அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, May 1, 2010

பத்திரமா பாத்துக்கோங்க!!

1--புடவைகளை பத்திரப்படுத்த அந்துருண்டை பயன்படுத்தக்கூடாது அந்த வாசனை நம் சுவாசத்துக்கும்சரி, குழந்தைகளுக்கும்சரி நல்லதல்ல.

2---பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.

3--பட்டுப்புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்
4--பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,தனித்தனியே எனபிரித்து வைக்கவேண்டும்.

5--முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள், ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்.

6--புடவைகளோடு அதற்கு மேட்சிங் பிளவுசையும் [கலர்போகாத] அதனுடன் வையுங்கள். எடுக்க ஈசியாக இருக்கு அவரத்திற்க்கு தேடிக்கொண்டு இருக்கவேண்டாம்.
இல்லையென்றால் அதையும் ஹேங்கரில் தொங்கவிடுங்கள்.


7--பட்டுப்படவைகளை நீங்களே அயன் செய்வதைவிட லாண்டிரில் கொடுத்தால் நல்லது. அப்படி நீங்களே செய்யும் பட்சத்தில். புடவையை திருப்பிப்போட்டு. பாடர் உள்ள இடத்தில் வேறொரு கிளாத்போட்டு அயன் செய்யுங்கள். அப்போதுதான் சீக்கிரம் கறுத்துப்போகாது பாடர். மற்றும் ஜரிகை..

இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது மத்தவாளுக்கு இன்னும் தெரிந்தா தெரியப்படுத்தவும்.

எத்தனை கஷ்டப்பட்டு கடகடையா ஏறி இறங்கி  துபாயிலேர்ந்து வாங்கிபோய் கொடுத்தா. இதென்ன கலர் இப்புடி இருக்கு, கொஞ்சம் தூக்கலயிருந்துகலாம். இல்லையின்னா கொஞ்சம் கலர் கம்மியாயிருந்துக்களாம் . இந்த பாடர் அப்புடியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.
ஒரு புடவையாச்சும் செலக்‌ஷன் செய்யத்தெரியுதா இவுகளுக்கு. ஹூம். அவ கட்டியிருக்காப்பாருங்க. அவமாப்பிள எப்படி செலக்‌ஷன் செய்றாரு. உங்கமண்டைக்கு எத்துன தடவசொன்னாலும் ஏறமாட்டேங்கிறதே! என ஒரு புடவைக்கு ஆத்துக்காரர படுத்துரபாடு அப்பப்பா தாங்குதுடா பூமி.


//அதுசரி ஒன்னு கேள்விப்பட்டேனே! புடவக்கடைக்குபோனா ஒரு புடவ எடுக்க மணிக்கணக்குல  நிப்பீகளாமே நெசமாவா? பெண்ணரசிகளே!
அப்படி யாரெல்லாம் நிப்பீகன்னு சொன்னா எனக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்.
எதுக்கு கேக்குற மல்லி?
ஏன்னா.. ஏன்னா..
என்ன ஏன்னா ஏயன்னான்னுகிட்டு சொல்லு விசயத்த,
ஊஹூம்  நீங்க சொல்லுங்க முதலில் அப்புறமா அந்த ரகதியத்தை சொல்லுறேன் ஓகே ..


ராப்பபகலா கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் காசில் எடுக்குற புடவைய பத்திரமா பாத்துக்கவேணாமா!
கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! புதிதாவே வாங்கிக்கொடுக்கலாம் வசயிருந்தா அப்படியில்லாதவுக இப்படியும் செய்யலாமுல்ல, அதுக்காவாவது பத்திரமா பாத்துக்கோங்க!

திஸ்கி///இலவசமாக போட்டோக்கள் தந்த கூகிளுக்கு மிக்க நன்றி../

23 comments:

asiya omar said...

