அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, September 28, 2010

சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்

இது என்னுடைய 100,வது பதிவு. எந்தளத்திற்க்கு வந்து என்படைப்புகளை தவறாமல்படித்தும் கருத்துக்கள் தந்தும் என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என்மனமார்ந்த நன்றிகள் பல பல.. தொடர்ந்து ஊக்கமென்னும் கருத்துமழை பொழியட்டும்.

 சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்

தேவையானவை

சமுன்
சிக்கன்
குக்கும்பர் [வெள்ளரி]
சீஸ்
கெச்சப்
மிளகு
சாட் மசாலா
ஆயில்
உப்பு
சிக்கனை சிறிய சிறிய பீசாக்கி அதை சாட்மசாலா.மிளகுத்தூள் உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு பீங்கன் தட்டில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு அதன் மேல் இந்த கலவையை போட்டு லேசாக கலந்து அதை 15 நிமிடம் ஓவனில் வைத்தால் இதுபோன்று ரெடியாகிவிடும்.

அதை சமுனில் நடுபாகம் கீரி அதனுள் சீஸ் அல்லது மயோனஸ் தடவி அதன்மேல்
                                                தேவைக்கேற்ப சிக்கன் வைத்து

                             அதன் மேல் நறுக்கிய குக்கும்பர் வைத்து பிரியப்பட்டால் அதன்மேல் கெச்சப் அல்லது சில்லிசாஸ் போட்டு மூடி

அதை ஒரு டிஷுவில் சுற்றி மேல்பாகத்தை திறந்து  சாப்பிடவும்.
”இது தான் சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்”


 சிக்கனுக்கு பதிலாக முட்டையும் வேகவைத்து கட்செய்து அதனுள் வைக்கலாம். வெஜிட்டபிள் அரைவேக்காடாக வேகவைத்தும் அதனுள் வைத்து சாப்பிடலாம்..சாப்பிடக்கொடுக்கலாம்..
இன்னும் இந்த சமுனில் நிறைய வெரைட்டிகள் செய்யலாம். குழந்தைகளின் ரசனைக்கேற்ப. ருசிக்கேற்ப..

டிஸ்கி//இதெல்லாம் பிடிக்காதவங்க இந்த சமுனை காபியிலோ. டீயிலோ நனைத்து சாப்பிடலாம். அதுவும் பிடிக்கலையே சும்மா அப்படிய்ய்யே சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அப்புறம் தொண்டையில் போய் அடைச்சிக்கிச்சின்னா  நான் வந்து தண்ணீரோ வெந்நீரோ தர இயலாது சொல்லிப்புட்டேன்.


இது தமிழ்குடும்பத்திற்காகன 4.வது போட்டிக்குறிப்பு.
முடிந்தால் இங்கும் சென்று கருத்திடுங்கள்.
                                                   
                                                              அப்புறம்

ஆனந்தி தந்த அன்பான நட்பு.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டா இதை வெளியிடுவதற்கு
கோவிச்சிக்காதீங்க ஆனந்தி..நீங்க 100,வது க்கு தந்த விருதை.
என் நூறாவது பதிவில் வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்..
நன்றி ஆனந்தி
என்றும் உங்கள் நட்பாய்

அன்புடன் மலிக்கா

Friday, September 24, 2010

கடல்பாசி சர்பத்.

தேவையானவை]

கடல்பாசி [சைனா கிராஷ்
சீனி பாகு
பால்
                                        
தேவைக்கு தகுந்தார்போல் கடல்பாசியை காய்சி அதை தட்டிலூற்றி ஆரவிட்டு சிறியதுண்டுகளாக்கிக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக நொறுங்கும்படி பிசையவும்
அதனுடன் சீனிபாகு. மற்றும்
காய்சாதபால். [காய்சியும் ஆரவிட்டு சேர்கலாம்]

அதனுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி நன்றாக கலக்கவும்.

                                          [இது காய்ச்சாத பாலில் செய்தது]

இப்போது கடல்பாசி சர்பத் ரெடி.

இது மிகவும் குளிர்ச்சியானது உடலுக்கும் நல்லது.
குழந்தைகளுக்கு தரும்போது அதல்மேல் அவர்களுக்கு பிடித்த பழங்களில் அலங்கரித்துதரலாம்.

 விருந்தினர் வந்திருக்கும்போதும் அப்படிதந்தால் வயிறு குளிர்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும்.[ குடிப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும்]

என்ன எங்கப்போறீங்க சர்பத் கலக்கவா!
அன்புடன் மலிக்கா

Tuesday, September 21, 2010

அன்பு மகனின் அழகிய கைவண்ணம்




இது என் வீட்டுச்செல்லம் வரைந்ததுங்கோ. நல்ல தூக்கம் வருது மம்மின்னு சொன்னதும் இரவு நேர டிரஸை அணியச் சொல்லிக்கொடுத்தால். ரூமிற்க்கு போனவரை 5 நிமிடமாகியும் வெளியில் வரவில்லை. என்ன ஏதுவென கதவைத் தட்டினால் 2 மினிட் மம்மி இதோ வந்துடுறேன் அப்படின்னு குரல் வருது.

