அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, May 30, 2010

மெஹந்தி டிசைன்.

சும்மா வெட்டியாயிருக்கும்போது, 5 மாததிற்கு முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் சரி போனாப்போகுதேன்னு எடுத்து கைகளில் கோழி சீச்சதுபோல் ஒரு டிசைனைப்போட்டு  அதன் ஆசையை நிறைவேத்தியாச்சி. எப்படியிருக்கு அப்படின்னு சொன்னா அதுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். அப்பதானே அதுநல்லா சிவக்கும்..

அன்புடன் மலிக்கா

Friday, May 28, 2010

கேழ்வரகு போண்டா பஜ்ஜி..


கேழ்வரகு மாவு 1/2 கப்

அரிசிமாவு 2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
சாம்பார்பொடி 1 ஸ்பூன்
உப்பு
ஆயில்
காளிபிளவர் சிறு சிறு பீஸாக தேவையான அளவு

அனைத்தையும் தண்ணீர்விட்டு
ஒன்றாக மிக்ஸ் செய்துக்கொள்ளவும் எப்போதும் பஜ்ஜிகளுக்கு கலக்கும்  அதே பதத்துக்கு. அதில் காளிபிளவரை முக்கியெடுத்து
ஆயில் சூடானதும் அதில் போட்டு சிவகக்கவிட்டு எடுக்கவும்
இப்போது சூடான சுவையான நல்ல ஆரோக்கிமான சிற்றூண்டி ரெடி
இதற்கு தொட்டுக்கொள்ள பச்சைசட்னி பொதினாவில். அல்லது
கெச்சப் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் மற்ற பஜ்ஜிகளைபோல்
ஆயில் உள்ளே தங்காது ருசியாக இருக்கும்..

திஸ்கி//
உடலுக்கு உணவு முக்கியம் அதில் ஆரோக்கியமான உணவு அதிமுக்கியம்
சுவர் அழகாய் இருந்தால்தானே சித்திரம் சிதையாமல் வரும்.
ஆகா வந்துட்டாங்கய்யா கருத்து கருப்பச்சி///

அன்புடன் மலிக்கா

Monday, May 24, 2010

அமீரகக்கிளை அறிமுகவிழாவின் புகைப்படங்கள்..

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிமுகவிழா.[அமீரகக்கிளை] கடந்த 7-5 2010 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு, துபை பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில்.மிக சிறப்பாக நடைப்பெற்றது. சிறுமி, வஃபா.  அல்ஹம்து சூராவை அழகாய் விளக்கத்துடன் ஓதி துவங்கி வைக்க


சிறப்பு விருந்தினர்களாக,
கொழும்பு தமிழ்சங்க துணைத்தலைவர்.காவியத்திலகம் டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன். அவர்களும். எளிய மார்க்கத்தை இனிய இதயத்தில் ஏற்றுக்கொண்ட[பேராசிரியர் பெரியார்தாசன் என்னும்]
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார்குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்.
செய்யது எம். சலாஹுதீன் அவர்களும். மற்றும் சிறப்புமிக்க பெரியவர்களும் வந்திருந்துவிழாவை சிறப்பித்தார்கள்.

விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. பேராசிரியரின் அற்புதமான உரை அனைவரையும் ஈர்த்து அன்போடு கட்டிப்போட்டது என்றால் அதுமிகையாது. தெளிவான தெள்ளத்தெளிவான இஸ்லாத்தைப்பற்றியும் மனோதத்துவத்தைப்பற்றிய பேச்சும் அதற்கான விளக்கமும். மிக மிக அருமை. அங்கிருந்து கேட்டோர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. சுபகானல்லாஹ்.


அல்லாஹ் யாரை தன்வசப்படுத்திக்கொள்ள நாடுகிறானோ அவனே நேர்வழிப்பெற்றவன். அவ்வழியில் நம்மையும் இணைத்துக்கொள்வானாக!


