அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, December 21, 2009

பாப்லட் மீன் கறி

தேவையானவை

பாப்லட்மீன் [வாவல்] 6,,,7..
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகய் 3
இஞ்சிபூண்டு விழுது 2டீஸ்பூன்
கொத்தமல்லிதூள் 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
தேங்காய் 1 கப்
லெமன் ஜூஸ்

/தாளிக்க பூண்டுபல் 5 சிறியவெங்காயம் 4 கருவேப்பில்லை வெந்தயம்/
மீனை சுத்தம்செய்து தலைகளைமட்டும் தனியாக்கிவிட்டு2 ,2 ,துண்டுகளாக்கிகொள்ளவும்
அதில் இஞ்சிபூண்டு மிளகாய்தூள் உப்பு போட்டு 10 நிமிடமூறவிடவும்
ஓவன் கண்டினரில் ஆயில்விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி ப மிளகாய் போட்டு 2 நிமிடம் வைக்கவும்
பின் வெளியிலெடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும்
அதனுடன் தலைகளையும் சேர்க்கவும்
மசாலாக்களையும் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு வைத்து மூடி 10,15, நிமிடம் ஓவனில் வைக்கவும்.

மசாலா வாசனை போனதும் திறந்து கொள்ளவும்
மீதமுள்ள அனைத்து ஊறவைத்திருந்த மீனை பொறித்தெடுத்து  அந்தமசாலாக்குழம்பில் போடவும்
அதன்மேல் தேங்காயை அரைத்து ஊற்றவும்.
மீண்டும் 2 நிமிடம் ஓவனில் வைக்கவும். ரெடியானதும்

1 ஸ்பூன் லெமன் ஜூஸ் ஊற்றவும்
மீன்பொறித்த ஆயிலிலேயே தாளிக்கவும். தாளித்தவைகளைப்போட்டு பரிமாரவும்

இது ருசியான மீன்கறி எல்லவற்றிக்கும் ஏற்ற டிஸ்.

அன்புடன் மலிக்கா

14 comments:

S.A. நவாஸுதீன் said...

ஆகா வாவல் (வவ்வா) மீன். மீனிலேயே அதிகம் சுவை உள்ளது இதுதான் என்பது என் கருத்து.

அண்ணாமலையான் said...

ஆஹா சூப்பரான மீன்.. நாக்குல எச்சி ஊருது...

ஹுஸைனம்மா said...

மலிக்கா,

ஒரு விஷயம் கவனித்தேன். நீங்கள் உங்கள் சமையலில் அதிகம் மைக்ரோவேவ் ஓவனை உபயோகிக்கிறீர்கள். நானெல்லாம் சூடு படுத்தவும், கேக் செய்யவும் மட்டுமே பயன்படுத்துவேன். ஆனால் நீங்கள் தினப்படி சமையலில் கூட பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது. நேரம் & எரிவாயு மிச்சம் இல்லையா?

இதிலும் வெங்காயம் தக்காள் வதக்கிறீங்க அதுல. அடுப்பில் செய்வது போல இருக்குமா?

நானும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் சுவை எப்படி இருக்குமோ என்று தயங்கி செய்வதில்லை.

தாஜ் said...

salam malikka

வவ்வல் மீன் கறி நல்லயிருக்கு

மலிக்கா யாஹுக்கு வரச்சொல்லிவிட்டு இப்படியா ஏமாத்துறது

Jaleela said...

மலிக்கா வவ்வா மீன் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்.

அடுத்த வாரம் தான் வாங்கி செய்யனும்.

இது வெங்காயம் தக்காளி நல்ல வதங்குமா? சட்டியில் செய்த ருசி கிடைக்குமா?

thenammailakshmanan said...

pampret miin karri superb mallika

parthavudane saida thonuthu
nice

பாத்திமா ஜொஹ்ரா said...

மீண்டும் மீண்டும் சூப்பர் அக்கா

Viki's Kitchen said...

Meen curry super Malikka. Ungal blog karuthukkaL romba nalla irukkuthu.
Muzhuvathum padithu kondu irukkiren.
Thanks dear.

கருவாச்சி said...

பாம்லெட் எனக்கு பேர் சொன்னாய்ங்க
ஆனா டேஸ்ட் செமயா இருக்கும் மலிக்கா

sabeeca said...

salam rattha naa unga kalavai boori seidhu partten aana yenakku inda boori uppave illaye. yen? aana unga boori parkkave alaha irukkupa.

sabeeca said...

salam rattha naa unga kalavai boori seidhu partten aana yenakku inda boori uppave illaye. yen? aana unga boori parkkave alaha irukkupa.

malarvizhi said...

vaaval meen yenudaiya favourite. parthavudan naakil yechil orugirathu.......

வினோத்கெளதம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..:)

ஸாதிகா said...

மைக்ரோவேவில் செய்யும் மீன்குழம்பு குறிப்பு தந்த மலிக்காவுக்கு நன்றி.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.