அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, October 8, 2010

சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்!
நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் இணையத்தில் உள்ளதை எடுத்து அனுப்பியுள்ளார் நம் குடும்பத்து உறுப்பினர்.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10, சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே !!!

உங்க உடம்பை நீங்கதானே பார்த்துக்கொள்ளோனும் அதுக்குதேன் இதெல்லாம் ஓகேவா..அன்புடன் மலிக்கா

29 comments:

ஜெய்லானி said...

என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும் தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை ...!!

சி.பி.செந்தில்குமார் said...

சாப்பிட்டவுடன் பின்னூட்டம் போடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

அது சும்ம தமாஷ்,பயனுள்ள பதிவு

நிலாமதி said...

உங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி .

கவிதை காதலன் said...

ஓ.. இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

எம் அப்துல் காதர் said...

தல! தல காட்டுன மாதிரி தெரியுது. சந்தோசம்!!

எம் அப்துல் காதர் said...

//என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும்
தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை...!!//

படிச்ச புள்ள பேசுற பேச்சா இது.(நல்லா உருப்பட்டுடும்) ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

அத்தனையும் நல்ல பயனுள்ள தகவல் தொகுப்பு!!

Anonymous said...

http://www.youtube.com/watch?v=WfaNQqUNSwM

மோகன்ஜி said...

ரொம்ப பயனுள்ள குறிப்புகள்..

nidurali said...

சாப்பிட்டபின் என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரு கட்டுரை அவசியம் வரும்.பின்பு ஒரு முடிவுக்கு வருகிவோம்

சிநேகிதி said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

DrPKandaswamyPhD said...

//என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும் தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை ...!!//
ஜெய்தானியின் இந்தக்கருத்துக்கு என் முழு ஆதரவைக் கொடுக்கிறேன். வாழ்வது சுகத்தை அனுபவிக்க. இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

நாடோடி said...

ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றிங்க‌...

நாஞ்சில் மனோ said...

என்னய்யா...............நீங்க உல்டாவா ஐடியா சொல்றீங்களே.....

moulefrite said...

சாப்பிட்டவுடன் தூக்குமாட்டி கொள்ளட்டுமா ? என்ன செய்யக்கூடாது
என்று சொன்னவர் என்ன செய்யலாம் என்று சொல்லும் கடமையும் உள்ளது,,

பதிவு எழுதி ஒருமுறை ப்டித்து பார்த தீர்களா ? சாப்பிட்டவுடன் பழ்ம் சாப்பிட கூடாது,டீ குடிக்க கூடாது,சிகரெட் பிடிக்க கூடாது,நடக்ககூடாது, குளிக்ககூடாது,தூங்கவும் கூடாது,,

ஏதையுமே செய்ய கூடாது என்ன செய்வது, தூக்கு மாட்டிக் கொள்வதை தவிற

மனசாட்சியே நண்பன் said...

பயனுள்ள கருத்துக்கள் நன்றி

Geetha6 said...

useful post!!!

Jaleela Kamal said...

உண்ட மயக்கம் தொண்ட்னுக்கும் உண்டு.
குட்டி தூக்கம் போட்டாதான் நல்ல இருக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி

சே.குமார் said...

நல்ல பயனுள்ள தகவல் அக்கா...
வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும் தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை ...!!//

நல்லதச்சொன்னா ஆரு கேகுறது.. ஹும்ம்/சி.பி.செந்தில்குமார் said...
சாப்பிட்டவுடன் பின்னூட்டம் போடலாமா?//

அதக்குறிப்பிடத்தான் செந்தில் மறந்துட்டேன் நல்ல வேளை ஞாபகப்படுதிட்டீங்க..

சாப்பிட்டவுடன் என் பதிவுகளை படித்து நல்லது கெட்டது எது எதுன்னு. பின்னுட்டம் போடவேண்டும் கண்டிப்பாக அப்படின்னு எப்புடி..


தாளாரமாக போடலாம் ஒன்றல்ல எத்தனை வேண்டுமென்றாலும். ஹா ஹா . மிக்க நன்றி செந்தில்..

அன்புடன் மலிக்கா said...

நிலாமதி said...
உங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி .

