அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, October 24, 2010

அடடா”உப்பு” வில் இத்தனை உண்டா! [உப்பு வைத்தியம்]


சொட்டை[யாஆஆ..] மண்டையில் முடி முளைக்க:
உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம்.

[அதற்காக போட்டு எந்நேரமும் அழுதி தேய்த்து ரதம் வர வைத்துவிடாதீர்கள்.அதானுங்க ரத்தம் ஹா ஹா அப்பால உள்ளதும்போச்சுடுடா நொல்லக் கண்ணான்னு ஆகிடும்]

நகச்சுத்தியா!:
உப்பு, வெங்காயம்.சுடுசோறு. இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நகச் சுற்றில் கட்டிக்கொண்டால் குணமாகும்.

[சம அளவு எடுக்கும்போது சூடா சுல்லுன்னு இருக்கேன்னு ஒருவாய் சாப்பிடதோன்றும் தப்பில்லை அதை செய்துகோங்க]


முள் குத்திடுச்சா [வலி நீங்க:]
உப்பு, மிளகு, சரியளவு எடுத்து நல்லெண்ணையில் வத்தக்கிக்கொண்டு அதன் மேல் ஒத்தடம் தந்தால் இதம் தெரியும்.

[அதுக்காக சுட சுட வைதுடாதீங்கப்பூ அப்புறம் கால் கொப்புளிச்சிடும்]

காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்து [விட்டால்]
 கொய்யின்னு சவுண்டு வருமே:

கொஞ்சம் உப்பை நீரில் கலந்து கரைத்து அதை மெதுவாக காதில் விடவேண்டும் சில நிமிடத்தில் எந்த பூச்சியும் வெளியேறிவிடும்.

[அதுக்காக பாம்புபுற்றில் போய் ஊற்றிப் பார்த்துறாதீங்கப்பு அப்பாலா அச்சோஓஓஓ]

விஷக்கடிக்களா!:
குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால், உப்பைகொஞ்சம் தண்ணீபோட்டு கெட்டியாகக் கரைத்தி கடிவாயில் தடவினால் குணங்கொடுக்கும்.
சக்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத்தண்ணீர் விட்டு உள்ளுக்குள் கொடுப்பதும் நல்லது.

[அதுக்காக உப்புதண்ணீரை கடகடண்ணு குடிச்சிறாதீங்க அப்புறம் உப்புநீர் வந்துடும் அதுக்கு நான் பொறுப்பல்லப்பா]

டிஸ்கி// இவைகளெல்லாம் மல்லி கண்டதும். படித்ததும்தான். பலமான சந்தேகமெல்லாம் கேக்கப்புடாது அப்புறம் நான் அழுதுடுவேன் இன்னும் உப்பைபற்றிய குறிப்புகள் இருக்கு அதெல்லாம் அடுத்தமுறை. இப்பயில்ல ஏன்னா விரல் வலிக்குது ரொம்ப நேரம் கீப்போர்டை தட்டுவது. இருங்க உப்புபோட்டு விரல்கழுவிட்டு அப்புறமா வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்


அன்புடன் உப்பு. அச்சோ

அன்புடன் மலிக்கா

14 comments:

LK said...

//ரதம் வர வைத்துவிடாதீர்கள்.//

அட ரதம்லாம் வருமா ??? மும்பெல்லாம், காலில் ரத்தம் கட்டிகொண்டால் உப்பெண்ணை காச்சி அடிப்பார்கள்

அன்புடன் மலிக்கா said...

LK said...
//ரதம் வர வைத்துவிடாதீர்கள்.//

அட ரதம்லாம் வருமா ???//

வராதா பின்னே வழு வழுன்னு இருந்தா. அச்சொ கிண்டலெல்லாம் பண்ணக்கூடாது கார்த்தி.

//மும்பெல்லாம், காலில் ரத்தம் கட்டிகொண்டால் உப்பெண்ணை காச்சி அடிப்பார்கள்//

ஆமாம் கார்த்தி உம்மம்மா [அம்மாவின் அம்மா] செய்வார்கள். ஆனா அடிக்கமாட்டாங்க..ஒத்தடம் தருவாங்க..

