அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, November 30, 2012

ஆச்சர்யமாய், சில அதர்ச்சிகள். சில ஆனந்தங்கள்.


 
என்னது!!!!! அப்படியா!!!!!!!!!!
என்ன ஆச்சர்யக்குறி அதிகமாயிருக்கு.. முதலில் ஹேப்பி பர்த் டே சொல்லிகிறேன் யாருக்கு? அதுவா இதபடிங்க யாருக்கு புரியும்..
ஆச்சரியங்கள் நம்வாழ்வில் அடிக்கடி நடக்கும்போது இன்ப அதர்ச்சியாகவுமிருக்கும். ஆனந்தமாகவும் இருக்கும், அப்படியென்ன ஆச்சயர்யங்கள் என்கிறீகளா? எல்லாம் இந்த இணையத்தால்தான் அடிக்கடி அதர்ச்சிக்குள்ளாக்கபடுகிறேன் அப்ப ஹார்ட் என்னாகுறதுங்குறீங்களா. ஹா ஹா இது ஆனந்த அதர்ச்சிகள்தானே தாங்கும் தாங்கும் எதையும்தாங்கும் இதயம்தான் [அப்பப இதயமும் டொஸ்கு விழும் அதெல்லாம் கணக்கில் ஏத்தப்புடாது.ஓகே] சரி சரி விசயத்துக்கு வந்துட்டேன்ன்.

அந்த ஆனந்த அதர்ச்சி வேறொன்றுமில்லை அன்பில் தொடங்கி, பாசத்தில் நெருங்கி, வியாபாரத்தில் தொடரகிறது எங்களின் நேசப்பயணம். இப்போது புரிந்திருக்குமே என்னான்னு ,, இன்னும் புரியலையா. நம்ம சமையலில் அட்டகாசம் செய்யும் அக்கா ஜலிலாக்காவும் நானும்சேர்ந்து போனவரும் இதேநாள் தொடங்கிய பர்தா மற்றும் மஃப்தா மற்றும் பேன்ஷி அயிட்டங்களின் வியாபாரம் தொடங்கி இன்றோடு 1 வருடம் [கிளிக்]நிறைவடைகிறது. அல்ஹம்துல்லில்லாஹ் எல்லாப்புகழும் அவனுக்கே. இறைவனால் ஏற்படுதப்பட்டு, இணையத்தால் இணைக்கப்பட்ட எங்கள் இதயங்கள், வாழ்வியலுக்கு தேவையான வசதிகளை நிவர்த்திசெய்துகொள்ளவும் ஏதுவாய் ஒரு வியாபாரத்தையும் உண்டாக்கிதந்தது, இது எத்தனை அழகான ஆழமான ஆனந்த அதர்ச்சியான ஆச்சர்யம்.

எங்களின் முதல்சந்திப்பே முத்தாய்ப்பாய் அமைந்தது[கிளிக்]. உடன்பிறவா சகோதரியாய் ஜலிக்கா பழகியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்ப்படுத்தியது, அக்கா இல்லாத குறை அவர்களால் தீர்க்கப்பட்டது, [இதுபோல் அக்காக்கள் இந்த இணையத்தில் அடுத்தடுத்து கிடைத்தது அதைவிட ஆச்சர்யம் அதை கடைசியில் சொல்வேன்]   துபையில் இருக்கும்போது அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் நேரம்கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வோம், 11 வருட பாலைவன வாழ்வை முடித்துக்க்கொண்டு நாங்கள் ஊர்திரும்பியபின் எதார்த்தமாக போனில் பேசிக்கொண்டிருக்கையில்,அவர்கள் சென்னையில் வைத்திருக்கும் கடை, சென்னை பிளாஷாபோல் முத்துப்பேட்டையில் ஒரு கடை, மலிக்கா பிளாஷா என ஓப்பன் செய்தால் என்ன என்று அவர்கள் கேட்க, செய்யலாமே ஆனால் அது வீட்டிலேயே என நானும் சொல்ல, அதிலிருந்து ஆரம்பிததுதான் இந்த வியாபாரம். அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கிருபையால் இன்றுவரை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது வியாபாரமும் எங்கள் பாசபரிமாற்றங்களும்.