கருதுக்கு மிக்க நன்றி. நிலா

//கவிதை காதலன் said...
ஓ.. இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

இருக்கிறதாம் கவிகா...

//எம் அப்துல் காதர் said...
தல! தல காட்டுன மாதிரி தெரியுது. சந்தோசம்!!//

இதிலேயே தெரியுதா தல..


/ எம் அப்துல் காதர் said...
//என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும்
தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை...!!//

படிச்ச புள்ள பேசுற பேச்சா இது.(நல்லா உருப்பட்டுடும்) ஹி..ஹி.//

அதானே அப்படிகேளுங்க காதர்.


.எம் அப்துல் காதர் said...
அத்தனையும் நல்ல பயனுள்ள தகவல் தொகுப்பு!!

கருதுக்கு மிக்க நன்றி..

// மோகன்ஜி said...
ரொம்ப பயனுள்ள குறிப்புகள்../

வாங்க. கருதுக்கு மிக்க நன்றி மோகன்ஜி.

/nidurali said...
சாப்பிட்டபின் என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரு கட்டுரை அவசியம் வரும்.பின்பு ஒரு முடிவுக்கு வருகிவோம்.//

வாங்க. இதேபோல் அதற்க்கும் ஒரு மெயில் வரமால போய்விடும் அப்ப கண்டிபாக போடுகிறேன்.. வருகைக்கு மிக்க நன்றி../சிநேகிதி said...
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

மிக்க நன்றி. சிநேகிதி..

அன்புடன் மலிக்கா said...

DrPKandaswamyPhD said...
//என்னதான் சொன்னாலும் சாப்பிட்டதும் உடனே வரும் தூக்கத்துக்கு ஈடு இனை எதுவுமே இல்லை ...!!//
ஜெய்தானியின் இந்தக்கருத்துக்கு என் முழு ஆதரவைக் கொடுக்கிறேன். வாழ்வது சுகத்தை அனுபவிக்க. இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.//

டாக்டர்னா இதான் டாக்டர். சூப்பர் போங்க. என்னத்தச்சொல்ல../நாடோடி said...
ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல்க‌ள்.. ப‌கிர்விற்கு ந‌ன்றிங்க‌...//

நன்றி ஸ்டீபன்..


/நாஞ்சில் மனோ said...
என்னய்யா...............நீங்க உல்டாவா ஐடியா சொல்றீங்களே....//

நாங்க சொல்லலீங்கையா. ஆராச்சில கண்டுபுடிச்சிருக்காங்களாம். அத நமக்கு சொன்னாங்க நாம உங்களுக்கு சொல்லியிருக்கோம். அவ்வளவுதான்..


//மனசாட்சியே நண்பன் said...
பயனுள்ள கருத்துக்கள் நன்றி.//

வான்ன்க மனசாட்சி.
வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றி..// Geetha6 said...
useful post!!!

நன்றி கீதா..

/Jaleela Kamal said...
உண்ட மயக்கம் தொண்ட்னுக்கும் உண்டு.
குட்டி தூக்கம் போட்டாதான் நல்ல இருக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி//

யக்கோவ் எங்களுக்கும் உண்டு. ஆனாலும் நல்லதில்லைன்னு நல்லதாச்சொல்லுதாகளே அப்படினா கேட்டுகுவோமேன்னுதான்..

நன்றி ஜலீக்கா.

/சே.குமார் said...
நல்ல பயனுள்ள தகவல் அக்கா...
வாழ்த்துக்கள்./

வாழ்த்துக்கள் இதை எழுதியவாளுக்கும் சொல்லிக்குவோம்..

நன்றி குமார்..

அன்புடன் மலிக்கா said...

moulefrite said...
சாப்பிட்டவுடன் தூக்குமாட்டி கொள்ளட்டுமா ? என்ன செய்யக்கூடாது
என்று சொன்னவர் என்ன செய்யலாம் என்று சொல்லும் கடமையும் உள்ளது,//

நல்ல கேள்விதான் இப்பதானே கூடாது இதெல்லாமுன்னு சொல்லியிருக்காங்க. இனி என்ன செய்யலாமுன்னு சொல்லுவாக அதுக்குள்ள ஏன் அவசரம்.


