அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, January 2, 2013

சிக்கன சிந்தாமணியின் ஐடியா.. [குப்ஸ் ரோல்]

 குப்ஸ் ரோல் செய்வது எப்படி?


அரபுநாடுகளில் காலை மற்றும் இரவு சிலபல வேளை பகலிலும் உணவாக பயன்படுவது குப்ஸ் என்னும்  நான்ரொட்டி.

அதனை 1 திர்கத்திற்கு வாங்கியதில் மீதமோ அல்லது தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன் கூடவோ  கொடுத்ததில் மீதமோ இருந்தால் அதனை தூக்கிபோட்டுவிடாமல் இப்படி செய்து  ருசிபாருங்கள்.

1 காசை சம்பாரிக்கதான் கடல்கடந்து செல்கிறோம் அதனை சேமிக்கும் தன்மையும் கொஞ்சமிருந்தால்தான் நாளை கஷ்டமில்லாமல் வாழ்நாளை கழிக்க உதவும். சரி சரி எப்படி செய்றதுன்னு சொல்லு மத்தத அப்புறம் பேசிக்கலாம். ஓகேங்க!






பல்லாரி [வெங்காயம்]ஒன்று
தக்காளி ஒன்று
மல்லியிலை கொஞ்சம்
பச்சைமிளகாய் 2
இவைகளை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்


கிரில் சிக்கனோ அல்லது தந்தூரி சிக்கனோ இரவு வாங்கியதில் மீதமிருப்பத்தை சிறிய சிறய மெல்லிய துண்டாகிக்கொள்ளவும்
மீதமிருக்கும் குப்ஸையும் ஸ்கொயர்  வடிவத்தில் கட்செய்து கொள்ளுங்கள்


வானலியில் எண்ணை 2 ஸ்பூன் விட்டு சூடானதும் பொடிச்ச சீரகம் கொஞ்சம் போட்டு வாசம் வந்ததும், நறுக்கிய வெங்காயம்
தக்காளி ஆகியவைகளைபோட்டு வதக்கி, அதனுடன் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டுகிண்டி, அதன்மேல் சிக்கன் துண்டுகளைபோட்டு கிளறி, கடைசியாக 1/4 ஸ்பூன் மிளகுபோட்டு கமகம் வாசனையுடன் வரும்போது   மல்லியிலைகளை அதன்மேலிட்டு இறக்கவும்.



நறுக்கிவைதுள்ள ரொட்டிதுண்டின்மேல் மயோனஸ் அல்லது அம்மூஸ்[கொண்டக்கடலை அரையல்]தடவி அதன்மேல் செய்துவைத்துள்ள
சிக்கன் கொத்துசை பரப்பி  அடிபாகத்தை மூடியும் மேல்பாகத்தை திறந்ததுபோல மெதுவாக சுற்றி ரோல் செய்து திறந்த பக்கம்
கிரிஷ்பியான பிரன்ச் பிரை [உருலைகிழங்கு பிரை] 4. 5 சொருகி சாப்பிடுங்கள் சாப்பிடக்கொடுங்கள்.அருமையாக இருக்கும்

இது கடையில் கிடைக்கு சிக்கன் ரோல், சாண்ட்வெஜ் மாதரி சுவையாக இருக்கும்..

இவைகள் மீதமிருக்கும் ஐட்டத்திலிருந்து செய்பவை. இதை பிரஷாகவும் செய்யலாம். எல்லாம் உங்ககிட்டதானிருக்கு அதாவது
 உங்க கையில்தானிருக்கு கலை சமையல்கலை
அதுவே கொடுக்கும் மனம் வயிறுக்கு இரண்டும் நிறை..

எப்படியிருக்கு?
சிக்கன சிந்தாமணியின் ஐடியா..

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.