அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, April 7, 2010

தயிர் பஜ்ஜி..

தேவையானவை

 கடலைமாவு 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
  தயிர் 3/4 கப்
பச்சைமிளகாய் 4
பொதினாமல்லி 1/கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி கொஞ்சம்
மிளகுத்தூள் கொஞ்சம்
உப்பு
ஆயில் பொரித்தெடுக்க

ஒரு பவுலில் மாவுகளைப்போட்டு அதில் அனைத்தையும் சேர்த்து
அதோடு தயிரையும்போட்டு உளுந்துவடை பதத்துக்கு
பிசைந்துகொள்ளவும்
ஆயில் சூடு வந்ததும்
ஒரு ஸ்பூனில் எடுத்து எடுத்துபோட்டு பொரித்தெடுக்கவும்.
10 நிமிடத்தில் ரெடி
காரச்சட்னி அல்லது கெச்சப் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
சும்மாவே சாப்பிட சூப்பராக இருக்கும்.


எங்கவீட்டு ஹீரோ தயிர் பஜ்ஜிக்கே தயிர்போட்டு சாப்பிடும் அழகே அழகுதான் மம்மி இன்னும்கொடுங்கன்னு சாப்பிட்டார்ன்னா பாத்துக்கோங்க.
இதுதான் தயிர்போட்டு சுட்டபஜ்ஜியா
அதுக்கு நாங்க தொட்டுக்கவே தயிரப்போட்டுக்குவோமுல்ல

அப்படி பாக்கதீங்க என்னைய உங்க கண்ணுபட்டுடும்

டிரிப்ள் ஓகே சூப்பராக இருக்கு

வின்பண்ணிட்டீங்க மம்மி
செம சூப்பராயிருக்கு 100/ 75 கொடுக்கலாம்
நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க

மறக்காம எப்படி சாப்பிட்டேன்னு சொல்லிட்டுபோங்க.
செய்தது மம்மின்னாலும் ஃபஸ்ட் சாப்பிட்டது நாந்தானே அதான்
அன்புடன் முகமது மஃரூப்

21 comments:

ஜெய்லானி said...

சுட்ட இட்லிக்கு சட்னி செஞ்சிட்டு வரேன்னுட்டு , இப்ப டூ இன் ஒன்னா தயிர் + பஜ்ஜி வாவ் அட்டகாசம்!!

சுட்டதும் சாப்பிட்டதும் அழகு!!

Jaleela said...

ஆ பஜ்ஜியா எனக்கு,இன்றே பஜ்ஜி ய சுட்டு சாப்பிட வேன்டிய்து தான்
வாண்டுகள் வீட்டில் இருந்தாலே தினம் தினம் புது புதுசு தான், நான் தினஅம் புரூட் சேலட் தான் ... இரண்டு நாளா ரவுண்டுகட்டி அடிச்சாச்சு, இன்று தர்பூஸ்..

Geetha Achal said...

சூப்பர்ப் பஜ்ஜி...பின்ன குழந்தைகளிடம் பாராட்டு வாங்குவது தான் கஷ்டம்..(பெரியவர்களிடம் வாங்குவதைவிட...)..அருமை...படங்கள் அருமை...

நாஸியா said...

வாய் ஊரிங்!!

குடுத்து வெச்ச மஃரூஃப்.. மாஷா அல்லாஹ்..

என் பிள்ளை இன்ஷா அல்லாஹ் நாளைக்கு உங்க ப்ளாக் பக்கமெல்லாம் வந்தா என்னை எப்படி திட்டும்னு யோசிக்குறேன்.. ஹிஹி

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
சுட்ட இட்லிக்கு சட்னி செஞ்சிட்டு வரேன்னுட்டு , இப்ப டூ இன் ஒன்னா தயிர் + பஜ்ஜி வாவ் அட்டகாசம்!!

சுட்டதும் சாப்பிட்டதும் அழகு/

அத இன்னும் மறக்கலையா மறந்துடுவீகளுன்னுல நினச்சேன்..

வந்துக்கும் கருத்து தந்ததுக்கும் மகிழ்ச்சி மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
சுட்ட இட்லிக்கு சட்னி செஞ்சிட்டு வரேன்னுட்டு , இப்ப டூ இன் ஒன்னா தயிர் + பஜ்ஜி வாவ் அட்டகாசம்!!

சுட்டதும் சாப்பிட்டதும் அழகு/

அத இன்னும் மறக்கலையா மறந்துடுவீகளுன்னுல நினச்சேன்..

வந்துக்கும் கருத்து தந்ததுக்கும் மகிழ்ச்சி மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
ஆ பஜ்ஜியா எனக்கு,இன்றே பஜ்ஜி ய சுட்டு சாப்பிட வேன்டிய்து தான்
வாண்டுகள் வீட்டில் இருந்தாலே தினம் தினம் புது புதுசு தான், நான் தினஅம் புரூட் சேலட் தான் ... இரண்டு நாளா ரவுண்டுகட்டி அடிச்சாச்சு, இன்று தர்பூஸ்//

சுட்டு சாப்பிடுங்கோ எனக்குதரமா. கொழுகட்டை துண்ணமாதரி சரியா..
இங்கே பழங்கள் கிடந்து அழுவுது. யாரும் என்னை திரும்பிபாக்கலைன்னுக்கா..

