அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, December 13, 2012

அட்டகாசத்தோடு நாங்களும்![பேச்சிலர் சமையல் போட்டி]




டும் டும் டும்,,இதனால் தெரிவிப்பது என்னெவென்றால். நானும் ஜலீலாக்கா நடத்தும் பேச்சிலர் சமையல் போட்டியில் பங்குகொள்கிறேன் என்பதை மிக மிக உரக்கசொல்லிக்கொள்கிறேன், அதென்ன உரக்க அப்படினெல்லாம் கேட்க்கப்புடாது ஓக்கே..

வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சிலர் வாழ்க்கை என்பது சற்று சிரமமானதுதான். ஏன் எதுக்கு சிரமம் அப்படிங்கிறீங்களா அட சமைக்கிறதுக்கு தானுங்க, அதை கொஞ்சம் சிரமமில்லாமல் செய்யசொல்லி சொல்லிகொடுத்தா பாவம் அந்த சிரமத்திலிலேர்ந்து விடுபடுவாங்களேங்கிறத  மனசுல வச்சிதான் இந்த போட்டிய நம்ம அக்கா தேர்ந்தெடுதுள்ளாங்களோன்னு நெனக்கிறேன்.

ஆக சமையல் அட்டகாசத்தோடு  சேர்ந்து நாங்களும் அந்த நல்லதில்  கொஞ்சூண்டு பங்கெடுக்கதான் இங்கே ரெண்டு மூன்று உடனடி சமையல் விபரத்தினை லிங்க் வழியா கொடுக்கிறேன்.

இவைகள் நான் ஏற்கனவே பதிந்திருந்தாலும் இது பேச்சிலர்களுக்கு உதவுமேன்னுதான். மீள்பதிவாக இங்கு மீண்டும் பதிகிறேன். [ஏன் கைவசம் சரக்கு இல்லையோன்னு நினைக்குக்கூடாது, இருக்கு ஆனா இல்லை. நேரமில்லை போட்டோவோடு அனைத்தும் இணைக்க. அதேன் இந்த மீள்பதிவு..

குபுஸிற்கு மேக்கப் [குபுஸ் ஃபிரை]

கருவாட்டுத் தொக்கு

ஈசி முர்தபா [லாப்பா]

நொடியில் பிரட் பஜ்ஜி


பின்னாத குறிப்பு.
-----------------------------
சமையல்கள் செய்து பார்த்து சாப்பிட்டுவிட்டு நல்லாயிருந்தா மட்டும் கருத்துச்சொல்லுங்க.நல்லயில்லன்னாலும் சொல்லுங்க. ஆனா அப்படியிப்படி ஆச்சின்னா அதுக்கு கலைச்சாரல் நிர்வாகமோ அதன் நிறுவனர் மலிக்காவோ பொருப்பல்ல பொருப்பல்ல, எக்கோ எஃபக்டோடு சொல்லிக்கிறேன்,,..[அதுசரி அதென்ன நிறுவனர் ஓ பில்டப்பு ஓக்கே ஓக்கே

அன்புடன் மலிக்கா

Friday, November 30, 2012

ஆச்சர்யமாய், சில அதர்ச்சிகள். சில ஆனந்தங்கள்.


 
என்னது!!!!! அப்படியா!!!!!!!!!!
என்ன ஆச்சர்யக்குறி அதிகமாயிருக்கு.. முதலில் ஹேப்பி பர்த் டே சொல்லிகிறேன் யாருக்கு? அதுவா இதபடிங்க யாருக்கு புரியும்..
ஆச்சரியங்கள் நம்வாழ்வில் அடிக்கடி நடக்கும்போது இன்ப அதர்ச்சியாகவுமிருக்கும். ஆனந்தமாகவும் இருக்கும், அப்படியென்ன ஆச்சயர்யங்கள் என்கிறீகளா? எல்லாம் இந்த இணையத்தால்தான் அடிக்கடி அதர்ச்சிக்குள்ளாக்கபடுகிறேன் அப்ப ஹார்ட் என்னாகுறதுங்குறீங்களா. ஹா ஹா இது ஆனந்த அதர்ச்சிகள்தானே தாங்கும் தாங்கும் எதையும்தாங்கும் இதயம்தான் [அப்பப இதயமும் டொஸ்கு விழும் அதெல்லாம் கணக்கில் ஏத்தப்புடாது.ஓகே] சரி சரி விசயத்துக்கு வந்துட்டேன்ன்.