இது நான்தான்.
பாலைமணலைவிட படுபயங்கரமாக
ஜுரமென்றபெயரில் தேகமெங்கும் அனல்பறக்க.
கூடவே நானுமிருப்பேன் என்று இருமலும் சேர்ந்திருக்க.
அறிமுகக்கவிதையை வாசித்துவந்தமர்ந்தேன் மூச்சுவாங்க..

ஈடிஏ. செய்யது எம். சலாஹுதீன் அவர்கள்.
டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள்தலைவர்அப்துல் கதீம் அவர்கள். அப்துல்லாஹ் அவர்களுக்கு சால்வை அணிவித்தபோதுவிழாவிற்க்கு வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி

என் அழைப்பையும் ஏற்று வந்திருந்த நல்லுள்ளங்களும் மகிழ்ச்சிகலந்த
நன்றி நன்றி நன்றி...

//
இதில் பிரசுரிக்கபட்டுள்ள போட்டோக்கள் அனைத்தும். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் [அமீரககிளை] ஆட்சிமன்றகுழுவின் தலைவர் திரு. அப்துல் கதீம் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. [என் போட்டோவைத்தவிர]//

இதுதான் நான் வாசித்த கவிதை..
சிகரத்தை நோக்கி

பன்னாட்டுக் கழகமிது-நல்ல
பண்பாளர்கள் உருவாகியது
இஸ்லாமிய இயக்கமிது -நல்
ஈமானை வளர்குமிது

இலக்கிய கழகமிது -நல்
இலக்கியவாதிகளை உருவாக்குமிது
இலக்கிய பணிகளிலே- தன்னை
இணைத்துக்கொள்ளும் மனிதர்கட்கு
இயன்ற உதவிசெய்து உயர்த்துமிது

பெண்களுக்கும் ஊக்கம்தந்து- நற்
பண்புகளைக் காட்டுமிது
நல்லெண்ணெங்களை ஊக்குவிக்க
நற்பணிகள் செய்யுமிது

கட்சியில்லை கொடியுமில்லை
நன்மைசெய்ய துடிக்கிறது
களங்கமில்லா எண்ணங்களால்
கழகம் சிகரம்தொட போகிறது

பாலை பரப்பிலிருந்தும் -இஸ்லாமிய
இலக்கியம் பரப்பிடுவோம்
இயக்கம் பாரெங்கும் பரவிடவே –அயர்ச்சி
பாராது உழைத்திடுவோம்

இறைவனில் அருளாலே
இயக்கத்தை நடத்திடுவோம்
ஈமானில் உறுதியுடன்
இனியபாதையில் நடந்திடுவோம்..அன்புடன் மலிக்கா

Friday, May 21, 2010

முள்ளங்கி,மூளைமுட்டைப்பொரியல்.


தேவையானவைகள்

முட்டை -2
முள்ளங்கி -1
பச்சைமிளகாய் -2
பெரிய வெங்காயம் -2
தக்காளி [ரொம்பச் சிறியது] -1
உப்பு
மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
ஆயில் பொரிக்க தேவையான அளவுமுள்ளங்கியை தோல்நீக்கி அதை துருவிக்கொள்ளவும்
அத்துடன் முட்டை வெங்காயம் உப்பு சீரப்பொடி மிளகுத்தூள் அனைத்தையும் போட்டு

நன்றாக அடித்துக்கொள்ளவும்[உங்களையல்ல முட்டைக்கலவையை]

அடுப்பை பற்றவைத்து தோசைக்கல் வைத்து அது சூடானதும் ஆயில்விட்டு அதுவும் சூடானதும் இந்த கலவையை அதில் ஊற்றவும்.

தீயை மிதமாக்கி வைக்கவும்.


அப்படியேவும் திருப்பிப்போடலாம் இல்லையென்றால் நான்கு பீஸாக்கி திருப்பிப்போட்டு சிவந்து வெந்ததும் எடுக்கவும்.மாலைவேளையில் சும்மாவும் சாப்பிடலாம். குப்புஸ்கூடவும் சாப்பிடலாம். சாத்தத்துக்கும் சாப்பிடலாம்.

