அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, January 8, 2010

நண்டு சூப்நண்டு தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சிரியவெங்காயம் 10
தக்காளி 1

ப.மிளகாய் 2 ,3
கொத்தமல்லி
சீரகம்சோம்பு [முழுது] 2 ஸ்பூன்
முழு மிளகு 2 ஸ்பூன்
லெமன் ஷூஸ் கொஞ்சம்
உப்பு

சிறிய வெங்காயம் 5
 ப,மிளகாய் சோம்புசீர்கம் மிளகு அனைத்தையும் இடித்து
நண்டுடன் மீதி 5 வெங்காயத்தையும் தக்காளியையும்
கட்செய்துபோட்டு இடித்தவைகளையும் சேர்த்து உப்புபோட்டு
மூடிகொதிக்கவிடவும்

வாசம் மூக்கைத் துலைத்ததும்
இறக்கி திறந்து லெமன் ஜூஸை ஊற்றி ஒருகிண்டுகிண்டி
கொத்தமல்லி போட்டுகொஞ்சம் இளஞ்சூட்டோடு குடிக்கவும்
இது ஜலதோசத்துக்கும் நல்லது
குளிர்நேரத்திற்கும் படுசூப்பராக இருக்கும்..

அன்புடன் மலிக்கா

24 comments:

அண்ணாமலையான் said...

ஆமாங்க..

நட்புடன் ஜமால் said...

நண்டு சாப்பிட்ட(தே)தில்லை

செம சளி

இன்று கார மீன் மொளவு தன்னி வச்சி சாப்பிட்டாச்சி

இன்னும் ஊத்துது சளி ...

Mrs.Faizakader said...

அக்கா நண்டு வாசனை மூக்கை துலைக்கிறது.. எனக்கு ரொம்ப பிடித்த கடல் உணவில் இதுவும் ஒன்று

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். நண்டுக்கு நம்மூர்ல பஞ்சமில்லை. செஞ்சிடுவோம்.

Sangkavi said...

இதை பார்த்ததும் சாப்பிடவேண்டும் போல இருக்கிறது....

jailani said...

நண்டு குழம்பு தெரியும் அதென்ன நண்டு சூப்..

சூப்பர்(சைனீஸ் டைப்)

Jaleela said...

நண்டு இது வரை சாப்பிட்டதும் இல்லை செய்ததும் இல்லை,
இது சளிக்கு நல்லது என்பார்கள்.

சுறா மீன் மிளகு சூப், கால் சூப் தான் நான் செய்வது.

செய்வபவர்களுக்கு இது நல்ல குறிப்பு.

ஹேமா said...

எங்கள் வீட்டில் நண்டுக்குழம்புதான் தடிமன் நேரத்தில் வைப்போம்.முருங்கைக் கீரையும் போடுவோம்.நண்டு சூப் இன்றுதான் அறிகிறேன்.செய்திடல்லம் இனி.

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையான் said...
ஆமாங்க//

ரொம்ப நன்றி அண்ணாமலையாரே

அன்புடன் மலிக்கா said...

/நட்புடன் ஜமால் said...
நண்டு சாப்பிட்ட(தே)தில்லை//

என்னது நண்டு சாப்பிட்டதில்லையா

அண்ணா சாப்பிட்டு பாருங்க உங்களை அது விடாது. ஹூம் நீங்க அதை விடமாட்டீங்க. சூப்பர் டேஸ்டா இருக்கும்

/செம சளி

இன்று கார மீன் மொளவு தன்னி வச்சி சாப்பிட்டாச்சி

இன்னும் ஊத்துது சளி ...//


இதை வைத்து குடிங்கண்ணா சளி நின்னுடும் கொஞ்சம் கூட மிளகு சேர்துக்கோங்க
குடிச்சிட்டு சொல்லுங்கோ ஊத்தாது சளி

அன்புடன் மலிக்கா said...

/ Mrs.Faizakader said...
அக்கா நண்டு வாசனை மூக்கை துலைக்கிறது.. எனக்கு ரொம்ப பிடித்த கடல் உணவில் இதுவும் ஒன்று
/

எனக்கு மிகப்பிடித்த உணவு இது
நன்றி பாயிஜா

அன்புடன் மலிக்கா said...

S.A. நவாஸுதீன் said...
ஹ்ம்ம். நண்டுக்கு நம்மூர்ல பஞ்சமில்லை. செஞ்சிடுவோம்
/

ம்ம் செய்துடுங்க நவாஸண்ணா. இங்கேயும் பஞ்சமேயில்லன்னா எப்பவேனுமுன்னலும் இருக்கு மார்கெட்டில்..

அன்புடன் மலிக்கா said...

Sangkavi said...
இதை பார்த்ததும் சாப்பிடவேண்டும் போல இருக்கிறது....

//
சங்கவி பார்சல் அனுப்பட்டுமா

மிக்க நன்றிமா..Jaleela said...
நண்டு இது வரை சாப்பிட்டதும் இல்லை செய்ததும் இல்லை,
இது சளிக்கு நல்லது என்பார்கள்.