அந்த ஆனந்த அதர்ச்சி வேறொன்றுமில்லை அன்பில் தொடங்கி, பாசத்தில் நெருங்கி, வியாபாரத்தில் தொடரகிறது எங்களின் நேசப்பயணம். இப்போது புரிந்திருக்குமே என்னான்னு ,, இன்னும் புரியலையா. நம்ம சமையலில் அட்டகாசம் செய்யும் அக்கா ஜலிலாக்காவும் நானும்சேர்ந்து போனவரும் இதேநாள் தொடங்கிய பர்தா மற்றும் மஃப்தா மற்றும் பேன்ஷி அயிட்டங்களின் வியாபாரம் தொடங்கி இன்றோடு 1 வருடம் [கிளிக்]நிறைவடைகிறது. அல்ஹம்துல்லில்லாஹ் எல்லாப்புகழும் அவனுக்கே. இறைவனால் ஏற்படுதப்பட்டு, இணையத்தால் இணைக்கப்பட்ட எங்கள் இதயங்கள், வாழ்வியலுக்கு தேவையான வசதிகளை நிவர்த்திசெய்துகொள்ளவும் ஏதுவாய் ஒரு வியாபாரத்தையும் உண்டாக்கிதந்தது, இது எத்தனை அழகான ஆழமான ஆனந்த அதர்ச்சியான ஆச்சர்யம்.

எங்களின் முதல்சந்திப்பே முத்தாய்ப்பாய் அமைந்தது[கிளிக்]. உடன்பிறவா சகோதரியாய் ஜலிக்கா பழகியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியது, அக்கா இல்லாத குறை அவர்களால் தீர்க்கப்பட்டது, [இதுபோல் அக்காக்கள் இந்த இணையத்தில் அடுத்தடுத்து கிடைத்தது அதைவிட ஆச்சர்யம் அதை கடைசியில் சொல்வேன்]   துபையில் இருக்கும்போது அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் நேரம்கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வோம், 11 வருட பாலைவன வாழ்வை முடித்துக்க்கொண்டு நாங்கள் ஊர்திரும்பியபின் எதார்த்தமாக போனில் பேசிக்கொண்டிருக்கையில்,அவர்கள் சென்னையில் வைத்திருக்கும் கடை, சென்னை பிளாஷாபோல் முத்துப்பேட்டையில் ஒரு கடை, மலிக்கா பிளாஷா என ஓப்பன் செய்தால் என்ன என்று அவர்கள் கேட்க, செய்யலாமே ஆனால் அது வீட்டிலேயே என நானும் சொல்ல, அதிலிருந்து ஆரம்பிததுதான் இந்த வியாபாரம். அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கிருபையால் இன்றுவரை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது வியாபாரமும் எங்கள் பாசபரிமாற்றங்களும்.

இணையத்தில் இணைந்த உறவுகள் இன்று வியாபரம்வரை தொடர்கிறோம் அதனை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன்[பெருமைதான் அடைகிறேன் தற்பெருமையல்ல] ஜலிலாக்கா மாதரியே அவங்க கணவரும் நல்ல மனம்கொண்டவர்கள், நல்ல ஜோடி இருவரும், ஹைட், வெயிட், ஒயிட் அனைத்திலும் நான் எந்த டிசைன் அனுப்பச்சொன்னாலும் சிரமம் பாராது அதனை ஆடர்கொடுத்து வாங்கி அனுப்புவார்கள். நல்ல தரத்தோடு நல்லத்துணிகள் ஒரினினல் ஸ்டோன்கள் வைத்து, புர்க்காக்கள் தைத்து அனுப்புகிறார்கள், நியாயமான விலைகளில். வெளியில் கிடைக்கும் புர்காவில் தலைதுணி சிறிதாக இருக்கும் அது ரெடிமேட்துணி. இங்கு தைத்து அனுப்புவதால் தாரளமாக தலை கழுத்து மார்பு என அனைத்தும் மூடுவதுபோலிருக்கும்,அதேபோல் துணியின் தரம் கற்களின் பளபளப்பு.. என விரும்பு டிசைன்களில் ஆடர் செய்து கொடுக்கிறோம், அதனாலேயே எங்களிடம் ஆடர்கள் நிறைய வருகிறது, .. [அப்பாடா இதிலேயே ஒரு விளம்பரமும் கொடுத்துட்டோமுல்ல ஹி ஹி]

வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்களுக்கு தெரிந்த கைத்தொழில்கள் செய்வது, இதேபோல் வியாபரங்கள் செய்வதால், அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு ,[வீண்பேச்சுகள், வீண் வெளியேபோக்குவரத்தும் குறையுமல்லவா] அதோடு தன்னாலும் தன் குடும்பதிற்க்கு உதவும்முடியும் பலவகையில் உதவும் நாம், இவ்வகையில் உதவினால் இன்னும் கூடுதல் நலம் மற்றும் பலம்தானே.. இதோ நானும் என்னால் முடிந்தளவு என்குடும்பத்திற்க்கான கடமைகளை நிறைவேற்றுவதோடு, இப்பணியால் என்மனத்துக்கும் நிறைவு கிடைக்கிறது.
இணையம் இணைத்த இப்படியான ஒரு நல்ல வாய்ப்பையும், அதனால் ஏற்ப்பட்டிருக்கும் உறவுகளையும் நான் என்றும் மறக்கவும் மாட்டேன் நழுவவும் விடமாட்டேன். ஜலீலாக்கா சமையலில் மட்டும் அட்டசாகமாய் அசத்துபவர்களல்ல அன்பில் அதைவிட பலமடங்கு அசத்தோ அசதென்று அசத்துபவர்கள்.
அன்பே ஜலிலா
நான் அசந்தது
உன் சமையல்கள் கண்டுமட்டுமல்ல
சடைக்காமல் நீ கொடுக்கும் பாசத்திலும்தான்..
இடையிடையெ மானே பொன்தேனே போட்டுக்கலாம். ஹோ ஹோ கவிதையில் நீ உன். என ஒருமையில் சொல்லிட்டேன் அது பாசமிகுதியால்தான்க்கா ஹா ஹா..

அப்புறம்,கடைசியில் சொல்வேன் சொன்னேனே அத சொல்லமறந்துடுவேன் நினைச்சீங்களோ. அதெப்படி விடுவோம் சொல்லாம விடமாட்டோமுல்ல,, இந்த இணையம்தந்த இதயம் ஈர்த்த அக்காமார்களின் பட்டியல்கள் [நேரில் கண்டவர்களும் கூட]
முதலில் ஜலில்லாக்கா  [சமையல் அட்டகாசங்கள்]
சாதிக்காக்கா  [எல்லாபுகழும் இறைவனுக்கே]
சுமஜ்லாக்கா [என் எழுத்து இகழேல்]
ஹுசைனம்மாக்கா  [ஹுசைனம்மா ]
ஆசியாக்கா  [என் சமையல்]
சாருலதாக்கா  [கோலங்கள்]
இன்னும் இருக்காங்க ஆனா அவங்களெல்லாம் தங்கைகள் என்று சொல்லிக்கிறாங்க ஹூம்..

பின்னாத குறிப்பு:
என்ன ஒன்னு சாதிக்காக்கவைத்தவிர இந்த எல்லா அக்காக்களுக்கும் நான் சீனியராக்கும் ஆங் ஏன்னா .. அஸ்கு புஸ்கு அத சொல்லமாட்டேனே..
 
என்றும் அன்புடன்
உங்கள் மலிக்கா

Monday, November 19, 2012

அடையாள புருசர்கள் யார்?

 

எங்கு நோக்கினும் மோகம் எங்கு நோக்கினும் வன்முறை. எதற்கெடுத்தாலும் கோபம் இதன் பெரும் பங்களிப்பு எவைகளுக்கெனில் அதை நான் சொல்லிதெரியவேண்டியதில்லை உலகிற்கே தெரிந்ததுதான் ஆனாலுமதனை யாரும் புறக்கணிப்பதாகவும் இல்லை, பலர்  மூன்றுமணி நேர சந்தோஷம் தன் வாழ்நாளைவரை நிலைக்கப்போகிறதென்றே நினைக்கிறார்கள். இங்கே நான் யாரையும் எந்தக் குறையும் சொல்லவேண்டுமென்ற நோக்கமில்லை. அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் இவ்வுலகில், இருக்கும் கொஞ்சநாளிலாவது நல்லவைகளை தெரிந்துகொண்டு. நல்லதோடு அல்லது நல்லவர்களோடு அல்லது நல்லவர்களையாவது அடையாளங் கண்டுகொள்வோமே! வரும் தலைமுறைக்கும் காட்டிவிட்டுபோவோமே! என்ற ஆதங்கம்தானே தவிர இப்பதிவிற்க்கு வேறு காரணங்களில்லை!

