அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, July 4, 2010

தால் பாணியும். தங்க தோசையும்.

தேவையானவை

நன்றி கூகிள்

துவரம்பருப்பு -1/4 கிலோ
தக்காளி  பழுத்தது -1
உருலைக்கிழங்கு -2
 பெரிய வெங்காயம் -1
சிறிய வெங்காயம் -10
ப,மிளகாய் -2
பூண்டு  பல் -10
முழு சோம்பு -1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் -4
மஞ்சள்தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பில்லை
கடுகு
உப்பு
ஆயில்


குக்கரில் பருப்பு கட்செய்த உருலை, தக்காளி, வெங்காயம், உப்பு மஞ்சள்தூள் போட்டு

4,  விசில்வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் ஆயில்விட்டு அதில் கடுகு சி,மிளகாய்

பூண்டுபல் சிறியவங்காயம் [கட்செய்தது] கருவேப்பில்லைபோட்டு வதக்கிக்கொண்டு அதில்
இந்த பருப்புக்கலவையை சேர்க்கவும் பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்
இது உடனடி தால்பாணி 10. நிமிடத்திற்குள் செய்துவிடலாம்.

இந்த தால்பாணி. வெள்ளைசாதம்கூட தொக்கு. கறி கோழி முட்டை. இப்படி ஏதாவது ஒன்று பொரித்துக்கொண்டு இதை ஊற்றி சாப்பிடலாம். . தோசை இட்லிக்கும். இதை செய்து சைடிஸாக வைத்துக்கொள்ளலாம்.
இப்பசரியா ஸாதிக்காக்கா..


இது அம்மாவுக்காக அன்புமகன் சுட்ட தோசை
ரோஸ்ட் டம்மா ரோஸ்ட்
இது மரூஃப் சுட்ட ரோஸ்ட்
அம்மாவுக்கு மட்டும் ஒன்னு
மத்தவங்களுக்கு பன்னு
எப்படியிருக்கு அன்புமகனின் கைமணம்..

ஒரே அழுச்சாட்டியம் இன்னைக்கி நாந்தான் உங்களுக்கு தோசை சுட்டுத்தருவேன்னு.நான் சொன்னேன் தோசை சுடுகிறேன்னு கையை சுட்டுக்கொள்வாய் அதுமட்டுமல்லாமல் தோசை வட்டமாக வராதுன்னு தோசைதானே வட்டமாக வராது நான் ரோஸ்ட் சுட்டுதாரேன்னு சொன்னாரே பார்கனும். சொன்னதோடு நிற்காமல் அழகாய் சுட்டும் தந்து அசத்திபுட்டாருல்ல.

28 comments:

ஸாதிகா said...

தோசையம்மா தோசை
யாரு சுட்ட தோசை
மஃரூப் சுட்ட தோசை
அம்மாவுக்கு ஒண்ணு
மற்றவங்களுக்கு பன்னு

ஸாதிகா said...

தால் பாணி எதற்கு சைட் டிஷ் ஆக வைக்கலாம்?சாதத்திற்கா?டிபனுக்கா?தோசையுடன் தால் பாணியைக்காணுமே?கார் சட்னி அல்லவா இருக்கு?

எம் அப்துல் காதர் said...

மரூஃப் எனக்கு மூனே மூணு போதும்யா, ரெண்டு எக்ஸ்ட்ராவா வேணும்னா கேட்டு வாங்கிக்கிறேன் ஹி..ஹி..

Chitra said...

தோசை மணம் இங்கே வரை கமகமக்குது.... ம்ம்ம்......

ஜெய்லானி said...

//குக்கரில் பருப்பு கட்செய்த உருலை, தக்காளி, வெங்காயம், உப்பு மஞ்சள்தூள் போட்டு

4, விசில்வந்ததும்//

அப்படி விசில் வராட்டி ? நாங்க விசில் அடிக்கனுமா..?
அப்படி விசில் அடிக்க தெரியாதவங்க என்ன பண்ணனும் ?


உருலை-அப்படின்னா ? இந்த சப்பாத்தி உருட்டும் கட்டையா..? டாக்டர் சொல்லிருக்கார் மரம் சாப்பிட்டா வயித்துல பூச்சி வருமாம்.