முக்கியமாக முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுத்தால் தினமும் செய்து கேட்பார்கள். இதேபோல் கேரட் கேபேஜ். என டிசைன் டிசைனாக செய்துகொடுங்க. அப்படியே நீங்களும் சாப்பிடுங்க. அதுக்காக எப்போதும் சாப்பிட்டுகினேயிருந்தா. அப்புறம் அப்புறம் அத நான்வேற சொல்லனுமா ஹூம்,,, உங்களுக்கே புரியும்..


இது மூளை முட்டை. யாரோடது அப்புடின்னெல்லாம் கேட்டா உண்மையைசொல்லவேண்டிவரும் ”என்னான்னு” உங்களோடதுதான்னு சொல்லிடுவேன்.


ஆட்டின் மூளை அதையும் மேற்சொன்னமுறையிலேயே செய்து, அதன்கூட கொஞ்சம் மல்லி இலை [அச்சோ நானல்ல] இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்துக்கொண்டு. துண்டாகவும் பொரித்தெடுக்கலாம் இல்லையின்னா இதுபோல கொத்து மூளை முட்டையாகவும் செய்து சாப்பிடலாம்.

 ஒன்னையும் விட்டு வைக்காதீங்கன்னு.[யாரது இப்படியெல்லாம் கேட்கிறது]
மனிதனுக்குதானே இறைவன் அனைத்தையும் படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவித்துக்கொண்டுதான் அவனுக்கே நன்றி செலுத்துவதில்லை. என்ன சரிதானே!!!!

அன்புடன் மலிக்கா

Saturday, May 15, 2010

குபூஸ் ஃப்ரை

வெளிநாட்டு வாழ்மக்களுக்கு குபூஸை நன்றாக தெரிந்திருக்கும். ஏனெனில் அதுதான் எல்லாருக்கும் சாப்பாடு. குறிப்பாக பேச்சிலர்ஸ்களுக்கு. உற்ற நேரத்தில் உதவும் நண்பன்போல்,  எந்த நேரமும் பசித்துவிட்டால் உடனே ஒரு பாக்கெட் குபூஸ் வாங்கி அதில் கிடைத்ததை வைத்து தொட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பி போய்கிட்டே இருப்பாங்க.

அந்த குபூஸ் ஒரு நாள் அல்லது ஒன்றைநாளுக்கு மேலிருந்தால் மிக கடினமாகிவிடும் சாப்பிட . குபூஸ் மீதியிருக்கும் பட்சத்தில் அதை இதைபோல் சிறிய பீஸாக்கி முட்டையை நன்றாக அடித்து அதில் உப்பு மிளகும் சேர்த்துஅடித்து அதில் இந்த குபூஸை முக்கி எடுத்து பொரித்து சுட சுட சாப்பிட்டால் வேஸ்ட்டும் ஆகாது ருசியாகவுமிருக்கும்.
இதையே ஜீனி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இன்னும் வித்தியாசமாக குபூஸை மிக சிறிய பீஸாக்கி. பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி. பச்சைமிளகாய். உப்பு சேர்த்து கொத்து பரோட்டாவுக்கு பதில் கொத்து குபூஸ் செய்யலாம்.

எப்படியோ வாங்கியதை வீணாக்கிவிடாமல் சாப்பிட்டால் சரியே!
 1 , 2. திர்கம்தானே என நினைப்பவர்களும் உண்டு  அதை சம்பாரிக்க நாம்படும் கஷ்டத்தை எண்ணிப்பார்த்தால்
கால் [1/4] திர்கமும் கனமாய் தெரியும்..

உழைத்துபார் ஊதியத்தின் அருமை தெரியும்
உழைத்ததை வீணாக்காமல்
செலவுசெய்துபார் ஊதியத்தின் உன்னதம் புரியும்.