விசயத்திற்க்கு வருகிறேன்.
----------------------------------------------

இன்று உலகத்தை ஒருவகையில் அல்ல பலவகைகளில் ஆட்க்கொண்டு கிடப்பதும், ஆட்டிவைப்பதும், எது என்றால் அது மீடியாக்கள்தான். இவைகளுக்கு இணையாக தற்போது இணையங்களும் செயல்பட்டுவருகிறது. எதை ஒன்றை சொல்லவேண்டுமென்றாலும் அல்லது எதை ஒன்றை செய்யவேண்டுமென்றாலும் தேவைப்படுவது மீடியாக்களே!

ஒருவர் இன்னாரென்று அறிமுகப்படுத்தப்படவும், இன்னார் இப்படியாப்பட்டவரென இடித்துறைக்கப்படவும், தேவைப்படுவதும் இவைகளே! ஆக மக்களின் அங்கமாக சிலருக்கு அன்றாட தேவையாகவே மாறிவிட்டது இவைகள். ஆகவே இவைகளால் நல்லதை செய்யவும் இயலும். கெட்டதை அதிகம் பரப்பவும் முடியும்.

இப்பொழுதெல்லாம் பொது இடங்களிலோ அல்லது பெரியவர்களின் மத்தியிலோ அல்லது பண்பெரும்மேடையிலோ ஒரு குழந்தையை. ஏன் உங்கள் குழந்தைகளையே அழைத்து நீ எதிர்காலத்தில் யாரைபோல்வர ஆசை எனக்கேளுங்களேன். உடனே அதன் நாவிலிருந்து வரும் வார்த்தை நான் இன்ன நடிகரைபோல் வரனும். அவரைபோல் சண்டையிடனும். இன்ன நடிகையைப்போல வரனும் அவரைபோல் அழகாய் ஆடனும் என்று சொல்லும். உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் எனக்கேட்டால் சினிமாக்காரர்களையும். குத்துச்சண்டை கிரிகெட் வீரர்களையும் அடிதடி தாதாக்களையுதான் அடையாள புருசர்களாக. அதாவது ரோல்மாடல்களாக சொல்கிறார்கள்
 
இது அவர்களின் பிழையல்ல அல்லது அவர்கள் சொல்லபடும் பெயருக்குறியவர்களின் தவறுமல்ல. தவறு தன்வீட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. மீடியாக்களின் வாயிலாக யார் அடையாளப்புருசர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்களோ.அதுவும் தன் தாய் தந்தைமூலமாகவே அவர்கள் அந்த குழந்தைகளின் அடையாளப்புருசர்கள். பேருக்காக எப்பவாவது ஒருநாள் காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிதந்தார். அறிஞர் அண்ணா அதை செய்தார். காமராஜர் இதைசெய்தார் .முகமது நபி இதைசெய்யக்கூடாதென்றார் என சொல்லிவிட்டால் போதுமா?

குழந்தைகளின் மனதில் எது பதிகிறதோ அதுவாகவே நாளை அதுமாறும் அதனை உணராதவரா நீங்கள்?. உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையைவிட உங்கள் குழந்தைக்காக வாழும்வாழ்க்கையை சரிவர செய்யத்தவறினால் நாளை நஷ்டமடைவது யார்?
 
சரி இதில் நஷ்டமைடைவதெப்படி எல்லாம் நம்மவீட்டில் இருக்கும் டீவி என்ற மீடியாவின் வழியாகதான்.
எந்த ஒரு நிகழ்ச்சியும் அல்லது எந்த ஒரு சபையிலும் கலைத்துறை. விளையாட்டுத்துறை அதிலும் குறிப்பான விளையாட்டுத்துறை, அங்கீகாரமென்ற ஒன்று அவர்களுக்குதான் வழங்கப்படுகிறது.
 
அதனோடில்லாமல், சுதந்திர தினமா? குடியரசு தினமா அதற்க்கும். குழந்தைகள் தினமா? அட பிறரின் நினைவு தினமா? அனைத்திக்கும் சினிமாதான் சிறப்பு நிகழ்ச்சிகளாக!
 