இணையத்தில் இணைந்த உறவுகள் இன்று வியாபரம்வரை தொடர்கிறோம் அதனை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன்[பெருமைதான் அடைகிறேன் தற்பெருமையல்ல] ஜலிலாக்கா மாதரியே அவங்க கணவரும் நல்ல மனம்கொண்டவர்கள், நல்ல ஜோடி இருவரும், ஹைட், வெயிட், ஒயிட் அனைத்திலும் நான் எந்த டிசைன் அனுப்பச்சொன்னாலும் சிரமம் பாராது அதனை ஆடர்கொடுத்து வாங்கி அனுப்புவார்கள். நல்ல தரத்தோடு நல்லத்துணிகள் ஒரினினல் ஸ்டோன்கள் வைத்து, புர்க்காக்கள் தைத்து அனுப்புகிறார்கள், நியாயமான விலைகளில். வெளியில் கிடைக்கும் புர்காவில் தலைதுணி சிறிதாக இருக்கும் அது ரெடிமேட்துணி. இங்கு தைத்து அனுப்புவதால் தாரளமாக தலை கழுத்து மார்பு என அனைத்தும் மூடுவதுபோலிருக்கும்,அதேபோல் துணியின் தரம் கற்களின் பளபளப்பு.. என விரும்பு டிசைன்களில் ஆடர் செய்து கொடுக்கிறோம், அதனாலேயே எங்களிடம் ஆடர்கள் நிறைய வருகிறது, .. [அப்பாடா இதிலேயே ஒரு விளம்பரமும் கொடுத்துட்டோமுல்ல ஹி ஹி]

வீட்டிலிருந்தபடியே பெண்கள் தங்களுக்கு தெரிந்த கைத்தொழில்கள் செய்வது, இதேபோல் வியாபரங்கள் செய்வதால், அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு ,[வீண்பேச்சுகள், வீண் வெளியேபோக்குவரத்தும் குறையுமல்லவா] அதோடு தன்னாலும் தன் குடும்பதிற்க்கு உதவும்முடியும் பலவகையில் உதவும் நாம், இவ்வகையில் உதவினால் இன்னும் கூடுதல் நலம் மற்றும் பலம்தானே.. இதோ நானும் என்னால் முடிந்தளவு என்குடும்பத்திற்க்கான கடமைகளை நிறைவேற்றுவதோடு, இப்பணியால் என்மனத்துக்கும் நிறைவு கிடைக்கிறது.
இணையம் இணைத்த இப்படியான ஒரு நல்ல வாய்ப்பையும், அதனால் ஏற்ப்பட்டிருக்கும் உறவுகளையும் நான் என்றும் மறக்கவும் மாட்டேன் நழுவவும் விடமாட்டேன். ஜலீலாக்கா சமையலில் மட்டும் அட்டசாகமாய் அசத்துபவர்களல்ல அன்பில் அதைவிட பலமடங்கு அசத்தோ அசதென்று அசத்துபவர்கள்.
அன்பே ஜலிலா
நான் அசந்தது
உன் சமையல்கள் கண்டுமட்டுமல்ல
சடைக்காமல் நீ கொடுக்கும் பாசத்திலும்தான்..
இடையிடையெ மானே பொன்தேனே போட்டுக்கலாம். ஹோ ஹோ கவிதையில் நீ உன். என ஒருமையில் சொல்லிட்டேன் அது பாசமிகுதியால்தான்க்கா ஹா ஹா..