//ரிஸ்கி//வந்துட்டாக தந்துவம் தங்கம்மா. அப்படினெல்லாம் சொல்லக்கூடாது ஓகே.//

Saturday, May 8, 2010

வானவில் வட்லப்பம்..

என்னது வானவில்லில் வட்லப்பமா? அப்படினெல்லாம் கேக்கக்கூடாது.
ரயின்போ ந்னா வானவில்தானே  அதான்
[அப்பாடா எப்படியெல்லாம் சொல்லி இவுங்ககிட்டேர்ந்து தப்பிக்கிறது ஸ்ஸ்ஸ்ஸ்] 
தேவையானவை
ரையின்போ மில்க் 1சிறிய டின்
முட்டை 6
ஜீனி 150 கிராம்
பசுநெய் 6 ஸ்பூன்
தேங்கா துருவல் 1 கப்
முந்திரி அல்லது பாதாம் 10
உப்பு சிறி சிறிதளவு

மிக்ஸியில் முட்டை ஜீனி. ரையின்போ மில்க் அனைத்தும் பெரிய ஜாரில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
சிறிய ஜாரில் தேங்காய் துருவல் முந்திரி இரண்டையும் நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இரண்டு அரவைகளையும் ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டும் கலப்பதுபோல் நன்றாக கலக்கிவிட்டு அதன்மேல் பசுநெயை ஊற்றவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரம் அல்லது இட்லி சட்டியில் தண்ணீர்வைத்து சற்று ஆவி [அச்சோ அந்த ஆவியல்ல] வந்ததும் கலந்து வைத்தபாத்திரத்தை அதனுள் இட்டு மூடவும்.
மிதமான தனப்பில் அடுப்பை வைக்கவும்.

15 நிமிசத்தில் வானவில் வட்லப்பம் ரெடி
//சுஸ்கி//இது தேங்காய்பாலிதான் செய்வார்கள் நான் கொஞ்சம் விச்சியாச
முயற்சி செய்துபார்த்தேன். இதில் பாதம் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம்.
தேங்காய்பால் கொலஸ்ட்ரால். அதனால் இதுப்போன்றும். மற்றும் கொழுப்பு நீக்கிய பாலிலும் செய்துபார்கலாம்.
அப்படியே சாப்பிடுங்க. இது ஜால்ரா இங்கு கிளிக் செய்தால் வரும் ஜால்ரா[அதான் ஜாலர்ன்னு சொல்வாங்க] அது ரொம்ப மேட்சாயிருக்கும் சேர்த்து சாப்பிட. இடியாப்பத்துக்கும் பாயாக்கூட இதுவும் சூப்பர்...

//இதுதான் ரையின்போ மில்க்//


அனைத்து அன்னையர்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள் ..

அன்புடன் மலிக்கா

Tuesday, May 4, 2010

அமீரகத்தில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு ஓர் அறிவிப்பு

                    பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்
                                             "அமீரகக் கிளை"அறிமுகவிழா

                                           

 அமீரகத்தில் வாழும் அன்பார்ந்த எனதன்பு தமிழுள்ளங்களுக்கும்
மற்றுமுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் ஓர் அன்பான அழைப்பு

அனைவரின்மீதும் இறைவனின் சாந்தியும். அருளும். அளவில்லாமல் கிடைக்கட்டும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அல் கிஸைசில் உள்ள மகளிர் உயர் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளரங்கில், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக்கிளை அறிமுகவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவில் கொழும்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவர்
தந்தை டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்ட பெரும்பான்மையான பாடல்களை இயற்றிய கவிஞர் நாகூர் சலீம் வாழ்த்துரை வழங்குகிறார்.

"பெரியார் தாசன்" என்று அறியப்பட்ட "முனைவர் அப்துல்லா" சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும் இஸ்லாமியப் பாடல்கள், புத்தகம் மற்றும் மின்னூல் வெளியிடப்பட இருக்கின்றது.

அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்..

தாங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.

அன்புடன் மலிக்கா
மகளிர் அணிச் செயலாளர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை .


Saturday, May 1, 2010

பத்திரமா பாத்துக்கோங்க!!

1--புடவைகளை பத்திரப்படுத்த அந்துருண்டை பயன்படுத்தக்கூடாது அந்த வாசனை நம் சுவாசத்துக்கும்சரி, குழந்தைகளுக்கும்சரி நல்லதல்ல.

2---பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.

3--பட்டுப்புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்
4--பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,தனித்தனியே எனபிரித்து வைக்கவேண்டும்.

5--முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள், ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்.

6--புடவைகளோடு அதற்கு மேட்சிங் பிளவுசையும் [கலர்போகாத] அதனுடன் வையுங்கள். எடுக்க ஈசியாக இருக்கு அவரத்திற்க்கு தேடிக்கொண்டு இருக்கவேண்டாம்.
இல்லையென்றால் அதையும் ஹேங்கரில் தொங்கவிடுங்கள்.


7--பட்டுப்படவைகளை நீங்களே அயன் செய்வதைவிட லாண்டிரில் கொடுத்தால் நல்லது. அப்படி நீங்களே செய்யும் பட்சத்தில். புடவையை திருப்பிப்போட்டு. பாடர் உள்ள இடத்தில் வேறொரு கிளாத்போட்டு அயன் செய்யுங்கள். அப்போதுதான் சீக்கிரம் கறுத்துப்போகாது பாடர். மற்றும் ஜரிகை..

இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது மத்தவாளுக்கு இன்னும் தெரிந்தா தெரியப்படுத்தவும்.

எத்தனை கஷ்டப்பட்டு கடகடையா ஏறி இறங்கி  துபாயிலேர்ந்து வாங்கிபோய் கொடுத்தா. இதென்ன கலர் இப்புடி இருக்கு, கொஞ்சம் தூக்கலயிருந்துகலாம். இல்லையின்னா கொஞ்சம் கலர் கம்மியாயிருந்துக்களாம் . இந்த பாடர் அப்புடியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.
ஒரு புடவையாச்சும் செலக்‌ஷன் செய்யத்தெரியுதா இவுகளுக்கு. ஹூம். அவ கட்டியிருக்காப்பாருங்க. அவமாப்பிள எப்படி செலக்‌ஷன் செய்றாரு. உங்கமண்டைக்கு எத்துன தடவசொன்னாலும் ஏறமாட்டேங்கிறதே! என ஒரு புடவைக்கு ஆத்துக்காரர படுத்துரபாடு அப்பப்பா தாங்குதுடா பூமி.


//அதுசரி ஒன்னு கேள்விப்பட்டேனே! புடவக்கடைக்குபோனா ஒரு புடவ எடுக்க மணிக்கணக்குல  நிப்பீகளாமே நெசமாவா? பெண்ணரசிகளே!
அப்படி யாரெல்லாம் நிப்பீகன்னு சொன்னா எனக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்.
எதுக்கு கேக்குற மல்லி?
ஏன்னா.. ஏன்னா..
என்ன ஏன்னா ஏயன்னான்னுகிட்டு சொல்லு விசயத்த,
ஊஹூம்  நீங்க சொல்லுங்க முதலில் அப்புறமா அந்த ரகதியத்தை சொல்லுறேன் ஓகே ..


ராப்பபகலா கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் காசில் எடுக்குற புடவைய பத்திரமா பாத்துக்கவேணாமா!
கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! புதிதாவே வாங்கிக்கொடுக்கலாம் வசயிருந்தா அப்படியில்லாதவுக இப்படியும் செய்யலாமுல்ல, அதுக்காவாவது பத்திரமா பாத்துக்கோங்க!

திஸ்கி///இலவசமாக போட்டோக்கள் தந்த கூகிளுக்கு மிக்க நன்றி../

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.