மீடியாக்களை திறந்தாலே ஒன்று சினிமா அல்லது அதன் நடிகர் நடிகளின் பேட்டி அவர்களின் நடனம் அவர்களைச்சார்ந்த விசயங்களென அதனை மிகைப்படுத்தியும் மேன்மைப்படுத்தியும் காண்பிக்கப்படுகிறது!
அதோடில்லாமல் குறிப்பிட்ட துறைகளைச்சார்ந்தவர்களை மட்டுமே சாதனையாளர்ளென்றும், சிறந்த திறமைசாலிகளென்றும், வருடாவருடம் ஒவ்வொரு மீடியாக்களும், ஆக வருடமுழுவதும் அடையாளப் படுத்தபடுகிறார்கள்
 
 இவர்களே உழைப்பு திறமை இருக்கும் எவர்களையும் அடையாளம் காட்டுவதில் தவறில்லை ஆனால் அவர்களையே  அடையாளப்படுத்துவது சரியாகுமா?
 
 மற்றவர்களின் திறன்களுக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் ஒரு சல்யூட் மட்டும்போதுமா? என்றாவது ஒருமுறை கெளரவப்படுத்தினால் தகுமா? அவர்களுக்கு என்றாவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி போதுமானதாகுமா?
எந்த எந்த காலக்கட்டத்தில் எதன் எதற்க்கு எதை செய்யவேண்டுமோ அது அதனை சரிப்பட செய்யத்தான் வலிமைவாய்ந்த மீடியாக்கள் உருவாகின.
ஆனால் காலப்போக்கில் அனைத்துமே எதையோ மட்டுமே சார்ந்து கிடப்பது வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது.
 
குழந்தைகள் பத்திரிக்கைகள் [விரும்பி] படிப்பதில்லை.அப்படியே படித்தாலும் முழுச்செய்தியையும் உள்வாங்கப் பொருமையில்லை ஆனால் பள்ளிவிட்டு வந்ததும். டீவி முன்புதான் அனைத்துமே செய்கிறார்கள், சாப்பிடுவதிலிருந்து உறங்குவதுவரை அதனை திறந்ததும் அதில் வரும் விசயங்களை மனதில் பதியவைத்துக்கொள்கிறார்கள், நாளடைவில் தானும் அதில் ஒரு அங்கமாக அதனோடு பின்னிப்பிணைகிறார்கள்.
 
நாளை இந்தியா வல்லரசாகுமா! ஆகாதா! அதெல்லாம் அப்புறம். ஆனால் நாளைய இளைஞர்கள் நல்லவர் ஆவார்களா!  என்பதுதான் முக்கியம். ஏனெனில் நாளை இந்தியாவை வல்லரசாக்க, நல்லவர்களாக இருந்தால்தான் வல்லரசாகும், வல்லரசாக ஆகும்  இந்தியா நல்லரசாக இருக்கும் இல்லையெனில் சாத்தான் கையில் மாட்டிய சக்தியாய் மாறி சகலத்தையும் அழித்துவிடும்.

எந்த ஒரு  விசயங்களை அடிக்கடி காணக்கிடக்கிறதோ அல்லது கேட்ட கிடைக்கிறதோ அதைத்தான் ஏற்கும் மனசு, அதிலும் குறிப்பாக இளம் மனசு. அடிக்கடி இவர்களெல்லாம் வந்து விருது வாங்குறாங்களே அப்போ இந்த துறையை தேர்ந்தெடுத்தாந்தான் நாளை நாமும் அடிக்கடி இதுபோல் விருதுகள் பரிசுகள் வாங்கிக்குவிக்கலாம் என்ற எண்ணம் அங்கே மேலோங்கப்பட்டு அதுவே அதாகிபோகும். அதுபோல்தான் எந்த ஒரு விசயங்களை மீடியாக்களும் பிரபலப்படுத்துகிறதோ அதைத்தான் இன்றைய இளம்பிஞ்சுகளின் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்துவிடுகிறது வீட்டிலாகட்டும் மீட்டியாக்களாகட்டும் குழந்தைகளுக்கு அடையாளப் புருசர்களை [ரோல்மாடல்களை] அடையாளம் காட்டுவதில் மெத்தனப்போக்குகள் கடைபிடிக்காத்தீர்கள்.