புடவைன்னதும் ஓடி வந்திட்டேன்,எல்லாம் சரி தான்,ஆனால் நான் ரொம்ப சீக்கிரம் செலெக்ட் செய்திடுவேன்,ஏன்னால் முதலில் பிடித்தது தான் கடைசியிலும் பிடிக்கும்,பேசாம பிடித்ததை எடுத்திட்டு கிளம்பிட்டு இருக்கனும்.புரட்டி புரட்டி பார்த்திட்டு முதலில் நம்ம் கண்ணுக்கு பிடித்ததை தான் எடுப்போம்,இதில் மாற்று கருத்து இருக்கான்னு தெரியலை.என்ன கலர் இல்லை,என்ன பட்ஜெட்னு யோசித்து விட்டு போனால் ஈசியாக செலெக்ட் செய்து விடலாம்.விட்டால் நான் இங்கு ஒரு பதிவே போட்டு விடுவேன் போல.....நல்ல இருக்கு.

நாடோடி said...

//பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்//

இவ்வ‌ள‌வு வ‌கை இருக்கா? நான் என்ன‌வோ ப‌ட்டு புட‌வைனா ஒரு ர‌க‌ம் தான் என்று நினைத்தேன்..

//கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க!///

உண்மைதான்....

ஜெய்லானி said...

//அதுசரி ஒன்னு கேள்விப்பட்டேனே! புடவக்கடைக்குபோனா ஒரு புடவ எடுக்க மணிக்கணக்குல நிப்பீகளாமே நெசமாவா? பெண்ணரசிகளே!
அப்படி யாரெல்லாம் நிப்பீகன்னு சொன்னா எனக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்//

இப்படி சொன்னா பதி பேருக்கு மேலே பெஞ்ச் மேலே ஏத்த வரும் பரவா இல்லயா !!


ஒரு கர்சிப் வாங்கவே பத்து கடை ஏறி இறங்குற ஆள் கூட இருக்கு

ஜெய்லானி said...

//இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! புதிதாவே வாங்கிக்கொடுக்கலாம் வசயிருந்தா அப்படியில்லாதவுக இப்படியும் செய்யலாமுல்ல, அதுக்காவாவது பத்திரமா பாத்துக்கோங்க!//

பெருமைக்கு அடுக்கி வைப்பதை விட இது நல்ல விஷயம்

ஜெய்லானி said...

//ஒரு புடவையாச்சும் செலக்‌ஷன் செய்யத்தெரியுதா இவுகளுக்கு. ஹூம். அவ கட்டியிருக்காப்பாருங்க. அவமாப்பிள எப்படி செலக்‌ஷன் செய்றாரு. உங்கமண்டைக்கு எத்துன தடவசொன்னாலும் ஏறமாட்டேங்கிறதே! என ஒரு புடவைக்கு ஆத்துக்காரர படுத்துரபாடு அப்பப்பா தாங்குதுடா பூமி.//

சொந்த கதையா..ஹி...ஹி...( நா யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். )

Jaleela said...

சேலை என்றதும் நானும் ஓடி வந்தேன்,

நானும் சேலை செலக்ட் செய்ய ரொம்ப நேரம் எடுக்க மாட்டேன்.

டக்குன்னு எடுத்து முடித்து விடுவேன்,

எடுக்கலாமா வேணாமாஅன்னு தான் ரொம்ப நேரம் யோசிப்பேன்.ஹிஹி

அன்புடன் மலிக்கா said...

asiya omar said...
புடவைன்னதும் ஓடி வந்திட்டேன்,எல்லாம் சரி தான்,ஆனால் நான் ரொம்ப சீக்கிரம் செலெக்ட் செய்திடுவேன்,ஏன்னால் முதலில் பிடித்தது தான் கடைசியிலும் பிடிக்கும்,பேசாம பிடித்ததை எடுத்திட்டு கிளம்பிட்டு இருக்கனும்.புரட்டி புரட்டி பார்த்திட்டு முதலில் நம்ம் கண்ணுக்கு பிடித்ததை தான் எடுப்போம்,இதில் மாற்று கருத்து இருக்கான்னு தெரியலை.என்ன கலர் இல்லை,என்ன பட்ஜெட்னு யோசித்து விட்டு போனால் ஈசியாக செலெக்ட் செய்து விடலாம்.விட்டால் நான் இங்கு ஒரு பதிவே போட்டு விடுவேன் போல.....நல்ல இருக்கு.//

பதிவ போட்டுடுங்கக்கா. நெஜமாதானே சொல்ல்றேன் சட்டுனு சீக்கிரம் எடுத்துடுவேன்னு நம்மிட்டேன் நம்பிட்டேன்..

malar said...

