அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, May 15, 2010

குபூஸ் ஃப்ரை

வெளிநாட்டு வாழ்மக்களுக்கு குபூஸை நன்றாக தெரிந்திருக்கும். ஏனெனில் அதுதான் எல்லாருக்கும் சாப்பாடு. குறிப்பாக பேச்சிலர்ஸ்களுக்கு. உற்ற நேரத்தில் உதவும் நண்பன்போல்,  எந்த நேரமும் பசித்துவிட்டால் உடனே ஒரு பாக்கெட் குபூஸ் வாங்கி அதில் கிடைத்ததை வைத்து தொட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பி போய்கிட்டே இருப்பாங்க.

அந்த குபூஸ் ஒரு நாள் அல்லது ஒன்றைநாளுக்கு மேலிருந்தால் மிக கடினமாகிவிடும் சாப்பிட . குபூஸ் மீதியிருக்கும் பட்சத்தில் அதை இதைபோல் சிறிய பீஸாக்கி முட்டையை நன்றாக அடித்து அதில் உப்பு மிளகும் சேர்த்துஅடித்து அதில் இந்த குபூஸை முக்கி எடுத்து பொரித்து சுட சுட சாப்பிட்டால் வேஸ்ட்டும் ஆகாது ருசியாகவுமிருக்கும்.
இதையே ஜீனி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இன்னும் வித்தியாசமாக குபூஸை மிக சிறிய பீஸாக்கி. பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி. பச்சைமிளகாய். உப்பு சேர்த்து கொத்து பரோட்டாவுக்கு பதில் கொத்து குபூஸ் செய்யலாம்.

எப்படியோ வாங்கியதை வீணாக்கிவிடாமல் சாப்பிட்டால் சரியே!
 1 , 2. திர்கம்தானே என நினைப்பவர்களும் உண்டு  அதை சம்பாரிக்க நாம்படும் கஷ்டத்தை எண்ணிப்பார்த்தால்
கால் [1/4] திர்கமும் கனமாய் தெரியும்..

உழைத்துபார் ஊதியத்தின் அருமை தெரியும்
உழைத்ததை வீணாக்காமல்
செலவுசெய்துபார் ஊதியத்தின் உன்னதம் புரியும்.

//ரிஸ்கி//வந்துட்டாக தந்துவம் தங்கம்மா. அப்படினெல்லாம் சொல்லக்கூடாது ஓகே.//

26 comments:

கொயினி. said...

அக்கா ,

குபூசை இப்படியும் பயன் படுத்தலாம்னு சொன்னதிர்கு நன்றி அக்கா.நானும் 2 பாக்கெட் வாங்கி 1 மட்டும்தான் யூஸ் செய்துவிட்டு 1 அப்படியே இருக்கு.நீங்க சொன்ன மாதிரி நிரைய டைம் வேறு வழியில்லாமல் தூக்கி எறிந்துள்ளேன்.ரொம்ப கரெக்டா சொன்னீங்க.1 பவுண்டு,2 பவுண்டு நு விட்டது நிறைய இருக்கு.ஆனால் அதுவே சம்பாரிப்பது எவ்வளோ கஷ்டம்னு யோசிச்சா இப்படிலாம் செய்ய மனசு வராது,ஓகே...இனிமேல் அப்படி செய்யாமல் உங்களின் குறிப்பில் செய்துவிடுகிரேன்.நன்றி அக்கா.

Jaleela said...

ஆஹா, வந்துட்டாங்க தத்துவ மேதை,

போன வாரம் உடம்பு முடியல. இந்த குபூஸ் தான் கை கொடுத்துச்சு.

Jaleela said...

லேசா பட்டர் போட்டு தான் பொரிப்பது
ஆனால் வெங்காய முட்டையுடன் சூப்பராக இருக்கும்.

அஹமது இர்ஷாத் said...

//குறிப்பாக பேச்சிலர்ஸ்களுக்கு. உற்ற நேரத்தில் உதவும் நண்பன்போல், எந்த நேரமும் பசித்துவிட்டால் உடனே ஒரு பாக்கெட் குபூஸ் வாங்கி அதில் கிடைத்ததை வைத்து தொட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பி போய்கிட்டே இருப்பாங்க.///

நிதர்சனம்....

குபூஸ் ப்ரையை ட்ரை பண்ணிடவேண்டியதுதான்... பகிர்வுக்கு நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

தத்துவம் தங்கம்மா, சொன்னது மறுக்க முடியாத
உண்மைதான்!!!

செ.சரவணக்குமார் said...

ஆஹா இப்பிடி ஒரு மேட்டர் இருக்கா? ரொம்ப நன்றிங்க.
சவுதி வந்து 3 வருஷமாகப்போகுது இதுவரைக்கும் குபூஸ் சாப்பிட்டதேயில்லை. உங்க பதிவப் பார்த்ததும் இனிமே ட்ரை பண்ணலாமேனு தோணுது.

ஜெய்லானி said...