அடையாளப் புருசர்களை அடையாளம் காட்ட உலகில் எவ்வளோ பேர்கள் இருக்கிறார்கள் எத்தனையோ துறைசார்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.நல்லோர்கள். நல்லது செய்தவர்கள். சாதனையார்கள். என இறந்தவர்களும் இருக்கிறார்கள் இன்னும் இருந்துக்கொண்டும், உருவாகிக்கொண்டும் இருக்கிறார்கள்,
 
 கருணை உள்ளங்களாய்..கல்வி கொடுக்கும் வல்லல்களாய் சேவைமனப்பான்மையுடையோர்களாய் அறிவியல் விஞ்ஞானிகளாய். அறிஞர்களாய். எழுத்தாளர்களாய். வெளியுலகம் அறியாமலே தன் திறமைகளை உள்ளடக்கி வெளிக்கொண்டுவரத்தெரியாத திறமைசாலிகளாய், புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் இளைய சமுதாயங்களாய், இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோபேர் உலகில் வாழ்கிறார்கள். அவர்களை அடையாளம்கண்டு மீடியாக்கள் அடிக்கொருதரம் நினைவு கூறட்டுமே! எடுத்துசொல்லட்டுமே! அவர்களை ஊக்குவிக்கும்வகைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களை அழைத்து அடையாளப் புருசர்களாய் அடையாளம் காட்டலாமே!
 
ஆடிக்கொருதரம் அம்மாவசைக்கொருதரம் இவர்கள்தான் அவர்களென அடையாளம் காட்டப்படுவதிலோ நினைவுகூறுவதிலோ  சிறிதளவேனும் பிரயோசனமில்லை.

சிறப்பு நிகழ்ச்சிகள் என எப்போதெல்லாம் போடப்படுகிறதோ அப்போதும். தினம் தினம் அழுதுவடியும் சீரியல்களுக்கு மத்தியிலும். தினம் தினம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் அது மத்தவர்களுக்கு திண்டாட்டாம் எனவும். கோடிக்கோடிகளாகவும். வீடுகளாகவும். கார்களாகவும். ஓரிருவருக்கே கொடுத்துவிட்டு மற்ற பிஞ்சு மனங்களை ஏமாற்றுவதோடு தன்னம்பிக்கை இழக்கச்செய்யும் நிகழ்வுகளுக்கு மத்தியில்,
 
 சிறிதளவேனும் சின்னசிறார்களும் சிந்திக்கும் வகையிலும்,அவர்களின் மனங்களும் உடல்களும் சீரழியாமல் இருக்கும் வகையிலும். நாட்டின் தலை சிறந்தவர்கள் இவர்கள்தான் அவர்களைபோல் நாமும் வரவேண்டுமென்ற தன்னம்பிக்கையை ஊட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்தால் நாடும் நலம்பெறும் நல்லவர்களும் வல்லவர்களும் திறமைமிக்கவர்களும் இவ்வுலகிற்க்கு அடையாளம் காட்டப்படும் அடையாளப் புருசர்களாக! குழந்தைகளின் ரோல்மாடலாக! நாளை இவர்கள் தங்களின் வாரிசுகளுக்கே அடையாளப் புருசர்களாகுவார்கள் நிச்சயமாக!

அன்புடன் மலிக்கா

Wednesday, November 14, 2012

கண்ணா ஆணா பொறக்க ஆசையா?

 
 
 
 

கர்ப்பதில் இருப்பது ஆணா பெண்ணா கருவியின்மூலம் சோதனை செய்யப்பட்டு ஆண் என்றதும் இந்த உலகத்தையே வாங்கிவிட்டதுபோல் பரவசமடையும் பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள்.. அதுபெண்ணாகிவிட்டால் முகங்களும் மனங்களும் சுழிக்கும் சுழிப்புகள் அப்பப்பா இவ்வுலத்தில் பல இடங்களில் கண்கூடாக பார்க்கும் ஒன்றாகிவிட்டது..

தலக்குழந்தை ஆண்பிள்ளைதான் வேண்டுமென்று வேண்டாத பெற்றோர்களே இல்லையென்னுமளவிற்க்கு.. அட ஆணாய் பொறந்தால் எவ்வளவு பாடுகள் இருக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு எவ்வளவு பொருப்புகள் சுமக்கவேண்டிருக்கு. ஆனால் அதையெல்லாம் பற்றி யார் கவலைப்படபோகிறார்கள்.. இதோ இப்படித்தான் நடக்கிறது

 "ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்”
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
 
கண்ணா ஆணா பொறக்க ஆசையா? இல்லையா?
ஆணா பொறந்தா என்ன படுறாங்கப்பா பாருங்க அதைக்காண ஆசையா இதோ இந்த லிங்கில் போய் பாருங்கள்.. ஆண் பாவம்
 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்..
 
படித்துவிட்டு மறக்காம உங்க கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்க. அதோடு உங்க ஆதங்கமோ சந்தோஷமோ அதையும் மறக்காம சொல்லிட்டுபோனாதான் நான் இப்புடி எழுதியது சரியான்னு எனக்கு தெரியும்.. ஓகேதானே டீலுக்கு ரெடியா எங்கே ஒன் டூ திரி...
 