சுறா மீன் மிளகு சூப், கால் சூப் தான் நான் செய்வது.

செய்வபவர்களுக்கு இது நல்ல குறிப்பு/

வாங்கக்கா சமையல் மகாராணி. உங்க அளவுக்கெல்லாம் சமையலில் நமக்கு அனுபவம் பத்தாதுங்கோ..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்சி

அன்புடன் மலிக்கா said...

jailani said...
நண்டு குழம்பு தெரியும் அதென்ன நண்டு சூப்..

சூப்பர்(சைனீஸ் டைப்)

அதேதான் இது சைனீஸ் டைப்போல்தான் கொஞ்சம் நம்ம மெத்தெட்டும் இணைந்து.

ஜெய்லனி நீங்க எந்த ஊர் எங்கப்பக்கமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஹேமா said...
எங்கள் வீட்டில் நண்டுக்குழம்புதான் தடிமன் நேரத்தில் வைப்போம்.முருங்கைக் கீரையும் போடுவோம்.நண்டு சூப் இன்றுதான் அறிகிறேன்.செய்திடல்லம் இனி
/

குழம்பு ஒரு டேஸ்ட் இது ஒருவித தனிடேஸ் ஹேமா.
இந்த சூப்பை ஒருபவுலில் ஊற்றிக்கொண்டு நண்டில் உள்ள சதைகளை எடுத்து அதனுடன் சேர்த்து சூப்பை குடிக்கும்போது இடையிடையே கடிபடும் சதைகள் ஒருதனிசுவையே எற்படுத்தும்

செய்துபாருங்க தோழி..

Sammy said...

நண்டு சமையல் என்றாலே ..வீட்டில் முருங்கைக் கீரை இல்லாமல் பண்ண மாட்டார்கள்...காரணம் விஷத்தை முறிக்குமாம்....

ஞாயிற்று கிழமை அதுவுமா உங்க பதிவில் நண்டு படத்தை பார்த்திட்டேன்.....ஒரே வீட்டு நியாபகம் வந்து..அழுவாச்சியா இருக்கு ...

நாஸியா said...

எனக்கு வாய் ஊறுது..

jailani said...

சளிக்கு நல்லது என்று நண்டை இரவில் சாப்பிட வேண்டாம் பிறகு தூக்கம் வராது.ஹீ..ஹீ..

ஊர் பெயர் profileல் இருக்கே! விக்கிபிடியாவில் பாருங்கள் .

ஜெயா said...

இதுவரை நானும் செய்து பாக்கவில்லை..நல்ல சமையல் குறிப்பு** நன்றி சகோதரி

அன்புடன் மலிக்கா said...

Sammy said...
நண்டு சமையல் என்றாலே ..வீட்டில் முருங்கைக் கீரை இல்லாமல் பண்ண மாட்டார்கள்...காரணம் விஷத்தை முறிக்குமாம்....

ஞாயிற்று கிழமை அதுவுமா உங்க பதிவில் நண்டு படத்தை பார்த்திட்டேன்.....ஒரே வீட்டு நியாபகம் வந்து..அழுவாச்சியா இருக்கு
/

அழுவாதேங்க சாம் ஊருக்கு போனதும் அம்மாக்கிட்டசொல்லி செய்துபோடச்சொல்லலாம்
கண்ணத்தொடைங்க

ரொம்ப நன்றி சாம்..

அன்புடன் மலிக்கா said...

நாஸியா said...
எனக்கு வாய் ஊறுது..

வாங்க நாஸியா வீட்டுக்கு கண்ணில் நீர் ஊர்கிரமாதிரி செய்து தர்ரேன்..

/jailani said...
சளிக்கு நல்லது என்று நண்டை இரவில் சாப்பிட வேண்டாம் பிறகு தூக்கம் வராது.ஹீ..ஹீ...//

ஹா ஹா இப்ப சின்னவயசு எல்லாம் செரிச்சிடும் இருந்தாலும் சரிதான் ஜெய்லானி,

ஊர் பெயர் profileல் இருக்கே! விக்கிபிடியாவில் பாருங்கள் .

பார்த்தேனே இந்தியா, சர்ஜா. நான் கேட்டது எந்த ஊருன்னுல்லோ ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

ஜெயா said...
இதுவரை நானும் செய்து பாக்கவில்லை..நல்ல சமையல் குறிப்பு** நன்றி சகோதரி/

வாங்க ஜெயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,

செய்துபாருங்க செமடேஸ்டா இருக்கும்..

ஜெய்லானி said...

///ஊர் பெயர் profileல் இருக்கே! விக்கிபிடியாவில் பாருங்கள் .

பார்த்தேனே இந்தியா, சர்ஜா. நான் கேட்டது எந்த ஊருன்னுல்லோ ஹி ஹி///

ஐயோ விட்டுடீங்களே!!porto novo india ,(பறங்கிப் பேட்டை) சிதம்பரம்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.