அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, May 21, 2010

முள்ளங்கி,மூளைமுட்டைப்பொரியல்.


தேவையானவைகள்

முட்டை -2
முள்ளங்கி -1
பச்சைமிளகாய் -2
பெரிய வெங்காயம் -2
தக்காளி [ரொம்பச் சிறியது] -1
உப்பு
மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
ஆயில் பொரிக்க தேவையான அளவுமுள்ளங்கியை தோல்நீக்கி அதை துருவிக்கொள்ளவும்
அத்துடன் முட்டை வெங்காயம் உப்பு சீரப்பொடி மிளகுத்தூள் அனைத்தையும் போட்டு

நன்றாக அடித்துக்கொள்ளவும்[உங்களையல்ல முட்டைக்கலவையை]

அடுப்பை பற்றவைத்து தோசைக்கல் வைத்து அது சூடானதும் ஆயில்விட்டு அதுவும் சூடானதும் இந்த கலவையை அதில் ஊற்றவும்.

தீயை மிதமாக்கி வைக்கவும்.


அப்படியேவும் திருப்பிப்போடலாம் இல்லையென்றால் நான்கு பீஸாக்கி திருப்பிப்போட்டு சிவந்து வெந்ததும் எடுக்கவும்.மாலைவேளையில் சும்மாவும் சாப்பிடலாம். குப்புஸ்கூடவும் சாப்பிடலாம். சாத்தத்துக்கும் சாப்பிடலாம்.

முக்கியமாக முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுத்தால் தினமும் செய்து கேட்பார்கள். இதேபோல் கேரட் கேபேஜ். என டிசைன் டிசைனாக செய்துகொடுங்க. அப்படியே நீங்களும் சாப்பிடுங்க. அதுக்காக எப்போதும் சாப்பிட்டுகினேயிருந்தா. அப்புறம் அப்புறம் அத நான்வேற சொல்லனுமா ஹூம்,,, உங்களுக்கே புரியும்..


இது மூளை முட்டை. யாரோடது அப்புடின்னெல்லாம் கேட்டா உண்மையைசொல்லவேண்டிவரும் ”என்னான்னு” உங்களோடதுதான்னு சொல்லிடுவேன்.


ஆட்டின் மூளை அதையும் மேற்சொன்னமுறையிலேயே செய்து, அதன்கூட கொஞ்சம் மல்லி இலை [அச்சோ நானல்ல] இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்துக்கொண்டு. துண்டாகவும் பொரித்தெடுக்கலாம் இல்லையின்னா இதுபோல கொத்து மூளை முட்டையாகவும் செய்து சாப்பிடலாம்.

 ஒன்னையும் விட்டு வைக்காதீங்கன்னு.[யாரது இப்படியெல்லாம் கேட்கிறது]
மனிதனுக்குதானே இறைவன் அனைத்தையும் படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவித்துக்கொண்டுதான் அவனுக்கே நன்றி செலுத்துவதில்லை. என்ன சரிதானே!!!!

அன்புடன் மலிக்கா

20 comments:

LK said...

ஆஜர் . அப்புறம் வரேன் நான்

ஜெய்லானி said...

அட்ரா....அட்ரா... முதல் பிளேட் எனக்கே!!!!!!!

ஜெய்லானி said...

மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )

Jaleela said...

முல்லங்கி முட்டை நல்ல ஐடியா தான்.

Chitra said...

கல கலப்பான ரெசிபி..... சந்தோஷம்!

பாத்திமா ஜொஹ்ரா said...

நாக்கு ருசிக்கு ஏங்குகிறது அக்கா

ஸாதிகா said...

மலிக்கா சில நாட்களாக காணாமல் போய் விட்டீர்களே?நலம்தானே.மூளை,முள்ளங்கி முட்டைப்பொரியல் புதுவிதமாகத்தான் இருக்கும்.முள்ளங்கி பிடிக்காத என் போன்றோர் கண்டிப்பாக டிரை பண்ணிபார்க்கவேண்டும்.

நாடோடி said...

முட்டை கொத்து ந‌ல்லா இருக்குங்க‌..

காஞ்சி முரளி said...

////மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )////

jailani'in kelviku enna pathil?

yes... madam...
i also ask this question...

natpudan...
kanchi murali...

Mohamed G said...

மூளை என்றால் என் வீட்டில் அலர்ஜி,ஆகா என்ன காம்பினேசன் சூப்பர்.

நீச்சல்காரன் said...

