ளவர் 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை லவங்கம்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 3.4.
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
ஆயில்
உப்பு


மசாலாக்கு தேவையாவை
கடலைப்பருப்பு 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 6
மிளகு 2 ஸ்பூன்
பட்டை சிறிதளவு
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது 1 கப்.

சிக்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக்கொள்ளவும்.
உப்பும், மிளகாய்தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டிவைக்கவும். தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அறிந்துகொள்ளவும். .


மசாலாக்களுக்கு தேவையானவைகளை சட்டியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு சூடானும். அதில் இவைகளைபோட்டு வறுக்கவும். கடைசியாக தேங்காப்பூவையும்போட்டு வறுத்து சற்று ஆரவிட்டு அதை மிக்ஸியில் அரைக்கவும் சற்று கொரகொரப்பாக.

சட்டியில் ஆயில் விட்டு அதுசூடானதும், பட்டைலவங்கம்போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். அனைத்தையும்போட்டு பின்பு .

 காளிஃபிளவரை சேர்த்து லேசாக கிளறிவிடவும்.அது வதங்கியதும்.

பின்பு அதோடு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.அதுவும் சற்று மசங்கியதும்.


 அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில்வைத்து வைத்துமூடவும்.மசாலாவாசம்போய் நல்லவாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியைபோட்டு இறக்கவும்.

இது சப்பாத்தி பரோட்டா இடியாப்பம்.குபூஸ்கூட சாப்பிட மிகுந்த சுவையாகயிருக்கும் சாதம்கூடவும் சாப்பிடல்லாம்.
இதில் காளிஃபிளவர் சேர்த்திருப்பதால் வித்தியாச சுவையாக இருக்கும்..
செய்து சாப்பிட்டுவிட்டு கருத்தினை பகிருங்கள்.
நில்லுங்கள்  இப்போது எப்படியிருக்குன்னு சொல்லிட்டுபோங்களேன்..
பார்த்தீங்கள் இந்த கறியை சாப்பிட ஒட்டத்திலேயே ஏறிவந்துட்டாங்கன்னா பாத்துக்கோங்க வாசமும் மணம் இழுத்துகொண்டுவந்துவிட்டது.[எப்படியெல்லாம் பில்டப் போடவேண்டியிருக்கு ஆத்தாடி].

Tuesday, December 7, 2010

எங்கே செல்லும் இந்த பாதை! [ஒரு பகீர்]


காலையிலேயே இப்படி ஒன்ன நான் பார்க்கனுமா.[யாரது அங்கே அப்ப மதியம் பாக்கலாமான்னு]. அட சொல்லவிடுங்கப்பு.. சரி நேசனல்டே லீவில் யு ஏ இ .சுற்றியதை போட்டோவோடு அரங்கேற்றி. சிலபலருக்கு காதில் மற்றும் வயிற்றில் புகையை ஏற்படுதலாமேன்னுதான் அட பொசுபொசுன்னு பொங்குமே செல்லப்பொறாமை அதை பார்க்கலாமேன்னு. பிளாக் பக்கம் வந்தேன். நம்ம அந்நியன் 2. அழைதிருந்தாரேன்னு அவர்வலைப்பக்கம் எட்டிபார்க்கபோனேன். போனேனா அச்சோ அப்படின்னு தலையில் கைவைத்து உக்காந்துட்டேன். வச்ச கண்ணு வாங்கமா பதட்டதோட பார்த்தேன். இது நம்ம நாட்டிலா? ஒருதரம் கண்ணைகசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன் லேசாமனசு உள்ளுக்குள் ஆட்டம்கண்டதுபோல தோணிச்சி. ஏன்னா நாம தமிழச்சி ல்ல, அதான். சரி என்னத்த பார்த்தா அதச்சொல்லு இங்கே ஹாட்பிட் எகிறுதுங்கிறீங்களா!
சரி சரி இதோ அட அத நீங்களும் பாருங்கப்பு.

அந்நியன் 2

.ஏங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ. காலம் காலம் செய்த கோலம் யாரோ யாரோ உணர்வாரோ.

தப்புதப்பா பாடுறேனோ ஏதோ பாடிட்டேன் விடுங்கோ.

காலத்தின்மேல பழியப்போட்டுவிட்டு மனிதயினம் வெகுவாக தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறது. நாகரீத்தில் சிக்கி அலைக்கழிஞ்சி  சீரழிஞ்சிபோகுதேன்னு வருதப்பட்டா. இது அந்தகால தமிழ் கலாச்சாரமுன்னு சான்றிதழ் வேறு கொடுக்குறாங்கப்பு.என்ன செய்ய கண்ணிருக்கு பாக்க காதிருக்கு கேக்கன்னு பார்த்துட்டு இருக்கமுடியல அதான் உங்ககிட்ட சொல்லலாமேனு சொல்லுறேன்.

என்னத்தச் சொல்ல காலம் கலிகாலம் முத்திபோய் முத்திபோய்
கடைசியில் இருக்கும் கலச்சாரமும் சீரழிஞ்சிபோச்சி. மிச்ச சொச்சமிருக்கும் மானமும் காற்றில் கலந்திடும் சூழல உருவாயிடுச்சி.
[என்னது அதுவும் போச்சா அடியாத்தி] வெறுமன நிக்கிற ஊர்ல சட்டபோட்டா கேலிதான் பண்ணுவாகப்பு பாத்துயிருங்க.

நாகவநாகரீக வளர்ச்சியின் உச்சதிலிருக்கும் மனிதர்களுக்கு கீழே இருந்துகொண்டு கத்தினால் கேட்காது. ஒருவனுக்கு ஒருத்தி.
உடலும் மனமும் ஒருவருக்குதான் என்னும் தமிழ்கலாச்சாரம் மாறிபோச்சா[சோ] என்றே தோன்ற வைக்கிறது.
உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மேலிட கட்டிப்பிடிப்பதும் பலயிடங்களில்முத்தமிடுவதும். கணவன் மனைவிக்கே சொந்தமான ஒன்றை,   அவர்களின் கண்முன்னே அடுத்தவர்கள் நடத்தும் கேலிக்கூத்து அதிரத்தான் வைக்கிறது.

காலம் மாறலாம். கோலம் மாறலாம்.எத்தனையோ வழிகளில் நாகரீகம் தோன்றலாம் ஆனால் மனிதனெனுக்கென்று வகுக்கப்பட்ட சில எல்லைகளை தாண்டுவது சரியல்ல. அது அவனைமட்டுமல்ல அவனைசார்ந்தோரையும். சுற்றியுள்ளோரையும் பாதிக்கும்.

.நம்மை படைக்கப்பட்டதின் நோக்கமறிந்து,இறைவன் காட்டிய நேர்மையான வழியில் நடந்து,  உணர்வுப்பூர்வமான உணர்களை மதிப்போர்களுக்கு மட்டுமே இதை சொல்கிறேன்.

இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே!  உங்களிடம்தான்..

ஆதங்கத்தோடு.
அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.