நல்ல டிப்ஸ். இனி இப்பிடியும் டிரை பண்ணிடுவோம்..

யக்கோவ்!! குபூஸ்ஐ பாக்கெட்டோட ஃப்ரீசர்ல வச்சிட்டு தேவைப்படும் போது பத்து நிமிடம் முன்னால எடுத்து வெளிய வச்சா ஒன்னும் ஆகாது.

இங்கேயும் கவிதையாஆஆஆஆஆஆ

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

த‌த்துவ தங்கம்மா நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா.. டிரை பண்ணிறவேண்டியதுதான்.

நாடோடி said...

குபூஸை நான் அதிக‌மாக‌ சாப்பிடுவ‌து இல்லை.. உங்க‌ கொத்துகுபூஸ் ஒரு நாள் செய்து பார்த்துட‌ வேண்டிய‌துதான்..

க‌டைசியில் க‌விதை சூப்ப‌ருங்க‌..

சசிகுமார் said...

அக்கா வழக்கம் போல படைப்பு அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

இந்த ஆம்லெட் டெக்னிக் இத்தனை நாள் தெரியலையே.அடுப்பு காலியாத்தான் இருக்கு.செய்து பார்த்திட வேண்டியதுதான்:)

Anonymous said...

///வந்துட்டாக தந்துவம் தங்கம்மா///

"ஆஹா... வந்துடாங்கையா... வந்துடாங்கையா... தத்துவம் தங்கம்மா... வந்துடாங்கையா...!" ... இது தத்துவம் 234....!

நாஸியா said...

ஹிஹி.. குப்பூஸ் எல்லாம் நமக்கு இறங்காது.. இது நல்ல ஐடியாவா இருக்கே! :)

அன்புடன் மலிக்கா said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.........

மனோ சாமிநாதன் said...

குப்பூஸை வைத்து புதுப்புது ஐடியாக்கள் அத்தனையும் அருமை, மலிக்கா!

தாஜூதீன் said...

கொத்துப் பரோட்டாவுக்கு பதில் கொத்துக் குபுஸ். தமிழ்நாட்டு உணவு விடுதிகளுக்கு நல்ல லாபம் தரும் ஒரு டிஸ்ஸை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

வாழ்த்துக்கள் சகோதரி

ஸாதிகா said...

காய்ந்து போன குப்பூஸுக்கும் மேக்கப் போட்டு வாய்க்குள் திணித்து விட்டீர்களே மலிக்கா

sabeeca said...

சலாம் ராத்தா எங்க ஊர்ல குப்பூஸ் கடைக்காதே நாங்கள்ளாம் எப்புடி சாப்பிடுரதாம்?அதுக்காக ஊர் குசும்புல வாயாலத்தானு சொல்லிபுடாதியக்கா.குப்பூஸ் செய்முரை போட்டா நல்லா இருக்குமேனு சொல்ல வந்தேன்.

அன்புடன் மலிக்கா said...

//செ.சரவணக்குமார் said...
ஆஹா இப்பிடி ஒரு மேட்டர் இருக்கா? ரொம்ப நன்றிங்க.
சவுதி வந்து 3 வருஷமாகப்போகுது இதுவரைக்கும் குபூஸ் சாப்பிட்டதேயில்லை. உங்க பதிவப் பார்த்ததும் இனிமே ட்ரை பண்ணலாமேனு தோணுது//

என்னது 3 வருசத்துல சாப்பிடவேயில்லையா. அப்ப வீட்டுசாப்பாடா. வாழ்க வளமுடன்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
நல்ல டிப்ஸ். இனி இப்பிடியும் டிரை பண்ணிடுவோம்..

யக்கோவ்!! குபூஸ்ஐ பாக்கெட்டோட ஃப்ரீசர்ல வச்சிட்டு தேவைப்படும் போது பத்து நிமிடம் முன்னால எடுத்து வெளிய வச்சா ஒன்னும் ஆகாது.//

அப்படியெல்லாம் 10 நாளைக்கு வச்சி துண்ணா எப்புடி உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது 1நாள் அல்லது1 1/2 நாள்தான் என்னமோ குப்ஸே கிடைக்காத நாட்டிலாகீறீக.அண்ணாத்தே..

//இங்கேயும் கவிதையாஆஆஆஆஆஆ//

இது கவிதையாஆஆஆ அப்ப கவிதைய என்னா சொல்லுவீக

அன்புடன் மலிக்கா said...

ராஜ நடராஜன் said...
இந்த ஆம்லெட் டெக்னிக் இத்தனை நாள் தெரியலையே.அடுப்பு காலியாத்தான் இருக்கு.செய்து பார்த்திட வேண்டியதுதான்:)//

அப்ப பத்த வச்சிரவேண்டியதுதான். சூடா சுடச்சுட ஆம்லெட் குபூஸ்ரெடி..

அன்புடன் மலிக்கா said...