புதுசா படிக்கிறவுங்களுக்கு உதவியா சைவம், அசைவம்னு ஒரு ப்ளாக் லேபிளை சேர்த்துட்டேங்கன்னா இன்னும் வசதியாயிருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

// LK said...
ஆஜர் . அப்புறம் வரேன் நான்//

நன்றி கார்த்திக்.

//ஜெய்லானி said...
அட்ரா....அட்ரா... முதல் பிளேட் எனக்கே!!!!!!!//

இல்லையே கார்த்திக்குதான்..


//ஜெய்லானி said...
மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )//

இத சொல்லித்தான் தெரியனுமா.

ஓ மூளை சாப்பிடுவது மூளைய வளர்கவா?

அப்ப அத சாப்பிடாதவங்களுக்கு மூளையே வளராதமதரி சொல்லுறீங்களே ஜெய்லானி
இருங்க அவங்கக்கிட்டயெல்லாம் சொல்லிடுறேன்[அப்பாடா தப்பிக்க ஒரு வழி கிடைச்சிரிச்சி எஸ்கேப்]

அன்புடன் மலிக்கா said...

நீச்சல்காரன் said...
புதுசா படிக்கிறவுங்களுக்கு உதவியா சைவம், அசைவம்னு ஒரு ப்ளாக் லேபிளை சேர்த்துட்டேங்கன்னா இன்னும் வசதியாயிருக்கும்.//

போட்டுட்டேன் நீச்சல்காரன்.
ஐடியாவுக்கு மிக்க நன்றி.

வருகைக்கும் கருத்துக்கும் இன்னொரு நன்றி..

அன்புடன் மலிக்கா said...

//ஸாதிகா said...
மலிக்கா சில நாட்களாக காணாமல் போய் விட்டீர்களே?நலம்தானே.மூளை,முள்ளங்கி முட்டைப்பொரியல் புதுவிதமாகத்தான் இருக்கும்.முள்ளங்கி பிடிக்காத என் போன்றோர் கண்டிப்பாக டிரை பண்ணிபார்க்கவேண்டும்..//


வாங்கக்கா. ஒரு மாசமா போட்டு வாட்டி எடுத்துவிட்டது வஞ்சனையில்லாமல்..
அதான் காணமல்போயிட்டேன்.
இருந்தாலும் டாக்டர் அட்வைஸையும் கேட்கோனுமுல்ல அதான் அடிக்கடி இதுக்கு வந்து பதில்போடமுடியாமப்போகுது.

இன்ஷா அல்லாஹ் பரிபூர்ணமானதும் முன்புபோல் ஆஜர்.

மிக்க நன்றிக்கா வருக்கைக்கும் அன்பான விசாரிப்புக்கும்..

LK said...

//இல்லையே கார்த்திக்குதான்..//

இல்லை அவரே சாப்பிடட்டும். நான் சைவம்

அன்புடன் மலிக்கா said...

LK said...
//இல்லையே கார்த்திக்குதான்..//

இல்லை அவரே சாப்பிடட்டும். நான் சைவம்.//

ஓ அப்படியா சாரி கார்த்திக்.

ஜெய்லானிக்கே கொடுத்துடலாம் இன்னும் தெம்பா கருத்து போடட்டும்..

செந்தில்குமார் said...

மல்லிக்கா

நானும் ஒரு சாப்பாட்டு பிரியன்
முல்லங்கியை தவிர
முட்டை ரொம்பபிடிக்கும்
மூலை கேக்காதிங்க
இருந்தும் உங்கள் தயாரிப்பு குறிப்பை கேட்கும் போது ஒருமுறை முயற்ச்சிக்கிரேன்

செந்தில்குமார்.அ.வெ

செந்தில்குமார் said...

மல்லிக்கா

நானும் ஒரு சாப்பாட்டு பிரியன்
முல்லங்கியை தவிர
முட்டை ரொம்பபிடிக்கும்
மூலை கேக்காதிங்க
இருந்தும் உங்கள் தயாரிப்பு குறிப்பை கேட்கும் போது ஒருமுறை முயற்ச்சிக்கிரேன்

செந்தில்குமார்.அ.வெ

Geetha Achal said...

மிகவும் அருமையான குறிப்பு...எங்க வீட்டில் முள்ளாங்கியினை பொரியல் செய்யும் பொழுது கடைசியில் முட்டையினை கூட சேர்த்து பொரியல் செய்வாங்க...துறுவிய முள்ளாங்கியில் செய்ததில்லை...அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி

அக்பர் said...

அட ரெசிப்பி சிம்பிளாகவும் அருமையாக‌வும் இருக்கே.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.