அப்புறம்,கடைசியில் சொல்வேன் சொன்னேனே அத சொல்லமறந்துடுவேன் நினைச்சீங்களோ. அதெப்படி விடுவோம் சொல்லாம விடமாட்டோமுல்ல,, இந்த இணையம்தந்த இதயம் ஈர்த்த அக்காமார்களின் பட்டியல்கள் [நேரில் கண்டவர்களும் கூட]
முதலில் ஜலில்லாக்கா  [சமையல் அட்டகாசங்கள்]
சாதிக்காக்கா  [எல்லாபுகழும் இறைவனுக்கே]
சுமஜ்லாக்கா [என் எழுத்து இகழேல்]
ஹுசைனம்மாக்கா  [ஹுசைனம்மா ]
ஆசியாக்கா  [என் சமையல்]
சாருலதாக்கா  [கோலங்கள்]
இன்னும் இருக்காங்க ஆனா அவங்களெல்லாம் தங்கைகள் என்று சொல்லிக்கிறாங்க ஹூம்..

பின்னாத குறிப்பு:
என்ன ஒன்னு சாதிக்காக்கவைத்தவிர இந்த எல்லா அக்காக்களுக்கும் நான் சீனியராக்கும் ஆங் ஏன்னா .. அஸ்கு புஸ்கு அத சொல்லமாட்டேனே..
 
என்றும் அன்புடன்
உங்கள் மலிக்கா

8 comments:

enrenrum16 said...

//என்ன ஒன்னு சாதிக்காக்கவைத்தவிர இந்த எல்லா அக்காக்களுக்கும் நான் சீனியராக்கும் ஆங் ஏன்னா .. ./// எனக்குத் தெரியுமே..(நிஜமாஆஆஆஆ...ஆனா அஸ்கு புஸ்கு அத சொல்லமாட்டேனே)

உங்கள்வியாபாரம் மென்மேலும் செழித்தோங்க இறைவன் துணைபுரிவானாக....வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நிகழ்வுகள்...

மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...
tm1

Vijiskitchencreations said...

Best Wishes Mallika. God Bless U Mallika.
Jalee is good guider and very nice person too. I ike her she is my best friend too.
God bless u Jalee.

Jaleela Kamal said...

மலிக்கா என்னவென்று சொல்வதம்மா உன் அன்பை...

நம் வியாபாரம் இன்னும் தொடர தூஆ செய்து கொள்வோம்.

தோழி விஜி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

அஸ்மா said...

//ஜலீலாக்கா சமையலில் மட்டும் அட்டசாகமாய் அசத்துபவர்களல்ல அன்பில் அதைவிட பலமடங்கு அசத்தோ அசதென்று அசத்துபவர்கள்.//

மல்லி... நீ கொடுத்து வச்சவதாம்பா..! உன்னோட கலகல பேச்சு யாருக்குதான் பிடிக்காது? :) ரொம்ப நாளா நானும் ஆவலோடு காத்திருக்கேன் 'ஜலீ'க்காவை சந்திக்க :) இறைநாடினால் எல்லோரும் சந்திப்போம்!

//சாதிக்காக்கவைத்தவிர இந்த எல்லா அக்காக்களுக்கும் நான் சீனியராக்கும் ஆங் ஏன்னா .. அஸ்கு புஸ்கு அத சொல்லமாட்டேனே..//

எனக்கும் தெரியுமே.. அஸ்கு புஸ்கு அத நானும் சொல்லமாட்டேனே..! :))

பானு..! உங்களுக்கும் தெரியுமா?! அடுத்தடுத்த போஸ்ட்டில் மலிக்காவே வந்து சொல்லிடுவான்னு நினைக்கிறேன் :-) பிரார்த்தனையோடு வெயிட் பண்ணுவோம் :)

சாருஸ்ரீராஜ் said...

best wishes malli for your work appuram neenga onnu sonningale athu enna achu athayum ithulaye ketuputom illa ...antha rakasiyam enakum theriyume...

மாதேவி said...

வாழ்த்துகள்.

Asiya Omar said...

இந்த பகிர்வைப் பற்றி ஜலீலா சொன்னாங்க. மிக்க சந்தோஷம்.தொடர்ந்து எழுதுங்க.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.