மனோ சாமிநாதன் said...
குப்பூஸை வைத்து புதுப்புது ஐடியாக்கள் அத்தனையும் அருமை, மலிக்கா!/

வேஸ்டாகக்கூடாதேன்னு சும்மா செய்துபார்த்தேமேடம் சூப்பராக வந்தது இரண்டு மூன்று வகையில் பார்த்தபிந்தான் இட்ந்தபதிவை போட்டேன் நன்றி மனோ மேடம்..
//தாஜூதீன் said...
கொத்துப் பரோட்டாவுக்கு பதில் கொத்துக் குபுஸ். தமிழ்நாட்டு உணவு விடுதிகளுக்கு நல்ல லாபம் தரும் ஒரு டிஸ்ஸை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

வாழ்த்துக்கள் சகோதரி.//

எப்படியோ வேஸ்ட்டும் ஆகாமல் பிழைப்பும் நடந்தால் மகிழ்ச்சியே!

மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

அன்புடன் மலிக்கா said...

கொயினி. said...
அக்கா ,

குபூசை இப்படியும் பயன் படுத்தலாம்னு சொன்னதிர்கு நன்றி அக்கா.நானும் 2 பாக்கெட் வாங்கி 1 மட்டும்தான் யூஸ் செய்துவிட்டு 1 அப்படியே இருக்கு.நீங்க சொன்ன மாதிரி நிரைய டைம் வேறு வழியில்லாமல் தூக்கி எறிந்துள்ளேன்.ரொம்ப கரெக்டா சொன்னீங்க.1 பவுண்டு,2 பவுண்டு நு விட்டது நிறைய இருக்கு.ஆனால் அதுவே சம்பாரிப்பது எவ்வளோ கஷ்டம்னு யோசிச்சா இப்படிலாம் செய்ய மனசு வராது,ஓகே...இனிமேல் அப்படி செய்யாமல் உங்களின் குறிப்பில் செய்துவிடுகிரேன்.நன்றி அக்கா.//

இனி அப்படிசெய்யாமல் இதுபோல் செய்துபாரு கொய்னி.. மிக்க நன்றிபா..
//Jaleela said...
ஆஹா, வந்துட்டாங்க தத்துவ மேதை,

போன வாரம் உடம்பு முடியல. இந்த குபூஸ் தான் கை கொடுத்துச்சு.//

நீங்கமட்டும் வித விதமா செய்றீங்க ஏதோ நம்மாள முடிஞ்சது ஹி ஹி
// Jaleela said...
லேசா பட்டர் போட்டு தான் பொரிப்பது
ஆனால் வெங்காய முட்டையுடன் சூப்பராக இருக்கும்.//

செய்து சாப்புடுங்கோ செம சூப்பராயீக்கும்..

அன்புடன் மலிக்கா said...

அஹமது இர்ஷாத் said...
//குறிப்பாக பேச்சிலர்ஸ்களுக்கு. உற்ற நேரத்தில் உதவும் நண்பன்போல், எந்த நேரமும் பசித்துவிட்டால் உடனே ஒரு பாக்கெட் குபூஸ் வாங்கி அதில் கிடைத்ததை வைத்து தொட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பி போய்கிட்டே இருப்பாங்க.///

நிதர்சனம்....

குபூஸ் ப்ரையை ட்ரை பண்ணிடவேண்டியதுதான்... பகிர்வுக்கு நன்றி...

மிக்க நன்றி இர்ஷாத்..


//சைவகொத்துப்பரோட்டா said...
தத்துவம் தங்கம்மா, சொன்னது மறுக்க முடியாத
உண்மைதான்.//

மிக்க நன்றி சை கோ ப.

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் பிஸியான பல வேலைகளுக்கிடையில் என் அழைப்புக்கு இணங்கி கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.இதில் உங்கள் அவார்டை இணைத்துள்ளேன் பெற்று கொள்ளவும்.
உங்கள் எல்லா குறிப்புகளுமே மிக மிக அருமை. ரொம்ப கடினமாக இருந்தது தேர்வு செய்வது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாச்சு.
போட்டி முடிவு அறிப்பு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது பொருமையாக காத்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.--


-- http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html


பஹ்ரீன் நம்பர் கொடுங்கல் மெயில் செக் பண்ணுங்கள்
இப்படிக்கு

உங்கள் ஜலீலாக்கா

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் பிஸியான பல வேலைகளுக்கிடையில் என் அழைப்புக்கு இணங்கி கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.இதில் உங்கள் அவார்டை இணைத்துள்ளேன் பெற்று கொள்ளவும்.
உங்கள் எல்லா குறிப்புகளுமே மிக மிக அருமை. ரொம்ப கடினமாக இருந்தது தேர்வு செய்வது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாச்சு.
போட்டி முடிவு அறிப்பு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது பொருமையாக காத்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.--


-- http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_5444.html


பஹ்ரீன் நம்பர் கொடுங்கல் மெயில் செக் பண்ணுங்கள்
இப்படிக்கு

உங்கள் ஜலீலாக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.