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
சூப்பர்ப் பஜ்ஜி...பின்ன குழந்தைகளிடம் பாராட்டு வாங்குவது தான் கஷ்டம்..(பெரியவர்களிடம் வாங்குவதைவிட...)..அருமை...படங்கள் அருமை//

ஆமாகீத்து இந்த குட்டிகளிடம்படும்பாடுயிருக்கே அதுதனி ரசனைதான்.
அவங்களுக்கு பிடிச்சா நமக்கு சாப்பிட்டமாதரி..

மிக்க நன்றி கீதா

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
சூப்பர்ப் பஜ்ஜி...பின்ன குழந்தைகளிடம் பாராட்டு வாங்குவது தான் கஷ்டம்..(பெரியவர்களிடம் வாங்குவதைவிட...)..அருமை...படங்கள் அருமை//

ஆமாகீத்து இந்த குட்டிகளிடம்படும்பாடுயிருக்கே அதுதனி ரசனைதான்.
அவங்களுக்கு பிடிச்சா நமக்கு சாப்பிட்டமாதரி..

மிக்க நன்றி கீதா

அன்புடன் மலிக்கா said...

நாஸியா said...
வாய் ஊரிங்!!

குடுத்து வெச்ச மஃரூஃப்.. மாஷா அல்லாஹ்..

என் பிள்ளை இன்ஷா அல்லாஹ் நாளைக்கு உங்க ப்ளாக் பக்கமெல்லாம் வந்தா என்னை எப்படி திட்டும்னு யோசிக்குறேன்.. ஹிஹி//

காலையில்தான் நானும் ஜலிக்காவும் உங்களைபத்தி பேசிக்கிட்டியிருந்தோம்.

கவலைப்படதே சகோதரி ஒம் புள்ள வரத்துக்குள்ள
எல்லாம் சொல்லிக்கொடுத்து அவுகளுக்கும் இதேபோல் செய்துக்கொடுக்கவச்சிருவோமுல்ல..

திட்டினா நல்லயிருக்கும் காதுக்கு குளுமையா அதனால வாங்கிக்குவோம்..

Mrs.Menagasathia said...

அருமையான தயிர் பஜ்ஜி கலக்கலா இருக்கு...அதைவிட அந்த பஜ்ஜியை சாப்பிடும் போட்டோ அழகு...

Kanchi Murali said...

thayir bajji....

seyalmurai vilakkamum...
thangal makan commentsm...

super...

natpudan...
kaanchi murali....

sarusriraj said...

லீவ் விட்டவுடன் வித விதமான டிபனா , கலக்குங்க மலிக்கா , புது விதமான ரெசிபி .. செய்து பார்கிறேன்

அக்பர் said...

அட இது நல்ல ஐடியாவா இருக்கே.

தங்கள் அளித்த விருதுக்கு பதிவிட்டுள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் recipe மலிக்கா. சுலபமாவும் இருக்கு. இந்த weekend செஞ்சு பாத்துடறேன். நன்றி

நாஸியா said...

ஆஹா.. என்னப்பத்தி பேசினீங்களா.. என்னன்டு சரியான வாழப்பழ சோம்பேறின்டா? ஹிஹி...

இன்ஷா அல்லாஹ்.. நானும் இந்த பஜ்ஜி ஒரு நாள் செஞ்சி, செஞ்சி, செஞ்சி பாக்குறேன்..

SAMEEM said...

u r so lucky mahroof every day u have different tasty foods.....
here daily idly and dhosa,,,
{enjoy ur school life in home}

சசிகுமார் said...

தயிர் வடை கேள்வி பட்டிருக்கிறேன், தயிர் பஜ்ஜி என்பது புதுமையாக உள்ளது வீட்டில் சொல்லிட வேண்டியதுதான் பிரிண்ட் எடுத்தாச்சு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கொயினி said...

டோய் குட்டி மரூஃப் சூப்பருப்பா.....நான் மம்மியோட தயிர் பஜ்ஜியை படிப்பதுக்கு முன்னாடி உன்னோட ஆக்க்ஷனையும் உன்னோட கமென்டையும்தான் முதலில் பார்த்தேன்.தயிர் பஜ்ஜியும் சூப்பரூ.

சே.குமார் said...

அம்மா சுட்டதும் ருசி பார்த்துச் சொல்லியாச்சு போல...

சுடச்சுட உடனடி விமர்சனமா...?

சாப்பிட்ட அழகுக்கு கண்பட்டிருக்கப் போகுது திருஷ்டி சுற்றி போடுங்கள்.

Anbinnayagan said...

உங்கள் வலைப்பூக்கள் வடிவமைப்பும் பதிவுகளும் அற்புதமாக இருக்கிறது..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.