அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, November 24, 2009

மீன் கூட்டு


தேவையானைவை


ஷாஃபி மீன் 2 பெரியது

தக்காளி 1 பெரியது

சிறிய வெங்காயம் 10

பச்சைமிளகாய் 3

கரம் மசாலா 1 டேபிள்ஸ்பூன்

மிளகுதூள் 1ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 ஸ்பூன்

சோம்பு சீரகம் வறுத்து பொடித்தது 2 ஸ்பூன்

கொத்தமில்லை

உப்பு ஆயில்

தாளிக்க

உளுந்து கடுகுகறுவேப்பில்லை....


மீனை நன்றாக சுத்தம்செய்து [தலையை தவிர்த்துவிட்டு]
மீனை உப்பும் மஞ்சலும் சேத்து தண்ணீர்கொஞ்சமாக வைத்து
10 நிமிடம் வேகவைக்கவும் வெந்ததும்

அதன் முட்களை எடுத்துவிட்டு உதிர்த்து வைக்கவும்
ஒரு கடாயில் ஆயில் விட்டுகடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து கருவேப்பில்லை

கட்செய்த வெங்காயம் தக்காளி பூண்டு ப,மிளகாய் சேர்த்து வதக்கி மசாலாக்கலையும் உப்பும் சேர்த்து கிளரவும்

அது வதங்கியது [அடுப்பை சிம்மில்வைத்து] உதிர்த்து வைத்திருக்கும் மீனைபோட்டு மெதுவாக கிளரவும் அந்த கலவையுடன் செட்டாகும்பதத்தில் கொத்தமல்லி தூவி பரிமாரவும்..

இந்த மீன் கூட்டு மிகுந்த சுவையாக இருக்கும்
இதை வெரும் ரசம்வைத்து சாதத்துக்கூட சாப்பிட டேஸ்டாக இருக்கும்
சப்பாத்தி, நாண்  கூடவும் சாப்பிடலாம்..

அன்புடன் மலிக்கா

17 comments:

S.A. நவாஸுதீன் said...

ஷாஃபி மீன் - பேரே புதுசா இருக்கே. (ஷஃபி கிட்டதான் கேக்கனும் நம்மூர்ல இதுக்கு என்ன பேர்னு)

S.A. நவாஸுதீன் said...

அதிரைல மீன் புளுக்கள்ன்னு சொல்வோமே அதுவா இது. (பெரிய வாளை மீன்ல செய்வாங்க)

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
ஷாஃபி மீன் - பேரே புதுசா இருக்கே. (ஷஃபி கிட்டதான் கேக்கனும் நம்மூர்ல இதுக்கு என்ன பேர்னு)/

நவாஸண்ணா.இங்கு [துபையில்]இந்த சாஃப்ட்டான மீனுக்கு ஷாஃபி மீனுன்னு வச்சிருக்கங்க.இதில் முள்ளும் அதிகமில்லை.
ஆனாநம்ம ஊர்ல என்னான்னு எனக்கு தெரியலையே.

[அதுசரி நீங்க அதிரையா?அப்ப ஷஃபி யும் அதிரையா?
ஷஃபி அண்ணாவா? தம்பியா?எனக்கு]

அன்புடன் மலிக்கா said...

அங்கிருக்கும்போது நான் செய்ததில்லை நவாஸண்ணா..

உம்மம்மா செய்திருக்காங்க ஆனா எந்தமீனுன்னு அப்ப எனக்குத்தெரியாதே..

S.A. நவாஸுதீன் said...

நானும் ஷஃபியும் அதிரைதான். ஷஃபி எனக்கே அண்ணன் தான்.

S.A. நவாஸுதீன் said...

நீங்களூம் அதிரைதானா?

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப நல்ல ரெசிப்பியா இருக்கே,நானும் அதிரைதான்,அக்கா,நீங்க?

அன்புடன் மலிக்கா said...

/ S.A. நவாஸுதீன் said...
நீங்களூம் அதிரைதானா?

ஆமா நவாஸண்ணா..


S.A. நவாஸுதீன் said...
நானும் ஷஃபியும் அதிரைதான். ஷஃபி எனக்கே அண்ணன் தான்..

அச்சோஒ அப்படியா? நான்பாட்டுக்கு பேர்சொல்லி அழைக்கிறேனே இனி அண்ணான்னே கூப்பிடலாம்..

ஹுஸைனம்மா said...

இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வோம். (நான் திருநெல்வேலிங்கோ, அதிரையா கேக்கறதுக்கு முன்னயே சொல்லிடறேன்.)

கருவாச்சி said...

மலிக்கா மீன்ல என்ன செஞ்சாலும் எனக்கு ரொம்ப புடிக்கும்
இன்னும் கொஞ்சம் அண்மைக் காட்சியாக எடுத்திருக்கலாம்
(closeup shot ன்னு சொல்லிருக்கலாம்ல என்னே உன் தமிழ் அறிவு)

கருவாச்சி said...

அதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கப்பா

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
அதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கப்பா/

வாங்க திருப்பூர்காரவுகளே./ கருவாச்சி said...
மலிக்கா மீன்ல என்ன செஞ்சாலும் எனக்கு ரொம்ப புடிக்கும்
இன்னும் கொஞ்சம் அண்மைக் காட்சியாக எடுத்திருக்கலாம்
(closeup shot ன்னு சொல்லிருக்கலாம்ல என்னே உன் தமிழ் அறிவு)/

கருவாச்சி closeup விளம்பரம்போல் தெரியுது, எவ்வளவு துட்டு வாங்குனீக..

தொடர்ந்துவரும் கருவாச்சிக்கு மீன்கோட்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீன்கூட்டு ஒரு பார்சல்..

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வோம். (நான் திருநெல்வேலிங்கோ, அதிரையா கேக்கறதுக்கு முன்னயே சொல்லிடறேன்.)/

ஆகா திருநெல்வேலி காரவுகளா நீங்க அப்ப தமிழ்பாஷை [பேசுறது] சூப்பராகவுள இருக்கும்.

எல யார்லே அங்கே நம்ம ஹுசைன்னம்மாக்கிட்ட போய் ஒருகிலோ அல்வா வாங்கிட்டு வாங்க..

ரொம்ப சந்தோஷம் ஹுசைன்னம்மா

அன்புடன் மலிக்கா said...

/ Mrs.Menagasathia said...
pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html//

சமையல் வல்லுனி மேனகா. தாங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டேன்.

மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி...

தாஜ் said...

salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப்பதான் இந்த வலை பார்க்கிறேம்ப்பா சமையல் ராணியே அசத்துங்கோ மீன் குறிப்பு கொஞ்சம் தெரியலை சரி பன்னுங்கப்பா

அன்புடன் மலிக்கா said...

/தாஜ் said...
salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப்பதான் இந்த வலை பார்க்கிறேம்ப்பா சமையல் ராணியே அசத்துங்கோ மீன் குறிப்பு கொஞ்சம் தெரியலை சரி பன்னுங்கப்பா/


அம்மாடி தான்கன்னு எப்படிப்பா இருக்கீங்க நலமா, என் செல்லங்கள் சுகமா. அண்ணன் எப்படியிருக்காங்க என்னப்பா நான் கேட்கனும் நினைவிருக்கான்னு, நீங்க முந்திட்டீங்களா.. நாளை யாஹூக்கு வாங்கப்பா. பேசனும்..

அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்.
பெருநாள் எப்படி இருந்தது?

நல்ல தெரியுதேப்பா எனக்கு குறிப்பு.

மீண்டும் ஒருமுறைபார்த்து சொல்லுங்கப்பா..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.