LK said...

//ஒத்தடம் தருவாங்க..//

அதே அதே . கொஞ்சம் பேச்சு வழக்கில் சொன்னேன்

அன்புடன் மலிக்கா said...

//ரதம் வர வைத்துவிடாதீர்கள்//

இது சும்மா தமாஸ் கார்த்தி..

//அதானுங்க ரத்தம் //

இது நெசம்..

ஜெய்லானி said...

//உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம் //

இப்பிடி ”மொட்டையா” உப்புன்னு சொன்னா என்ன உப்பு ..? எனக்கு தெரிஞ்சி எத்தனையோ உப்பு இருக்கு ...ஹி..ஹி..

ஜெய்லானி said...

////உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம் //

கூடவே புளியை சேர்த்தா நல்லா ஜில்லுன்னு இருக்காது..அட ச்சே..சந்தனமுன்னு சொல்ல வந்தா வேற என்னன்னவோ வருது வாயில ஹா..ஹா.. :-))

சாருஸ்ரீராஜ் said...

உப்புல இத்தனையா ...

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்..

Mohamed Ayoub K said...

/சொட்டை[யாஆஆ..] மண்டையில் முடி முளைக்க:
உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம்.//

ஹா ..ஹா ..ஹ உப்பை மண்டையில் தேய்ச்சா முடிவளருமா...ஹா ..ஹா ..ஹ இது என்ன புதுக் கதையா இருக்கு ?

அப்புறம் மண்டையில் உப்பை ஊரை வைத்து உப்பளமா ஆக்கிடப் போறியே !!!
சொட்டை மண்டை மொட்டை மண்டை ரெண்டுக்குமே உப்பு தலையில் பட்டால் எரியும் என்று நினைக்கிறேன்.
அதுனாலே நீங்கள் ஆண்களை ரொம்பத்தான் கேலி பண்ணுகிறீர்கள், பெண்களுக்கு வழுக்கை விழுகாது என்ற தைரியத்தில் நீங்கள் இப்படி பேசுகிறிர்கள் அக்காள்

ஒ.நூருல் அமீன் said...

உப்புட தேவையாய் இருந்தாலும் என்னை கேளுன்னு இறைவன் உவமை சொன்ன பொருளாச்சே உப்பு!
உப்பில் இத்தனை மருத்துவங்களா உப்பை பற்றி இடுகையிட்ட உங்களை உள்ளவும் நினைப்போம் சகோதரி!.

polurdhayanithi said...

nallave ezhuthu kindrir
parattugal
polurdhayanithi

polurdhayanithi said...

nallave ezhuthu kindrir
parattugal
polurdhayanithi

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம் //

இப்பிடி ”மொட்டையா” உப்புன்னு சொன்னா என்ன உப்பு ..? எனக்கு தெரிஞ்சி எத்தனையோ உப்பு இருக்கு ...ஹி..ஹி.. //

ஓ அப்படியா. நான் படிததில் உப்புன்னு மட்டுதானே போட்டுயிருந்தது. அந்த வைத்தியர் எந்த உப்புன்னு போட மறந்துட்டாங்களோ என்னவோ ஆனாலும் உப்புன்னா அது வெள்ளை உப்புதான். இந்த கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது


//ஜெய்லானி said...
////உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம் //

கூடவே புளியை சேர்த்தா நல்லா ஜில்லுன்னு இருக்காது..அட ச்சே..சந்தனமுன்னு சொல்ல வந்தா வேற என்னன்னவோ வருது வாயில ஹா..ஹா..//

வரும் வரும் வரும் வாயில் வசம்பு வச்சி தேய்க்கனும்..

apsara-illam said...

இந்த உப்பின் மகத்துவத்தை படிச்சு சிரிச்சுட்டேன் போங்க.... உப்போடு சேர்ந்து குசும்பும்ல்ல விளையாடுது.... சிரிப்பு தாங்க முடியல....
தொடரட்டும் நம் உப்பு....
ச்சீசீ.... நட்பு...

அன்புடன்,
அப்சரா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.