தேவையானவைகள்
முட்டை -2
முள்ளங்கி -1
பச்சைமிளகாய் -2
பெரிய வெங்காயம் -2
தக்காளி [ரொம்பச் சிறியது] -1
உப்பு
மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
ஆயில் பொரிக்க தேவையான அளவு
முள்ளங்கியை தோல்நீக்கி அதை துருவிக்கொள்ளவும்
அத்துடன் முட்டை வெங்காயம் உப்பு சீரப்பொடி மிளகுத்தூள் அனைத்தையும் போட்டு
நன்றாக அடித்துக்கொள்ளவும்[உங்களையல்ல முட்டைக்கலவையை]
அடுப்பை பற்றவைத்து தோசைக்கல் வைத்து அது சூடானதும் ஆயில்விட்டு அதுவும் சூடானதும் இந்த கலவையை அதில் ஊற்றவும்.
தீயை மிதமாக்கி வைக்கவும்.
அப்படியேவும் திருப்பிப்போடலாம் இல்லையென்றால் நான்கு பீஸாக்கி திருப்பிப்போட்டு சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
மாலைவேளையில் சும்மாவும் சாப்பிடலாம். குப்புஸ்கூடவும் சாப்பிடலாம். சாத்தத்துக்கும் சாப்பிடலாம்.
முக்கியமாக முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுத்தால் தினமும் செய்து கேட்பார்கள். இதேபோல் கேரட் கேபேஜ். என டிசைன் டிசைனாக செய்துகொடுங்க. அப்படியே நீங்களும் சாப்பிடுங்க. அதுக்காக எப்போதும் சாப்பிட்டுகினேயிருந்தா. அப்புறம் அப்புறம் அத நான்வேற சொல்லனுமா ஹூம்,,, உங்களுக்கே புரியும்..
இது மூளை முட்டை. யாரோடது அப்புடின்னெல்லாம் கேட்டா உண்மையைசொல்லவேண்டிவரும் ”என்னான்னு” உங்களோடதுதான்னு சொல்லிடுவேன்.
ஆட்டின் மூளை அதையும் மேற்சொன்னமுறையிலேயே செய்து, அதன்கூட கொஞ்சம் மல்லி இலை [அச்சோ நானல்ல] இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் சேர்த்துக்கொண்டு. துண்டாகவும் பொரித்தெடுக்கலாம் இல்லையின்னா இதுபோல கொத்து மூளை முட்டையாகவும் செய்து சாப்பிடலாம்.
ஒன்னையும் விட்டு வைக்காதீங்கன்னு.[யாரது இப்படியெல்லாம் கேட்கிறது]
மனிதனுக்குதானே இறைவன் அனைத்தையும் படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவித்துக்கொண்டுதான் அவனுக்கே நன்றி செலுத்துவதில்லை. என்ன சரிதானே!!!!
அன்புடன் மலிக்கா
20 comments:
ஆஜர் . அப்புறம் வரேன் நான்
அட்ரா....அட்ரா... முதல் பிளேட் எனக்கே!!!!!!!
மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )
முல்லங்கி முட்டை நல்ல ஐடியா தான்.
கல கலப்பான ரெசிபி..... சந்தோஷம்!
நாக்கு ருசிக்கு ஏங்குகிறது அக்கா
மலிக்கா சில நாட்களாக காணாமல் போய் விட்டீர்களே?நலம்தானே.மூளை,முள்ளங்கி முட்டைப்பொரியல் புதுவிதமாகத்தான் இருக்கும்.முள்ளங்கி பிடிக்காத என் போன்றோர் கண்டிப்பாக டிரை பண்ணிபார்க்கவேண்டும்.
முட்டை கொத்து நல்லா இருக்குங்க..
////மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )////
jailani'in kelviku enna pathil?
yes... madam...
i also ask this question...
natpudan...
kanchi murali...
மூளை என்றால் என் வீட்டில் அலர்ஜி,ஆகா என்ன காம்பினேசன் சூப்பர்.
புதுசா படிக்கிறவுங்களுக்கு உதவியா சைவம், அசைவம்னு ஒரு ப்ளாக் லேபிளை சேர்த்துட்டேங்கன்னா இன்னும் வசதியாயிருக்கும்.