ஜெய்லானி said...

தால் பாணியும் தங்க (பிள்ளை சுட்ட) தோசையும் சூப்பர். அப்படியே நாலு பார்ஸல்.

எல் கே said...

அழகை சுட்டிருக்கிறார் தோசையை ....வாழ்த்துக்கள்

நாடோடி said...

உங்க‌ள் ம‌க‌னின் ரோஸ்ட் அழ‌கா இருக்கு.... அப்ப‌டியே ந‌ம‌க்கும் ஒரு பார்ச‌ல் அனுப்புங்க‌..

malarvizhi said...

சூப்பர் டிபன் .....அதுவும் பையன் ஆசையா செய்தது என்றால் ரொம்ப சிறப்பாக தான் இருக்கும்..

'பரிவை' சே.குமார் said...

Thosai Masterrukku Vazhththukkal.

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
தோசையம்மா தோசை
யாரு சுட்ட தோசை
மஃரூப் சுட்ட தோசை
அம்மாவுக்கு ஒண்ணு
மற்றவங்களுக்கு பன்னு.//

ஹை பாட்டு நல்லாயிருக்குக்கா




/ஸாதிகா said...
தால் பாணி எதற்கு சைட் டிஷ் ஆக வைக்கலாம்?சாதத்திற்கா?டிபனுக்கா?தோசையுடன் தால் பாணியைக்காணுமே?கார் சட்னி அல்லவா இருக்கு.//

அது உளுந்து சட்னிக்கா தக்காளிசேர்த்து செய்தது,

அப்பால இப்ப போட்டுடோமுல்ல எதுக்கு இந்த தால்பாணின்னு. ஏன் முன்னாடி போடலையின்னா இப்படி யாராவது வந்து கேட்கட்டுமேன்னுதான் ஹி ஹி ஹி

நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

எம் அப்துல் காதர் said...
மரூஃப் எனக்கு மூனே மூணு போதும்யா, ரெண்டு எக்ஸ்ட்ராவா வேணும்னா கேட்டு வாங்கிக்கிறேன் ஹி..ஹி..//

தாளரமா கேட்டு வாங்கிக்கோங்க. மாவு தீரும் வரை.




Chitra said...
தோசை மணம் இங்கே வரை கமகமக்குது.... ம்ம்ம்......//

ஆத்தாடி பாளையங்கோட்டைக்கு வந்து அப்படியே usa வந்துடுத்தா. அப்ப இது தங்கதோசையேதான்..

நன்றி சித்ராமேடம்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//குக்கரில் பருப்பு கட்செய்த உருலை, தக்காளி, வெங்காயம், உப்பு மஞ்சள்தூள் போட்டு

4, விசில்வந்ததும்//

அப்படி விசில் வராட்டி ? நாங்க விசில் அடிக்கனுமா..?
அப்படி விசில் அடிக்க தெரியாதவங்க என்ன பண்ணனும் ?.//

விசிலடிக்க தெரியலையின்னா பக்கத்துல கடன்வாங்கி அடிக்கனும் அதாவது ஊக்கிரியை..


உருலை-அப்படின்னா ? இந்த சப்பாத்தி உருட்டும் கட்டையா..? டாக்டர் சொல்லிருக்கார் மரம் சாப்பிட்டா வயித்துல பூச்சி வருமாம்.//

ஓ என்னா ஒரு நக்கலு. உருலையின்னா உருலைக்கிழங்கு கிழங்கைதான் கட்பண்ணிவச்சிருக்கோமுல்ல மீதியிருப்பது உருலைதானே அதேன் அப்படிச்சொன்னோம்.எப்புடி.

வயித்துல பூச்சிவராது மரமே வந்துடும் விழுதுபோட்டு. டாக்டர் குழப்பத்தில மாத்திச்சொல்லிட்டார்ன்னு நினைக்கிறேன்.




ஜெய்லானி said...
தால் பாணியும் தங்க (பிள்ளை சுட்ட) தோசையும் சூப்பர். அப்படியே நாலு பார்ஸல்./

போதுமாங்கண்ணா..மிக்க நன்றிங்கண்ணா.