உங்க பதிவில் முதல் சாரி சூப்பர்...

நானும் முதலில் பார்ததை தான் கடைசியில் எடுப்பேன்...எந்த பொருள் வாங்கவும் ரொம்ப நேரம் எடுகமாட்டேன்..

சன் டிவி பட்டிமன்றத்தில் சொன்ன மாதிரி கடை லைடில் ஒரு கலரிலும் வீடில் உள்ள லைடில் ஒரு கலரிலும் இருக்கும்..பார்து எடுக்க வேண்டும்...
நலமா?

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
//பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்//

இவ்வ‌ள‌வு வ‌கை இருக்கா? நான் என்ன‌வோ ப‌ட்டு புட‌வைனா ஒரு ர‌க‌ம் தான் என்று நினைத்தேன்..//

பாவம் பச்சபுள்ளையாயிருக்கேளே!
இன்னும் திருமணம் நடக்கலையின்னு நெனக்கிறேன். அப்புறம் தெரியும் ஸ்டீபன் எல்லா ரகங்களும்.. கத்துக்கோங்க இப்பவுலேர்ந்து.

//கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க!///

உண்மைதான்..//

மிக்க நன்றி ஸ்டீபன்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//ஒரு புடவையாச்சும் செலக்‌ஷன் செய்யத்தெரியுதா இவுகளுக்கு. ஹூம். அவ கட்டியிருக்காப்பாருங்க. அவமாப்பிள எப்படி செலக்‌ஷன் செய்றாரு. உங்கமண்டைக்கு எத்துன தடவசொன்னாலும் ஏறமாட்டேங்கிறதே! என ஒரு புடவைக்கு ஆத்துக்காரர படுத்துரபாடு அப்பப்பா தாங்குதுடா பூமி.//

சொந்த கதையா..ஹி...ஹி...( நா யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். )//

எல்லாருக்கிடேயும் சொல்லுங்கோண்ணா. ஏன்னா எங்க மச்சான் செலக்‌ஷன் செய்வது சும்மா படு சோக்கயிருக்கும். எனக்கு என்ன பிடிக்குமுன்னு அவுகளுக்கு தெரியாதா!

நான் ஊரில் இருந்தபோது. நினைப்பேன் நான் என்ன நினைப்பேனோ அது அப்படியே வந்துவிடும். அது எதுவாக இருந்தாலும்.ஏற்றுக்கொள்ளும் மனமும் நமக்கிருக்குல்ல.

எத்துன ஆத்துல பாத்திருக்கோம் இப்படியெல்லாம் ஆத்துக்கார் படுர அவதிய.. அதுக்காக எங்கமச்சிய இப்படியெல்லாம் சொல்லக்கூடாது அப்புறம் சொல்லிக்கொடுடுவேன்.

அமுல்ஸ்பிரே.அப்புரம் கொசு
ஸ்பிரே யா [ஸ்ரேயா இல்ல] போயிடும்.

சைவகொத்துப்பரோட்டா said...

கடை மாறி வந்திட்டேன் போல :))

அநன்யா மஹாதேவன் said...