// LK said...
ஆஜர் . அப்புறம் வரேன் நான்//
நன்றி கார்த்திக்.
//ஜெய்லானி said...
அட்ரா....அட்ரா... முதல் பிளேட் எனக்கே!!!!!!!//
இல்லையே கார்த்திக்குதான்..
//ஜெய்லானி said...
மூளை சாப்பிட்டும் மூளை வளராட்டி என்னங்க பண்ணனும்.( யாரோட மூளைன்னு கேக்கப்படாது )//
இத சொல்லித்தான் தெரியனுமா.
ஓ மூளை சாப்பிடுவது மூளைய வளர்கவா?
அப்ப அத சாப்பிடாதவங்களுக்கு மூளையே வளராதமதரி சொல்லுறீங்களே ஜெய்லானி
இருங்க அவங்கக்கிட்டயெல்லாம் சொல்லிடுறேன்[அப்பாடா தப்பிக்க ஒரு வழி கிடைச்சிரிச்சி எஸ்கேப்]
நீச்சல்காரன் said...
புதுசா படிக்கிறவுங்களுக்கு உதவியா சைவம், அசைவம்னு ஒரு ப்ளாக் லேபிளை சேர்த்துட்டேங்கன்னா இன்னும் வசதியாயிருக்கும்.//
போட்டுட்டேன் நீச்சல்காரன்.
ஐடியாவுக்கு மிக்க நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் இன்னொரு நன்றி..
//ஸாதிகா said...
மலிக்கா சில நாட்களாக காணாமல் போய் விட்டீர்களே?நலம்தானே.மூளை,முள்ளங்கி முட்டைப்பொரியல் புதுவிதமாகத்தான் இருக்கும்.முள்ளங்கி பிடிக்காத என் போன்றோர் கண்டிப்பாக டிரை பண்ணிபார்க்கவேண்டும்..//
வாங்கக்கா. ஒரு மாசமா போட்டு வாட்டி எடுத்துவிட்டது வஞ்சனையில்லாமல்..
அதான் காணமல்போயிட்டேன்.
இருந்தாலும் டாக்டர் அட்வைஸையும் கேட்கோனுமுல்ல அதான் அடிக்கடி இதுக்கு வந்து பதில்போடமுடியாமப்போகுது.
இன்ஷா அல்லாஹ் பரிபூர்ணமானதும் முன்புபோல் ஆஜர்.
மிக்க நன்றிக்கா வருக்கைக்கும் அன்பான விசாரிப்புக்கும்..
//இல்லையே கார்த்திக்குதான்..//
இல்லை அவரே சாப்பிடட்டும். நான் சைவம்
LK said...
//இல்லையே கார்த்திக்குதான்..//
இல்லை அவரே சாப்பிடட்டும். நான் சைவம்.//
ஓ அப்படியா சாரி கார்த்திக்.
ஜெய்லானிக்கே கொடுத்துடலாம் இன்னும் தெம்பா கருத்து போடட்டும்..
மல்லிக்கா
நானும் ஒரு சாப்பாட்டு பிரியன்
முல்லங்கியை தவிர
முட்டை ரொம்பபிடிக்கும்
மூலை கேக்காதிங்க
இருந்தும் உங்கள் தயாரிப்பு குறிப்பை கேட்கும் போது ஒருமுறை முயற்ச்சிக்கிரேன்
செந்தில்குமார்.அ.வெ
மல்லிக்கா
நானும் ஒரு சாப்பாட்டு பிரியன்
முல்லங்கியை தவிர
முட்டை ரொம்பபிடிக்கும்
மூலை கேக்காதிங்க
இருந்தும் உங்கள் தயாரிப்பு குறிப்பை கேட்கும் போது ஒருமுறை முயற்ச்சிக்கிரேன்
செந்தில்குமார்.அ.வெ
மிகவும் அருமையான குறிப்பு...எங்க வீட்டில் முள்ளாங்கியினை பொரியல் செய்யும் பொழுது கடைசியில் முட்டையினை கூட சேர்த்து பொரியல் செய்வாங்க...துறுவிய முள்ளாங்கியில் செய்ததில்லை...அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி
அட ரெசிப்பி சிம்பிளாகவும் அருமையாகவும் இருக்கே.
Post a Comment