2. நிமிடம் கழித்து வருகிறார் மம்மி எப்படியிருக்கு என்னோட டியாயிங். நீங்க போடத்தந்த மேல்சட்டையில் இருந்த இந்த குட்டிஸைப் பார்த்தேனா அதான் உடனே வரைந்தேன் நல்லாகுதா என்றதும். மகிழ்ந்ததோடு. உறக்ககலக்கத்தில் இருந்தாலும் சரியென 3 ,4 கிளிக் எடுத்தேன்.

நல்லாக்குதா? சொல்லுங்க செல்லம் சந்தோஷப்படட்டும்..

அன்புடன் மலிக்கா

Monday, September 13, 2010

பெருநாள் டிசைன்.





இந்த டிசைன் மணமகள்களுக்கு போடலாம். கை நிறைந்ததுபோல்
முக்கால் கைக்கு போடவேண்டும் .மருதாணிகோன் சிவந்ததும் நகங்களுக்கு தொப்பிபோல் வைக்கலாம்.

இன்னும் இருக்கு அடுத்தடுத்து வரும்.
அன்புடன் மலிக்கா

Saturday, September 4, 2010

பாலக் பனீர் வடை[பஞ்சாபி ரெசிபி]


இதைக் கிளிக் செய்யவும் தமிழ்குடும்ப சமையல்போட்டியின் என் இரண்டாவது குறிப்பு
தேவையானவைகள்

பாலக்      2 கட்டு
பனீர்           200கிராம்
கரம் மசாலா 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
கடலைமாவு 4  ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மிளகாய்பொடி காரத்திற்கேற்ப
உப்பு
ஆயில்

கீரையை நன்றாக கழுவிவிட்டு அதனை பொடியாக அரிந்துகொள்ளவும்
அதனை ஒரு கடாயில் போட்டு லேசாக வதக்கவும் பச்சை வாசனைபோகுமளவு
பனீரை உதிரியாய் துருவிகொள்ளவும்
பனீரோடு கரம்மசாலா.உப்பு.பொடியாய் நறுக்கிய வெங்காயம் இஞ்சிபூண்டுவிழுது. சேர்த்துக்கொள்ளவும்
வதக்கிய கீரையோடு மிளகாய்பொடி
கடலைமாவு மற்றும்பனீர்கலவையை சேர்த்து பிசையவும் தண்ணீர்வேண்டாம் கீரையிலுள்ள தண்ணீரே போதும்
சிறு உருண்டை எடுத்து இதுபோல் உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி அது உதிர்ந்துவிடாமல் கவனமாக
நான்ஸ்டிக் ஃபேனில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு அது சூடானதும் அதில் இந்த வடையை மெதுவாக இடவும்.இருபுரமும் சிவக்க விட்டு எடுக்கவும்
நிறைய நேரம் வேகனுமென்றில்லை ஏனெனில் இது கீரையும் பனீரும்தான் அதன் சத்து முழுமையாக கிடைக்கும்
இதோ பாலக் பனீர் வடை ரெடி. இது ஒரு பஞ்சாப் ரெசிபி.
சுவையும் மணமும் சூப்பர் நல்ல ஊட்டச்சத்தும்கூட கீரை பிடிக்காத குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவாங்க செய்து கொடுத்துபாருங்க.

அன்புடன் மலிக்கா

Wednesday, September 1, 2010

ஈசி பனியன் டாப்ஸ்.




பனியன் கிளாத் 1 மீட்டர்
நூல்
கத்தரிக்கோல்
தையல் மிசின்
பனியன் கிளாத்தை எடுத்துக்கொண்டு உடல் வாகுக்குத்தேவையான அளவை எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.இதுபோல்
எடுத்தஅளவில் கழுத்து மற்றும் கைகள்பகுதிக்கு நறுக்கவும் இதுபோல்
                                      
மார்புபக்கம் மற்றும் முதுக்குப் பக்கமிருக்கும் தனித்தனியாக இருக்கும்        துணிகளை ஒன்றிணைக்கவும் இதுபோல
 தோள்பட்டையிரண்டையும்   விலாப்பகுதியிரண்டையும் இணைக்கவும்.

இருபுறமும் இணைத்ததும்
முழுமையாக இணைத்ததும் இப்படி இருக்கும்.தோள்பட்டைக்கு சிறு பட்டிபோல் நறுக்கி அதையும் இணைக்கவும்
கழுத்துக்கு கீழ் இருபுறமும் இதுபோல் சிறிய பூக்களாக செய்து அதையும் இணைக்கவும் . வயிற்றுப்பகுதில் டிசைனாக இருக்க, மீதி இருக்கும் துணியில் எண்ணங்களுக்கு தகுந்தார்போல் இதேபோல் டிசைனா தைக்கவும்.

இப்போது அழகிய மினி டாப் ரெடி
 1 வயது முதல் 2 வயது வரை இந்த டாப்பை போடலாம்.
டிஸ்கி//ஈசியாக செய்ய:


டிஸ்கி//புதிய டி சர்ட் குழந்தைக்கு பற்றாமல் இருந்தால்
அதை இதுபோல் நறுக்கித் தைக்கலாம்.

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.