மலிக்கா,
இந்த மாதிரி புடவைக்கடைக்கு ஷாப்பிங் போகும்போது நைனாவை வாசல்ல சேர்ல அம்போன்னு விட்டுட்டு போயிடுவோம். பாவம். தேமேன்னு உக்காந்து இருப்பார். ஒன்லி 4-5 அவர்ஸ் தான்.. டக்குன்னு ஒரு 7 புடவை உடனே வாங்கிண்டு வந்துருவோம்ல? :P
இங்கே துபாய்ல பார்த்தாஸுக்கு போனோம், ரெண்டாவது நிமிஷம் ஒரு போச்சம்பள்ளி சேலையை வாங்கிண்டு கிளம்பியாச்சு. கடைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம். நிஜம்மாவே செலக்டு பண்ணிட்டீங்களா மேடம்னு 2-3 வாட்டி கேட்டுண்டான்னா பாருங்க. அப்புறம் உண்மைய சொல்ல வேண்டியதா போச்சு. இது எனக்கில்லை, இன்னொருத்தவங்களுக்குன்னு.. :P

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நல்ல வேளை! சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டேன்! ஹி...ஹி..புடவை விஷயத்தில சீக்கிரம் முடிஞ்சது இது ஒண்ணு தான் என்ன பொறுத்தவரைக்கும்!!

நீச்சல்காரன் said...

நல்ல தகவல்கள். என் அம்மாவிடம் சொல்கிறேன், நன்றி

Chitra said...

Useful info. Thank you.

சசிகுமார் said...

பெண்களுக்கு உபயோகமான பதிவு, வழக்கம் போல கலக்கீடீங்க அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ananthi said...

உங்க டிப்ஸ்-எல்லாம் சூப்பர்..
தேவைக்கு அதிகமாக இருப்பதை, இல்லாதவங்களுக்கு குடுக்கறது..ரொம்ப நல்ல விஷயம்..

நாஸியா said...

ஹிஹி.. சேலையோ சுரிதாரோ நகையோ நம்ம ரேஞ்சுக்குள்ள அங்க வெச்சிருக்குற எல்லாத்தையும் ஒரு நோட்டம் விட்டுட்டு தான் எடுப்பேனே!! ஹிஹி..

//கொஞ்சம் பழசபோனா அதை தூக்கிபோட்டுடாம. இல்லாதவங்களுக்கு கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க!///


எங்கும்மாவும் இதைத்தான் சொல்லுவாங்க.. ஒரு துணி நல்லா இருக்கும்போதே அதை யாருக்காச்சும் குடுத்துடனும்.. கண்ணால பார்க்கிறோம், அல்லாஹ்வின் அருளால் குடுக்க குடுக்க சேர்ந்த்துட்டு தானே இருக்கு!! :)

சே.குமார் said...

ருமைக்கு அடுக்கி வைப்பதை விட இது நல்ல விஷயம்.

சே.குமார் said...

ருமைக்கு அடுக்கி வைப்பதை விட இது நல்ல விஷயம்.

malarvizhi said...

புடவையை பார்த்ததும் ஓடி வந்து விட்டேன் ,உங்கள் பதிவுக்கு.நான் ஒரு புடவை பைத்தியம்.ஆனால் ரொம்ப நேரம் எடுக்க மாட்டேன். மிகவும் விரைவில் தேர்வு செய்து விடுவேன்.குறிப்புகள் நன்றாக உள்ளது.நீங்கள் கூறிய படி தான் நானும் புடவைகளை பாதுகாப்பேன்.3 அல்லது 4 வருடங்கள் பழைய புடவைகளை வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன்.

malar said...

புடவையை பார்த்ததும் ஓடி வந்து விட்டேன்
உபயோகமான பதிவு, வழக்கம் போல கலக்கீடீங்க ...

Vijisveg Kitchen said...

நல்ல பதிவு. அதுவும் புடவை என்றதும் நேரே இங்கே ப்ரசண்ட்.
நான் லேட்டஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு போவேன் பார்ப்பேன் பட்ஜட் ஒத்துவந்தால் என்னோட பேவரிட் கலர்ஸ் கிடைத்தால் பேக்ட் இல்லல என்றால் மேலும் ஒரு மணி நேரம் அலசிபார்த்து ஒ.கே தான்.
இப்ப யாருங்க புடவை எல்லாம் சல்வார், ஜெகின்ஸ் மாறிட்டாங்க.
நல்ல டிப்ஸ்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.