என்றும்
அன்புடன் மலிக்கா
 
 
 

Thursday, August 30, 2012

என்றும் உங்கள் ஆதரவை நாடி!


அன்பிற்கினிய எனது இணையதள உறவுகளுக்கும். நட்புகளுக்கும்.அன்பின் நெஞ்சங்களுக்கும் எனது சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும்.மனசங்கடங்களையும்.உள்நெஞ்சத்து உணர்வுகளையும். உங்களோடு பகிர்ந்துகொள்வதில்  மகிழ்வதோடு அதற்க்கு உங்களின் அன்பின் பரிமாற்றங்களையும் பெற்றுக்கொண்டு நெகிழ்ந்தும் வருகிறேன். அதேபோல் தற்போது

மேலும் விபரமறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..

http://kalaisaral.blogspot.com/2012/08/blog-post.html அதேபோல் தற்போது 

 எங்கள் ஊரில்  
ஆன்லைன் சம்மந்தமான 
உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட  
”பிஸ்மி” ஆன்லைன் சென்டர்  என்ற நிறுவனைத்தை விரைவில் திறக்கவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். 

அதிவேகமாக நகரும் நாட்களில் 24 மணிநேரம் மனிதருக்கு போதவில்லை அதனை அறிந்தே இறைவன் மனிதத்தேவைகளை நொடிக்கணக்கில் நிறைவேற்றிட மனிதனைக்கொண்டே கணினியை கண்டுபிடிக்கவைத்து காலநேரத்தை வீணடிக்காது அதன்மூலம் மனிதர்களின் அவசரதேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள கற்றுகொடுத்துள்ளான் அதன் அடிப்படையில்தான் உங்கள் காலநேரத்தை மிச்சப்படுத்த உங்களை வீண் அலைச்சலிலிருந்து தடுக்க. உங்கள் சிரமங்களை குறைக்க.  இதுபோன்ற ஸ்தாபனங்கள் தொடங்கப்படுகிறது அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதோடு அதனிலிருந்து எங்களுக்கும் பயன்தருமாரும்
உதவுங்கள்.

திறப்பு நாளை அதி விரைவில் தெரிவிக்கிறேன். உங்களின் தேவைகளை நிறைவேற்றிட காத்திருக்கிறோம்.தாங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களோடு என்றும் இணைந்திருங்கள் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள். எங்களுக்காக பிராத்தனையும் செய்யுங்கள்...

அன்புடன் மலிக்கா

Sunday, July 29, 2012

ஓடிப்போறாங்களே! ஏன்? எதுக்கு?



பொழுது விடிஞ்சாபோதும் அச்சோ அங்கே அவ அவனோடு ஓடிட்டா! இவன் அவளோட ஓடிட்டான். இதுதான் சமீபகாலத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் அவலமாக இருக்கிறது ! அதன் காரணங்கள்தான் என்ன?. அதை எப்படி சரி செய்யலாம்.  மேலும் படிக்க ஏதோ நம்மாளான சிறு முயற்ச்சி அதன் தொடர்ச்சி  
இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்

அன்புடன் மலிக்கா


Thursday, July 26, 2012

இது நம்ம ஏரியா உள்ளே வாங்கோ..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பர்தா மற்றும் மஃப்தா. மற்றும் ஃபேஷன் அன் ஃபேன்சி நகைகள். மற்றும். ஐம்பொன் நகைகள் மற்றும் மலிக்காவின் கைவண்ணக்கலைகளைகளில் உருவாகும் கிரஸ்டல் மற்றும் முத்து மாலைகள்.கைசெயின்கள் நெக்லஸ்கல் அனைத்தும் ஒரே இடத்தில்..அதாவது எங்கள் இல்லத்திலேயே.. [என்ன ஒரு பில்டப்பு]  சரி சரி ரொம்ப பேசபோரதில்லை நான் நம்ம ஏரியாவ எட்டிப்பார்த்துட்டுபோங்கப்புகளா.. ஆஃப்ர் ஆட்டுகுட்டி அது இதுன்னெல்லாம் கேட்டு வச்சுடாதீங்கப்பு. வீடு தேடி வரவங்களுக்கு நிச்சயம் கொடுப்போம் கலப்படமில்லாத அன்பை.. அத்தோடு வாங்கும் பொருள்களையும் [எப்புடி]

இது நம்ம எரியாங்கோ உள்ளே வரலாம். எப்போதும்..

