அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, September 4, 2010

பாலக் பனீர் வடை[பஞ்சாபி ரெசிபி]


இதைக் கிளிக் செய்யவும் தமிழ்குடும்ப சமையல்போட்டியின் என் இரண்டாவது குறிப்பு
தேவையானவைகள்

பாலக்      2 கட்டு
பனீர்           200கிராம்
கரம் மசாலா 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
கடலைமாவு 4  ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
மிளகாய்பொடி காரத்திற்கேற்ப
உப்பு
ஆயில்

கீரையை நன்றாக கழுவிவிட்டு அதனை பொடியாக அரிந்துகொள்ளவும்
அதனை ஒரு கடாயில் போட்டு லேசாக வதக்கவும் பச்சை வாசனைபோகுமளவு
பனீரை உதிரியாய் துருவிகொள்ளவும்
பனீரோடு கரம்மசாலா.உப்பு.பொடியாய் நறுக்கிய வெங்காயம் இஞ்சிபூண்டுவிழுது. சேர்த்துக்கொள்ளவும்
வதக்கிய கீரையோடு மிளகாய்பொடி
கடலைமாவு மற்றும்பனீர்கலவையை சேர்த்து பிசையவும் தண்ணீர்வேண்டாம் கீரையிலுள்ள தண்ணீரே போதும்
சிறு உருண்டை எடுத்து இதுபோல் உள்ளங்கையில் வைத்து வடைபோல் தட்டி அது உதிர்ந்துவிடாமல் கவனமாக
நான்ஸ்டிக் ஃபேனில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு அது சூடானதும் அதில் இந்த வடையை மெதுவாக இடவும்.இருபுரமும் சிவக்க விட்டு எடுக்கவும்
நிறைய நேரம் வேகனுமென்றில்லை ஏனெனில் இது கீரையும் பனீரும்தான் அதன் சத்து முழுமையாக கிடைக்கும்
இதோ பாலக் பனீர் வடை ரெடி. இது ஒரு பஞ்சாப் ரெசிபி.
சுவையும் மணமும் சூப்பர் நல்ல ஊட்டச்சத்தும்கூட கீரை பிடிக்காத குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவாங்க செய்து கொடுத்துபாருங்க.

அன்புடன் மலிக்கா

18 comments:

GEETHA ACHAL said...

சூப்பர்ப் குறிப்பு...

ஜெய்லானி said...

இதுக்கு சட்னி ஐட்டம் ஒன்னும் வேனாமா....!!

நாடோடி said...

சூடா ந‌ம‌க்கு ரெண்டு செட்டு பார்ச‌ல்... வெள்ளை காக்காகிட்டேயே கொடுத்து அனுப்பிடுங்க‌.. :) (ஜெய்லானி ப‌க்க‌ம் திரும்ப‌ கூடாதுனு சொல்லிடுங்க‌..)

காஞ்சி முரளி said...

வடையெல்லாம் அப்புறம்... அப்புறம்....!

முதல்ல...!
அந்த கடாய் பக்கத்துல இருக்க bajaj மிக்சிய மாத்துங்க..!
மச்சான்கிட்ட சொல்லி புதுசா வாங்கி போடுங்க...!

நட்புடன்..
காஞ்சி முரளி...

Chitra said...

Looks very nice. :-)

ஜெய்லானி said...

//சூடா ந‌ம‌க்கு ரெண்டு செட்டு பார்ச‌ல்... வெள்ளை காக்காகிட்டேயே கொடுத்து அனுப்பிடுங்க‌.. :) (ஜெய்லானி ப‌க்க‌ம் திரும்ப‌ கூடாதுனு சொல்லிடுங்க‌..)//

மக்கா ..அந்த வெள்ளை காக்கா ஃபிரைதான் நேத்து வெள்ளிகிழமை காலை 4 மனி சாப்பாட்டில மெயின் டிஷ்ஷே..ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

நாடோடி said...

//சூடா ந‌ம‌க்கு ரெண்டு செட்டு பார்ச‌ல்... வெள்ளை காக்காகிட்டேயே கொடுத்து அனுப்பிடுங்க‌.. :) (ஜெய்லானி ப‌க்க‌ம் திரும்ப‌ கூடாதுனு சொல்லிடுங்க‌..)//

ரைட்டு! ஸ்டீரிங்க ஸ்ட்ரைட்டா புடுச்சு போகச் சொல்லுங்க பாஸ்!!

ஜெய்லானி said...

//மக்கா ..அந்த வெள்ளை காக்கா ஃபிரைதான் நேத்து வெள்ளிகிழமை காலை 4 மனி சாப்பாட்டில மெயின் டிஷ்ஷே..ஹி..ஹி..//

மக்கா அந்த வெள்ள காக்கா தான் ரெட் ஃபிரையா இருந்துச்சா?? நீங்க கூட குயில்ன்னு சொன்னீங்களே பாஸ்,, ஓ..அது இது தானா?? ஹி..ஹி..

Ananthi said...

படங்களுடன் செய்முறை குறிப்பு... சூப்பர்..
செய்து பார்க்கிறேன்.. நன்றி..

R.Gopi said...

வடை விளக்கம் கண்டேன்...

சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன்...

ஃபோட்டோக்களும், செய்முறை விளக்கமும் பலே ரகம்...

வாழ்த்துக்கள் மேடம்........

மனோ சாமிநாதன் said...

புது விதமான சமையல் குறிப்பு! படங்களும் நன்றாக இருக்கின்றன!!

ஸாதிகா said...

பார்க்கவே மொறு மொறுப்பாக உள்ளது.புதுவிதம்தான்.

அப்பாவி தங்கமணி said...

wow... super healthy recipe

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மலிக்கா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!

Mrs.Menagasathia said...

Happy Ramzan!!

காஞ்சி முரளி said...

தங்களுக்கும்...
தங்கள் மச்சான்... குழந்தைகள்... மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....

******************************************************
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"!
*******************************************************

அதோடு...
ஜெய்லானி மற்றும் அவர்தம் குடும்பத்தார்...
மற்றும்
அனைத்து இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும்
இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!


அனைவருக்கும்
என் இனிய நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

siva said...

:)

siva said...

தமிழ்மணத்திலும் ஓட்டும் போட்டுங்க, போட்டுவிடுவீங்கன்னு நம்புறேனுங்கோ..--NAN OOTTU PODAMATEN...

ENAKU INNUM OTTU ORIMAI VARAVILLAI...EPPUDI..

swathium kavithaium said...

நன்று வாழ்த்துக்கள்.என் பிளாக் கையும் பாருங்க....http://swthiumkavithaium.blogspot.com/

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.