/பதிவு எழுதி ஒருமுறை ப்டித்து பார்த தீர்களா ? சாப்பிட்டவுடன் பழ்ம் சாப்பிட கூடாது,டீ குடிக்க கூடாது,சிகரெட் பிடிக்க கூடாது,நடக்ககூடாது, குளிக்ககூடாது,தூங்கவும் கூடாது,,//

பலமுறை படித்தபின்புதான் வெளியிடுகிறோம்.
புக்ஸ் படிக்கக்கூடாது. டீவி பார்க்கக்கூடாது. அரட்டையடிக்கூடாது.
சண்டைபோடக்கூடாதுன்னு அப்படினெல்லாம் போடலையேஇங்கே!
இதில் ஏதாவது ஒன்றை செய்யலாமே.

அந்த சண்டையை மட்டும் கொஞ்சம் மெதுவா ஆருக்கும் கேட்காம போடுங்க
அப்புறம் நான் தான் சொல்லிக்கொடுதேன்னு ஆளாளுக்கு அடிக்க வந்துடபோறாக![சும்மா சும்மா]

இதில் சொல்லியுள்ள விசயங்களில் நல்லதிருந்தா எடுத்துக்கொள்வோம் இல்லையின்னா விட்டுவிடுவோம்

/ஏதையுமே செய்ய கூடாது என்ன செய்வது, தூக்கு மாட்டிக் கொள்வதை தவிற.//

அதைதவிர வேறு நிறைய வழியிருக்கு ஏன் அதிலேயே நிக்குதீக. கோபப்படுவீகளோ ஜாஸ்தியா.

கூல் கூல். டேக்ட்டீஸி..

முதல் வருகையிலேயே அனல்பறக்க வந்தமைக்கும். கருதுக்கள் பகிர்ந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி தோழமையே..

துளசி கோபால் said...

இதயநோய் ப்ளாகில் சிகிச்சையா?

இப்போது நல்ல நலமுடன் இருக்கின்றீர்கள்தானே?

டேக் கேர்.

அன்புடன் மலிக்கா said...

துளசி கோபால் said...
இதயநோய் ப்ளாகில் சிகிச்சையா?//

நம்ம பிளாகில் அந்த சிகிச்சை செய்ய இன்னும் நாளாகுமுங்க. முதலில் யாரோடது பண்ணலாமுன்னு டிஸ்கஸ் நடந்துண்டு இருக்குங்கோ. யாரும் முன்பதிவு செய்தால் உடனே செய்திடலாமுங்கோ..

//இப்போது நல்ல நலமுடன் இருக்கின்றீர்கள்தானே?

டேக் கேர்.//

ஏன் ஏன் இப்படியெல்லாம் நான் நல்லாயிருக்கேனுங்கோ. என் இதயத்துக்கு ஏதுமில்லைங்கோ. இது எனக்கு மெயிலில் வந்த தகவலுங்கோ. அதை அப்படியே இங்கு பகிர்ந்தேனுங்கோ. அவ்வளதானுங்கோ.

வருகைக்கும் அன்பான கேருக்கும் மிக்க நன்றி துளசி.

Ananthi said...

Useful Information.. :-))

apsara-illam said...

மலிக்கா...,உண்மையிலேயெ எல்லாம் பயனுள்ள டிப்ஸ்.எதையெல்லாம் இதுவரை சாப்பிட்டவுடன் செய்தல் நல்லது என்று கடைபிடிக்கிறோமோ..அதெல்லாம் செரிமானத்திற்க்கு மாற்றமானது என்பதை தெரியபடுத்தியிருக்கின்றீர்கள்.இதில் ஐந்தாவதாக சொல்லபடுவது மட்டும்தான் சிறுவயதிலிருந்து அம்மா,பாட்டிம்மாக்கள் எல்லாம் சொல்லி இன்று வரை கடைபிடிப்பது.
நல்ல தகவலுக்கு நன்றி.

அன்புடன்,
அப்சரா.

goma said...

பழங்கள் சாப்பிட்ட தவறு மட்டும்தான் செய்துவந்தேன் ...திருத்திக்கொண்டேன்
நன்றி மலிக்கா,அன்புடன் சொன்னதற்கு

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.