அன்புடன் மலிக்கா said...

LK said...
அழகை சுட்டிருக்கிறார் தோசையை ....வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்..


நாடோடி said...
உங்க‌ள் ம‌க‌னின் ரோஸ்ட் அழ‌கா இருக்கு.... அப்ப‌டியே ந‌ம‌க்கும் ஒரு பார்ச‌ல் அனுப்புங்க‌.//

அனுப்பிட்டாப்போச்சி. ஸ்டீபன் இது தங்கதோசையா அதனால துண்ணுட்டு தண்ணிக்குடிக்கக்கூடாது சரியா..

நன்றி ஸ்டீபன்

அன்புடன் மலிக்கா said...

malarvizhi said...
சூப்பர் டிபன் .....அதுவும் பையன் ஆசையா செய்தது என்றால் ரொம்ப சிறப்பாக தான் இருக்கும்..//

ஆமாம் சந்தோஷமாக சாப்பிட்டேன் நல்ல மொருமொருன்னுவேற இருந்துச்சா இன்னொன்னு தாங்கப்பான்னு சொல்லி வாங்கிச்சாப்பிட்டேன்.

மிக்க நன்றி மலர்விழி


/சே.குமார் said...
Thosai Masterrukku Vazhththukkal./

மிக்க நன்றி குமார்.

காஞ்சி முரளி said...

மரூப்...
தோசைய நல்லாத்தான் சுட்டிருக்க...!
ஆனா... இன்னையோட விட்டுடு...
நாளையிலேர்ந்து கேட்டா.. சுடத்தண்ணீர் மட்டும் வைக்கத்தெரியும்முன்னு என்ன மாதிரி சொல்லோனும்.. என்ன..!
உஷாரயிரு...!

anyhave...
இதுக்கே மரூப்புக்கு ஓர் விருது கொடுக்கலாம்...

நட்புடன்....
காஞ்சி முரளி....

சசிகுமார் said...

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்ன, வெளுத்துக்கட்டு மஃரூப்

மனோ சாமிநாதன் said...

மகன் அழகாகத்தான் தோசை சுட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் மலிக்கா!

Yoganathan.N said...

மகனின் அன்பும் கலந்திருப்பதால், தோசை இன்னும் ருசி. :)

newborn said...

நல்லாதான் தோசை சுடுற மஹ்ரூப் !!!
ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் "தங்கம் செய்ய வேண்டிய வேலைய ..
சிங்கம் பாக்குராரோ ...??? "

அப்பாதுரை said...

மகன் தாய்க்காற்றும் நன்றியா? beautiful!

கானப்பறவை said...

மரூப் சூப்பராக சுடுகிறாயே தோசையை

Anonymous said...

aieeeeeeeee,maroof in doasi super!!!!!!!

Mahi said...

மலிக்கா,மரூஃப் சூப்பரா தோசை சுட்டிருக்கார்..தால்பானி-யும் சிம்பிளா இருக்கு.

நீங்க பலமுறை மறந்துட்டிங்களான்னு கேட்டுட்டீங்க..அப்படியெல்லாம் மறக்கமுடியுமா மலிக்கா? :)

சௌந்தர் said...

இந்த தோசை மட்டும் இப்படி அழக இருக்கே எப்படி...

காஞ்சி முரளி said...

ஹய்யோ....யாரோ...!
என் கமெண்ட்ஸ திரிடிட்டாங்கோ...!
நேத்து வரைக்கும் இருந்தது.... இன்னைக்கு காணல...!

யாரா இருந்தாலும் திருப்பி கொண்டுவந்து போட்டிடுங்கோ...!

போடலன்னா... முட்டை மந்திரம் போட்டிடுவ....!

காஞ்சி முரளி....

காஞ்சி முரளி said...

பார்த்தீர்களா...!

"முட்டை மந்திர"முன்னு சொன்னவுடனே...
காணமப்போன கருத்துரை வந்திடுச்சி...!

அந்த பயம் இருக்கட்டும்....

Thenammai Lakshmanan said...

தங்கக் கைகளால் சுட்ட தங்கதோசைதான் மலிக்கா.. சுட்ட கைகளுக்கு அன்பு முத்தங்கள் டா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.