ராஜஸ்தான் மற்றும் குஜராத் [டீவியில் சீரியஸ்  புகழ் நகைகள்]குந்தன் மற்றும் முத்து வகை நெக்லஸ்கள்
புதிய டிசைன் மாடல் புர்க்கா வகைகள்.
விதவிதமான அனைத்துவகை காதனிகள் மற்றும்  ஐம்பொன் வகை வலையகள்கள்
பொன் மாலைகள் மற்றும் கிரஸ்டல் மாலைகள். அழகிய தொங்கட்டங்கள்[காதனிகள்]
முழுவதும் கற்கள் பதித்த மற்றும் இடையிடையே கற்கள் பதித்த ஐம்பொன்நகைகள்  [ஒரிஜினல் பொன்னெல்லாம் தோத்துவிட்டதுங்கோ]செட்டு செட்டாகவும் தனித்தனியாகவும்.
ஸ்டிக்கர் மருதாணி வகைகள்
குந்தன் மற்றும் ஐம்பொன்னும்கலந்த ஆரம் செட்
ரூம் ஸ்பீரேவில் தொடங்கி. அத்தர் வரை எமர்ஜென்சி ஃபேனில் தொடங்கி எமர்ஜென்சி லைட் வரை. ரோஸ்படுடரில் தொடங்கி மேக்ப் பாக்ஸ்வரை.
அத்தோடு கிரஸ்டல் மணி வகைகலின் அணிவகுப்பும்...
அடடா அனைத்தும்
மாடல் ஹேர் கிலீப்பு மற்றும் வித விதமான வலையல் டிசைன்கள்கள்
உடனடியாக சிவக்கும் கோன் மருதானியிலிருந்து கொஞ்சம் லேட்டாக சிவக்கும் மருதாணி வகைகள்
பலமாடல் நெக்லஸ்கள்
விதவிதமான கொண்டை வலைகள்
புதிய புதியமாடல்களில் ஸ்டோன் மற்றும் ஸ்பான்ச் மெட்டீரியல் பூக்கல் இணைத்த புர்க்கா வகைகள்
 இது நம்ம செட்டிங்க் எப்புடியிருக்கு..



 சிங்கப்பூரிலிருத்து வரவழைத்த மாடல்  கிரஸ்டல் ஷால் மற்றும் புடவைகளுக்கு குத்தும் பின் வகைகள்
 துபையிலிருந்துவரும் பளபளக்கும் ஸ்டோன் நெக்லஸ் வகைகள்
 சிறியதுமுதல் பெரியதுவரை ஹேண்ட் பேக் வகைகள்
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஸ்டோன் வலையல்கள்..

என்ன எல்லாம் பார்த்தாச்சா. எப்புடியிருக்கு. எதுவானாலும் சொல்லிட்டுபோங்க.. ”மக்கா”ஸ்

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் எதிர்நோக்கும்
அன்புடன் மலிக்கா

Thursday, May 24, 2012

கிரஸ்டல்மணிகளின் டிசைன்கள்

 ஒற்றைக்கோர்வை மணிகள்.
 பலகலர்களில்
பல்வேறு மாடல்களிலும்

 இரட்டை கோர்வை மணிகள்



 மூன்று கோர்வை மணிமாலை

பிரேசிலெட் பல டிசைன்களில்.


 டிசைன்கள் எப்படியிருக்கு! மேலும் எப்படியெல்லாம் கிரஸ்டல்மணியில் மாடல்கள் செய்யலாமென ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்புன்னு சொல்வது கேட்குது..
ஐடியாவுக்கே பீஸ் கேப்பியளோ..

Tuesday, May 22, 2012

மலிக்கா கலெக்‌ஷன்

இதெல்லாம் மலிக்காவின் கலெக்‌ஷன். அதாவது  கிரஸ்டல்மணிகள் மற்றும் கோல்ட் கவரிங்மணியில் கோர்த்து செய்து கொடுக்கிறேன் ஆடரின்பேரில். சிறிய சையின் முதல் பெரிய மாலை. மற்றும் நெக்லஸ். பிரேசிலெட். கம்மல்கள். என எதுபோல் வேண்டுமோ அதுபோல் செய்து தரப்படும் இது எனது புதிய முயற்ச்சி. எப்புடியிருக்கு சொல்லுங்கப்பு..



















இதுபோல் வேண்டுமெனில் தொடர்புகொள்ளலாம். fmalikka@yahoo.in
அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.