அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, December 27, 2010

சிக்கன் காளிஃப்ளவர் மசாலாக்கறி!


சிக்கன் 1/2 கிலோ
காளிஃப்ளவர் 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை லவங்கம்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 3.4.
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
ஆயில்
உப்பு


மசாலாக்கு தேவையாவை
கடலைப்பருப்பு 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 6
மிளகு 2 ஸ்பூன்
பட்டை சிறிதளவு
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது 1 கப்.

சிக்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக்கொள்ளவும்.
உப்பும், மிளகாய்தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டிவைக்கவும். தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அறிந்துகொள்ளவும். .


மசாலாக்களுக்கு தேவையானவைகளை சட்டியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு சூடானும். அதில் இவைகளைபோட்டு வறுக்கவும். கடைசியாக தேங்காப்பூவையும்போட்டு வறுத்து சற்று ஆரவிட்டு அதை மிக்ஸியில் அரைக்கவும் சற்று கொரகொரப்பாக.

சட்டியில் ஆயில் விட்டு அதுசூடானதும், பட்டைலவங்கம்போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். அனைத்தையும்போட்டு பின்பு .

 காளிஃபிளவரை சேர்த்து லேசாக கிளறிவிடவும்.அது வதங்கியதும்.

பின்பு அதோடு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.அதுவும் சற்று மசங்கியதும்.


 அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில்வைத்து வைத்துமூடவும்.மசாலாவாசம்போய் நல்லவாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியைபோட்டு இறக்கவும்.

இது சப்பாத்தி பரோட்டா இடியாப்பம்.குபூஸ்கூட சாப்பிட மிகுந்த சுவையாகயிருக்கும் சாதம்கூடவும் சாப்பிடல்லாம்.
இதில் காளிஃபிளவர் சேர்த்திருப்பதால் வித்தியாச சுவையாக இருக்கும்..
செய்து சாப்பிட்டுவிட்டு கருத்தினை பகிருங்கள்.
நில்லுங்கள்  இப்போது எப்படியிருக்குன்னு சொல்லிட்டுபோங்களேன்..
பார்த்தீங்கள் இந்த கறியை சாப்பிட ஒட்டத்திலேயே ஏறிவந்துட்டாங்கன்னா பாத்துக்கோங்க வாசமும் மணம் இழுத்துகொண்டுவந்துவிட்டது.[எப்படியெல்லாம் பில்டப் போடவேண்டியிருக்கு ஆத்தாடி].

12 comments:

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு மல்லி..

ஸாதிகா said...

ரொம்ப நாள் கழித்து மணக்கமணக்க சிக்கன் காலிபிளவர்மசாலக்கறி செய்து காட்டி இருக்கின்றீர்கள்.சிக்கன்,காலிபிளவர் காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது மலிக்கா

ஆமினா said...

அந்த ஒட்டகத்தோட சேர்ந்து நானும் வரேன் மலிக்கா

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் மிகவும் அருமையான விளக்கம்.

சண்முககுமார் said...

மல்லி.. plz படத்ததை மாற்றுங்கள் இந்த படத்தை பார்க்கும் போது எங்க விட்டிலே இப்படி வைக்க மாட்டாங்களா என்று கவலையா இருக்கு



இதையும் படிச்சி பாருங்க

வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

Mohamed G said...

சூப்பர்,

சக்தி கல்வி மையம் said...

இன்றைய சமையல் Super...

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

anand said...

when we need to add chicken into the curry, nowhere it is mentioned.

அஸ்மா said...

பார்க்கும்போதே சூப்பரா இருக்கு மல்லிகா! செய்து பார்க்கணும், இன்ஷா அல்லாஹ்.

Asiya Omar said...

அருமை மலிக்கா.

Anonymous said...

ம்ம்ம் எனக்கு ஒரு ப்ளேட் கிடைக்குமா?
அன்புடன் சித்திஷா

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர், இந்தா வாரேன், எடுத்து வையுங்கோ.

சாரு மெயில் ஐடி வேனும்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.