அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, May 28, 2010

கேழ்வரகு போண்டா பஜ்ஜி..


கேழ்வரகு மாவு 1/2 கப்

அரிசிமாவு 2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
சாம்பார்பொடி 1 ஸ்பூன்
உப்பு
ஆயில்
காளிபிளவர் சிறு சிறு பீஸாக தேவையான அளவு

அனைத்தையும் தண்ணீர்விட்டு
ஒன்றாக மிக்ஸ் செய்துக்கொள்ளவும் எப்போதும் பஜ்ஜிகளுக்கு கலக்கும்  அதே பதத்துக்கு. அதில் காளிபிளவரை முக்கியெடுத்து
ஆயில் சூடானதும் அதில் போட்டு சிவகக்கவிட்டு எடுக்கவும்
இப்போது சூடான சுவையான நல்ல ஆரோக்கிமான சிற்றூண்டி ரெடி
இதற்கு தொட்டுக்கொள்ள பச்சைசட்னி பொதினாவில். அல்லது
கெச்சப் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் மற்ற பஜ்ஜிகளைபோல்
ஆயில் உள்ளே தங்காது ருசியாக இருக்கும்..

திஸ்கி//
உடலுக்கு உணவு முக்கியம் அதில் ஆரோக்கியமான உணவு அதிமுக்கியம்
சுவர் அழகாய் இருந்தால்தானே சித்திரம் சிதையாமல் வரும்.
ஆகா வந்துட்டாங்கய்யா கருத்து கருப்பச்சி///

அன்புடன் மலிக்கா

18 comments:

ஸாதிகா said...

கேழ்வரகிலும் பஜ்ஜி..பார்க்கா கருவாச்சியாக தெரியவில்லையே!சாதாரண போண்டா போல் தான் இருக்கிறது.டிரை பண்ணுகிறேன் மலிக்கா

Mrs.Menagasathia said...

வித்தியாசமான நல்ல ரெசிபி!!

Geetha Achal said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது...நானும் ஒரு முறை இதே போல வெங்காயத்தில் செய்து இருக்கின்றேன்...ஆனால் மிகவும் கருப்பாக இருந்தது...ஆனால் உங்கள் போண்டா பார்க்கும் பொழுதே அப்படியே கம்பூட்டர் உள்ளே கையினை விட்டு போண்டாவினை எடுத்து சாப்பிட தோனுது...

ஜெய்லானி said...

மலிக்காக்காவ் ஆத்துல டயட் நடக்குதா , கம்பு , கேழ்வரகில் பஜ்ஜி போண்டா , சும்மா இப்படி அசத்துரேள் !!

ஜெய்லானி said...

பேஷ... பேஷ்...நேக்கு ரொம்ப நன்னாயிருக்கு...

Mohamed G said...

போண்டா பஜ்ஜி சூப்பர்.

Chitra said...

crispy..... Thank you for the recipe. :-)

செந்தில்குமார் said...

கேழ்வரகு கூல் குடிச்சிருக்கேன்
கேழ்வரகு பஜ்ஜி முதல் முறையாக
இப்பவே சொல்லிவிடுகிரேன் அம்மாகிட்டே ரெடிபன்ன

சாப்புட்டு சொல்ரேன் மல்லிக்கா...

அன்புடன் மலிக்கா said...

/ஸாதிகா said...
கேழ்வரகிலும் பஜ்ஜி..பார்க்கா கருவாச்சியாக தெரியவில்லையே!சாதாரண போண்டா போல் தான் இருக்கிறது.டிரை பண்ணுகிறேன் மலிக்கா//

சாம்பார்பொடி போடுவதால் இந்த கலர் வரும் கருவாச்சியாக இருந்தால் பசங்க காத தூரம் ஓடிடுவாங்களேக்கா அதான் இந்த மேக்கப்.

மிக்க நன்றிக்கா. செய்து பாருங்க..

அன்புடன் மலிக்கா said...

Mrs.Menagasathia said...
வித்தியாசமான நல்ல ரெசிபி!!//

ரொம்ப தேங்ஸ் மேனகா..

அன்புடன் மலிக்கா said...

/Geetha Achal said...
மிகவும் சூப்பராக இருக்கின்றது...நானும் ஒரு முறை இதே போல வெங்காயத்தில் செய்து இருக்கின்றேன்...ஆனால் மிகவும் கருப்பாக இருந்தது...ஆனால் உங்கள் போண்டா பார்க்கும் பொழுதே அப்படியே கம்பூட்டர் உள்ளே கையினை விட்டு போண்டாவினை எடுத்து சாப்பிட தோனுது...//

ஆகா அப்படி ஒருவழியிருந்தா உங்கபக்கம் வந்து நிறைய அயிட்டம் அபேஸ்பண்ணிருவேனே கீத்து..

ரொம்ப நன்றிமா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
மலிக்காக்காவ் ஆத்துல டயட் நடக்குதா , கம்பு , கேழ்வரகில் பஜ்ஜி போண்டா , சும்மா இப்படி அசத்துரேள் !!//

ஆமா அண்ணாத்தே வருமுன் காப்போம் திட்டத்தோடு களம் இறங்கிட்டோம். ஆரோக்கியான வாழ்வே அழகான வாழ்வுன்னு அதிரடியா இறங்கியாச்சி முதல் கொஞ்சம் சிரமம்தான் போகப்போக பழகிடும்..
//ஜெய்லானி said...
பேஷ... பேஷ்...நேக்கு ரொம்ப நன்னாயிருக்கு...//

சமத்து பிள்ளையாண்டான் ரொம்ப நன்னி..

அன்புடன் மலிக்கா said...

Mohamed G said...
போண்டா பஜ்ஜி சூப்பர்.

அப்படியா ரொம்ப சந்தோஷம் முஹம்மத்..

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
crispy..... Thank you for the recipe..//

ரொம்ப தேங்ஸ் சித்ராமேடம்..

அன்புடன் மலிக்கா said...

செந்தில்குமார் said...
கேழ்வரகு கூல் குடிச்சிருக்கேன்
கேழ்வரகு பஜ்ஜி முதல் முறையாக
இப்பவே சொல்லிவிடுகிரேன் அம்மாகிட்டே ரெடிபன்ன

சாப்புட்டு சொல்ரேன் மல்லிக்கா..//

அம்மா கையால செய்தா இன்னும் ருசியாயிருக்கும். சாப்புட்டுவிட்டு உடனே வந்து சொல்லனும் சரியா..

மிக்க நன்றி செந்தில்...

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Deivasuganthi said...

நான் இதுல பக்கோடாதான் பண்ணுவேன். இது வித்தியாசமா இருக்குது!!!!!

Jaleela said...

வித்தியாசமான கேழ்வரகு காளிபிளவர் பஜ்ஜி, நல்ல இருக்கு

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.